Wednesday, December 31, 2008

நட்சத்திர பதிவரும் கதையும்

என்னுடைய ப்ளோகில் பல முறை சுட்டி காட்டிய லதானந்த் அங்கிள் அவர்கள் நட்சத்திர பதிவர் தமிழ்மணத்தில் ஆகியுள்ளார். வாழ்த்துக்கள்... இப்போது அந்த தளத்தில் அவர் பதிவுகள், முதன்மையாக காண்பிக்கப்படுகிறது.

நான் சுட்டி காட்டிய அவர் பதிவுகள்....

தலித் பின்னூட்டம்

பரிசல்காரன் - வலைப்பதிவு

வெண்பா

அவர் எழுதிய ஒரு கதை பத்திரிக்கைகள் பிரசுரிக்க மறுத்த கதை – ரசனை, ஏனோ பிரசுரம் ஆகவில்லை...

கதை நன்றாக தான் அவர் டச்சில் உள்ளது. ஆனால் எதோ மிஸ்ஸிங். அடல்ட் விஷயம் மற்றும் இந்த சினிமா பைத்தியங்கள் (மதிப்பிற்குரிய ரசிகர்கள்!) சொந்தங்கள் விசயத்தில் இப்படி நடக்குமா என்ற எதார்த்தமான கேள்வி ... அதுவும் இந்த மே பி அஜீத் படம் நேசம் என்பதால்? தெரியவில்லை! வேற டைட்டில் கொடுத்து எழுதினால்... பிரசுரம் செய்வார்களா? "சினிமாக் காதல்?"

******

எனக்கு நட்சத்திர பதிவர் ஆக ஆசை இல்லை. ;-)

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

எல்லோருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

வாழ்க வளமுடன்.

My Photo

Tuesday, December 30, 2008

அமெரிக்காவில் கசின்

என் சித்தி மகள் (கசின்) அமெரிக்காவில் ஹூஸ்டனில் இருக்கிறாள்...

பி.ஈ. படித்தவள்... இப்போது வீட்டில், முதல் குழந்தை கவனித்துக்கொண்டு, இரண்டாம் குழந்தை எதிர்பார்த்து... அப்புறம் கணவனையும் கவனித்து கொள்கிறாள்.

கல்யாணம் செய்த பிறகு ... சிகாகோவில் ஒரு வருடமும், பிறகு மூன்று வருடங்களாக இருப்பது ஹூஸ்டன். சென்னை மாதிரி இருக்கிறது என்கிறாள்.

சித்தி பையன்
ஜனவரி இறுதியில் அவர்களை அழைத்துக்கொண்டு அமெரிக்கா செல்கிறான்... இரண்டாவது குழந்தை பெப்ருவரியில்... உதவிக்கு ஆள். ஆறு மாதம் இருந்துவிட்டு வருவார்கள், விசா எக்ஸ்டன்சன் கிடைத்தால் ஒரு வருடம். மூன்று வருடத்திற்கு முன் ஒரு வருடம் இருந்துவிட்டு வந்தார்கள் கசினின் முதல் குழந்தை பிறந்த போது.

அவள் கல்யாணம், ஒரு ஸ்பீட் படம் மாதிரி. 2004 இல் மே மாதம் போட்டோ பார்த்து ஒக்கே செய்து, வெப்கேமில் பார்த்து சேட் செய்து... பாஸ்போர்ட் ரெடி செய்து, இந்தியன் டிரைவிங் லைசன்ஸ் எடுத்து காத்திருந்தாள்... மாப்பிள்ளை இந்திய மூன்று வார லீவில் வந்தார்... யு. எஸ். விசா அப்பாயின்ட்மன்ட் புக் செய்திருந்தார்கள்... கூடவே அழைத்து சென்றார்.

நல்ல வேலை இரண்டு வாரம் முன் தான் சித்தி பையன் விசா எடுத்திருந்தான். கண்மூடித்தனமாக ரிஜக்ட் செய்வார்களாம். கணவருக்கு வாய்ப்பு வருகிறது. அவரின் கம்பனியே இன்னும் ஆறு மாதத்தில் அனுப்புகிறேன் என்றிருக்கிறார்கள். எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.

கசின் மாப்பிள்ளை சைடில் இரண்டு முறை அமெரிக்கா சென்று வந்துள்ளார்கள்.... ஒரே மகன். செல்லம்.

இந்தியாவில் தான மாமியார்களை மருமகள்களுக்கு பிடிப்பதில்லை. அமெரிக்காவில் மாமியார்கள் அடங்கி ஒடுங்கி இருக்கிறார்களாம். ஒரே ப்ரெண்ட்ஷிப் என்றாள்.

ஆனால்
பெண் கேட்பது அம்மாவை தான் பிரசவ காலத்தில். ;-)

******************

ஒரு பதிவு எழுத ஆரம்பித்து மூன்று பதிவு ஆகிவிட்டது....

ப்லோக் முறைப்படி சிறிதாக இருந்தால் படிப்பதற்கு நன்றாக இருக்கும்.

சித்தி பையன்

இன்று காலை இருந்த அமெரிக்காவில் இருந்து வந்துள்ளான். பாவம் அறுபது மணி நேரம் தொடர்ந்து பிரயாணம்...ப்ருசல்ஸ் விமானம் இறங்கிய போது பனிரெண்டரை மணி. பிக்கப் செய்து வீடு வரும் போது இரண்டு மணி. நினைத்து பாருங்கள். சென்னை குளிர் எப்படி இருந்திருக்கும் என்று? நல்ல அனுபவம்.

அவன்
படிக்கும் ஊர் நார்த் டகோடாவில் உள்ள பார்கோ. கடும் குளிர் ஊர். ஆகஸ்டில் சில சமயம் ஸ்னோ வரும் என்று கிண்டல் செய்கிறான்... வெள்ளி இரவு கிளம்ப வேண்டியவன், கடும் பனியால், டிக்கட் மாற்றி, சிகாகோ சென்று, நியூ யார்க் அனுப்பி, ஒரு நாள் வெயிட் செய்ய வைத்து - ஹோட்டல் கொடுத்து... லண்டன் , ப்ருசல்ஸ் வழியாக, எப்படியோ, அறுபது மணி நேரம் தொடர்ந்து, நிறுத்தி நிதானமாக பிரயாணம் செய்துள்ளான்... வாழ்த்துக்கள்!

மதியம் ட்ரெயினில் கோவைக்கு பயணம். பாவம், மரக்கட்டை மாதிரி தூங்கி பன்னிரண்டு மணிக்கு எழுந்து, குளித்து அவசரமாக ட்ரயின் பிடித்தான். நல்ல வேலை எப்படியோ டிக்கட் கிடைத்தது. திங்கள் காலை வர வேண்டியவன் என்பதால், மதியத்திற்கு டிக்கட் எடுத்திருந்தார்கள், லேட் ஆகும் என்று பொன் செய்ததால், கேன்சல் செய்துவிட்டு இன்றைக்கு மாற்றினார்கள்.

டிசம்பர் முதல் வாரத்தில் செமஸ்டர் எக்ஸாம் முடித்து விட்டு, ஒன்றரை வருடம் கழித்து வருகிறான்.... ஆகஸ்ட் 4, 2007 சென்றவன், 16 மாதங்கள் பிரிவு ... இன்னும் இரண்டு கோர்ஸ் தான் பாக்கியாம். இதுவரை ஆறு லட்சம் செலவு ஆகியுள்ளது என்றான். அவனே 12% வட்டிக்கு பாங்க் கடன் வாங்கி செலவு செய்கிறான்... எப்படியும் தானே திருப்பி கட்டுவேன் என்கிறான். எப்படியும் அடுத்த அக்டோபரில் சம்பளம் வரும் என்கிறான், எச். 1 விசா வந்த பிறகு....

ஏதோ அவன் காலேஜ் (ஸ்கூல் ஸ்கூல் என்றான், அமெரிக்கன் ஆக்சன்டில்) டிபார்ட்மன்ட் வேலை செய்து சிறிது காசு மிச்சம் செய்துள்ளான். இரண்டு மாதம் லீவு சமயம் வேலை செய்து சம்பாரிக்கிறார்கள், எதாவது வேலை கிடைத்தவர்கள்.

இப்போதே பெண் பார்கிறார்கள், அங்கு படிக்கும் அல்லது வேலை செய்யும் பெண்ணை, எப்படியோ சம்பாரிக்க ஆரம்பித்த பிறகு கல்யாணம் செய் என்கிறோம். இருபத்தைந்து வயது ஆகிறது...

எம்.பி. வேறு செய்வேன் என்கிறான். வேலை செய்துக்கொண்டு செய்தால் நலம். அந்த மாதிரி ஊரில், சன் பிரான்சிஸ்கோ, சிகாகோ, டல்லஸ் அல்லது நியூ யார்க் தான் வேண்டும் என்கிறான்.

எப்படியோ கார் ஒட்டுகிறானாம்... பனியில் வாழ்வது கடினம் போல. பெண்கள் கூட கல்யாணம் செய்து அமெரிக்கா சென்றவுடன், கார் டிரைவிங் லைசன்ஸ் வாங்கிவிடுகிறார்கள்.

எதற்கு அங்கு போய் படிக்கிறான்.... மாஸ்டர் ஆப் கம்ப்யுட்டர் சயன்ஸ்? அமேரிக்கா ஆர்வம் எல்லோருக்கும்... என்ன செய்ய... இங்கே சென்னையில் கிரேசன்ட்டில் படித்தவன். 2004 படிப்பு முடித்துவிட்டு, பெங்களூரில் மூன்று வருடத்திற்கு மேல் இன்போசிஸில் வேலை. இப்போது லீவு தான் எடுத்துள்ளான்! (போல?) அமெரிக்காவில் வேலை கொடுப்பார்கள என்று தெரியவில்லை என்கிறான். வேறு கம்பனியில் சம்பளம் அதிகம் கிடைக்கும், கிரீன் கார்ட் போன்றவை ஈசி என்றான்......

வரும் ஏப்ரலில் படிப்பு முடித்து, எஸ்..பி. தொழில் கம்பெனியில் அங்கேயே ஜாயின் செய்கிறேன் என்கிறான். இன்னும் வேலை கிடைக்கவில்லை ... இன்டர்ன்ஷிப் ட்ரை செய்கிறானாம். மார்ச்சில் எஸ்..பி. எக்ஸாம் செர்டிபிகேசன் எழுதுகிறானாம்.

வேலை இன்டர்ன்ஷிப் கிடைத்தால் நல்லது... உதவி தேவை... விவரம் தெரிந்தவர்கள் கமண்ட்ஸ் போடவும்.

ஒரே மகன் - சித்தி அழுகிறார்கள் மகனை விட்டு விட்டு இருக்க, இருவரும் இப்போது தனி, சித்தப்பா கோவை அருகில் மளிகை கடை வைத்திருக்கிறார்.... இதற்கும் முதல் மகளை அமெரிக்காவில் தான் கட்டி கொடுத்துள்ளார்கள் படிப்பு முடித்தவுடனேயே... பெண் கோவையில் ஜி.சி.டியில் கம்ப்யுட்டர் சயன்ஸ் படித்தவள், இப்போது நன்றாக சமைத்துக்கொண்டு ரிலேக்ஸ் ஆக இருக்கிறாள்.

யாரோ நண்பர் ஒருவருக்கு லேப்டாப் வாங்கி வந்துள்ளான், இவனுக்கு கொண்டு வந்ததற்கு இருநூறு டாலர்கள் லாபம் பங்கு. இந்தியாவால் மேக்பூக் விலை அதிகமாம்... எப்படியெல்லாம் செய்கிறார்கள் அமெரிக்கன் ஸ்டுடண்ட்ஸ்!

சென்னையில் குளிர்

இந்த மாதிரி குளிர் சென்னையில் ஒரு இருபது வருடம் முன் பார்த்துள்ளேன்.

இன்று காலை 16 டிகிரீ செல்சியஸ். என்ன பெங்களூரில் இருக்கிறோமா என்று தோன்றும் அளவு.... அதுவும் மிட் நைட் சென்று ஏர்போர்ட்டில் பிக்கப் எப்படி இருந்திருக்கும் நினைத்து பாருங்கள்.... கிளம்பும் போதே ஸ்வெட்டர்!

சரி நாங்கள் தான் மைசூர் சென்று வந்தோமே, அதன் பலன் உடல் இப்படி என்று நினைத்தோம்.

பே ஆப் பெங்கால் டிப்ரெசன் என்கிறார்கள். என்னவோ நடக்குது. மரத்தை கண்டபடி வெட்டுகிறார்கள். மீண்டும் உலகில் ஐஸ் ஏஜ்?

*********************

அப்புறம் இந்த பதிவு படித்தேன்... ஒரு சுட்டி காட்டல்... சில ஸ்மைலிகள் கமன்ட்சில் விழும்...

Slumdog Millionaire

மீண்டும் சத்யமில் பார்க்க வேண்டும்!

கணவர் சொல்கிறார், வருடத்திற்கு எங்கள் சினிமா பார்க்கும் செலவு மட்டும் ஒரு மாதத்தின் சேமிப்பு.

Monday, December 29, 2008

மைசூர் பயணம்

மைசூர் பயணம் ஒரு மாதத்திற்கு முன் பிளான் செய்தோம்.

பெங்களூர் சென்ற போது ஐடியா கிடைத்தது. நாங்கள் மங்களூர் அலல்து கோவா தான் பிளான் செய்தோம். உங்களுக்கே தெரியும் கூட்டம் மற்றும், இந்த தீவிரவாதிகள் பயம்....

பெங்களூரை விட கொஞ்சம் சூடு.

சனி காலை எட்டரை மணிக்கு சென்று சேர்ந்தோம்.

உடனே குளித்து ரெடி ஆகி, பப்பே ப்ரேக்பாஸ்ட் சாப்பிட்டு... மைசூர் பேலஸ் முடித்தோம். லன்ச் அருகில் நார்த் இந்தியன் சாப்பிட்டோம். பிறகு அப்படியே சாமுண்டி ஹில்ஸ். நான் மட்டும் குழந்தைகளோடு கோவில் உள்ளே சென்று வந்தேன். சுடிதார் போட்டு உள்ளே சென்ற முதல் ஆள் நான் தான் என நினைக்கிறேன்.

ஹோட்டல் வந்து, கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துவிட்டு, டி குடித்தபின், நான்கு மணிக்கு கிருஷ்ணராஜ சாகர் டேம் பயணம். பிருந்தாவன் கார்டன்ஸ். ஆறு மணிக்கு மேல் டேன்சிங் பவுண்டன் என்றார்கள். ஏழு மணிக்கு ஆண் செய்தார்கள். சில பாடல்கள், வித விதமான வண்ண விளக்குகள். சில பாரீனர்கள் வந்திருந்தனர்.

இரவு வரும் வழியில் ஹெரிடேஜ் என்ற ஹோட்டலில் டின்னர். மீண்டும் நான் ரோடி பன்னீர். குழந்தைகளுக்கு இது அலுக்காதா?

இரவு வந்து தூங்கி, காலை ஆறரைக்கு எழுந்து, வெளியே சிறு வாகிங். குழந்தைகள் டிவியில் ஹிந்தி படம் பார்த்தார்கள். அவசரமாக சென்று ப்ரேக்பாஸ்ட் முடித்துவிட்டு, பத்து மணிக்கு... ஸ்ரீரங்கப்பட்டினம். ஒரு மணிக்கு மைசூர் திரும்பி, காமத் ஹோட்டலில் லன்ச். சவுத் இந்தியன் தாளி. மினி பூரிஸ் அழகாக கொடுக்கிறார்கள். பெங்களூரில் சாளுக்கியாவில் சாப்பிடுவது போல இருந்தது.

இரண்டு மணிக்கு ஹோட்டல். இரண்டு நாட்கள் டாக்சி சார்ஜ் ருபாய் ஆயிரத்து ஐந்நூறு. சென்னைக்கு பரவாயில்லை?

ரெஸ்ட் எடுத்து விட்டு, ஆறு மணிக்கு ரெடி ஆகி மைசூர் பயணம் முடித்தோம்.

மைசூர் டு பெங்களூர் வழியெல்லாம், செல் போன் வேலை செய்கிறது. மடிக்கணினியும் இண்டெர்நெட்டும் என டைம் சென்றது. நாங்கள் இருந்த 3 டயர் ஏசி கம்பார்ட்மென்டில் ஒரே சத்தம், பெங்களூர் விட்டு கிளம்பும் போது பதினொன்றே முக்கால். காலை ஆறேகாலுக்கு சென்னை வந்து இறங்கினோம்.

*******

ப்ரெட் ப்ரேக்பாஸ்ட் முடித்துவிட்டு கணவர் ஆபிஸ் சென்று விட்டார், புளியோதரை செய்துவிட்டு, நான் இண்டர்நெட்டில் ....

Sunday, December 28, 2008

சில பிடித்த பதிவுகள்

எல்லோருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

சந்தோசம் எங்கும். எல்லாம் லீவு மாயம். அப்புறம் என்ன?

இப்போது மைசூரில் இருந்து கிளம்புகிறோம். இரண்டு நாட்கள் போனது!

குழந்தைகள் நன்றாக என்ஜாய் செய்தார்கள்.

இங்கு எல்லாம் நன்றாக உள்ளது. எல்லோரும் நன்றாக தமிழ் பேசுகிறார்கள்.

ரிகாலிஸ் என்ற ஹோட்டலில் தங்கினோம். ஸ்டேசன் அருகில் தான்... அழகான ஹோட்டல். கணவர் கம்பெனி கொடுத்தது.... எங்களுக்கு வருடம் ஒரு ட்ரிப் கிடைக்கிறது. அடுத்த வருடமாவது சிம்லா அல்லது மணலி செல்ல வேண்டும்.

அப்புறம் மைசூரில் மைசூர் பா நல்லா இல்லே. நானே நன்றாக செய்வேன்!

வை பை இருக்கு இங்கே இலவசம். குழந்தைகள் கார்ட்டூன் பார்க்க நான் நெட்டில் மெயில் செக், மற்றும் ப்லோக் படிப்பு மற்றும் எழுதுறேன். ட்ரெயின் பிடிக்க கொஞ்சம் நேரம் இருக்கு.... எட்டு மணிக்கு தான்!

*******************

சில பிடித்த பதிவுகள்... இந்த வாரம் ....

முஸ்லீம் என்றால் தீவிரவாதியா?

அயோக்கியன்

பெருவெளி

ரமேஷ் பதிவில் எழுதிய இரண்டு படங்கள் பார்க்க ஆசை. சத்யமில் ஓடுகிறது. தமிழ் படம் என்றால் ஒக்கே. பெஞ்சமின் பட்டன், குழந்தைகள் பார்க்கும் படமா?

**************************************

இங்கே காலை எழு மணியில் இருந்து "தா ர ரம் பம்" என்ற ஹிந்தி படம் டிவியில் ஓடியது. குழந்தைகள் பார்க்கவில்லை படம் வந்த போது.... அப்போது. கஷ்டப்பட்டு ஜெயிக்கும் கதை. சில இடங்களில் குழந்தைகள் அழுதார்கள்.

அவசரமாக ப்ரேக்பாஸ்ட் பப்பே சென்று வந்தோம். நேற்று லன்ச், டின்னர், எல்லாம் நார்த் இந்தியன். இன்று மதியம் காமத். இரவு, ஸ்டேசனில் எதாவது.

என்ன இந்த 4 ஸ்டார் ஹோட்டல்களில் வந்து தங்கி சென்றால், குழந்தைகள் கெட்டு போவார்கள். ப்ரிஜ்ஜில் ஜூஸ், குடி வைத்து விடுகிறார்கள். இரண்டு நாட்களில் முன்னூறு ருபாய் ஜூஸ் மட்டும்... தனி பில் என்று போடுகிறார்கள்...

************

இரண்டு மூன்று கமண்ட்ஸ் எனக்கு...

நான் பதிவுகளில் ரொம்ப ரொம்ப மற்ற பதிவுகள் பற்றி எழுதுகிறேன் என்று.

என்ன செய்வது? எழுத தெரிந்த விதம் அவ்வளவு தான்!

என்ன நான் எழுதியவை, மே முதல் 105 பதிவுகள். சுமார் எட்டு மாதங்கள். பாதிக்கு மேல் எல்லாம் சுட்டி காட்டும் பதிவுகள். சிலர் எழுதும் மாதிரியே எழுதுகிறேன்! ஸ்டையில் காபி.

குறை ஒன்றும் இல்லை கோவிந்தா!

Friday, December 26, 2008

சிக்ஸ் சிக்மா

சிக்ஸ் சிக்மா பற்றி இரண்டு பதிவுகள் படித்தேன்... நன்றி.

சிக்ஸ் சிக்மா : ஓர் அறிமுகம்

சிக்ஸ் சிக்மா : ஓர் அறிமுகம் (நிறைவு பகுதி)

இந்த மாதிரி ஒவ்வொரு பதிவரும் எழுதினால் அருமையாக இருக்கும்.

-----------------

கிறிஸ்துமஸ் செலப்ரேசன் எப்படி? டிவி முன்னால் எங்களுக்கு...

இன்று இரவு மைசூர் பயணம், இரண்டு நாள் ரிலேக்ஸ். குழந்தைகள் பரீட்சை லீவு!

அவசியம் படியுங்கள் இந்த பதிவு (ஆங்கிலத்தில்) Anecdote on Perceptions

Sunday, December 21, 2008

திருட்டு கல்யாணங்கள்

திருட்டு கல்யாணங்கள் என்று ஒரு விஷயம், இந்த பாரீன் மாப்பிள்ளைகள் வைத்து தான் தெரியும்.

என் கணவரின் சொந்தம் ஒருவர், ஏற்கனவே கல்யாணம் ரெஜிஸ்டர் ஆபீஸில் செய்து விட்டு, பிறகு சில காலங்களில் பிரிந்து விட்டார்கள்.

நடிகர் பிரசாந்த் கேஸ் ஞாபகம் வருது.

இப்போது ஒரு பெரிய இடத்து பெண் ....கல்யாணம். மாபிள்ளை யு.கே. வேலை .... ரெஜிஸ்டர் செய்ய போகும் போது தான், விஷயம் தெரிந்த்து. நண்பர்கள் கட்டாயத்தில் விளையாட்டு கல்யாணம்... படிப்பு காலத்தில்...

முதல் கல்யாணம் இருக்கும் போது, இரண்டாம் கல்யாணம்?

போலிஸ் கேஸ் ஆகவில்லை. இருந்தாலும்... அந்த பெண்ணிற்கும் கல்யாணம் ஆகி, துபாயில் இருக்கிறாள்... எப்படி மேரேஜ் சர்டிபிகேட் இல்லாமல் சென்றாள்?

மாப்பிள்ளையும், அந்த பெண்ணும், முசுவல் டிவோர்ஸ் செய்த பிறகு... அவர் துபாய்க்கு செல்லும் போது பிரச்சனை வருமா?

இப்போது டிவோர்ஸ் ஒரு வருடம் ஆகும் என்று சொல்லியிருக்கிறார்கள்... பாவம் .. பெண். அவர் அப்பா வயசாகி நோயாளி... இந்த கஷ்டம்... மகள் லண்டன் செல்வாள் என்று இருந்தார்கள்...

எல்லோரும் உஷார். மாப்பிள்ளைகள் ஜாக்கிரதை....

Friday, December 19, 2008

நான் ரசித்த கம்பனி லோகோஸ்

நான் ரசித்த கம்பனி லோகோஸ். சத்யம் எங்கேப்ப்பா? ஒரெகில் காணோம். நிச்சயம் இவை இந்திய கம்பனிகளின் நிலையை முற்றிலும் அருமையாக காட்டுகிறது. தேங்க்ஸ் பரிசல்காரன்.

ஒரு பதிவு பற்றி

இப்போது தான் இந்த ப்லோக் படித்தேன்... நன்றாக எழுதியுள்ளார்....

நான் எழுதிய கமன்ட்...

நீஙகள் பேசுவது எல்லாம் காசு இருந்தால் தான் நடக்கும் அல்லவா? மூடிந்தவரை விட்டு கொடுத்து போவது முக்கியமாக ஆண்களுக்கு நல்லது... வீட்டில் நிம்மதி, வேலையில் நிம்மதி!

எப்படி என்கிறீர்களா.... காலையில் இன்முகத்துடன் வேலைக்கு சென்றால், நன்றாக இருக்கும்...

வீட்டு கஷ்டம் பேசி தீர்த்துக்கொள்வது நலம்...

தொடர்புடைய பதிவு...

திருமணம் ஆன ஆண்களுக்கு ... !

Thursday, December 18, 2008

சத்யம் தவறிய சத்யம்

ஏழைகள் வயிற்றில் அடிக்காதே சேர்மேன் ராமலிங்க ராஜு! சத்யம் ஒரு கே.10 ஸ்டாக். .டி. கம்பனி. இன்னும் அவர்கள் தான் ஓனர்கள் என்ற நினைப்பு. மிகவும் கீழ்தரம் மிகுந்த செயல் செய்தார்கள் ராமலிங்க ராஜு குடும்பத்தினர். 8.65% ஷேர்கள் தான் வைத்துள்ளார்கள். மற்றவை எல்லாம் வெளிநாட்டு முதலீடு, மற்றும் எங்களை போன்ற மக்கள் வைத்திருப்பது...

ஹைதராபாத் தலைமை இடம். ராமலிங்க ராஜு சேர்மேன். சிறு கம்பனியாக இருந்து வளர்ந்தது. நல்ல அரசியல் ஒத்துழைப்பு. டி.டி.பி. நாயுடு.

மச்சான் ராம ராஜு ஒரு டைரக்டர். ஒன்பது பேர் குழு - மேனேஜ்மன்ட். ஆறு பேர் இண்டிபெண்டன்ட் டைரக்டர்ஸ். வெத்து வேட்டுக்கள். வெளி நாட்டு ஆள் எல்லாம் ஓடி விட்டார்கள். கேடன் பரேக் சூதாட்டத்தில் பணம் பண்ணிவிட்டு. இப்போது ஒருவர் மற்றும் படிப்பு சமந்தப்பட்ட இடத்தில்,. அதுவும் ஐ.எஸ்.பியில் சொல்லிகொடுதுக்கொண்டு வேலை செய்கிறார்.
இன்னொரு .எஸ்.பி ஆள் டைரக்டர்!

கேடன் பரேக் 10 ஸ்டாகுகளை இஷ்டத்திற்கு விலை ஏற்றி, சேர் ஒல்டர்களுக்கு நாமம் போட்டான்.

மகன்கள் மேடாஸ் (சத்யம் திருப்பி போட்டால் SATYAM -> MAYTAS )... பராபர்டிஸ் நடத்துகிறார்கள்... மொத்த மதிப்பு பத்தாயிரம்... ப்ரோமொடர்களுக்கு 36.64% சொத்து அதில் உள்ளது.

அதை சத்யம் வாங்க வைக்க ... ரூ 6800 கோடிகள் கொடுத்து.. தான் பிரச்சனை. ரிஸ்க் குறைப்பது என்று ஒரு நடவடிக்கை. 6300 ஏக்கர் நிலம் உள்ளதாம்... அதற்க்கு ஏக்கருக்கு ஒரு கோடி... இன்னும் பணம் கூட பைசல் செய்யாது நிலம். லேண்ட் பேங்க். நாற்பது லட்சம் பெறாது ஒரு ஏக்கர்,
ஹைதராபாத் சுற்றி... முப்பது கி.மி. தள்ளி.

அது எதை காட்டுகிறது... ஊரான் வீட்டு வெண்ணை எடுத்து குடும்பத்திற்கு கொடுப்பது... இதன் மூலம் அவர்கள் குடும்பத்தில், மகன்கள் சத்யமில் டைரக்டர் ஆவார்கள்... மற்றும்... ரூ 2500 கோடிகள் அல்வா.

இப்போது ஒரு நாள் வீழ்ச்சியில்... ரூ 600 கோடிகள் அவுட்.

கொடுமை... அக்டோபர் 27 அன்று தான் 30 ஸ்டாக் வாங்கினேன் 165 ருபாய் ஒன்றுக்கு. பி.ஈ ரேசியயோ 5.*************

கொசுறு.. ராமலிங்க ராஜு அப்பா ஒரு பெரிய சூதாடி. எனக்கு ஒரு நண்பர் சொன்னார், அவர் ஜெயித்த சத்யம் மில்ஸ் வைத்து தான் குடும்பம் பிழைத்தது....

Tuesday, December 16, 2008

நல்ல விஷயங்கள் - தருணங்கள் 100

ப்லோக் மூலம் நிறைய நல்லா விஷயங்கள் நடக்கின்றன.

நானும் கடந்த எட்டு மாதங்களாக, எனக்கு தெரிந்தளவு எழுதி வருகிறேன்.

ஒரு சிறிய முயற்சி.

****************

கிரிகெட்டில் இந்திய மிக பெரிய வெற்றி பெற்றது. மகிழ்ச்சி.

அதிலிரிந்து என்ன நாம் எடுத்துக்கொள்ளலாம்? ஒற்றுமை, விடா முயற்சி...

என்னுடைய ப்லோக் லிஸ்டில் நான் படிக்கும், பிடிக்கும் எழுத்தாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு நன்றி.

****************

இது எனது நூறாவது பதிவு. வாழ்த்துக்களுக்கு நன்றி.

Sunday, December 14, 2008

ஆந்திராவில் மக்கள் தீர்ப்பு

ஆந்திராவில் மக்கள் தீர்ப்பு கொடுத்துள்ளார்கள் நக்சல்களை வளர்க்கும் பகுதியான வாரங்கல் அருகில்.

சரி என்ன விஷயம்?

பெண் கொடுமை, ஈவ் டீசிங்...

இங்கே படியுங்கள்...
போலிஸ் செய்தது நல்ல விசயமா?

நாம் தான் பெண் விடுதலை என்று பேசுகிறோம். அந்த பெண்கள் பாவம்... லவ் செய்யவில்லை என்றால், அந்த ஆண் (பையன்) அப்பா அம்மா சொல்லும் பெண்ணை கட்டிக்கொண்டு, அல்லது, இன்னொரு பெண்ணை ட்ரை பண்ணலாம் அல்லவா? ( நக்கலாக தான் சொல்லுகிறேன் )... ஆசிட் வீச்சு தேவையா?

கேடு கெட்ட மிருகங்களுக்கு கொடுத்தார்கள் ஆந்திராவில் மக்கள் தீர்ப்பு. வாங்கிய சம்பளத்திற்கு போலிஸ் செய்த நல்ல காரியம்! ஹுமன் ரைட்ஸ் கமிசன் எல்லாம் இன்று ஒன்றும் செய்ய முடியாது...

மீண்டும் மீண்டும் தொல்லை என்பதால்... என்கவுண்டர். அட்டகாசம்...

பெற்ற மனது பாடுபடும் தான்... நன்றாக வளர்த்திருக்க வேண்டும்? ஆந்திரா பற்றி தெரிந்த வரை, இப்போது அந்த ஆண்களின் பெற்றோர் காசு கொடுத்து பெண்கள் குடும்பத்திற்கு தொல்லை கொடுப்பார்கள்.

இரண்டு உயிர் ஊசலாடுது... அதற்கு என்ன பிரதிபலன்?

இதற்கும் தனி மாநிலம் கேட்கிறார்கள்... கொடுமைங்க.

கொடுத்தால்....

சவுதி அரேபியாவில் நடப்பது போல மக்கள் தீர்ப்புகள் அங்கு சொல்லப்படும்!

***

என் கணவர் படித்ததும் வாரங்கல் தான். ஆர்..சி. தினம் தினம்... பயத்தோடு படித்தேன் என்கிறார்.

நான் கராத்தே படித்துள்ளேன், ஹேன்ட் பேகில் சிறு கத்தி ஒன்று எப்போதும் இருக்கும், கையில் நகம் சார்பாக இருக்கும், அப்புறம் மிளகாய் பொடி ஒரு பாக்கட். சென்னையில் தெரியும்.... நிச்சயம் தேவை...

பிட்சாவால் காபாற்றபட்டவர்

அமெரிக்காவில் பிட்சாவால் காபாற்றபட்டவர் ஒருவர் இருக்கிறார்... ப்லோரிடாவை சேர்ந்த எரிக் லோபஸ். மிராமர் என்ற டவுன்.

Pizza

சூடான பிட்சாவால், துப்பாக்கி ஏந்திய ஒருவனை முகத்தில் அடித்து, கடை திருடப்படுவதை... தடுத்துள்ளார்.... தற்காப்பு என்று சொன்னார்.

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்...

Friday, December 12, 2008

நானைய விகடனில் ரஜினிகாந்த்

நானைய விகடனில் ரஜினிகாந்த் பற்றி ஒரு செய்தி, இட்லிவடை செய்து கொடுக்கிறேன். படித்து பயன் பெருக.

படத்தின் மீது கிளிக் செய்தால், நன்றாக படிக்கலாம்...

சரி படித்தால் என்ன பயன்?

நாம கொடுக்கும் டிக்கட் காசு எப்படி யூஸ் ஆகுதுன்னு தெரியும்.

சும்மா டைம் பாஸ்!

Thursday, December 11, 2008

அரசியலும் ஜோதிடமும்

கேள்வி : பதினாறு வயதிலிருந்து என் கணவர் அரசியலில் இருந்து வருகிறார். இருப்பினும் மேலே வர இயலவில்லை. இதற்குக் கட்சியில் சிலர் செய்துள்ள செய்வினைதான் காரணம் என்கிறார்கள். உண்மையா? வரவிருக்கும் தேர்தலில் எம்.எல்.ஏ. அல்லது எம்.பி. சீட் கிடைக்க வாய்ப்புள்ளதா? பரிகாரம் என்ன செய்தால் இந்த வாய்ப்பு கிடைக்கும்?

பதில் : தற்போது தங்கள் கணவருக்கு 58 வயதாகிறது. உங்கள் கூற்றுப்படி அவர் 42 வருடங்களாக அரசியலில் இருந்து வருகிறார். இந்நீண்ட கால அரசியலில் அவர் உயர்பதவி எதுவும் பெறவில்லை என்று வருத்தப்பட்டு எழுதியிருக்கிறீர்கள்.

தங்கள் கணவரின் ஜாதகப்படி அவருக்குச் செய்வினை எதுவும் செய்யப்பட்டிருக்கவில்லை. அவரது செய்யாவினைதான் அவரது தோல்விக்கும், ஏமாற்றத்திற்கும் காரணங்களாகும். அதாவது அவர் செய்யாத சில காரியங்கள் (செய்யாத வினை) என்பதைத்தான் சுட்டிக்காட்டுகிறோம்.

வெற்றிக்குப் `பரிகாரம்' : இந்திய அரசியலில் முன்னுக்கு வரவேண்டுமென்றால், கட்சித் தலைவரைத் `திருப்தி' செய்யவேண்டும்! அவர் சந்தோஷப்படும்படி நடந்துகொள்ள வேண்டும். மனசாட்சியை ஒதுக்கி வைத்துவிட்டுக் கட்சித் தலைவரின் `கொள்கைகளுக்கு'த் தலையாட்ட வேண்டும்.

எந்த மேடையில் பேசினாலும் தலைவரை வானளாவப் புகழவேண்டும். வழியைப் பற்றிக் கவலைப்படாமல், கட்சி நிதிக்குப் பணம் சேர்த்துத் தரவேண்டும். உங்கள் பிறந்தநாளாக இருந்தாலும், தலைவரின் பிறந்தநாளாக இருந்தாலும் தலைவருக்குப் `பெரிய அளவில்' ரூபாய் நோட்டுக்களாலான மாலையை அவருக்கு அணிவித்து, அவரது `ஆசி'யைப் பெறவேண்டும்.

சந்தர்ப்பங்கள் கிடைக்கும்போதெல்லாம் கட்சித் தலைவரின் `திருவடிகளில்' சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கவேண்டும். அவரது கால்களைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொண்டால் மிகவும் நல்லது. தலைவரின் திருக்கண் பார்வை உங்கள் மீது படும்போது, அளவற்ற மரியாதையினால் உங்கள் உடல் உங்களையும் அறியாமல் கூனிக்குறுகி நெளிய வேண்டும். அதாவது, அந்த அரசியல் தலைவரின் கண் பார்வை படுவதற்கு நீங்கள் மகத்தான பாக்கியம் செய்திருப்பதாக நீங்கள் உணர்வதை அவருக்கு வெளிப்படுத்தவேண்டும்! பொய்யை மெய்யாகவும், மெய்யைப் பொய்யாகவும் பேசக் கற்றுக்கொள்ளுங்கள். இது மிகவும் முக்கியம்.

அரசியலில் உறுதியாக வெற்றி பெற இத்தகைய `உன்னதமான' வழிமுறைகளைக் கற்றுக்கொடுக்க நம் நாட்டில் பள்ளிகள் இல்லை. ஆதலால், உங்கள் கணவரிடம் சொல்லி இவ்வழிமுறைகளைப் பின்பற்றி இன்று `நல்ல' பதவிகளில் அமர்ந்துள்ள `அரசியல் பட்டதாரிகளிடம்' சீடனாகச் சேர்ந்து கற்றுக்கொள்ளச் சொல்லுங்கள். எவ்வளவு சீக்கிரம் இதில் தேர்ச்சி பெறுகிறாரோ, அவ்வளவு சீக்கிரத்தில் அவர் எந்த அளவிற்கு உயர்ந்த பதவிகளை அவர் அடைவார் என்பது அவரது `திறமை'யைப் பொறுத்தது. அரசியல் வெற்றிக்கு இது ஒன்றே தக்க `பரிகாரம்' ஆகும்.

நன்றி : குமுதம் ஜோதிடம்

ஏ.எம்.ஆர். அவர்கள் இப்படி காமடி செய்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

Wednesday, December 10, 2008

இது சரியா?படம் - உண்மை தமிழன் ப்ளோகில் இருந்து இட்லிவடை செய்தது.

தவறில்லை தான். ஸ்வீடன் வோல்வோ கம்பனி தலைவர் அவர். ஸ்வீடிஷ் ஆட்கள் வாயில் வேறு முத்தம் கொடுப்பார்கள். என் கணவர் அங்கு சென்ற போது பட்ட கஷ்டம் மாளாது! பெண்கள் தொல்லை என்றார், சிகரெட் வாசத்தோடு....

அவுங்க நாட்டு கலாச்சாரம்... அவங்களுக்கு நாம தான் சொல்லணும்.

பீனாவின் கண்ணில் வேண்டா (இம்ம்... ஒ.கே.) வெறுப்பு தெரியுது.

விரும்பி படித்த இரண்டு பதிவுகள்

எனக்கு பிடித்த, நான் விரும்பி படித்த இரண்டு பதிவுகள் (பயணங்கள்)

ஒரு மலைக்கிராமம் ஜெயமோகன் எழுதியது. நினைவுகளை அழகாக செதுக்கி உள்ளார். மலையேற்றம் அருமை, அதுவும் அந்த கர்ப்பிணி பெண்...

எனக்கு பிடித்த எழுத்தாளர் சுஜாதா எழுதிய ஒரு பயணக்கட்டுரை... இங்கே...

கடவுள்களின் பள்ளத்தாக்கு! - இது தான்டா சுஜாதா...

*****

நிறைய கமண்ட்ஸ் நன்றாக இல்லை, ரொம்ப மோசம். என்ன செய்வது? மாடரேசன் தான் ஒரே வலி. (வழி)

நல்லா சிரிங்ககண்டிப்பா நம்மூர் மாதிரி இல்லை. போட்டோ புடிசிட்டு வேடிக்கையா பாக்குறீங்க, போய் தீயை அணைங்க! இது ஒரு சூட்டிங் ஸ்பாட் ஆக இருக்கலாம்.

பங்களாதேஷில் தாஜ் மஹால்

பங்களாதேஷில் தாஜ் மஹால் ஒன்று கட்டுகிறார், சினிமா இயக்குனர்.

அது டாகாவில் இருந்து ஒரு மணி நேரம் தள்ளி இருக்கிறது... மோனி என்பவர் கட்டுகிறார் கடந்த ஐந்து வருடங்களாக.

Taj replica in Bangladesh, image from 5 December

நல்ல விஷயம் தான். வாழ்த்துக்கள்.

டூரிஸ்டுகள் வருவார்கள். வேலை வாய்ப்பு போன்றவை.

Tuesday, December 9, 2008

வீட்டுக்கடனும் அமெரிக்காவும்

இந்த பதிவு திவ்யா எழுதியது... வீட்டுக்கடன் அமெரிக்கா வங்கிகள் திவால் விரிவாக, புரிகிற மாதிரி உள்ளது. நன்றி திவ்யா.

இதனால் எப்படி இண்டியா அடிபட்டது என்பதை கொஞ்சம் யாரவது எழுதினால் நலம்.

நான் தேடி பார்த்த வகையில், பாகிஸ்தானுக்கு சில பில்லின் நிதி கொடுத்த அமெரிக்கா, இஸ்ரேலுக்கு 400 பில்லியன் நிதி கொடுத்த சிடிபான்க் போன்றவை தான் வருகின்றன. நன்றி: பதிவுபோதை.

யாரும் விரிவாக இன்னும் எழுதவில்லை. தமிழ் கொஞ்சம் கஷ்டமான மொழி புரிய வைக்க.

படிப்பதற்கு டைம் கிடைத்தால், படிக்கலாம்.

மீண்டும் பகர் ஈத் வாழ்த்துக்கள்.

ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவு

[5_state_poll_result.jpg]

நன்றி எங்கிருந்தோ காபி செய்த இட்லிவடை.

இதுவும் ஒரு வகை டேரரிசம் தான்

உடல் ஊனமுற்றவர்களை துன்புறுத்துவது, அரசாங்க ஊழியர்களின் வேலையாக போயிற்று போல. திருந்தமாட்டார்களா? அவர்கள் தான் மனதில் ஊனம் படைத்தவர்கள்.

திவ்யாவின் ப்ளோகில் இருந்த இணைப்பில் இந்த பதிவை பார்த்தேன்.

ரகசிய வன்முறை

தங்கவேல் அவர்கள் எழுதியது.

நாடு திருந்த வேண்டுமென்றால், மக்கள் மனது திருந்த வேண்டும்.

கொடுத்த வாங்குவது தான் வாழ்க்கை.

இறைவன் சிலரை சில சங்கடங்களுடன் படைத்துவிடுகிறான்.

அவர்களும் மனித பிறவிகள் தானே?

உதவி செய்வது நம் கடமை.

கல்யாணம் என்றால்

கல்யாணம் என்றால் என்ன? ஒரு ஆண் பெண் அவரவர் துணை.... குடும்பம் காட்சி.

உலகத்தின் நியதி.

விட்டுக்கொடுத்தல் ஒரு சுகம்.

எல்லோரும் கராக்டான ஆட்களாக இருந்ததில்லை.

சில நிறை குறைகள் இருக்கும். அட்ஜஸ்ட் செய்து வாழ்க்கை போகும்.

செக்சன் 498 ஏவை வைத்து கொடுமை படுத்தும் பெண்கள் பற்றிய பதிவு ஒன்று இங்கே. ஆண்டவன் என்று ஒருவன்(ள்) இருந்தால், அந்த பெண்கள் நிலை என்னவாகும்?

கல்யாணமும் ஐ.பி.சி. செக்சன் 498 ஏவும்

**********

பக்ரித் வாழ்த்துக்கள். (ஈகை பெருநாள், மகிழ்ச்சியோடு கொண்டாடுங்கள்....)

Monday, December 8, 2008

உங்கள் வருகைக்கு நன்றி

பதிவு உலகில் வந்து ஏழு மாதங்களில் நிறைய விஷயங்கள் படித்தேன்.

நானும் எழுதினேன். 85 பதிவுகள்! :-)

இன்று ஐந்தாயிரம் வாசகர் பார்வைகள்.

உங்கள் வருகைக்கு நன்றி!

Sunday, December 7, 2008

நல்ல பதிவுகள்

இன்று ஞாயிறு, பெங்களூரில் உட்கார்ந்துக்கொண்டு, நிறைய நேரம் இருக்கிறது.

நல்ல பதிவுகள் படித்தேன்.....

சுவாமி ஓம்கார் அவர்கள் எழுதியது...

உங்கள் குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டுமா?

நான் இட்ட கமன்ட்...

ஹிந்துக்களுக்கு மட்டும் தான இது உதவும், மற்ற ரிலிஜன் ஆட்கள் என்ன செய்ய வேண்டும்?

அப்டேட் ...

ஜோதிட ரீதியாக என்று நான் கேட்டிருக்க வேண்டும். ஏனென்றால், மற்ற மதத்தில், அவர்கள் ஜோதிடம் (இந்து / இந்தியன் முறை) நம்பமாட்டார்கள் அல்லவா? அவர்கள் பெயர் வைப்பது...வெஸ்டர்ன், நுமேரோலாஜி, தொழில் முறை, ஜார்ஜ் புஷ் குடும்பம் போல அரச வழி ஜூனியர் சீனியர் என்று...

தொடர்புடைய ஒரு பதிவு... குழந்தைகளுக்கு “பெயர்” வைக்கும் விஷயம்.

ஏற்கனவே ஒரு பதிவில் எழுதிவிட்டேன்.... குழந்தைகள்

கதை எழுதுவது பற்றி.... நண்பர் கே.ரவிசங்கர் எழுதியது. சிறுகதைக்கு இலக்கணம் கிடையாது... என்னை பொறுத்த வரை பாலகுமாரன் எழுதியவை நீண்ட சிறுகதைகளே. நண்பர் ரமேஷ் அந்த ஸ்டைல் பார்த்து தான அவர் பதிவுபோதை ப்ளோகில் சில கதைகள் எழுதியுள்ளார். பிறகு நரசிம் என்பவர் புதிய முயற்சி செய்கிறார். அப்புறம் பரிசல்காரன். ஜ்யோவ்ராம் சுந்தர் எழுதும், கச மூஸா கதைகள், இலக்கணம் இல்லாதவை. லக்கிலுக் என்பவர் எழுதுவதும் அப்படிதான். மொத்தத்தில் சிறுகதை என்றால் ஒரு சம்பவத்தை வைத்து படிக்கதூண்டுபவை. ஸூபர் என்றால்... லதானந்த் அவர்கள் எழுதுவது, பதிவுகளில் வரும் கதைகள். நினைவில் நிற்கும் சம்பவங்கள். உண்மையா பொய்யா தெரியாது.

சிறு கதை எழுதுவது எப்படி? பதிவர்களே படியுங்கள்!

அப்புறம் இரா.வசந்த குமார் அவர்கள் எழுதியது... நவீனங்கள், அறிவியல் புனைவுகள் எழுதுபவர்... படியுங்கள்... அவர் சொல்லுகிறார்...

எழுத்தாளர் ஆக எக்கச்சக்க ஆசையா?

*****
காலத்திற்கு தகுந்த பதிவு...


An interesting article from Divya...

Some conspiracy theory on LBS

You should also read this...

Beware of these Holiday Scams

Thanks to all the pointers for my job search. Few guys have even specified the target big co. with a guaranteed job and costs! Great!

Saturday, December 6, 2008

தேவை ஒரு சாப்ட்வேர் வேலை

எனக்கு தேவை ஒரு சாப்ட்வேர் வேலை ...

டெஸ்டிங், க்வாலிட்டி அஷுரன்ஸ் போன்றவை எனக்கு கரக்டாக இருக்கும்.

பி.சி.ஏ முடித்த பிறகு இப்போ எம்.பி.ஏ இந்த வருடம் முடிக்கிறேன்.

விசுவல் பேசிக், சி, சி++, ஒரெகில் போன்றவை தெரியும்.

சென்னை அல்லது பெங்களூர் ஒ.கே.

விவரம் இருப்பின், எனக்கு கமன்ட் போடவும்.

கிண்டல் வேண்டாம், தமிழ் ப்லாகர் மொழியில் சொன்னால், கும்மி வேண்டாம்.

Friday, December 5, 2008

குழந்தைகள்

குழந்தைகள் என்றால் நிறைய சந்தோசம். அவர்களுக்கு ஒன்று என்றால்... மனசுக்கு கஷ்டம்...

புதன் இரவு முதல் என் குழந்தைகள் பிரிந்து இருப்புது கஷ்டமாக உள்ளது. எதிர் நோக்கி இருக்கிறேன். போனில் பேசுவது வேறு... நேரில் இருந்து பார்ப்பது தான் வேண்டும்.

பிரபு தேவாவின் குழந்தை மறைவு கடினம். புரிகிறது. ஆழ்ந்த அனுதாபங்கள்.

**********

நண்பர் கே.ரவிசங்கர் எழுதியிருக்கிறார்... குழந்தைகளுக்கு “பெயர்” வைக்கும் விஷயம்.

என்னங்க வேலைக்காரர்கள் எல்லாம் பேன்சி பெயர் வைக்க கூடாதா?

சென்னையில் ஊசி பின் வாங்கும் போது, விற்ற நரி குறவ பெண், அவர் மகளை அழைத்தது... 'சிம்ரன்".

பூக்கள்

பூக்கள் தான எத்தனை வகை! பெங்களூரில் மல்லிகை முழம் பத்து ரூபாய். கனகாம்பரம் இல்லை. ஆனால் ரோஸ் விலை கம்மி ஒன்று ஒரு ருபாய் என்று கொடுத்தார் ஒரு பெண். சென்னையில் கொள்ளை.

நாங்கள் தங்கியது ஒரு கெஸ்ட் ஹவுஸ். என் கணவரின் ஆபிஸ் ஏற்பாடு செய்து கொடுத்தது.

மிச்சிகனில் இருக்கும் ஒருவர் வந்து கோர்ஸில் உதவி செய்தார். வெளிநாட்டு படிப்பு எப்படி இருக்கும் என தெரிந்தது.

ஒரு வழியாக மார்க்கெட்டிங் கோர்ஸ் முடிந்துவிட்டது. புதிய விஷயம் கற்றேன். என் எம்.பி.ஏ படிப்பிற்கு உதவும். அப்புறம் பயோ டேட்டாவில் ஐ.ஐ.எம்மில் ஒரு கோர்ஸ் என்று போட்டால், மதிப்பு தான்.

இப்போது கண்டோன்மென்ட் அருகில் கணவரின் சொந்தம் ஒருவர் வீடு இருக்கிறது, அங்கு செல்கிறோம். அப்படியே குழந்தைகளை அழைத்து வரும் மாமனார், மாமியார்... ரிசீவ் செய்து ... பத்து மணி ஆகும்... எம்.ஜி.ரோட் அருகில் ஒரு லாட்ஜ். ஞாயிறு இரவு ட்ரைன் டிக்கட் கிடைத்து விட்டது.

இரண்டு நாட்கள். என் நண்பர்கள் இங்கு உள்ளனர். பார்க்க வேண்டும்.

பெங்களூரில் சில்க் சாரிகள், அலங்கார் பிளாசாவில் துணி... எம்.டி.ஆர். சாப்பாடு... கணவருக்கு பிடித்த ஹோட்டல்... என போகும் நேரம்.

************

என் ஹிந்தி பற்றி பதிவிற்கு பதிலுக்கு பதிலாக ரமேஷ் அவர்கள் ஒரு பதிவு போட்டுள்ளார்.

ஹிந்தி ரஜினிகாந்த் நான்

எதற்கு அந்த பாட்டு போட்டீர்?

ஹிந்தி படிப்பது பற்றி

ஹிந்தி என்பது நாட்டின் மொழி ஆகிவிட்டது. நான் டிவி பார்ப்பது மூலம் சொல்கிறேன்.

How can we live without Kyu Ki Saas bi Kabhi Bahu thi?

தமிழ்நாட்டில் ஹிந்தி கட்டாயம் திணிக்கப்படுகிறது என்று சொன்னார்கள். எத்தோ ஒரு பள்ளியில். எங்கே என்று தெரியாது... Erode?

நேற்றிலிருந்து பெங்களூரில் ஐ.ஐ.எம்மில் ஒரு இரண்டு நாள் கோர்ஸ் ... கணவரோடு வந்தேன். பல மொழிகள். ஹிந்தி பேசுவதால்... அட்லீஸ்ட், ஆங்கிலத்தை தவிர ஒரு மொழி, கலந்து உரையாட. Hindi கட்டாயம் இல்லை. நல்ல விஷயம் ... மகிழ்ச்சி... நான் தமிழர் என்று நினைத்து ஒருவரோடு பேச, அந்த பெண், சாரி "நன்கே தமிழ் பரல்லா..." என்றார். At least there was English to converse.

சென்னையில் குழந்தைகள், கணவரின் அப்பா அம்மா பார்த்துக்கொள்கிறார்கள். இன்று மதியம் கிளம்பி அவர்களும் பெங்களூரில். ட்ரைன் பிடிக்க சீக்கிரம் போனால் சரி.

மொழி பற்றி... என் கணவருக்கு உருது நன்றாக பேசுவது எழுதுவது வரும். நாங்கள் இருவரும் தமிழ் தான் பேசிக்கொள்கிறோம். குழந்தைகள் எப்போதும் ஆங்கிலம் தான். தமிழ் பேசுகிறார்கள். ஹிந்தி நன்றாக படிக்கிறார்கள். இது அவர்களுக்கு மூன்றாம் லாங்குவேஜ். பக்கத்து வீட்டுக்காரர்கள் கன்னடம் பேசுகிறார்கள். அதனால் குழந்தைகள், கன்னடமும் சிறிது பேசுவார்கள்.

நாங்கள் நண்பர்களோடு சென்னையில் கட்டாயம் இங்கிலீஷ் தான். தமிழில் பேசினால், சுத்தமாக, கலப்படம் இல்லாமல் பேச முயற்சி செய்தால்... வினோதமாக பார்கிறார்கள்.

என்னை பொறுத்தவரை தேவை இருப்பின், கட்டாயம் இல்லாமல், ஹிந்தி படிப்பது நன்று.

ஒருவருடைய பதிவு... நான் இட்ட கமன்ட்... எப்போதும் போல பல வித பாடங்கள், பதில்கள். எதோ ஒரு பள்ளியில் கட்டாயம் ஹிந்தி படிக்க வைக்கிறார்கள், என்று எழுதி இருந்தார்.

நான் இட்ட கமன்ட்...

Please tell me one thing, if those kids who study there, end up getting a job only in North India, how would they survive?

My kids study in a school, where Tamil is also compulsory, apart from a third language, which can be Hindi/French or whatever.

Different thinking is needed to survive in this world.

Also half the Central secretariat is filled with Tamilians only in Delhi, which has more than 10 lakhs Tamil population.


சில பதிலுக்கு பதில்கள்... நல்ல விஷயங்கள்... நன்றி...

தேவை இருப்பின் கற்றுக்கொள்வதல்ல நம் பிரச்சனை. வலுகட்டாயமாகத் திணிப்பது தான் பிரச்சனை. அப்படி நாம் வட நாடு சென்று தான் ஆக வேண்டும் என்றால் ஹிந்தி ஒரு மாற்றுப்படமாக படிக்கலாம், இல்லை வெளியில் பயின்றுகொள்ளலாம். அவனவன் ஸ்பானிஷ் போன்ற மொழிகளையே 24 நாட்களில் கற்றுக்கொள்கிறார்கள்.

ஏன் தேவையில்லாமல் திணிக்க வேண்டும்? அதுவும் நம் தாய் மொழியை விட்டுவிட்டு ? :-))

இந்தி பேசாத இந்தியை தாய்மொழியாகக் கொள்ளத இந்திய மக்களிடம் இந்தி மொழியையோ பிறமொழியோ திணிப்பவர்கள்தான் உண்மையான “தேசத்துரோகிகள்” “மக்கள் விரோதிகள்” நாட்டின் ஒற்றுமைக்கு எதிரானவர்கள் .... ;-)

முற்றிலும் உண்மை. நம்ம ஊரிலும் வட நாட்டு மாணவர்கள், ஏன் ஆப்ரிக்கா மாணவர்கள் , சீனா மாணவர்கள் என்று நிறைய வந்து பயில்கிறார்கள். அவர்கள் எல்லாம் வாழவில்லையா? :-)

தமிழ்நாட்டில் ஹிந்தி கட்டாயப்பாடமாகும் என்று கனவிலும் கூட நான் கருதியதில்லை. இப்படி நாம் எல்லோரும் தூங்கிக்கொண்டு இருந்தது தான் காரணம் என்று நினைக்கிறேன். :-(

அது போலவே "தேவை" என்று வரும்போது தமிழன் ஹிந்தியும் பேசுவான், கொரியனும் பேசுவான் .... :-))

அதனால் இந்த இந்தி படிச்சா வடநாட்டுல போய் பொழைச்சுக்கலாம் என்ற பழைய பல்லவியை பாடுவதை நிறுத்துங்கள் முதலில்... ;-)

...உண்மை. ஹிந்தி நண்பர்களைச் சந்திக்கும்பொழுது அவர்கள் கேட்கும் முதல் கேள்வி என் தமிழர்களுக்கு ஹிந்தி தெரிவதில்லை? நீங்கள் இந்தியர்கள் தானே? என்று....அப்பொழுதெல்லாம் நான் அவர்களுக்கு எடுத்துக்கூறி, நாங்கள் இந்தியர்கள் தான் , ஆனால் ஹிந்தியர்கள் இல்லை என்று.... :-()

முடிவுகள் ஒன்று... தேவை இருப்பின் படிக்கலாம்...

Be a Roman in Rome, on a need basis.

நேற்று இரவு, ஒரு வீட்டிற்கு இரவு உணவிற்கு சென்றோம். உருது மட்டும் பேசிக்கொண்டார்கள். ஹிந்தி தெரிந்ததால்... தப்பித்தோம்.

Atleast, I could well come out of the embarassing situation, even being in South India.

Thursday, December 4, 2008

யோசிக்க வைத்த பதிவு

மும்பை தாக்குதலும் பிரபலங்களும்

பேசுவதால் எழுதுவதால் ஒன்றும் ஆகிவிடபோவதில்லை தான்.

இருந்தாலும்...

ஒரு வாய்ஸ்.

பெண்கள் பதிவுகள்

நான் ஆரம்பித்த பெண்கள் பதிவுகள் என்ற ப்லோக் பற்றி குறிப்பிட்டு எழுதியிருக்கிறார் நண்பி திவ்யா இங்கே சில பதிவுகள். இந்த வருடம் மே மாதம் நான் ஆரம்பித்த முயற்சி.

அது தேவையில்லை என்று இருந்தேன். ஒரு பெண்கள் முயற்சி அது என்று இருந்துவிட்டேன்.

இருந்தாலும், அது ஒரு நல்ல தொகுப்பு என்று நண்பர்கள் சொல்லுகிறார்கள். நீங்களும் அதில் உதவலாம்...

நீங்களும் உங்கள் பெண்கள் பதிவுகள் அங்கு இடம் பெற ஒரு கமன்ட் போடவும்.

நன்றி.

Wednesday, December 3, 2008

பூவாசம்

பூவாசம் என்று பெண்களுக்கான இணையதளம் ப்ளொக்கரில் நடத்துகிறார் ஒருவர்.

நீங்கள் பெண் என்று கட்டாயம் தெரிவிக்க வேண்டும், அவரிடம் அலைபேசியில். சிம்பிள் வெரிபிகேசன் என்று மெயில் வரும். அதன் பிறகு அந்த என் வைத்து, என்ன செக்கூரிட்டி போன்றவை தெரியவில்லை. நான் என் ப்ளோக்கை இணைக்கலாம் என்று இருந்தேன். நான் என் அலைபேசியை எந்நேரமும் ஆண் செய்து வைத்திருப்பேன், வயதான பெற்றோர் ஊரில் இருப்பதால். கணவர், பிறருக்கு அலைபேசியில் பேசி முன் பின் பார்த்திராத ஒருவருக்கு எண் கொடுப்பது, வீண் வம்பை வளர்க்கும் என்கிறார். ததாஸ்து!

மகளிர் மணம்

மற்றபடி, அந்த தொகுப்பு மூலம் ஒரு பெமினிஸ்ட் பீலிங் வருகிறது என தோன்றுகிறது!

அனைவரும் சமம் என்ற கோட்பாடு... என்னவாயிற்று?

கருப்பு பேக்க்ரவுன்ட் கண்ணை சுழற்றுகிறது. வெள்ளைக்கு அல்லாத கண்ணுக்கு இதமான கலரில் மாற்றுங்கள்.

மற்றபடி அதில் இணைத்திருக்கும் சிலரின் எழுத்துக்கள் எனக்கு பிடிக்கவில்லை.

ரத்தம் ஒரே நிறம் தான்.

ஹைகூ. - சில விளக்கங்கள்

நண்பர் கே.ரவிசங்கர் அவர்கள், கொடுத்த குறிப்பு படி, இது ஒரு ஹைகூ. - சில விளக்கங்கள் பதிவு.

படித்துவிட்டு, அவரை பாராட்டுங்கள். எனக்கும் புரிகிற மாதிரி இருக்குது.

ஹைகூ....? மூணு வரில முடிச்சுடனும் ....

நடைமுறையில் உள்ள விதிகள்:

உவமை/உருவகம் இருக்க கூடாது. மூன்று வரிகள்தான் இருக்கவேண்டும்.

சுஜாதா ஹைக்கூ பற்றி சொன்னது :-

லாங் சாட், மிட் சாட், க்ளோஸ் அப் என்று மூன்று வரிகள்தான்.க்ளோஸ் அப் அல்லது zoom ஒருகாட்சி உரைத்தல் /திகில்/ஆச்சிரியப்படுத்தல்/திருப்பம் வேண்டும்.

சில ஹைகூ. எங்கோ படித்தது! எழுதியவர்களுக்கு வாழ்த்துக்கள்.

விழுந்த மலர்
திரும்ப கிளைக்கு செல்கிறது
வண்ணத்து பூச்சி!

மாதத்தில் ஒருநாள்
சலூன்காரன் பொன்னாடை
போர்த்துகிறான் .

அழகான வீடு
வாசல் கேட்டில்
அழுக்கான பால் பை
………………………………

மூன்று நிமிட
மௌன அஞ்சலியில்
யாருக்கோ வாயு தொல்லை
……………………………..

ஆண் பிணத்தின் இடுப்பு
துணியை ப்ரோகிதர் உருவ
கண் மூடி அழும் பெண்கள்
………………………………..

குடைக்குள் மனைவி
பேசிக்கொண்டு நடக்கிறேன்
பழைய காதலியுடன்
…………………………………..

உத்பவம் சென்னைவரும் சனி அன்று (டிசம்பர் ஆறு 6-12-2008) எல்டேம்ஸ் ரோட்டில் இருக்கும் தத்வலோகா என்ற இடத்தில், உட்பவம் என்ற பெண்களுக்கான நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பெண்கள் அனைவரும் கலந்துக்கொண்டு தங்கள் ஸ்ட்ரெஸ்சை குறைத்துக்கொள்ளுங்கள். நானும் வர முயற்சி செய்கிறேன்.

நான் நாளை வியாழன் மற்றும் வெள்ளி பெங்களூரில் ஐ.ஐ.எம்மில் ஒரு கோர்ஸ் அட்டன்ட் செய்கிறேன். அப்படியே, சனி ஞாயிறு அங்கிருக்கும் உறவினர் வீட்டில் இருக்கலாம்... குடும்பத்தோடு.

Tuesday, December 2, 2008

ஹைக்கூ கவிதைகள்

இங்கே சில ஹைக்கூ கவிதைகள் படித்தேன்...

டிராபிக் சிக்னல்...ஹைகூக்கள்...

உண்மையை சொல்கிறேன். புரியவில்லை.

வாழ்த்துக்கள்.

பெண்களுக்கு எதிராக பயங்கரவாதம்

ஆண்கள் எப்படியெல்லாம் பெண்களை வதைக்கிறார்கள்... இதுவும் ஒரு வகை பயங்கரவாதம் தான்.

இப்போது பி.ஜே.பியின் நக்வி பெண்களை குறை சொல்வது... பவுடர் பூச்சு, லிப்ஸ்டிக் போடும் பெண்கள் அரசியல்வாதிகளை எதிர்த்து பேச கூடாதாம்...

நான் இந்த பதிவில் எழுதியிருந்தேன்...

அமெரிக்காவின் மிலிடரி தர்பார்

அதில், இந்த பதிவு குறித்து குறிப்பிட்டிருந்தேன்...

செக்சுவல் ஹராஷ்மன்ட் அதன் பலனாக, கேஸ் சால்வ்டு.

மீண்டும் மன உளைச்சலோடு நியூ யார்க்

நிம்மதி

சாந்தி ஜெயகுமார் அவர்கள், முயற்சி எடுத்து, அவருடைய நண்பர் டாக்டர் ரத்த அவர்கள் மூலம், ஒரு தீர்வு கொடுத்தார்.

//This case of செக்சுவல் ஹராஷ்மன்ட் at the Coimbatore college is solved.

Thanks to the Physics Dept. HOD Dr. S Jayakumar and my close friend Dr Rath, to close this.

The problem lecturer will move out.

I was worried that, whether it could be a case of impersonation, someone trying to take revenge on that person.

Glad it is over.//

இன்டர்நெட்டால், பயன் இருக்கிறது தான். பார்க்காத நண்பர்கள் உதவி...

Thanks to everyone concerned.

Monday, December 1, 2008

ராஜ் தாக்கரே எங்கே?

காணாமல் போய் விட்டார்?

ராஜ் தாக்கரே எங்கே?

அரஸ்ட் வாரண்ட் வேற உள்ளது...

மும்பை தீவிரவாத தாக்குதலை முறியடித்த களைப்பில் ரெஸ்ட் எடுக்கிறாரா?

அவரின் மாமாவும் (பால்) ரெஸ்ட் எடுக்கிறார். உதவ் எங்கே?

இதையும் படியுங்கள்....

மும்பை தீவிரவாதிகள் லைவ் டிவி

மும்பை பயங்கரம் - நான்கு ஆங்கில கட்டுரைகள்

மும்பை - 1: Audacity of Terror

பயங்கரவாதிகள் மன்னிப்பு பெற அரசு கருணைகாட்ட வேண்டும்

உலகின் 20 அபாயகர நாடுகளில் இந்தியாவும் சேர்ப்பு.

Sunday, November 30, 2008

அமெரிக்காவின் மிலிடரி தர்பார்

இப்படியும் இருக்குது உலகம்...

இந்த மனிதரை பற்றி ஆங்கிலத்தில் படியுங்கள்.

அமெரிக்காவின் மிலிடரி தர்பார்

ஆங்கிலத்தில் டைப் செய்தால், தமிழ் அர்த்தம் வரும் மென்பொருள் உண்டா?

நெஞ்சு பொறுக்குதில்லையே... இதை படித்து...

செக்சுவல் ஹராஷ்மன்ட்

அப்புறம்...

சிவராஜ் பாட்டில் ராஜினாமா...

ப சிதம்பரம் அவர்கள் புதிய உள்துறை அமைச்சர் ஆகிறார். நல்ல சாயஸ் ... யார் இப்போ நிதித்துறை பொறுப்பு? பிரதமர் பார்க்கிறாராம்.

Friday, November 28, 2008

ரோடி மேகர்

ரோடி மேகர் அனுபவம்...

நிஜமா இது உங்களை, கொஞ்சம் சந்தோசப்படுத்தும்.

படியுங்கள் இங்கே... பிடித்தால் வாங்கவும். இது ஒரு கரண்ட் யூஸ் செய்யும் ஐட்டம்.

Roti and Roti Maker

நீங்கள் சிரிப்பது தெரிகிறது...

ஆம், சப்பாத்தி உருட்டும் வேலை இல்லை.

பெண்கள் உடம்பு ஏற்றுவார்கள் இல்லையா?

சென்னை மழை தீரவில்லை

சென்னை மழை தீரவில்லை இன்னும். வெற்றிகரமான அடிதடியான மூன்றாவது நாள். மேட்டுக்குப்பத்தில் நெஞ்சளவு நீர் என்கிறார் கணவரின் நண்பர். ஒரு குளத்தில் வீடு போல? கார் மூழ்கி விட்டதாம்.

நல்ல வேலை, எங்கள் வீட்டு ஏரியாவில், கரண்ட் உள்ளது. பரவாயில்லை. கொஞ்சம் கீழ் மட்டமான இடங்களில்? பாவம் மக்கள். சென்னை மாநகாட்சி, எங்கெல்லாம், மழை தண்ணீர் தேங்கும் என்று ப்ளேன் செய்து கட்டிடம் கட்டும் போது பெச்மன்ட் அளவு பார்த்து உதவி செய்யலாம்.

அண்ணா சாலை வரை சென்று வந்தோம். கொடுமை. சேற்றை வாரி இறைக்கும் கொடுமை. கணுக்கால் அளவு நீர்.

ஒரு தமிழ்நாட்டு காபிடல் சிடி என்று சொல்லும் அளவு இல்லை சென்னை.

ஊரிலிருந்து சொந்தம் வரவேண்டியது ட்ரிப் கேன்சல் செய்தார்கள் நல்ல வேலை.

குடிக்கும் நீர், எப்படியோ அகுவாகார்ட் வைத்து சமாளிக்கிறோம். அதுவும் பவர் போனால் அழுகை தான்.

நல்ல வேலை சில கடைகள் உள்ளன, மாவு, அத்தியாவசியமான கிழங்கு, வெங்காயம் இருந்தது. யானை விலை.

அநியாயம். பாணி பூரி விற்கப்படுகிறது, பிளாட்பார்மில்..

கீழ்பாக்கம் மாறிய என் நண்பர் குடும்பம், தண்ணீர் இல்லாமல், குடிசை மாற்று வாரியம் ஏரியாவிற்கு சென்று குடங்களில் தண்ணீர் வாங்கி வந்துள்ளார்கள்.

நாளை மழை நிற்கும்.

டிபன் சாம்பார்

நீங்கள் சாம்பார் பிரியரா?

வெஜிடேரியனிசம் உடலுக்கு நல்லது... அதுவும் மழை காலத்தில்...

காலையில் இட்லி செய்தேன். தொட்டுக்கொள்ள சாம்பார்.

கைகளால் குழந்தைகள் ஈசி உணவு என்று சாப்பிடுவது இது தான்.

அருமை. அருமை.

இங்கே பாருங்கள் ரெசிபி.

Tiffin Sambar

சென்னையில் மழை

சென்னையில் சரியான மழை. இரண்டு நாட்களாக விடாது கொட்டுகிறது. புயல் என்றார்கள். பரவாயில்லை நீர் கிடைக்கும் என்றால், குளத்தூரில், வாய்க்கால் வெட்டி, நீரை வீட்டிலிருந்து வெளியேற்றுகிறார்கள்.

அதுவும் வானிலை அறிக்கை சொன்னால் போதும். தலைகீழாக நடக்கிறது.

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை. காய்ச்சல். கொடுமைங்க.

நிறைய பேர், ப்ளேட்பாரம் வாசிகள், எங்கள் வீட்டில் முன் தஞ்சம் அடைந்துள்ளார்கள்.

அரசாங்கம் ஒன்று செய்யவில்லை.

குப்பை கூளம் நாறுகிறது.

Thursday, November 27, 2008

சில நிகழ்வுகள்

இன்னும் மும்பை கஷ்டம் தீர்ந்தபாடில்லை... எப்போது ஓயும் இந்த டிவி நிகழ்ச்சி.. அப்படி தான் கேட்கிறார்கள் குழந்தைகள். ஒரே கவரேஜ்.

கணவருக்கு கோபம்.

விளம்பரங்கள் வருகின்றன.... தேவையா?

நண்பி திவ்யா எழுதுகிறார்... அமெரிக்காவில் ரெட் அலர்ட்

அமெரிக்காவிலும் பயமாம் .

என்ன கொடுமைங்க இது?

உலகில் யாரும் நிம்மதியாக இருக்க முடியாதா?

நான் தான் விடுதலை நாள் வீர உரை ஆற்ற வேண்டும். ஆண்டவனே எம் மக்களை காப்பாற்று.

இந்த விஷயம்? மனிதர்களின் மனம் படித்து பாருங்க புரியும்.

அண்ணன் வாஞ்சூர் அவர்கள் சுட்டிக்காட்டியது...

குமுதம் ரிப்போர்ட்.அம்பலமாகும் இந்து தீவிரவாதம்.அதிர்ச்சியில் அத்வானி. பதற்றத்தில் பரிவாரங்கள்.

அப்புறம்... பரிசல்காரன் எழுதியது.... ஆசிரியப்பணியின் புனிதமும், கண்துடைப்பு கல்விக்கூடங்களும்

என் குழந்தைகள் படிப்புக்கு வருடம் நிறைய ஆகிறது... நாங்கள் தான் சொல்லிக்கொடுக்குறோம். டீச்சர்கள் வேஸ்ட்.

டிவியில் மும்பை

டிவியில் மும்பை அட்டேக் பற்றி ஒவ்வொரு சேனலும் ஒரு மாதிரி காட்டுகிறார்கள்.

இப்போது தான் பார்த்தேன், சி.என்.என். ஐ.பி.என். சொல்கிறார்கள், எல்லாம் முடிந்தது... மேலும் நாற்பது உடல்கள் தாஜ் ஹோட்டலில் கண்டுபிடிப்பு...

அப்புறம், டைம்ஸ் நொவ் சொல்கிறார்கள்...

இன்னும் ஆட்கள் இருக்கிறார்கள்... அங்கே...

என்.டி.டிவி சொல்லுது..

ஒருவர் "வினய்" ரூம் நண்பர் ஐந்திலிருந்து கால் பண்ணுறார்... அப்படியே லைன் கட்... மனசு திக் திக்.

சாப்பாடு இன்னும் இல்லை. எங்கே இறங்கும்?

இன்டர்நெட்?

என்.டி.டிவி. இங்கே அழுகிறார்கள்.

போட்டோக்கள்...

குழப்பங்கள்... அவரவர் இஷ்டமான நியூஸ்.

இந்தியா என்ன செய்ய வேண்டும் ?

சென்னை வெதர் மோசம். இதை பற்றி யாரவது எழுதினால் நன்று.

நான் மட்டும் எழுதி என்ன பயன்?

 1. காய்கறி விலை ஏற்றம் பற்றி இன்டர்நெட்டில் எழுதலாம்...
 2. ஸ்கூல் அட்மிசனில் நடக்கும் கேலி கூத்துக்கள் பற்றி எழுதலாம்...
 3. மாபியா மாதிரி இருக்கும் விடுதலை வீரர்கள், ஆள்கடத்தல், பயம் காட்டிபணம் பிடுங்கும் கூட்டம், ட்ரக் விற்று தளவாடம் வாங்கும் ஆட்கள் பற்றி வரலாறு எழுதலாம்...
 4. எங்கே போய் முட்டிகொள்வது?

மும்பை

எழுத்தால் ஒன்றும் செய்ய முடியாது, கொடுமைக்கார மனசுகளை. யார் என்ன சொன்னாலும் இன்னும் காந்தி வழி தான் ஜெயிக்கும். சினிமாவில் வையலன்ஸ் காட்டுவது நிறுத்தும் வரை, டேரரிசம் தொடரும்...

Please do not glorify violence!

மும்பையில் உயிர் நீத்தோருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

இட்லிவடை

நெட்டில் படித்த ஒன்று, இந்துகள் எழுச்சி, பயங்கரவாதம்...

நான் எழுதிய பதிவு....

ஹிந்துக்களும் மதவாதமும்

யோசிக்கும் விஷயம்.....

நண்பர் ரமேஷ் எழுதுகிறார்...

மும்பையில் பயங்கரம்

எல்லோரும் நாட்டுக்கு நல்லது நடக்க பிரார்த்தனை செய்வோம்.

Wednesday, November 26, 2008

இலங்கையும் போரும்

இலங்கையில் தமிழருக்கு ஒரு நல்ல வாழ்வு கிடைக்க அனைவரும் காந்திய வழியில் சிந்திக்க வேண்டும். எனக்கு தெரிந்த வகையில் ஸ்ரீலங்காவில் இருபத்தி ஐந்து லட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள். இன்னும் ஐந்து லட்சம் வெளிநாட்டில் அகதிகளாக, தொழிலாளிகளாக குடும்பத்தோடு இருக்கிறார்கள். ஆகா மொத்தம் 8% பாபுலேசன் தான் அங்கு.

ஆயுதம் ஏந்துவது கொடுமை. அங்கு ஒரு காந்தி பிறந்து வர வேண்டும்.

அனைத்து தமிழர் உணர்வும், அவர்கள் நல்லதுக்கு தான்.

எல்லோரும் கூடி, ஜனநாயக வழியில் ஸ்ரீலங்கா வட கிழக்கு மாகாணங்கள், தனியாட்சி அமைக்க, யோசித்தால் நன்று. அவர்கள் கொடுக்கும் ஜி.டி.பி. 5%. அதனால், ஒரு மாநிலமாக இருந்தால் தான். நன்று.

விக்கிபீடியாவில் பாருங்கள்....

ஒருவரும் தனித்து தான் தான் தலைவன் என்று சொல்லக்கூடாது. ஜாதி மதத்திற்கு அப்பார்ப்பட்டது இது. எல்லோரும் சமம் என்ற உணர்வு முதலில் வரட்டும். அப்புறம் தனி மாநிலம், சுகம், சொந்தங்கள், மரியாதை எல்லாம் வரும்.

இந்தியாவில் எப்படி ஜம்மு காஸ்மீர் மாநிலத்தின் தனி அமைப்பு உள்ளதோ.. அது மாதிரி.

நார்வே நாட்டினர் சொல்வது இது தான். மறைந்த பாலசிங்கம் அவர்களும், இப்போது அவர் மனைவியும் சொல்வது இது தான். இருபத்தி ஐந்து வருடம் போர் தேவை இல்லாத ஒன்று என்று தோன்ற வைக்கிறது.

புத்தம் சரணம் கச்சாமி.

ஹிந்துக்களும் மதவாதமும்

நான் நேற்று இரவு என்.டி.டிவி நிகழ்ச்சி ஒன்றில் இரவு எட்டரை டு ஒன்பது மணிக்கு ஸ்ரீநிவாசன் ஜெயின் தொகுத்து வழங்கியது... எப்படி சாத்வி பிரக்யா அவர்கள், ஹிந்துக்களின் எண்ணங்களை மதிக்காமல், அடிக்கு அடி என்ற விதத்தில், ஆர்மி ஆள் ஒருவர் துணையோடு, தன்னை தானே சங்கராச்சார்யா என்று பறை சாற்றிக்கொண்ட ஒருவரோடு இணைந்து, அவர் சொற்படி நடத்தியதாக விவரம்.... மல்கவ் மற்றும் சூரத் வெடிப்பு. உண்மையோ பொய்யோ, இது வரை நடக்க விட்டிருக்க கூடாது. எதற்காக இது வேண்டும்? இன்னொரு விடயம்... ஆர்.எஸ்.எஸ் ஆட்களை கொள்ள, ஐ.எஸ்.எஸ். பணம் கொடுத்தார்களாம் இவர்களிடம்... எங்கே போயிற்று மதம் வாதம்?

அத்வானி அவர்கள் பாபர் மசூதி இடிப்பு சமயத்திலும், அதை பாரதிய ஜனதா கட்சி ஆட்சி வர வாஜ்பாயுடன் சேர்ந்து ராமர் கோவில் ரத யாத்திரை செய்து பயன் படுத்திக்கொண்டார். செல்வி ஜெயலலிதாவும், இந்தியாவில் ராமர் கோவில் கட்டாமல், எங்கு கட்டுவார் என்றார். நான் அப்போதே சொன்னேன், ஸ்ரீலங்காவில், மலேசியாவில், சிங்கபூரில் எல்லாம் ஹிந்துக்களின் கோவில் உள்ளது, உலகில் எங்கு தமிழர்கள் இருக்கிறார்களோ அங்கு தமிழ் கடவுள் கோவில் உள்ளது. ஹிந்துக்கள் வாழும் இடத்தில் ஹிந்துக்கள் கோவில். ஆனால், எதற்கு ஒரு மசூதி மீது கட்ட வேண்டும்? பாலக ராமர் சிலை ஒன்றை உள்ளே சென்று வைத்துவிட்டால், போதுமா?

நாங்கள் வேலை விசயமாக அமெரிக்கா சென்ற போது சில சர்ச்சுகளில் உள்ளே சென்று பார்க்க அனுமதி உண்டு. இந்தியாவில் கோவாவில் மட்டும் நடக்கும்... சென்னை சாந்தோமில் சுற்றுலாத்தலமாக இருப்பதால் ஒ.கே. காசு கேட்பார்கள், வெளியே உட்கார்ந்துக்கொண்டு.

நாங்கள் அம்ரிட்சருக்கும் போய் உள்ளோம். அஜ்மீர் ஷேரிப்பிர்க்கும் போய் வந்தோம். நல்ல மரியாதை. பெண்களுக்கு அருமையான பாதுகாப்பு.

முதலில் ஜாதி கொடுமைகளை களைய பாருங்கள்.

அஹிம்சை தான் வாழ்க்கையில் வேண்டும். அமைதி வேண்டும்.

கேடு கெட்ட உலகம் இதுங்க.

இவர்கள் இப்படி செய்வதால், நாட்டில் உணவு பஞ்சம் தீருமா?

கல்வி அறிவு இல்லாதவர்களுக்கு படிப்பறிவு வருமா?

அரசியல்வாதிகளின் சொத்து அனைத்தும் பிடுங்கி, ஏழைகளுக்கு, தேவையானதை செய்ய வேண்டும். அதற்க்கு கடவுள் அருள் புரியட்டும்.

*************

நல்ல பதிவு ஒன்று இங்கே அண்ணன் வாஞ்சூர் அவர்கள் எழுதியது...

சந்தி சிரிக்கிறது தேசப்பற்று!!ஆர். எஸ். எஸ் தலைவர்களைக் கொல்லத் தீவிரவாதிகள் திட்டம்

Sunday, November 23, 2008

பேரழகன் மற்றும் மதவாதம்

இன்று பேரழகன் படம் குடும்பத்தோடு பார்த்தோம். தர்மம் வெல்லும் என்று சொல்வது போல, அன்பு வெல்லும் என்பதை, அழகாக சொல்லி இருக்கிறார் சசி ஷங்கர். கதாநாயகிக்கு கண் வருவதை பார்த்து இரு குழந்தைகளும் ஆனந்த கண்ணீர் வடித்தார்கள்...

மதவாதம் பற்றி வாஞ்சூர் அவைகள் எழுதிய பதிவு (என் கணவர் விடாமல் அவரை படிக்கிறார்...) நீங்கள் படியுங்கள்...

வாழைப்பழத்தில் ஊசி ஏற்ருகிறார்களா..? குமுதம் அரசும்,ஞாநியும்.

ஏர்டெல் சூப்பர் சிங்கர் 2008 ராகினிஸ்ரீ

ஏர்டெல் சூப்பர் சிங்கர் ராகினிஸ்ரீ பற்றி எனக்கு நல்ல ஒபினியன் இல்லை.

மதிப்புடன் சொல்கிறேன், சென்ற இரண்டு வருடங்கள் போல, ராகினிஸ்ரீ வெற்றி பெற (அந்த கர கரப்பு வாய்ஸ் நல்லாவே இல்லை) எதோ ஒரு குழு வேலை செய்கிறது. மால்குடி சுபா. எல்லாம் தூக்குகிறார். எதோ சினிமா ஸ்டார் மாதிரி இருப்பதாலா? அல்லது ஏ.வி.ரமணன் சொன்ன மாதிரி, சினிமா உலகில் சஞ்சரிக்க வேறு ஸ்பெஷல் காரணம் உண்டா? அவர் நடத்திய சப்தஸ்வரங்கள் மூலம் எவ்வளவு அருமையான பாடகர்கள் வந்துள்ளார்கள்!

இரண்டாம் எபிசோடில் இருந்து கவனிக்கிறேன், ராகினிஸ்ரீ பெற்றது எதோ ஒரு மரியாதையான கவனிப்பு. மூன்று நடுவர்கள், சொல்லி கொடுத்து தேர்ந்தெடுத்த போட்டியில், உடனடி தேர்வு செய்தார்கள்... ஒரே ஒருவர் தங்க காசு பெற்றார். அப்போது இருந்தவர் மால்குடி சுபா மற்றும் ஒரு தாடிக்காரர்...

எஸ்.எம்.எஸ் பண்ண சொல்லி சொல்வார்கள் அல்லவா... வரட்டும்... எங்கள் நண்பர்கள் குழு எங்களால் முடிந்த வரை செலவு செய்து, தகுதியான ஒருவரை தேர்ந்து எடுப்போம்...

இந்த வாரம் சின்மயீ காணவில்லை? யுகேந்திரன் மற்றும் அவர் மனைவி வந்தார்கள்.... என்ன ஆயிற்று? நல்ல காம்பயர்.

நல்லவர்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள்!

Friday, November 21, 2008

பாலக் சப்பாத்தி

பாலக் சப்பாத்தி ஒரு அருமையான உணவு. எல்லோரும் விரும்பி சாப்பிடும் ஐட்டம்.

இங்கே இருக்குது அந்த வழிமுறை.

Palak Chappathi

செய்து சாப்பிட்டு சொல்லுங்க.

Thursday, November 20, 2008

நிலத்தில் முதலீடு

எதில் முதலீடு செய்யலாம்? எங்கள் வருமானத்தில், சென்னையில் வீடு வாங்க முடியாது. வாடகை செலவு போன்றவை, தீர்த்துவிடும் ஆளை. நிச்சயம் எதாவது பில்டர்கள் வருவார்கள், எங்களுக்கும் ஒரு கூடு இருக்கும், சொந்தமாக.

வேலை ஆரம்பித்த புதிதில் என் கணவருக்கும் ஒரு ஆசை. ஆனால் வீட்டு நிலைமைகள், பெரு நகரத்தின் செலவு, போன்றவை, இன்னும் கட்டுக்கடங்காமல் செல்லும் நிலை... அப்பப்பா கொடுமை.

ரமேஷ் எழுதுகிறார்... இந்தியாவில் ரியல் எஸ்டேட் அது பணம் இருப்பவர்களுக்கு ....

வாடகை கொடுத்து வாழ்பவர்களுக்கு, அதே தவணையில், முப்பது வருடங்களில் ஒரு வீடு கிடைக்குமா?

யோசிக்க வேண்டிய விஷயம்.

Wednesday, November 19, 2008

டால் ப்ரைட் ரைஸ்

டால் ப்ரைட் ரைஸ் எனக்கு மிகவும் பிடித்த உணவு. குழந்தைகளுக்கும் தான்.

இங்கிருக்கு அந்த சமையல் குறிப்பு...

Dal Fried Rice

படிச்சுட்டு சொல்லுங்க...

Tuesday, November 18, 2008

நாடி ஜோதிடத்தை நம்புகிறீர்களா?

என் பதிவுலக தோழி ஒருவர் அவரது நாடி ஜோதிட அனுபவத்தை, நாம்பாமல் இப்படி எழுதுகிறார்...

நாடி ஜோதிடம் ஒரு அப்டேட்

அவர் குரிபிட்டிருக்கும் டாக்டரின் அனுபவம், என்னை குழப்புகிறது. இப்படியும் நாடி ஜோதிடத்தை நம்புவார்களா?

என் கணவரும், நாடி ஜோதிடம் பார்த்து குழம்பிய காலம் அதிகம். பரிகாரம் அது இது என்று, காசு பிடுங்கி விடுவார்கள். நான் நம்புவதில்லை. ஆண்டவன் விட்ட வழி. கோவில் குளம் என்று என்னால், முடிந்த அளவு சென்று வருவேன். குடும்பம் விரும்பும் வரை தான்... விதி கொடியது, அதனை மதியால் வெல்வோம்.

தன் கையே தனக்குதவி என்று நினைத்து வாழ்பவர்களே முன்னேறுகிறார்கள்.

இல்லையா?

உங்கள் நாடி ஜோதிட அனுபவங்களை கமன்ட்சில் போடலாம், பதிவாக எழுதலாம்..

நன்றி.

சாதி கலவரங்கள்

சென்னையில் இப்போது நடக்கவே பயமாக உள்ளது! எவனாவது காலேஜ் பயன் கத்தியோடு சுத்துரானானு பார்க்க வேண்டி உள்ளது. என் கை பேகில் இருக்கும் தற்காப்பு சூரி கத்தி சைஸ் பத்தாது, பாதுகாப்புக்கு!

இங்கு நடக்கும் சாதி கலவரங்கள், என்னவென்று சொல்ல?

ராணுவ ஆட்சி இங்கு வர வேண்டும். தொல்லை குடுப்பவர்களை சுட்டுத்தள்ள வேண்டும். ( லன்ச் டைம்லே கணவர் சொல்கிறார். இராக் மாதிரி ஆகிவிடும் இந்தியா! ஒபாமா அட்டாக் பண்ணுவார்.)

இங்கே படியுங்கள் வினவு ...

இங்கு ஒரு அப்டேட் இங்கே பதிவுலக நண்பர் ரமேஷ் எழுதுகிறார்.

நூறாவது நாள் பதிவு: சாதீயம்

நூறாவது நாள் பதிவு வாழ்த்துக்கள்!

மேலே உள்ள விஷயம் குறிப்பிட்டு, திவ்யாவும் ஒரு சிறு பதிவு போட்டுள்ளார்!

சாதிக்கொடுமை

ஆமாம், பெண்களுக்கு எங்கே போயிற்று புத்தி? அவர்கள் அடக்கி வைத்தால், கணவன்மார்கள் அடங்கி போவார்கள் இல்லையா? பெண்களுக்குள் தலையனை மந்திரம் பற்றி பேசி பிரயோஜனம் இல்லை, நிஜமாக அதை வைத்து சாதி மறுமலர்ச்சி செய்ய வேண்டும்.

Sunday, November 16, 2008

காதலும் பாடலும்

கைதட்டி பாடிய
பாடலின் கரங்களோ
ஒட்டிய மணற் துகள்களை
தட்டி வழியனுப்பிகொண்டிருந்தன

வீட்டிற்கு செல்ல வேண்டும்
நேரமாகிக்கொண்டு இருக்குது
கணவரின் கடைக்கண் பார்வை
சிறு அசைவில் காதல் சொல்கிறது

உப்புமா பொங்கலானது
தொட்டுக்கொள்ள ஊறுகாய்
பேச்சு மூச்சு இல்லை
காதல் ரொம்ப இனிக்கிறது!

(நேற்று இரவு எழுதிப்பார்த்தேன், நன்றாக உள்ளதா?)

Saturday, November 15, 2008

சென்னையில் பதிவர் சந்திப்பு

பதிவுலகம் மூலம் கிடைத்த நண்பர்கள் ரமேஷ், திவ்யா மற்றும் சாந்தி ஜெய்குமார்.

பீட்டர்ஸ் ரோடு சரவணா பவன் அருகில் நடக்கும் தூரத்தில்.. திவ்யா அவர் நண்பர் ரமேஷ் வந்திருந்தார்... இரண்டு சிறு குழந்தைகள் ... அப்புறம் ரவி என்பவர், திவ்யாவின் நண்பர் குடும்பமும் வந்திருந்தது. அவர் மனைவி சித்ரா மற்றும் இரண்டு பெரிய குழந்தைகள் ... வசதி ஆனவர்கள் குழந்தைகள் வளர்க்கும் விதம் அருமை. கேட்டதெல்லாம் வாங்கி கொடுப்பார்கள் போல. நாங்கள் வளர்ப்பது அடித்து... வித்தியாசம் தான்... சூழ்நிலைகள் மாறும் போது, குழந்தைகள் மன நிலையும் மாறுகிறது.

உலகம் சிறியது என்று தெரிகிறது. நண்பர் வட்டம் வேறு, பதிவுலகம் வேறு.

எனக்கு இந்த காபி ஹவுஸ் பற்றி எல்லாம் தெரியாது. எங்கள் வீடு அருகில் தான். நடக்கும் தூரம். தனியாக சென்றேன். குழந்தைகள் குறும்பு அதிகம். கணவருக்கு அவர்களை பார்க்கும் வேலை. வசதி வாய்ப்புள்ளவர்கள் சென்று வருவது என்பது தெரிகிறது, காபியின் விலை பார்த்து! எனக்கு சங்கோஜமாக இருந்தது.

திவ்யா ஏன் கணவரையும் குழந்தைகளையும் அழைத்து வரவில்லை என்று கோபித்து கொண்டார். அடுத்த முறை நிச்சயம், எங்கள் வீட்டில் சாப்பிடுவார்.

நான் கேட்டுக்கொண்டு தான் இருந்தென். நிறைய உலக விஷயம் பேசினோம். நேரம் போனது தெரியவில்லை. பிறகு சந்தோசமாக கிளம்பினோம். இந்த பதிவுலக நண்பர்கள் எப்போதாவது ஒரு முறை சந்தித்து கொண்டால் நல்லது... வசதி வாய்ப்பு உள்ளவர்கள் மட்டும் செலவு செய்வது கொஞ்சம் கூச்சம் ஏற்படுத்துகிறது. என் பர்சில் நூறு ருபாய் இருந்தது. அந்த இடத்திற்கு நண்பர்களோடு செல்ல குறைந்த பட்சம் கையில் ஆயிரம் ருபாய் இருக்க வேண்டும். (இதை டைப் செய்யும் போது கணவர் சிரித்துக்கொண்டார்... நம்ம ஒரு வார சிலவு பணம் என்றார்!)

போட்டோ கூடாது என்ற நிபந்தனை, இருந்தாலும் சில போட்டோஸ் எடுக்கப்பட்டன. ப்ளோகில் போடக்கூடாது. என் கையில் கேமரா இல்லை.

நான் நெட்டில் இருந்து ஒரு பழைய போட்டோ அமேதீச்ட் பற்றி இணைக்கிறேன்.


திவ்யா சீக்கிரம் ஏர்போர்ட் செல்ல வேண்டும் என்று கூறி விடைபெற்றார், ரவி குடும்பத்தினரோடு. சாந்தி ஜெய்குமார், மற்றும் ரமேஷ் குடும்பத்தினரோடு விடை பெற்று கிளம்பினேன். திவ்யா கொடுத்த கிப்ட்ஸ் பேகை பிடித்துக்கொண்டு நான் வீட்டிற்க்கு நடக்க ஆரம்பித்தேன். மனம் கனமாக இருந்தது.

-----*------

அப்புறம் சென்னையில் ஒரு பதிவர் கூட்டம் நடந்து கொண்டு இருக்கிறது நான் என் குடும்பத்துடன் அந்த ஏரியா பக்கம் சென்று வந்தேன், காந்தி சிலை. எல்லாம் ஆண்கள் மாயம். ஐந்து மணிக்கு பீச் சென்றோம், நல்ல காற்று. கொஞ்ச நேரம் உட்கார்ந்து பேசினோம். சூடான சுண்டல், குழந்தைகள் ஐஸ் கிரீம்... குழந்தைகள் அது வேண்டும் இது வேண்டும் என்று கத்தினார்கள்... கணவர் சொன்னார்.. நண்பர்கள் பார்க்க குழந்தைகளோடு சென்றிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்றார்... தூறல்...மழை வரலாம்...ஆறரைக்கு கிளம்பி விட்டோம். மொத்த சிலவு ஒரு அமேதீச்ட் காபி விலை.

இப்போது
சாப்பாடு என்று ஒன்று உள்ளது செய்ய வேண்டும்.

ஹில்லரி கிளிண்டன் ஒபாமாவின் அமைச்சர் ஆகிறார்

இந்த நியூஸ் படித்தேன்.

ஹில்லரி கிளிண்டனுக்கு ஒரு பெரிய வாய்ப்பு.

ஒபாமா எட்டு வருடங்கள் யு.எஸ். பிரேசிடண்ட் ஆக தொடரும் தந்திரம்.

செக்ரடேரி ஆப் ஸ்டேட் என்பது இந்தியாவின் வெளியுறவு கொள்கை அமைச்சர் பதவி போன்றது.

வாழ்த்துக்கள் ஹில்லரி!

Friday, November 14, 2008

பதிவுபோதை: சென்னையில் இருந்து

பதிவுபோதை: சென்னையில் இருந்து ரமேஷ் அவர்கள் எழுதியது.

என்னுடைய கொடுமைக்கார பாவிகள் பதிவுக்கு ஒரு அப்டேட்...

நாளை ஒரு பதிவர் சந்திப்புக்கு திவ்யா, சாந்தி மற்றும் ரமேஷ் வருகிறார்.

நோபல் பரிசும் இந்தியர்களும்

நோபல் பரிசும் கிடைப்பது இந்தியர்களும் கஷ்டமான விஷயம் போல இருக்குது.

இது வரை, இந்தியாவில் பிறந்து அல்லது இந்தியராக வாழ்ந்தவர் வாங்கியது...

 1. இலக்கியத்திற்கு ரபீந்தரநாத் தாகூர்.
 2. பிசிக்ஸ் சர். சி.வி. ராமன்
 3. மருத்துவம் ஹர்கோபிந்து கொரானா
 4. அமைதிக்கு அன்னைதெரசா
 5. பிசிக்ஸ் சுப்ரமணியன் சந்திரசேகர்
 6. எகனாமிக்ஸ் அமர்த்யா சென்
 7. அப்புறம் உலக அமைதி பரிசு, அல்கொரோடு, பச்சூரி.

இப்படி நோபல் நோக்கி பயணம் இந்தியர்கள்...

எல்லாம் வாழ்கையில் இருப்பது தான், இல்லாதவர்கள், கொஞ்சம் கஷ்டம் தான் படுவார்கள்.

ஆல்ப்ரெட் நோபல் ஒரு வெடிகுண்டு தயாரிப்பாளர் என்பது கொசுறு செய்தி. அவர் தான் கன் பவ்டர் கண்டுபிடித்தார்.

Thursday, November 13, 2008

கொடுமைக்கார பாவிகள்

இரண்டு மூன்று ப்லோகுகளில் பார்த்தேன்...

சென்னை சட்டக்கல்லூரி மாணவர்களின் Blood sport

சட்டக்கல்லூரி மாணவர்களின் வன்முறை


காட்டுமிராண்டிக் கல்லூரி

சட்டக்கல்லூரி: கண்களில் பிறப்புறுப்பை சொருகிக்கொண்ட சக மாணவர்கள்..

பதிலுக்கு பதில்

Barbarians

ஈரல் கெட்ட எதிர்மறைக் காவல்துறை!

என்னங்க நடக்குது சென்னையிலே? இதுலே பொண்ணுங்க நின்னு வேடிக்கை பார்த்திருக்காங்க. செருப்பு எடுத்து அடிச்சிருக்க வேணாம்?

காலேஜ் ரவுடிகள் அட்டகாசம் தாங்கலைங்க?

காவல் துறை மந்திரி அய்யா வூட்டுக்கு போங்க, ராஜினாமா பண்ணிட்டு.

அவீங்களை எல்லாம் வூட்டுக்கு அனுப்புங்க. அவீங்க அப்பா அம்மா எல்லாம் என்ன கொடுப்பினை செய்தார்களோ அவீங்களை பெக்கரதுக்கு! கழிசடைகள்.

Wednesday, November 12, 2008

ஐம்பது பதிவுகள்

நான் மே மாதம் 2008 முதல் தமிழ் பதிவுகள் போடுகிறேன். இவை எல்லாம் எனக்கு தெரிந்த மற்றும் பிடித்தவை.

பதிவு போடும் பாதி ஆட்கள் கொடுமை...

சிலவற்றை நான் தொடர்கிறேன், படிக்கிறேன்... ரைட் சைட் பாருங்கள்.

ஒரு ஒரு பதிவரோடு மட்டும் பேசியுள்ளேன். இன்னொருவரை, வரும் சனி பார்க்க போகிறேன்.

ஐம்பது பதிவுகள் எல்லாம் எழுதியவை, எனக்கு பிடித்தவை அதிகம்.

நான் எழுதும் சமையல் குறிப்புகள்... Cooking Tips

எனது ஆங்கில ப்லோக்

இப்படி போகிறது எனது பாதை!

உதவி வேண்டி எங்கும் கரங்கள்


மேலே உள்ள லிங்கில் உள்ளது விவரம்.

உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள்.

பதிவர்கள் அனைவரும் விழிப்புணர்வு செய்யவும். நன்றிங்க.

Sunday, November 9, 2008

நிலாவும் சந்தரயானும்

நிலாவும் சந்தரயனும் ஒரு நல்ல நிகழ்ச்சி இந்திய பொறுத்த வரை.

இப்போது நிலாவை சுற்றுகிறது சந்திராயன். நொவம்பர் பதினாலு குழந்தைகள் தினம் அன்று, நமக்கு நிலாவின் நிஜமான தோற்றம் பற்றி படம் கிடைக்கும்.

இனி நிஜமான நிலா பற்றி யோசிக்கலாம். நடிகை நிலா இல்லை. ஹி ஹி ... அவர் இன்னும் மினரல் வாட்டரில் குளிக்கிறாரா?

பத்ரி அவர்கள், சந்திராயன் பற்றி எழுதுகிறார்! படங்களுடன். நன்றி.

********

நண்பர் சவுண்ட் பார்டி லாஸ் ஏஞ்சலஸ் போலிஸ் பற்றி எழுதியது -

LAPD நாய்கள், Shoot 'em Up, கொலை வெறி

அமெரிக்கர்களின் குணம் பற்றி பிடிக்கவில்லை.... எழுதவும் பிடிக்கவில்லை.

********

ஸ்ரீலங்கா பிரச்சனைக்கு தீர்வு என்ன?

ஒரே வழி - அணு குண்டு, பத்து! ஆட்டம் காலி. சோ சொல்கிறார்!

பதஞ்சலி யோகா சூத்திரம்

சிறு வயதில் அப்பா என்னகு பதஞ்சலி யோகா சூத்திரத்திற்கு அழகான விளக்க புத்தாக்கம் ஒன்று கொடுத்தார்.

ஆழியாரில், வேதாத்ரி மகாரிஷியும் அப்படி ஒரு சொற்பொழிவு ஆற்றியுள்ளார். அவர் இருந்த சமயம்.

ஐந்து வகை உணர்வுகள் உடல் வருத்தி யோகா மூலம் சரி செய்யும் விதை தான் அது. ஆறாவது உணர்வு, வந்து ஜனனம் அது நிச்டையால் வருவது. தியானம்.

சிலர் அவர்கள் தான் பெரியவர் எழுத்தாளர் என்று பெரிய் விசயமா எழுதுறாங்க.

Wednesday, November 5, 2008

அமெரிக்க தேர்தலில் ஒபாமா வெற்றி

நல்ல செய்தி... அமெரிக்க தேர்தலில் ஒபாமா வெற்றி ...

ஆனால் ஐடி கம்பனிகள் என்ன செய்வார்கள்?

ஒரு கறுப்பர், கலர் ஆள், அமெரிக்காவை ஆட்சி செய்வது நல்லதா?

Saturday, November 1, 2008

நல்ல விளையாட்டு

குழந்தைகளுக்கு வார்த்தைகள் சொல்லி கொடுப்பது நல்ல விளையாட்டு...

எப்படி நல்ல விளையாட்டு ?

தினம் தினம் உபயோகப்படுத்தும் வோர்ட்ஸ் மாற்றம் காணலாம், இல்லீங்களா?

நான் கோபத்தில் சில வார்த்தைகள் அள்ளி விடுவேன்... என் மகள் திருப்பி கொடுக்கிறாள்...

Thursday, October 30, 2008

தோற்றம்

ஒவ்வொரு மனிதனும் ஒரு காரணத்திற்கு தோற்றம் பெறுகிறான்.

சினிமா நடிகர்கள் அரசியல் பேசுவது மாதிரி.

அமெரிக்காவில் ஒபாமாவின் மக்கள் கவரும் பேச்சு ஒரு உதாரணம்.

Obama Holds Leads in Key Swing States As Election Day Nears

எல்லாம் ஒரு தோற்றம் தான்.

Wednesday, October 29, 2008

ஷேர் மார்க்கெட்

ஒரு புதிய ப்லோக் பார்த்தேன்...

உபயோகமாக இருக்கலாம்.

இந்தியா ஷேர் அட்வைஸ்

Saturday, October 25, 2008

நாகார்ஜுனனின் வலைப்பக்கம்

நாகார்ஜுனனின் வலைப்பக்கம் என்ற ஒரு பதிவில், எஸ். ராமகிருஷ்ணன் அழகாக எழுதி அறிமுகம் படுத்தி உள்ளார்.

http://nagarjunan.blogspot.com

நம்மோட ஸ்டைல் அவருக்கு தெரியாது, இருந்தாலும், குறைஞ்ச பட்சம், படிக்கற மாதிரி விரிவா எழுதராருங்கோ.

என்ற பாசையிலே சொன்னா... சூப்பருங்கோ!

சில பேர் நல்ல கவிதை எழுதிப்போட்டு, ஆட்டு புளுக்கேனு அவீங்களே சொல்லிக்குராங்கோ! நல்ல தமாசு!

சில யோசனைகள் தீபாவளிக்கு

சில யோசனைகள் தீபாவளிக்கு குழந்தைகள், எல்லாம் சொகம்மாக இருப்பார்கள், குறைவான பாட்டாசு கொடுத்தால்.

எப்படி அவர்களை மகிழ்விப்பது?

என் குழந்தைகளுக்கு கேப் வெடி துப்பாக்கி வாங்கி கொடுத்து விட்டேன். டப் டப் என்று தூங்கும் வரை சுடுகிறார்கள். பரவாயில்லை.

சங்கு சக்கரம், பூந்தொட்டி போன்ற வகைகள்...வெடிகள், டேஞ்சர் சமாச்சாரங்கள், நான் மட்டும் தான் வெடிப்பேன். :))

ஒரு விஸ்கா எங்க வூட்டுக்கு வந்து பாருங்க தெரியும். கண்றாவி!

Wednesday, October 22, 2008

சக்கரகட்டி சாங்க்ஸ்

சக்கரகட்டி சாங்க்ஸ் பை அ ர் ரஹ்மான் ஆர் ஆவரேஜ்.

கிவ்ஸ் அ டேஸ்ட் ஆஃப் ஹிந்தி & டெலுகு சோங்ஸ்.

ஒன்லி சின்னம்மா இஸ் நைஸ்!

ஆல்ஸொ 'ஏலய்' சாங் ரிமிண்ட்ஸ் மீ ஆஃப் ஒன் நம்பர் ஃப்ரம் இருவர். எம்.ஜீ.ஆர் பாடல்.

(யாரோ போட்ட கமன்ட் இது, ஒரு பதிவு செய்துட்டேன்!)

சந்திராயன் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது

சந்திராயன் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது இன்று அக்டோபர் 22. 2008 காலை 6.௨0 மணிக்கு.
லைவ் ஆக பார்த்தோம்.

நன்றி.

இந்தியா ஜெயிக்கும்.

Tuesday, October 21, 2008

சினிமா சினிமா

சவுண்ட் பார்ட்டி உதயகுமார் என்னை சினிமா சினிமா தொடர் பதிவு எழுத அழைத்துள்ளார்! முயற்சி செய்கிறேன்! அழைப்புக்கு நன்றி!

அப்புறம் நான் ரசித்தவை (இந்த பதிவு வரிசையில்...)

சினிமா - மலரும் நினைவுகள் ஒரு அப்டேட்


*******************************************************************
1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

தமிழ் படம். ஆறு வயது இருக்கும். துடிக்கும் கரங்கள். எங்கள் தோட்டத்திர்க்கு அருகில் ஷூட்டிங் எடுத்தார்கள். அதனால். விஜயகுமார் இன்னொரு நடிகர் என்று நினைக்கிறேன். ஸ்டைல் தான் நினைவில் உள்ளது. பாப்கார்ன் வங்கி தர சொல்லி அப்பாவை கேட்டது ஞாபகம் உள்ளது.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த சினிமா?

சரோஜா. சத்யம் காம்ப்ளெக்ஸ். தியேட்டர் சிரிப்பு சத்தம், பாதி டைலாக்ஸ் புரியவில்லை. ஹீரோயின் படத்தில் எதற்கு என்று தோன்றியது!

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

பாலைவன சோலை. நட்பு பற்றி ஒரு அழகான படம். டிவிடி. டெக்னிகலா நல்லா இல்லை. பாட்டுக்கள் அருமை. அதே கதை வைத்து புது வசந்தம், வானமே எல்லை போன்ற படங்கள் வந்தன, கொஞ்சம் மாற்றங்களுடன்.


4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா

சேது. ஒரு சாதாரண கதை. காதலால் பயித்தியம் ஆவது நம்ப முடியவில்லை. பாலா நம்புமாறு எடுத்திருந்தார். அபிதா குஜலாம்பாள் பெயர் இன்னும் நினைவில் உள்ளது. மிகவும் தாக்கிய விஷயம், விக்ரம், உடல் வருத்தி நடித்தது.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

பாபா. படபெட்டி எடுத்து ஓடினார்கள் சில ஊர்களில். அந்த விளம்பரமும் படத்தை ஓட்ட வைக்க முடியவில்லை. ரஜினிகாந்தின் மானம் போனது. விளம்பரத்தால் மட்டும் சினிமா வியாபாரம் நடக்காது என்று முதல் முறை சொன்ன படம். இப்போது குசேலன் மூலம். தண்டம்.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?

அபூர்வ சகோதரர்கள், குள்ள கமல். இன்னும் எப்படி செய்தார்கள் என்று தெரியவில்லை. சில சீன்ஸ் குழி வெட்டியுள்ளார்கள். சிலதில் கிராபிக்ஸ்.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

இண்டர்நெட்டில் தான். அப்புறம் குமுதம் மற்றும் அனந்த விகடன் சினிமா செய்திகள்.

7. தமிழ்ச்சினிமா இசை?

எப்பவும் இளையராஜா. இப்போது ஹாரிஸ் ஜெயராஜ். ரஹ்மான், யுவன் மூலம் சில நல்ல முயற்சிகள் நடக்கின்றன.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

ஆம். ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என பார்த்துள்ளேன்.

ஆங்கிலம் டிவிடி கிடைப்பது பொறுத்து.

மேட்ரிக்ஸ் படம் மிகவும் தாக்கியது, கிராபிக்ஸ் மூலம்.

சென்ற ஞாயிறு. கார்ட்டூன் நெட்வொர்க். ஆங்கிலம். ஐஸ் ஏஜ் 2. குழந்தைகளும் பெரியவர்களும் என்ஜோய் செய்த படம். ரொம்ப நல்ல கிராபிக்ஸ்.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்?பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

நேரடி தொடர்பு இல்லை. அப்பா மட்டும் கிராமங்களில் படம் விநியோகம் செய்தாரா என்பது மட்டும் நிச்சயம் இல்லை.

கணவர் சினிமா கதை எழுதுவதாக சொல்கிறார். நான் எதாவது பாடல் பாடலாம். காசு வருமா?

பொழுது போக்கு அம்சம் ஆதலால், என்ன செய்ய முடியும் என்னால்?

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

நல்லா தான் இருக்கு. நாக் மூக்க லெவலில். நூறு படம் எடுத்தால், இரண்டு வெற்றி.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

ரொம்ப நல்லா இருக்கும். நிறைய வேறு மொழி படங்கள் பார்க்கலாம்.

*******
நிறைய பேர் எழுதிட்டாங்க. அதனாலே, என் வாசகர்கள் படித்தால், அவர்களும் எழுதவும். எனக்கு ஒரு கமன்ட் மூலம் சொல்லுங்கள்! நன்றி.

Wednesday, October 15, 2008

நான் ரசித்த பதிவு

புதிய பதிவர்கள்
இது நான் ரசித்த பதிவு
நல்ல இருக்கு!

கோபம்

கொஞ்ச நாட்கள் சில தவறான கமண்ட்ஸ் காரணமாக நான் பதிவுகள் பக்கம் வரவில்லை.

நிறைய விஷயங்கள் தெரிகிறது இப்போது.

பொறுத்தவர் பூமி ஆள்பவர்.

Monday, September 15, 2008

மலையாளிகள்

கேரளா மலை நாட்டு மலையாளிகள் மிகவும் நல்ல மனது படைத்தவர்கள். அவர்கள் நாட்டிற்கு சென்றால் (ஸ்டேட் என்று சொல்வதில்லை) விலைவாசி மிக கொடுமை.

குடும்பத்தோடு ஒரு வாரம் தங்க சென்ற வருடம் ஒரு சுமார் இடத்தில்,
கொச்சின் அருகே, ரூ.இருபதாயிரம் கொடுத்தோம். மீனுக்கு தண்ட வெலை. காயுஸ் என்றகடையில் மட்டும் ரூ.பதினாறு ஒரு ப்ளேட். இது ஜு சினகோக் அருகே. ஜட்டி சென்று (ஆமாங்க சின்ன துறைமுகம்) எர்னாகுளம் சென்று வந்தோம்.

மலையாளிகள் பற்றி இங்கே வெயிலான் ரமேசு எழுதியுள்ளார்! (சில கருத்துகள் டைரக்ட் ஹிட்).

எல்லோரும் நலமோடு வலமாக வாழ்வோம்.

அண்ணா நாமம் வாழ்க

அண்ணா நாமம் வாழ்க!

செப்டம்பர் பதினைந்து - அறிஞர் அண்ணா (துரை) பிறந்த நாள்! நூறு.

கட்டாயம் விடுமுறை.
மனதிற்கு குதுகலிப்பு.
குழந்தைக்கு காய்ச்சல்.
புரட்சி (புரட்டாசி) வருகிறது.
கோழிகறி இன்றும் உண்டு.
மூன்று லோடு துவைத்தல்.
சரோஜா போர்.
ப்லோக் எழுதனும்.
கலைஞர் டிவியில் இன்று புது படம் என்ன?

Wednesday, September 3, 2008

Monday, September 1, 2008

மரத்தான் மாணவர் மரணம்

மரத்தான் மாணவர் மரணம்

ரமேஷ் அவர்களின் பதிவு கண் கலங்க வைக்கிறது. விளம்பரத்திற்காக எல்லாம் செய்கிறார்கள் நடத்தியவர்கள் (மார்க், தமிழ் மையம்).

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!

விநாயகர் சதுர்த்தியும் கொளுகட்டையும்

பிடிகொழுக்கட்டை வெப் துனியாவில் கண்டது :

தேவையான பொரு‌ட்கள்

அ‌ரி‌சி - 1/2 க‌ிலோ
வெ‌ல்ல‌ம் - 1/2 ‌கிலோ
ஏல‌க்கா‌ய் - 5
தே‌ங்கா‌ய் - அரை முடி

செ‌ய்முறை

அ‌‌ரி‌சி மாவு :

ப‌ச்ச‌ரி‌சியை ந‌ன்கு சு‌த்த‌ம் செ‌ய்து த‌ண்‌ணீ‌ர் ‌வி‌ட்டு அல‌சி ‌நிழ‌லி‌ல் உல‌ர்‌த்‌தவு‌ம்.

அ‌ரி‌சி ந‌ன்கு கா‌ய்‌ந்தது‌ம் ‌மாவாக அரை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம். வெ‌ளி‌யி‌ல் கடை‌யி‌ல் கொடு‌த்து‌ம் அரை‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம்.

மாவை சு‌த்தமான கடா‌யி‌ல் கொ‌ட்டி ந‌ன்கு வறு‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம். மா‌வி‌ல் இரு‌க்கு‌ம் ஈர‌ப்பத‌ம் போகு‌ம் வரை வறு‌த்து எடு‌த்து வை‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

வறு‌ப்பத‌ற்கு ப‌திலாக பலரு‌ம் ஆ‌வி க‌ட்டுவது உ‌ண்டு. அதாவது இ‌ட்‌லி கு‌ண்டா‌னி‌ல் வெ‌ள்‌ளை‌த் து‌ணியை‌ப் போ‌ட்டு அ‌தி‌ல் மாவை‌க் கொ‌ட்டி மூடி ‌விட வே‌ண்டு‌ம்.

5 ‌நி‌மிட‌ங்க‌ள் அடு‌ப்‌பி‌ல் வை‌த்து இற‌க்‌கினா‌ல் மாவு ந‌ன்கு வெ‌ந்து இரு‌க்கு‌ம். ஆனா‌ல் மாவு உ‌தி‌ரியாக‌த்தா‌ன் இரு‌க்க வே‌ண்டு‌ம்.

த‌ற்போது வெ‌ல்ல‌த்தை பொடியாக இடி‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம். ஒரு பா‌த்‌திர‌த்‌தி‌ல் பொடி‌த்த வெ‌ல்ல‌த்தை‌ப் போ‌ட்டு அரை ட‌ம்ள‌ர் த‌ண்‌ணீ‌ர் ‌வி‌ட்டு பாகு போல கா‌ய்‌ச்சவு‌ம்.

அத‌ற்கு‌ள் தே‌ங்காயை‌ப் பொடியாக நறு‌க்‌கி‌‌க் கொ‌ள்ளவு‌ம். ஏல‌க்காயை ச‌‌ர்‌க்கரை வை‌த்து பொடி‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம். இர‌ண்டையு‌ம் மா‌வி‌ல் கொ‌ட்டி‌க் ‌கிள‌றி‌விடவு‌ம்.

வெ‌ல்ல‌ம் ந‌ன்கு கொ‌தி‌த்தது‌ம் அதனை ‌சி‌றிது ‌சி‌றிதாக மா‌வி‌ல் ஊ‌ற்‌றி‌க் ‌கிளறவு‌ம். மாவை‌க் ‌கிளறுவத‌ற்கு ம‌த்‌தி‌ன் கா‌ம்பு அ‌ல்லது கர‌‌ண்டி‌யி‌ன் கை‌ப்‌பிடி‌ப் பாக‌த்தை‌ப் பய‌ன்படு‌த்தலா‌ம்.

மாவு எ‌ந்த இட‌த்‌தி‌லு‌ம் க‌ட்டி‌ப்போ‌ய் ‌விட‌க் கூடாது. த‌ண்‌ணீரு‌ம் அ‌திகமா‌கி‌விட‌க் கூடாது. ச‌ப்பா‌த்‌தி‌க்கு ‌பிசைவது போ‌ல் வெ‌ல்ல‌ம் த‌ண்‌ணீரை ஊ‌ற்‌றி ‌பிசை‌ந்து அதனை கொழு‌க்க‌ட்டை‌க்கு ‌பிடி‌த்து வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

த‌ற்போது இ‌ட்‌லி கு‌ண்டாவை த‌ண்‌‌ணீ‌ர் ஊ‌ற்‌றி ஒரு த‌ட்டு ம‌ட்டு‌‌ம் வை‌த்து அடு‌ப்‌பி‌ல் மூடி வை‌க்கவு‌ம்.

5 ‌நி‌மிட‌ங்க‌ள் க‌ழி‌த்து 10 கொழு‌க்க‌ட்டைகளை அடு‌க்‌கி மூடி ‌விடவு‌ம். ‌சி‌றிது நேர‌ம் க‌ழி‌த்து 15 கொழு‌க்க‌ட்டைகளை அடு‌க்கவு‌ம். இ‌ப்படியே ‌சி‌றிது ‌சி‌றிதாக அடு‌க்‌கி 15 ‌நி‌மிட‌ம் வேக ‌விடவு‌ம்.

இ‌ட்‌லி கு‌ண்டானை இற‌க்‌கி கொழு‌க்க‌ட்டைக‌ள் உடையாம‌ல் எடு‌த்து‌ப் ப‌ரிமாறவு‌ம்.