Thursday, June 11, 2009

சாமி பாடல்கள்

காலத்தில் மறக்க முடியாத... சாமி பக்தி பாடல்கள், அதுவும் கோவையில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு தான் தெரியும், மாரியம்மன், முருகன் மற்றும் விநாயகர் விழாக்களில் ஸ்பீகரில் வைத்து ( அழ ) பாட வைப்பார்கள். அதுவம் அதிகாலை! நான் மார்கழி மாதத்தை மறக்க மாட்டேன்! அப்போது சாய்பாபா காலனியில் இருந்தோம் - பத்தாவது படிக்கும் போது, ஹால்ப் இயர்லி எழுதும் சமயம், கொல்வார்கள்! ( வெளி நாட்டில் - சிங்கபூரில், மலேசியாவில் இப்படி இருப்பதாக கேள்விப்பட்டேன். ஸ்ரீ லங்காவில் அடக்கி வாசிப்பார்கள், என்றார் அப்பா! )

bhaktipaadal என்ற தளம் பற்றி சஞ்சயின் இந்த பதிவில் பார்த்தேன்... "சாமி பாட்டுக் கேட்கலாம் வாங்க" நன்றி!

என்ன பாடல்கள், தரம் வரிசை, தமிழ் பெயரில் இல்லை. தேடுவது கஷ்டம்!

நானும் "பள்ளிக்கட்டு", "விநாயகனே" , "குன்றத்திலே", "புல்லாங்குழல்", "மருதமலை", போன்ற பாடல்களை நிறைய தடவை தேடினேன். கேசட் தான் இப்போ இருக்கு.... யாரவது ப்ளீஸ் லிங்க்ஸ் கொடுங்க...

வேறு மதத்தவர் என்றாலும் என்னவருக்கு இந்த பாடல்கள் பிடிக்கும். சுப்ரபாதம் இல்லாமல் அவர் எழுவதில்லை. ( அவருக்கு தமிழ் எழுத படிக்க தெரியாது! )

வானவில் வீதி - தனிமையின் விலை

கார்த்திக் எழுதும் வானவில் வீதி ப்ளாகில் - தனிமையின் விலை, கதை படித்தேன். சுஜாதாவின் நடை.... நன்றாக எழுதும் நபர்... இவரை பற்றி சில முறை குறிப்பிட்டுள்ளேன்.

என் கமன்ட்...
//
என்னமோ கொஞ்சம் குறையிற மாதிரி இருக்கு!

மத்தபடி, சுஜாதாவின் நடையை பின்பற்றி ( பிரிவோம், சிந்திப்போம்.... ) எழுதியிருக்கிறீர்கள்!

வெளிநாட்டு மோகம் உங்களுக்கு? நல்லா படிங்க, ஆடோமேடிக்காக வாய்ப்பு வரும்.

அப்புறம் நம்ம இந்தியாவில் இல்லாததா? ( ஆஸ்த்ரேலியா, கேனடா... X )
//

********

சரி சரி கதை எங்கே? ( அவர் மொத்தமா, ஒரே ப்ளாக் போஸ்டில் போட்டால், நன்றாக இருக்கும்..... என் பதிவில் நான் தொகுக்கவா? )

தனிமையின் விலை - 1
தனிமையின் விலை -2
தனிமையின் விலை -3
தனிமையின் விலை - 4

************

அப்புறம் ஜெயா டிவியில் ஒருவர் பெண்கள் என்றால், ப்ளாகில் சமையல் குறிப்பு, அழகு குறிப்புகள் மட்டும் எழுதாமல் கதை, கவிதை, மற்றும் சமூக, அரசியல் பிரச்சனைகள் பற்றி நன்றாக எழுதுறாங்கன்னு சொன்னதற்கு வாழ்த்துக்கள்! ;-)

( நான் அந்த நிகழ்ச்சி பார்க்கவில்லை, நண்பர் ஒருவர் இமெயில் பண்ணியிருந்தார்... )

புளியோதரை

இந்த பதிவில் ஒரு அருமையான சமையல் குறிப்பு பார்த்தேன்.

உங்களோடு பகிர்ந்துக்கொள்ள ஆசை. ரொம்ப நாள் தேடியது!

புளியோதரை (திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்)

நன்றி ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் மற்றும் விவரமா தந்த திரு. சம்பத!

------------------------------------------

தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 5 கப்
நல்லெண்ணை – 50 கிராம்
மிளகு – 200 கிராம்

புளிக்காய்ச்சல் தயாரிக்க
புளி – 100 கிராம்
நல்லெண்ணை – 100 கிராம்
கடலைப் பருப்பு – 100 கிராம்
உளுத்தம் பருப்பு – 100 கிராம்
வெந்தயம் – 10 கிராம்
சீரகம் – 5 கிராம்
கடுகு – 10 கிராம்
பெருங்காயம் – சிறிது
முந்திரிப்பருப்பு – 50 கிராம்
உப்பு- தேவையான அளவு
மஞ்சள் தூள் – 10 கிராம்

செய்முறை:

  • புளிக்காய்ச்சலை முதல்நாளே செய்துவைக்க வேண்டும்.
  • புளியை கெட்டியாகக் கரைத்துவைத்துக் கொள்ளவும்.
  • நல்லெண்ணைய வாணலியில் வைத்து, அடுப்பை மெதுவாக எரிய விடவேண்டும்.
  • எண்ணை காய்ந்ததும், அதில் கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், சீரகம், பெருங்காயம் என்ற வரிசையில் போட்டு நன்றாகச் சிவக்க வறுக்கவும்.
  • பின்னர் அதில் முந்திரிப் பருப்பையும் வறுத்துக் கொண்டு, கெட்டியாக கரைத்துவைத்துள்ள புளியைச் சேர்க்கவும்.
  • 2 நிமிடம் கொதித்தவுடன், உப்பு, மஞ்சள்பொடியைச் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
  • புளிநீர் பாதியாக வற்றும்வரைக் கொதிக்கவிட்டு, இறக்கி எடுத்துவைக்கவும். [மறுநாள் புளிக்காய்ச்சலைத் திறந்ததுமே கும்'மென்று மணமாக இருக்கவேண்டும். சரியாகக் காய்ச்சவில்லை என்றால் புளியின் பச்சை வாசனை வரும்.]
  • மறுநாள் பச்சரிசியை உதிர் உதிராகச் சமைத்து, ஒரு அகலமான தட்டில் அல்லது பாத்திரத்தில் பரத்தி இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணை சேர்த்து ஆறவிட வேண்டும்.
  • சாதம் ஆறியதும், கொஞ்சம் கொஞ்சமாக புளிக்காய்ச்சலைக் கலக்க வேண்டும்.
  • பின்னர் தேவையான அளவு பொடி செய்யப்பட்ட மிளகை, 50 கிராம் நல்லெண்ணையோடு கலந்து, அதையும் சாதக் கலவையில் சேர்த்துக் கலக்க வேண்டும்.
------------------------------------

ஆமாம், நாங்கள் நல்லெண்ணெய் ஊற்றுவதில்லை, சன் ப்ளவர் ஆயில் தான். என்ன செய்வது?

Wednesday, June 10, 2009

சில காதல் வார்த்தைகள்

நம் திரைப்படங்களில் சில காதல் வார்த்தைகள் அடிக்கடி பயன்படுத்தப்படும்.

இது எனது பதிவில் காதல் கடிதங்கள் வரிசையில் மூன்றாவது பதிவு...

நிலவில் ஆரம்பிக்கும்...

நிலா,
உயிரே,
மானே,
தேனே,
கண்ணே,
கண்மணி,
நெஞ்சே,
மனசு,
இதயம்,
மூச்சு,
வார்த்தை,
நோகுது,
தெரியாதா,
போகாதே,
நில்,
முத்தம்,
தாலி
,
பாடல்,
இதழ்,
அப்பா,
அம்மா,
அம்மம்மா,
ஐயோ!

*******

கவிஜர்கள் நா.முத்துக்குமார், பா.விஜய் மற்றும் வைரமுத்து ஒரு பஸ்ஸி லாஜிக் பாடல் ஜெனரேடர் எழுதி ரெடியாக வைத்து, கேட்கும் இடத்திர்க்கேர்ப்ப ( சீன ) பாடல் வந்து விழுகும்.

மூசிக்? கீபோர்டை யாராவது குழந்தை கையில் கொடுத்துவிட்டால், போதும்... வருவதெல்லாம் சுக ராகம் தான்!

டண்டனக்கா...

என்ன எழுதுவது காதல் கடிதம் பற்றி

நான் எழுதிய முந்தைய பதிவு வித்தியாச காதல் மடல் குறித்து, நிறைய பேர் சுவையானவற்றை பப்ளிஷ் செய்ய சொல்கிறார்கள்.

பொறுத்திருந்து பாருங்கள். கற்பனை தான் நிற்கும்!

என்ன எழுதுவது காதல் கடிதம் பற்றி?

ஆண்கள் தான் அதில் விற்பன்னர்கள் ஆயிற்றே?

Tuesday, June 9, 2009

வித்தியாச காதல் மடல்

நரசிம் அவர்களின் பதிவில், ஒரு வித்தியாச காதல் மடல் படித்தேன்...

வித்யாசப் பெண்ணம்மா.. என் உயிர் கண்ணம்மா,

*******

அருமை!

*******

பெண்ணாக இருந்தால் காதல் கடிதம் எதாவது வகையில் ( கடிதம் தான் வருமென்று எதிர் பார்க்க வேண்டாம்...) வந்திருக்கும்.

காதல் பார்வை - மாமன் மகன்கள், உறவின் தையிரியம்!
காதல் பேச்சு - கல்லூரி ஆண்கள் , பள்ளி - பையன்கள்
மற்றும் பல வாராக, கல்யாணம் செல்லும் போது, ஒரு விழாவிற்கு செல்லும் போது, எதோ பேச வேண்டும் எனதுடிக்கும் கண் - பார்வைகள்...

***********

வெளிநாட்டில் - சினிமா, நண்பர்கள் கோட்டம், டேட்டிங் (?) போல உதாரணங்கள். அப்புறம் பர்சில் எவ்வளவு காசு இருக்கு என்பதை பொறுத்து, யார் செலவு செய்கிறார்கள் என்பதை பொறுத்து இருக்கும்?

வித்தியாசம்!

கடைசியில் கல்யாணம் என்று வரும் போது, காதல் ஒப்புதல் பெற ஆண் தான் கதறவேண்டும்... பெண்ணுக்கு, கொஞ்சம் ஈசி. பெண்ணின் பெற்றோருக்கு பையன் நல்லவன், வைத்து காப்பாற்றுவான் என்று நம்பிக்கை வந்தால் போதும்!

சரி...

காதல் கல்யாணத்திற்கு பிறகு எப்படி இருக்கும்?

இருவரின் குடும்பத்தாரும் இணங்கி போனால், நன்று. அமிர்தம் தான்!

இல்லாவிட்டால், முள் மீது விழுந்த சேலை மாதிரி, ஒவ்வொரு முள்ளாக, பார்த்து பார்த்து எடுக்க வேண்டும். அன்பு தழைத்தோங்கும்!

*******

எனக்கு காதல் இமெயில் மட்டும் தாங்க வந்தது... என்னவரிடம் இருந்து, கல்யாணம் நிச்சயம் ஆன பிறகு!