Wednesday, November 26, 2008

இலங்கையும் போரும்

இலங்கையில் தமிழருக்கு ஒரு நல்ல வாழ்வு கிடைக்க அனைவரும் காந்திய வழியில் சிந்திக்க வேண்டும். எனக்கு தெரிந்த வகையில் ஸ்ரீலங்காவில் இருபத்தி ஐந்து லட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள். இன்னும் ஐந்து லட்சம் வெளிநாட்டில் அகதிகளாக, தொழிலாளிகளாக குடும்பத்தோடு இருக்கிறார்கள். ஆகா மொத்தம் 8% பாபுலேசன் தான் அங்கு.

ஆயுதம் ஏந்துவது கொடுமை. அங்கு ஒரு காந்தி பிறந்து வர வேண்டும்.

அனைத்து தமிழர் உணர்வும், அவர்கள் நல்லதுக்கு தான்.

எல்லோரும் கூடி, ஜனநாயக வழியில் ஸ்ரீலங்கா வட கிழக்கு மாகாணங்கள், தனியாட்சி அமைக்க, யோசித்தால் நன்று. அவர்கள் கொடுக்கும் ஜி.டி.பி. 5%. அதனால், ஒரு மாநிலமாக இருந்தால் தான். நன்று.

விக்கிபீடியாவில் பாருங்கள்....

ஒருவரும் தனித்து தான் தான் தலைவன் என்று சொல்லக்கூடாது. ஜாதி மதத்திற்கு அப்பார்ப்பட்டது இது. எல்லோரும் சமம் என்ற உணர்வு முதலில் வரட்டும். அப்புறம் தனி மாநிலம், சுகம், சொந்தங்கள், மரியாதை எல்லாம் வரும்.

இந்தியாவில் எப்படி ஜம்மு காஸ்மீர் மாநிலத்தின் தனி அமைப்பு உள்ளதோ.. அது மாதிரி.

நார்வே நாட்டினர் சொல்வது இது தான். மறைந்த பாலசிங்கம் அவர்களும், இப்போது அவர் மனைவியும் சொல்வது இது தான். இருபத்தி ஐந்து வருடம் போர் தேவை இல்லாத ஒன்று என்று தோன்ற வைக்கிறது.

புத்தம் சரணம் கச்சாமி.

3 comments:

kuruvikal said...

ஈழத்தில் காந்திகள் பிறக்கவில்லை என்பது உங்களுடைய சொந்தக் கருத்தாக மட்டுமே இருக்க வேண்டும்.

ஈழத்தின் காந்தியாக தந்தை செல்வா எனப்படும் செல்வநாயகம் விளங்குகிறார்.

செல்வா ஈழத்தமிழர்களுக்காக பல ஒப்பந்தங்களை செய்ய வழி செய்தவர்.

குறிப்பாக பண்டாரநாயக்கா - சாஸ்திரி ஒப்பந்தம்

போன்ற பலவற்றைக் கூறலாம். இறுதியில் அவையெல்லாம் தந்தை செல்வாவின் கண்முன்னே சிங்கள பேரினவாத இனவெறித் தலைமைகளால் கிழித்தெறியப்பட்டன.

அதன் பின்னரே தந்தை செல்வா.. ஈழத்தமிழ் மக்களை கடவுள் தான் காக்க வேண்டும் என்றார். அதன்பாற்பட்டுத்தான் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தில் குதித்தனர்.

அதன்பின்னர் இந்திய அமைதிப்படையினர் போர் முஸ்தீபுகளில் ஈடுபட்ட போது தமிழீழ விடுதலைப்புலிகளும் காந்திய வழியைத் தெரிவு செய்து நியாயமான 5 கோரிக்கைகளை வைத்து திலீபன் எனும் காந்தியத்தை நம்பிய இளைஞனின் மூலம் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

ஆனால் இறுதியில் ராஜீவ் காந்தியின் உதாசீனத்தால் திலீபன் உணவின்றியே மாண்டு போனான்.

அதன் பின்னர் மட்டக்களப்பைச் சேர்ந்த அன்னையர் முன்னணித் தலைவி அன்னை பூபதி அதே இந்தியத் தலைமைகளிடன் நீதி கேட்டு காந்திய வழியில் பயணித்தார்.

இறுதியில் அவரும் ராஜீவ் அரசினால் பட்டினி போட்டுக் கொல்லப்பட்டார்.

அன்று ஆங்கிலேயர்கள் காந்தியின் வழிக்குத் தந்த மரியாதையைக் கூட காந்தி பிறந்த தேசம் தரவில்லை. காந்திய தேசத்தின் சில தலைவர்கள் செய்த அநியாயங்களால் ஈழத்தமிழர்களின் மனதில் வாழ்ந்த சாத்வீகத் காந்தியும் இறந்தே விட்டார் எனலாம்.

ஈழத்தமிழர்களின் அரசியல் வரலாற்றை ஆழப்படியுங்கள். அதன் பின்னர் தயவு செய்து உங்கள் பதிவுகளை நடுநிலையோடு முன் வையுங்கள்..!

எழுத முதல் சிந்தியுங்கள். நானும் உங்களைப் போன்ற ஒரு இளைஞன் தான். ஆனால் அவசரப்பட்டு எழுத்துக்களை ஆதங்களைக் கொண்டிக்கொண்டிருப்பது அர்த்தமற்றது என்று நம்புபவன்.

ஈழத்தமிழருக்கு விடிவு கிடைக்க வேண்டும். ஆனால் அதற்காக ஆயுதம் ஏந்திக் கொண்டு அழிக்க வரும் எதிரியின் முன் காந்திய வழியை அறியாத எதிரியின் முன் மட்டியிட்டால் மரணம் தான் மிஞ்சும்.. என்பதை காந்திய தேசமே கற்றுத் தந்தும் இருக்கிறது ஈழத்தமிழருக்கு.

kuruvikal said...

எனது முன்னைய இடுகையில் தவறிய அம்சம் ஒன்று..

செல்வநாயம் - பண்டாரநாயக்கா ஒப்பந்தம்

சாஸ்திரி (முன்னாள் இந்தியப் பிரதமர்) - சிறிமாவே ஒப்பந்தம்

என்பனவும் ஈழத்தமிழருக்கு தீர்வு என்று சொல்லி ஈழத்தின் காந்தி எனப்படும் தந்தை செல்வா காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தங்கள்.

என்று அமைய வேண்டும். தவறுதலாக பண்டா - சாஸ்திரி என்றமைந்துவிட்டிருக்கிறது.

Vinitha said...

Dear Kuruvikal,

My grandfather lived in Yal. He was from Trichy and settled as a Cloth seller. My Dad was born there.

Dad had a cloth shop in Colombo, and was forced to pay big money every month...one of my uncles paid with his life, for not paying, before he left all and came back empty handed.

It is all about power and money.

I need not be told about the history over there. Each one has a different view. I respect yours.

Sacrifices are needed but not with war!

Regards
Vinitha