Wednesday, July 29, 2009

வியர்வை

வியர்வையை வாசம் நாத்தம்
என்று ஒதுக்கி விட முடியாது
உடல் நன்றாக வேலை செய்கிறது
என்றே காட்டுகிறது!
குழந்தைகள் பள்ளியிலிருந்து வரும்போது
வாரி அணைக்கும் போது
வரும் கம கம வியர்வை வாசம்
காத்திருந்து அவர்களை காணும் சொர்கம்!
உடலை கண்ணா பின்னாவென்று வளர்த்தி
பின் வருத்தி உடல் குறைக்க
வியர்வை வரவைக்கும் மனிதர்களை
பார்த்தால் வரும் சிரிப்பு!
கஷ்டப்பட்டு சைக்கிள் ரிக்சாவை
மிதிக்கும் மனிதர்களின் வியர்வை
அவர்கள் குடும்பத்திற்கு
கொடுக்கிறது சந்தோசம்!
உடலுக்கு தெரியும்
எப்படி உணர்த்துவது என்று...
பரமானந்தம்!

Tuesday, July 28, 2009

நுண்ணிய உண்மைகள்

எனக்கு வேண்டிய உதவிகள்
செய்ய துடிக்கும் நண்பர்கள்
பொறி வைத்து பிடிக்கவில்லை
வேண்டுமென்ற கேட்கவில்லை
தானாக வந்தது அது
மகிழ்வோடு
படித்து செய்தார்கள்
எல்லோருக்கும் ஒரு உதவி
எண்ணத்திலும் செய்தார்க்கு
நெஞ்சத்தில் இடமுண்டு
எப்படியாகினும்
தன் கையே தனக்குதவி
என்ற தத்துவம்
எக்காலமும் நிற்கும்
என்றும் நிலைத்து!

காக்கை

மரத்தில் மாட்டிக்கொண்ட காக்கை
அதை விடுவிக்க போலீஸ படை
சந்தோசமாய் இறக்கை அடித்து பறந்து
அது உதவியவர்கள் மேல் ஆய் போட்டது
மனித மனமும் இப்படித்தானே
உதவியவர்களை மறந்துவிட்டு
தன் வேலையை பார்க்கபோவது?
வள்ளுவரும் மற்றவர்களும்
சொல்வது யார் காதிலும் கேட்காது
ஆனால் காக்கை கரைந்துண்ணும்
நிலையை மட்டும் விடாமல்
பிடித்துக்கொண்டு பாடம் கற்பிக்கிறார்கள்
மனிதம் பெரிதா மானிடம் பெரிதா
இல்லை விலங்கினம் தான் சிறிதா?
அவரவர் இருக்கும் இடத்தில் இருந்தால்
எல்லோரும் சௌக்கியமே!

யார் எழுத்தாளர்

முதலில் ஒரு வாசகனாய் இருந்து பிறகு மன அதிர்வுகளை படம் பிடித்து காட்டும் ஆத்மாவே எழுத்தாளர் எனலாம்.

இப்போ எனக்கு பிடித்த எழுத்தாளர் அமிதாப் பச்சன். தன் தினசரி நிகழ்வுகளை, ஒரு எக்ச்ட்டேன்டட் குடும்பமாக நினைத்து தன் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுகிறார்....

இதை போலவே சில தமிழ் சிறு பத்திரிகை எழுத்தாளர்களும் செய்கிறார்கள்.

அங்கிகாரம் பெற்றவர்களே பெரியவர்கள் என நினைக்கும் பொருள் வேண்டாம். தன் கடமையை சரி வர செய்தாலே அந்தஸ்து கிடைக்கும். தேடி வரும்.

இதற்கு மொழி அவசியமில்லை!
எல்லோருக்கும் பொதுவான ஆங்கிலம் போதும்!
தாய்மொழி கைகொடுக்கும்.

நான் முதன் முதலில் என் ஆங்கில ப்ளாக் எழுத ஆரம்பித்தேன் (மார்ச் 2007). அதன் பிறகு சமையல் குறிப்புகள். அதன் பிற்பாடு தமிழ் பதிவர்களை பார்த்து எழுத ஆரம்பித்தேன்.

ஒரு வருடம் மேல் ஓடிவிட்டது. நன்றாக தான் இருக்கு.

ஜனரஞ்சக பத்திரிக்கையிலும் ஒரு ப்ளாக் வந்தது...

தொடர்ந்து எழுத வேண்டும்!