என் சித்தி மகள் (கசின்) அமெரிக்காவில் ஹூஸ்டனில் இருக்கிறாள்...
பி.ஈ. படித்தவள்... இப்போது வீட்டில், முதல் குழந்தை கவனித்துக்கொண்டு, இரண்டாம் குழந்தை எதிர்பார்த்து... அப்புறம் கணவனையும் கவனித்து கொள்கிறாள்.
கல்யாணம் செய்த பிறகு ... சிகாகோவில் ஒரு வருடமும், பிறகு மூன்று வருடங்களாக இருப்பது ஹூஸ்டன். சென்னை மாதிரி இருக்கிறது என்கிறாள்.
சித்தி பையன் ஜனவரி இறுதியில் அவர்களை அழைத்துக்கொண்டு அமெரிக்கா செல்கிறான்... இரண்டாவது குழந்தை பெப்ருவரியில்... உதவிக்கு ஆள். ஆறு மாதம் இருந்துவிட்டு வருவார்கள், விசா எக்ஸ்டன்சன் கிடைத்தால் ஒரு வருடம். மூன்று வருடத்திற்கு முன் ஒரு வருடம் இருந்துவிட்டு வந்தார்கள் கசினின் முதல் குழந்தை பிறந்த போது.
அவள் கல்யாணம், ஒரு ஸ்பீட் படம் மாதிரி. 2004 இல் மே மாதம் போட்டோ பார்த்து ஒக்கே செய்து, வெப்கேமில் பார்த்து சேட் செய்து... பாஸ்போர்ட் ரெடி செய்து, இந்தியன் டிரைவிங் லைசன்ஸ் எடுத்து காத்திருந்தாள்... மாப்பிள்ளை இந்திய மூன்று வார லீவில் வந்தார்... யு. எஸ். விசா அப்பாயின்ட்மன்ட் புக் செய்திருந்தார்கள்... கூடவே அழைத்து சென்றார்.
நல்ல வேலை இரண்டு வாரம் முன் தான் சித்தி பையன் விசா எடுத்திருந்தான். கண்மூடித்தனமாக ரிஜக்ட் செய்வார்களாம். கணவருக்கு வாய்ப்பு வருகிறது. அவரின் கம்பனியே இன்னும் ஆறு மாதத்தில் அனுப்புகிறேன் என்றிருக்கிறார்கள். எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.
கசின் மாப்பிள்ளை சைடில் இரண்டு முறை அமெரிக்கா சென்று வந்துள்ளார்கள்.... ஒரே மகன். செல்லம்.
இந்தியாவில் தான மாமியார்களை மருமகள்களுக்கு பிடிப்பதில்லை. அமெரிக்காவில் மாமியார்கள் அடங்கி ஒடுங்கி இருக்கிறார்களாம். ஒரே ப்ரெண்ட்ஷிப் என்றாள்.
ஆனால் பெண் கேட்பது அம்மாவை தான் பிரசவ காலத்தில். ;-)
******************
ஒரு பதிவு எழுத ஆரம்பித்து மூன்று பதிவு ஆகிவிட்டது....
ப்லோக் முறைப்படி சிறிதாக இருந்தால் படிப்பதற்கு நன்றாக இருக்கும்.
ஆனந்த சைதன்யா தியானமையம் திறப்புவிழா
1 hour ago
2 comments:
All the three posts are short an sweet to read! Thanks.
Keep writing.
அவள் கல்யாணம், ஒரு ஸ்பீட் படம் மாதிரி. 2004 இல் மே மாதம் போட்டோ பார்த்து ஒக்கே செய்து, வெப்கேமில் பார்த்து சேட் செய்து... பாஸ்போர்ட் ரெடி செய்து, இந்தியன் டிரைவிங் லைசன்ஸ் எடுத்து காத்திருந்தாள்... மாப்பிள்ளை இந்திய மூன்று வார லீவில் வந்தார்... யு. எஸ். விசா அப்பாயின்ட்மன்ட் புக் செய்திருந்தார்கள்... கூடவே அழைத்து சென்றார்.///
வாழ்க்கை எவ்வளவு வேகம் பாருங்க!!!
தேவா...
Post a Comment