Saturday, March 28, 2009

உலக தினம் (எர்த் ஹவர்)

இன்று மார்ச் 28, 2009 அனைவரும் இரவு எட்டரை மணிக்கு லைட் எல்லாம் ஆப் செய்து விட்டு, உலக தினம் (எர்த் ஹவர்) கொண்டாடுங்கள்.

ஆற்காட்டார் எப்படியும், கட் பண்ணுவார்.

:-)


ஒரு மணி நேரம் பல சிட்டிகள் கரண்ட் ஆப் செய்தால், பல வருடம் கார்பன் எமிசன் மிச்சம் ஆகும், உலகம் சீர்படும்.

*****

எதாவது ப்லோகர்கள் தனியாக செய்ய வேண்டும் என்றால், நாளை முழுதும் கம்ப்யுட்டர் ஆன் செய்ய வேண்டாம். முடியுமா?

Friday, March 27, 2009

உகாதி தின வாழ்த்துக்கள்

அனைவருக்கும்... என் இதயம் கனிந்த உகாதி தின வாழ்த்துக்கள் ...

மாங்காய் சாதம், பச்சிடி மற்றும் வேப்பம்பூ வெல்லம் எதிர் வீட்டிலிருந்து வரும்!

கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அரை கிலோ வாங்கி வந்து ப்ரெசண்ட் செய்ய வேண்டும்...

அப்புறம்... வீட்டில் பருப்பு போளி மற்றும் புளியோதரை!

***

இன்று முதல் பள்ளி விடுமுறை. குழந்தைகளுக்கு கொண்டாட்டம்.

டிவியில் படங்கள், பழையது தான் (முதன்முறையாக என்று சொல்லி போடுவார்கள்?)

Monday, March 23, 2009

கார் கனவுகளும் டாடா நானோவும்

சிறு வயதில் இருந்து விலை குறைவு கார்கள் என்று சொன்னால், நான் பார்த்து வளர்ந்தது மாருதி 800 தான். சூசூகி கம்பெனி இந்தியாவின் தன்மையை உணர்ந்து குறைவான விலையில் செய்து விற்றார்கள் .. (நாற்பதாயிரம்? 1988 என நினைக்கிறேன்...) அதற்கு வெயிடிங்.

இப்போதும், டாடா நானோவும் இந்தியாவில் ஒரு லட்சம் ரூபாய்... இன்று வெளியிடு... ஷோ ரூம்களில் .... சென்னை விலையில் சுமார் ஒரு லட்சத்தி இருபதாயிரம், மற்றும் சில்லறை இருக்கலாம்..



புக்கிங் ஆரம்பம், இரண்டு வாரத்தில். கான்கார்ட் டீலரை கூப்பிட்டால், நம்பர் வாங்கிக்கொண்டு, பிறகு யாரோ ஒருவர் கால் வருது...ஏ.சி மாடல், ஏப்ரல் பதினைந்து அன்று கிடைக்கும் என்கிறார்கள், முப்பதாயிரம் கேஷ் அதிகம் ஆகுமாம். மொத்தம் இரண்டு லட்சம் கேஷ் கட்டினால், கார். அல்லது ஒரு வருடம் காத்திருப்பு... முப்பது முதல் ஐம்பதாயிரம் விலை குறைவு?

இப்போது டீலர்கள் நல்ல கமிசன் பார்ப்பார்கள். என்ன லாட்டரி இருப்பதால், ஒருவருக்கு கார் விழுந்தால், அதை கை மாற்றி விட்டு, பணம் பண்ணுவார்கள்.

இருந்தாலும் பேங்க் லோன் மூலம் விலை குறைவு தான்... மாதம் 3990 கட்டினால் போதும், மூன்று வருடங்களுக்கு, லாட்டரி விழுந்தால், கார் ஒரு வருடத்தில் (அல்லது சில மாதங்கள் முன்பாக) வரும். நல்லது தானே. என்ன, கார் வரும் சமயம், முப்பதாயிரம் கட்ட வேண்டும்.

சரி மாருதி 800 இன்றும் இரண்டு லட்சம் அளவில், ஏ.சி முப்பதாயிரம் அதிகம். (வீட்டில் ஏ.சி. போட்டால் பத்தாயிரம் தான், கேள்வி கேட்க வேண்டாம்!)

என்ன செய்வது சொல்லுங்கள்!