Saturday, November 15, 2008

சென்னையில் பதிவர் சந்திப்பு

பதிவுலகம் மூலம் கிடைத்த நண்பர்கள் ரமேஷ், திவ்யா மற்றும் சாந்தி ஜெய்குமார்.

பீட்டர்ஸ் ரோடு சரவணா பவன் அருகில் நடக்கும் தூரத்தில்.. திவ்யா அவர் நண்பர் ரமேஷ் வந்திருந்தார்... இரண்டு சிறு குழந்தைகள் ... அப்புறம் ரவி என்பவர், திவ்யாவின் நண்பர் குடும்பமும் வந்திருந்தது. அவர் மனைவி சித்ரா மற்றும் இரண்டு பெரிய குழந்தைகள் ... வசதி ஆனவர்கள் குழந்தைகள் வளர்க்கும் விதம் அருமை. கேட்டதெல்லாம் வாங்கி கொடுப்பார்கள் போல. நாங்கள் வளர்ப்பது அடித்து... வித்தியாசம் தான்... சூழ்நிலைகள் மாறும் போது, குழந்தைகள் மன நிலையும் மாறுகிறது.

உலகம் சிறியது என்று தெரிகிறது. நண்பர் வட்டம் வேறு, பதிவுலகம் வேறு.

எனக்கு இந்த காபி ஹவுஸ் பற்றி எல்லாம் தெரியாது. எங்கள் வீடு அருகில் தான். நடக்கும் தூரம். தனியாக சென்றேன். குழந்தைகள் குறும்பு அதிகம். கணவருக்கு அவர்களை பார்க்கும் வேலை. வசதி வாய்ப்புள்ளவர்கள் சென்று வருவது என்பது தெரிகிறது, காபியின் விலை பார்த்து! எனக்கு சங்கோஜமாக இருந்தது.

திவ்யா ஏன் கணவரையும் குழந்தைகளையும் அழைத்து வரவில்லை என்று கோபித்து கொண்டார். அடுத்த முறை நிச்சயம், எங்கள் வீட்டில் சாப்பிடுவார்.

நான் கேட்டுக்கொண்டு தான் இருந்தென். நிறைய உலக விஷயம் பேசினோம். நேரம் போனது தெரியவில்லை. பிறகு சந்தோசமாக கிளம்பினோம். இந்த பதிவுலக நண்பர்கள் எப்போதாவது ஒரு முறை சந்தித்து கொண்டால் நல்லது... வசதி வாய்ப்பு உள்ளவர்கள் மட்டும் செலவு செய்வது கொஞ்சம் கூச்சம் ஏற்படுத்துகிறது. என் பர்சில் நூறு ருபாய் இருந்தது. அந்த இடத்திற்கு நண்பர்களோடு செல்ல குறைந்த பட்சம் கையில் ஆயிரம் ருபாய் இருக்க வேண்டும். (இதை டைப் செய்யும் போது கணவர் சிரித்துக்கொண்டார்... நம்ம ஒரு வார சிலவு பணம் என்றார்!)

போட்டோ கூடாது என்ற நிபந்தனை, இருந்தாலும் சில போட்டோஸ் எடுக்கப்பட்டன. ப்ளோகில் போடக்கூடாது. என் கையில் கேமரா இல்லை.

நான் நெட்டில் இருந்து ஒரு பழைய போட்டோ அமேதீச்ட் பற்றி இணைக்கிறேன்.


திவ்யா சீக்கிரம் ஏர்போர்ட் செல்ல வேண்டும் என்று கூறி விடைபெற்றார், ரவி குடும்பத்தினரோடு. சாந்தி ஜெய்குமார், மற்றும் ரமேஷ் குடும்பத்தினரோடு விடை பெற்று கிளம்பினேன். திவ்யா கொடுத்த கிப்ட்ஸ் பேகை பிடித்துக்கொண்டு நான் வீட்டிற்க்கு நடக்க ஆரம்பித்தேன். மனம் கனமாக இருந்தது.

-----*------

அப்புறம் சென்னையில் ஒரு பதிவர் கூட்டம் நடந்து கொண்டு இருக்கிறது நான் என் குடும்பத்துடன் அந்த ஏரியா பக்கம் சென்று வந்தேன், காந்தி சிலை. எல்லாம் ஆண்கள் மாயம். ஐந்து மணிக்கு பீச் சென்றோம், நல்ல காற்று. கொஞ்ச நேரம் உட்கார்ந்து பேசினோம். சூடான சுண்டல், குழந்தைகள் ஐஸ் கிரீம்... குழந்தைகள் அது வேண்டும் இது வேண்டும் என்று கத்தினார்கள்... கணவர் சொன்னார்.. நண்பர்கள் பார்க்க குழந்தைகளோடு சென்றிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்றார்... தூறல்...மழை வரலாம்...ஆறரைக்கு கிளம்பி விட்டோம். மொத்த சிலவு ஒரு அமேதீச்ட் காபி விலை.

இப்போது
சாப்பாடு என்று ஒன்று உள்ளது செய்ய வேண்டும்.

7 comments:

குப்பன்.யாஹூ said...

குடும்பத்துடன் சென்னை பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளலாமே, என்ன தயக்கம்.

அடுத்த பதிவர் சந்திப்புக்கு குடும்பத்துடன் வாருங்கள்.


குப்பன்_யாஹூ

anujanya said...

சகோதரி வினிதா,

இதுதான் தங்கள் வலைபூவிற்கு என் முதல் முறை வருகை. வலைப்பதிவர் சந்திப்பு என்றதும் வந்தேன். இது வேறு சந்திப்பு என்று புரிந்தது. ஆயினும் நீங்கள் எழுதியது படித்து கொஞ்சம் மனம் கனத்தது. நீங்கள் சொல்வது உண்மை எனினும், இதில் உங்கள் நண்பர்கள் வருத்தம் அடையலாம். நட்புக்கிடையில் பொருளாதாரம் வரக்கூடாது. வந்தால் அது நட்பு அல்ல.

இவன் யாருடா புதுசா அட்வைஸ் என்று நிச்சயம் உங்கள் மனம் கேட்கும். ஆகவே just ignore it.

அனுஜன்யா

Anonymous said...

சகோதரி,

காசு பணம் நட்புக்கு முக்கியமில்லை. அந்த எண்ணம் வேண்டாம்.

அகநாழிகை said...

உங்கள் இந்த பதிவு மிக இயல்பாக இருக்கிறது. மனதில் பட்டதை எந்த உள்ளுணர்வும் இல்லாமல் சொல்லி இருக்கிறீர்கள். வலை பதிவர் சந்திப்பு என்ற உங்கள் தலைப்பு காரணமாக தற்செயலாக உங்கள் பக்கத்தில் புக நேரிட்டது. தொடர்ந்து எழுத நல்வாழ்த்துக்கள்.

Unknown said...

வினிதா,
இதில் இன்னொரு கோணமும் இருக்கிறது.பதிவரின் "profile" பார்த்து hi-fi என்ற ஒரு முன்முடிவு
ஏற்படுகிறது.இது ஒரு காரணம்.

அடுத்து......

பதிவர்களே ஒரு தாழ்மையான் வேண்டுகோள்.தவறாக் எடுத்துக்கொள்ள் வேண்டாம்.கிழ் உள்ள தலைப்புப் போட்டால்தான் உள்ளே வருவீர்களா?
//பதிவர் சந்திப்பு /வலைப்பதிவர் சந்திப்பு காரணமாக தற்செயலாக //

Vinitha said...

Nandri.

I am never afraid to express feelings.

//காசு பணம் நட்புக்கு முக்கியமில்லை.// Very True.

K.Ravishankar good point...

/*******பதிவர்களே ஒரு தாழ்மையான் வேண்டுகோள்.தவறாக் எடுத்துக்கொள்ள் வேண்டாம்.கிழ் உள்ள தலைப்புப் போட்டால்தான் உள்ளே வருவீர்களா?
//பதிவர் சந்திப்பு /வலைப்பதிவர் சந்திப்பு காரணமாக தற்செயலாக //*******/ Why?

Very logical isn't it?

Shabba Khair.

anujanya said...

ரவி,

"அப்படி எல்லாம் இல்லை. எந்தத் தலைப்பு போட்டாலும் வருவேன்" என்று சொல்ல ஆசைப் பட்டாலும், உண்மையில் தெரியாத, பரிச்சயமில்லாத தளங்கள் செல்ல வேண்டுமானால் முதலில் ஒரு தயக்கம் வரத்தான் செய்யும். Topical interest என்பது universal phenomenon. செய்தித் தாள்களில் கூட நாம் படிக்கும் செய்தி பெரும்பாலும் தலைப்பை பொறுத்துதான். பரிச்சயமாகிவிட்டால் வேறு கதை.

வினிதா, இப்போ இந்த topic பற்றி பதிவு போட்டா, கேள்வி கேக்காம உள்ள நுழைவோம். சரியா!

அனுஜன்யா