ஆந்திராவில் மக்கள் தீர்ப்பு கொடுத்துள்ளார்கள் நக்சல்களை வளர்க்கும் பகுதியான வாரங்கல் அருகில்.
சரி என்ன விஷயம்?
பெண் கொடுமை, ஈவ் டீசிங்...
இங்கே படியுங்கள்... போலிஸ் செய்தது நல்ல விசயமா?
நாம் தான் பெண் விடுதலை என்று பேசுகிறோம். அந்த பெண்கள் பாவம்... லவ் செய்யவில்லை என்றால், அந்த ஆண் (பையன்) அப்பா அம்மா சொல்லும் பெண்ணை கட்டிக்கொண்டு, அல்லது, இன்னொரு பெண்ணை ட்ரை பண்ணலாம் அல்லவா? ( நக்கலாக தான் சொல்லுகிறேன் )... ஆசிட் வீச்சு தேவையா?
கேடு கெட்ட மிருகங்களுக்கு கொடுத்தார்கள் ஆந்திராவில் மக்கள் தீர்ப்பு. வாங்கிய சம்பளத்திற்கு போலிஸ் செய்த நல்ல காரியம்! ஹுமன் ரைட்ஸ் கமிசன் எல்லாம் இன்று ஒன்றும் செய்ய முடியாது...
மீண்டும் மீண்டும் தொல்லை என்பதால்... என்கவுண்டர். அட்டகாசம்...
பெற்ற மனது பாடுபடும் தான்... நன்றாக வளர்த்திருக்க வேண்டும்?
ஆந்திரா பற்றி தெரிந்த வரை, இப்போது அந்த ஆண்களின் பெற்றோர் காசு கொடுத்து பெண்கள் குடும்பத்திற்கு தொல்லை கொடுப்பார்கள்.
இரண்டு உயிர் ஊசலாடுது... அதற்கு என்ன பிரதிபலன்?
இதற்கும் தனி மாநிலம் கேட்கிறார்கள்... கொடுமைங்க.
கொடுத்தால்....
சவுதி அரேபியாவில் நடப்பது போல மக்கள் தீர்ப்புகள் அங்கு சொல்லப்படும்!
***
என் கணவர் படித்ததும் வாரங்கல் தான்.
ஆர்.
ஈ.
சி.
தினம் தினம்...
பயத்தோடு படித்தேன் என்கிறார்.
நான் கராத்தே படித்துள்ளேன்,
ஹேன்ட் பேகில் சிறு கத்தி ஒன்று எப்போதும் இருக்கும்,
கையில் நகம் சார்பாக இருக்கும்,
அப்புறம் மிளகாய் பொடி ஒரு பாக்கட்.
சென்னையில் தெரியும்....
நிச்சயம் தேவை...