எல்லோருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
சந்தோசம் எங்கும். எல்லாம் லீவு மாயம்.
அப்புறம் என்ன?
இப்போது மைசூரில் இருந்து கிளம்புகிறோம். இரண்டு நாட்கள் போனது!
குழந்தைகள் நன்றாக என்ஜாய் செய்தார்கள்.
இங்கு எல்லாம் நன்றாக உள்ளது. எல்லோரும் நன்றாக தமிழ் பேசுகிறார்கள்.
ரிகாலிஸ் என்ற ஹோட்டலில் தங்கினோம். ஸ்டேசன் அருகில் தான்...
அழகான ஹோட்டல்.
கணவர் கம்பெனி கொடுத்தது.... எங்களுக்கு
வருடம் ஒரு ட்ரிப் கிடைக்கிறது. அடுத்த வருடமாவது சிம்லா அல்லது மணலி செல்ல வேண்டும்.
அப்புறம் மைசூரில் மைசூர் பா நல்லா இல்லே. நானே நன்றாக செய்வேன்!
வை பை இருக்கு இங்கே இலவசம். குழந்தைகள் கார்ட்டூன் பார்க்க நான் நெட்டில் மெயில் செக், மற்றும் ப்லோக் படிப்பு மற்றும் எழுதுறேன்.
ட்ரெயின் பிடிக்க கொஞ்சம் நேரம் இருக்கு.... எட்டு மணிக்கு தான்!
*******************
சில பிடித்த பதிவுகள்... இந்த வாரம் ....
முஸ்லீம் என்றால் தீவிரவாதியா? அயோக்கியன்பெருவெளிரமேஷ் பதிவில் எழுதிய இரண்டு படங்கள் பார்க்க ஆசை. சத்யமில் ஓடுகிறது. தமிழ் படம் என்றால் ஒக்கே. பெஞ்சமின் பட்டன், குழந்தைகள் பார்க்கும் படமா?
**************************************
இங்கே காலை எழு மணியில் இருந்து "தா ர ரம் பம்" என்ற ஹிந்தி படம் டிவியில் ஓடியது. குழந்தைகள் பார்க்கவில்லை படம் வந்த போது.... அப்போது. கஷ்டப்பட்டு ஜெயிக்கும் கதை. சில இடங்களில் குழந்தைகள் அழுதார்கள்.
அவசரமாக ப்ரேக்பாஸ்ட் பப்பே சென்று வந்தோம். நேற்று லன்ச், டின்னர், எல்லாம் நார்த் இந்தியன். இன்று மதியம் காமத். இரவு, ஸ்டேசனில் எதாவது.
என்ன இந்த 4 ஸ்டார் ஹோட்டல்களில் வந்து தங்கி சென்றால், குழந்தைகள் கெட்டு போவார்கள். ப்ரிஜ்ஜில் ஜூஸ், குடி வைத்து விடுகிறார்கள். இரண்டு நாட்களில் முன்னூறு ருபாய் ஜூஸ் மட்டும்... தனி பில் என்று போடுகிறார்கள்...
************
இரண்டு மூன்று கமண்ட்ஸ் எனக்கு...
நான் பதிவுகளில் ரொம்ப ரொம்ப மற்ற பதிவுகள் பற்றி எழுதுகிறேன் என்று.
என்ன செய்வது? எழுத தெரிந்த விதம் அவ்வளவு தான்!
என்ன நான் எழுதியவை, மே முதல் 105 பதிவுகள். சுமார் எட்டு மாதங்கள். பாதிக்கு மேல் எல்லாம் சுட்டி காட்டும் பதிவுகள். சிலர் எழுதும் மாதிரியே எழுதுகிறேன்! ஸ்டையில் காபி.
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா!