Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Monday, August 9, 2010

மீண்டும் எழுதுகிறேன்

நீண்ட நாட்கள்... எழுதவில்லை. என் ஆங்கில பதிவில் மூன்று பதிவுகள் போட்டேன்... அதுவும் இமெயிலில் இருந்து கட் & பேஸ்ட் ... மேலும் அங்கு நேரம் கிடைக்கவில்லை.

கணவர் வேலை காரணமாக யுரோப் சென்றதால்... சம்மர் வெகேசன் ( மார்ச் இறுதி முதல் ஜூன் முதல் வாரம் வரை ) நாங்களும் டூசல்டார்ப் சென்றோம். அவர் அங்கு தான் இருக்கிறார். பெங்களூரு வந்த ஒன்பது மாதங்களில், நல்ல வேலை என்று நம்பி வந்த கம்பெனி செயலற்று போனதால்... பெப்ரவரி நடுவில் அவர் இந்த புது கம்பெனியில் சேர்ந்தார். உடனே ஆறு மாதத்திற்கு அவருக்கு புது ப்ரொடக்ட் வேலை. அதற்கு ஆறு மாதம் ஆன்சைட். கம்பெனி மூலம் (விமானத்திற்கு ஐ.டி.) இப்போது ஜெர்மனியில். இந்த மாதம் கடைசியில் திரும்புகிறார்.

நிறைய இடங்கள் பார்த்தோம். அதை பற்றி மெதுவாக எழுதுறேன். இத்தாலியில் சியன்னா என்ற இடம் சென்றது மிக அருமை. ஜூஸ் படுகொலைகள் நடந்த இடமான சென் சப்பாவிற்கும் சென்றோம். நிறைய இடங்களுக்கு ட்ரெயினில் தான் சென்றோம். யுரோ ரெயில் பாஸ் கட்டணம் குறைவு.

எங்கு சென்றாலும் நிறவெறி ஆதிக்கம் இருக்கின்றது. Are you SriLankan என்று சில இடங்களில் கேட்டார்கள். ஏன் என்று தெரியவில்லை.

ஜெர்மனியில் படிப்பு செலவு ஒரு குழந்தைக்கு மாதம் முன்னூறு யுரோ ஆகுமாம். நமக்கு கட்டுபடி ஆகாது. மேலும் சில பள்ளிகளில் வருமானம் பொறுத்து இலவசமாம்.


***

சரி அப்துல்லா அண்ணன் குறிப்பிட்டிருக்கும்

பிரபல பெண் பதிவருக்குப் பகிரங்கக் கடிதம் பதிவில் உள்ள பெண் யார்?


மீண்டும் கலகமா?

Tuesday, December 1, 2009

உடல் எடை

உடல் எடை குறைக்க எவ்வளவு பாடு பட வேண்டி உள்ளது.

இந்த பதிவு அருமை. எழுதியவர் லதானந்த்.

போசி

செய்யும் வேலை பொறுத்து கேலரிஸ் தேவையை உடல் சொல்லாது. நாம் தான் அனுபவபட்டு சாப்பிட வேண்டும்.

நிறைய நீர் பதார்த்தங்கள் குடித்தால் / சாப்பிட்டால் - வயிறு பெரிதாகும் என்று தாத்தா பாட்டி காலத்தில் சொல்வது உண்மை தான் போல.

அது போக என்டிடிவி குட் டைம்ஸ் போன்ற சேனல்கள் சமையல் கலை பற்றி அதுவும் இதுவும் செய்து காட்டி அட்டகாசம் செய்கிறார்கள். சாப்பிட்டு வெயிட் போட வேண்டியது தான். ( வெயிட் குறைக்க வழி என்ற போர்வையில் )

நம்ம தமிழ் சேனல்கள் பற்றி சொல்ல போவதில்லை. எல்லாமே வெயிட்டான அயிட்டங்கள் தான்! ( சுவை )

*** லதானந்த் அவர்கள் ப்ளாகில் கமன்டாய் ***

1. சாப்பாட்டை குறைத்து உடற்பயிற்சி ஈடுபடுவதுதான் சிறந்தது.

2. சரியான நேரத்தில் சாப்பிடவும்.

3. எண்ணெப் பதார்த்தங்களை தவிர்க்கவும்.

4. மாமிச உணவு வேண்டவே வேண்டாம்.

5. மதிய உணவில் காய்கறிகள் அதிகமாகச் சேர்க்கவும்.

6. இரவில் பாதி சாப்பாடு அல்லது சிற்றுண்டி பாதி வயிற்றுக்கு மட்டும் சாப்பிட்டு மீதிக்கு தண்ணீர் குடிக்கவும்.

7. பால், தயிர், பச்சை வெங்காயம் (50 கிராம்) சாப்பிடவும்.

8. பசிக்கும்போது நொறுக்குத்தீனி தவிர்த்து தண்ணீர், தக்காளிச்சாறு அல்லது முட்டைகோஸ் சாப்பிடலாம்.

9. மாவுச்சத்து குறைப்பதன் மூலம் படுவேகமாக உடல் எடை குறைய வாய்ப்புண்டு.

10. வயதுக்கேற்ப உடற்பயிற்சியை தேர்ந்தெடுத்து செய்யவும். நடத்தல், ஓடுதல் எதுவாக இருந்தாலும் சிறந்தது.

11. மூட்டு வலி இருந்தால் சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் போன்றவை உகந்தவை.

12. சோம்பேறித்தனமாக வீட்டில் ஓயாது ஓய்வெடுக்காமல் ஏதாவது ஒரு வேலையில் நம்மை ஈடுபடுத்திக் கொண்டால் சக்தி தீர்ந்து உடல் பருமனாவதைத் தடுத்துவிடும்

Thanks to : http://www.darulsafa.com

Wednesday, November 25, 2009

பெங்களூரும் சென்னையும்

நாங்கள் சென்னையிலிருந்து பெங்களூரு வந்து கொஞ்சம் காலம் ஆனாலும், இன்னும் சென்னை மழையை மறக்கவில்லை. ரோடெல்லாம் கந்தலாகி...

இங்கு மழை எப்போது வேண்டுமானாலும் வருகிறது. பெங்களூரில் குடை எடுத்துக்கொண்டு தான் வெளியில் இந்த மழை காலத்தில் செல்ல வேண்டும்!

***

காய்கறி விலை, மற்றும் வீட்டு வாடகை குறைவு. மாதம் எங்கள் குடும்பத்திற்கு ஐந்தாயிரம் குறைவான செலவு எனலாம். ஆனால் சினிமா டிக்கட் விலை, ஹோட்டல் சாப்பாடு விலை அதிகம் தான். வெஜ் கூடத்தான். தேவை இல்லாமல் வெளியில் செல்ல வேண்டியது இல்லை. :-)

கரண்ட் பில் மாத்திரம் அதிகம் செய்துள்ளார்கள். அதில் சென்னை கொஞ்சம் குறைவு!

***

அவர், மைசூர் கம்பெனி ஆபிசுக்கு அடிக்கடி சென்று வரும் வேலை. காலையில் ஆறு மணிக்கு கிளம்பினால் ஐராவட் பஸ்ஸில் சென்று சாயந்திரம் ஒன்பது மணிக்கு வீடு திரும்பிவிடுகிறார்! இரண்டரை மணி நேரம் தான் - சூப்பர் பஸ் சர்வீஸ். இனி ரோடு சரி செய்தால், புது ரோடு வேறு வருதாம் , நூற்றி முப்பது கிலோமீட்டர்கள் ஒன்றரை மணி நேரத்தில் கடக்கலாம்! ஆனால் இந்த சிட்டிக்குள் பத்து கிலோமீட்டர் போக வர இரண்டு மணி நேரம் வேண்டும்!

***

இந்த பேன்க் வட்டி விஷயம் கொஞ்சம் புரியவே இல்லை. ஐந்து லட்சத்திற்கு, பெர்சனல் லோன் பதினைந்து பர்சன்ட் வட்டி என்றால், மாதம் கொஞ்சம் கொஞ்சம் கட்டினால் - இரண்டு வருடத்தில் எப்படிங்க மொத்தம் கட்டுறது எழு லட்சம் வரும்? புரிந்தவர்கள் சொல்லுங்க!

இன்னொரு கொடுமை, கடன் வாங்கிய இரண்டாவது மாதம் மொத்தமாக திருப்பி கட்டினால் ( பணம் கிடைத்து சென்றோம் ) ஆறு மாதம் வரை ஈ.எம்.ஐ தான் கட்டணுமாம். பிறகு அவுட்ச்ட்டேன்டிங் அமவுண்டில் நான்கு பர்சன்ட் அதிகம் சேர்த்து கட்டலாம் என்றார்கள். தலை சுற்றுது.

நல்ல வேலை, அபார்ட்மென்ட் லோனில் அந்த அமவுண்ட் குறைத்து கடன் பெறுவோம்!

கடன் சுமை தான் வாழ்கையில். சொந்த வீடு வேண்டும் என்றால், கையில் மொத்த காசோடு தேடுங்கள்.

***

நிறைய விசேஷங்கள் இங்கு. அவருக்கு சொந்தம் இங்கு அதிகம். பட்டு சேலைகள் அதிகம் கட்ட வேண்டி உள்ளது.

இந்த Silk பட்டு ஜாக்கெட் ( லைட் கலர் ) மாத்திரம் அக்குள் வியர்வை கறை ட்ரை க்ளீனிங் செய்தாலும் போகவில்லை. எப்படி அதை சரி செய்வது? விஷயம் தெரிந்த தோழியர் உதவுங்கள்!

Wednesday, September 9, 2009

பிராப்திரஸ்து

நெடு நாட்களாக வீடு தேடி, இன்று ஒரு வீடு முடிவாகும் நிலைமை. அட்வான்ஸ் கொடுத்தாகிவிட்டது. இனி என்னவர் பேங்க் டாகுமன்ட்ஸ், போன்றவற்றிக்கு அலைய வேண்டும்.

சென்னை விலைக்கு மிகவும் பரவாயில்லை. பெங்களூரு பன்னர்கட்டா ரோடு மேலேயே உள்ளது. இன்னும் ஆறு மாதத்தில் குடி புகலாம்.... வார்டுரோபுகள் ரெடிமேட் கிடைக்கின்றன. பர்னிசர் மற்றவை இருப்பவை மட்டும் தான்.

கொடுக்கும் வாடகையில் இரண்டு மடங்கு ஈ.எம்.ஐ. வருமாம். சொத்தாகும் எண்ணம், விலை உயர்வு, கையிருப்பு, ஒரு ஊரில் நிரந்தரமாகும் எண்ணம் என பல யோசனைகளில் இது உதவும்.

கல்யாணம் பண்ணிப்பார், வீட்டை கட்டிப்பார் என்று சும்மாவா சொன்னார்கள்! ஒரு வித பயம் வீடு புகுந்து, க்ரகாப்ரவேஷித்து, நன்றாக வாழும் வரை இருக்கும்.

எனக்கும் நண்பர்கள் ஆசியினால் ஒரு வேலை பிராப்திரஸ்து ஆகும் என நம்புகிறேன். ( குழந்தைகள் ஸ்கூல் செல்லும் நேரம் காலை எட்டு முதல் அவர்கள் திரும்பும் மாலை மூன்றரை வரை ).

அடுத்த வெள்ளி முதல் தசரா விடுமுறை, குழந்தைகளோடு கோவையில் பத்து நாட்கள் கழிக்க எண்ணம். ஒரு சிறு ட்ரிப் கேரளா சென்று வர வேண்டும்!

Saturday, September 5, 2009

நான் வினிதா

என் பெயர் வினிதா
நான் தான் உலகில் பெரியவள்
என்று நினைக்க தோன்றுது...
சிறியவர்கள் பெரியவர்கள்
நிறைந்த பேரன்டமடா இது
என்ன சொல்லி யாருக்கு
புரிய வைப்பது...
ஒன்று சொன்னால்
மற்றொன்று என நினைக்கும்
டூப்புவாசிகள் நிறைந்த உலகமடா
நான் ஒன்று நினைத்து எழுத
நீங்கள் ஒன்று நினைத்துக்கொள்ள
காமடி ஆனது வாழ்விலே
கமன்ட்டுக்கள் ரூபத்திலே!

ஆசிரியர் தின வாழ்த்துகள்

ஆசிரியர் தின வாழ்த்துகள்! என்னை நன்றாக படிக்க வைத்த, உதவிய, திட்டிய, சில சமயம் அடித்த, அனைத்து ஆசிரியர்களுக்கும்வாழ்த்துக்கள். காலேஜ் வாத்தியார்கள், ஒரு தனி ரகம். வருவார்கள் போவார்கள். யன்க்ச்டர்கள் வழிவார்கள்! :-)

கோவையில், களுக்கென்று சிரித்தால், வெயிலில் மண்டி போடும் காலம் இன்னும் இருக்கா தெரியலே. அந்த சிறு வயதில், வாயை பொத்திக்கொண்டு இருப்போம். ( கள்ளம் கபடு இல்லாத வயது அது... கொடுமைங்க! ) வெள்ளிக்கிழமை தலைக்கு குளித்துவிட்டு, பூ வைத்து முடியை கொஞ்சம் விரித்து போட்டு சென்றால், பூ பிரித்து எறிவார் எங்கள் பி.டி. மிஸ். ( ஒரு நாள் காந்திபுரம் பஸ் ஸ்டாண்டை கிராஸ் செய்யும் போது அடிபட்டு இறந்தார் ).

***

என் குழந்தைகள் பள்ளி சுமாரானது தான். பீஸ் மட்டும் அதிகம். ஆனால் ஆசிரியர்கள்... பெண்கள்... மிகவும் அட்டகாசமாக பி.பி.ஒ செல்லும் பெண்கள் போல உடையந்து வருகிறார்கள். பெங்களூரு வந்த பின் என் மகள் லிப்ஸ்டிக் போட்டுக்கொள்ள அதிகம் அடம் பிடிக்கிறாள். :-)

***

ஓய. ராஜசேகர ரெட்டி மரணம், சில தொழில் முறை சம்பந்தங்களால் என் கணவர் குடும்பத்தில் வருத்தம்... கடப்பா ரவுடி என்றெல்லாம் பெயர் இருந்தும், திடீரென வைக்கோ மாதிரி நடை பயணம் செய்து ஆட்சியை பிடித்தவர் ( தன் சக்கரை அளவையும், உடல் எடையும் குறைத்தவர் - அவர் பாடி பில்டர் வேறே - நிமிர்ந்த நடை எப்போதும் ) ... இப்போது மகன் ஆட்சியில் இருக்க விரும்புகிறார்.

கணவர் சொல்லுகிறார், சுவிஸ் வங்கி அக்கவுண்ட் ( கட்சி ) யார் வைத்துள்ளார்களோ, அவர்களுக்கு, ஆட்சி கட்டிலுக்கு சாவி. உண்மையா?

ஆந்திராவிற்கு கேடு காலம் வராமல் இருந்தால் சரி! ( போலி காலேஜ் , வேலை எக்ஸ்பீரியன்ஸ் சர்டிபிகேட், சத்யம், இடம் விற்பனை இப்போ இந்த விபத்து.. )

***

நான் எழுதிய இந்த பதிவை மொழியால் பிரிக்காதீர்கள் நினைக்க வைத்து இந்த பதிவு தமிழன் ஒரு விளக்கம்

எல்லோரும் ஏன் மொழியால் பிரிகிறார்கள்? நாடு முன்னேறுமா?

மெதுவா ஜாதி ஒழிந்துக்கொண்டு இருக்கு, இப்போ இந்த மொழி வித்தியாசமா?

ஹிந்தி படிக்க முடியாமல், கஷ்டப்பட்டு தமிழர்கள், நார்த்தில் வேலை செய்து கஷ்டப்பட்டு உழைத்து... கண்ணீர் கதை.

Tuesday, September 1, 2009

மொழியால் பிரிக்காதீர்கள்

பெங்களூர் வந்து ஒரு மாதம் ஆகிறது. என்னவருக்கு இங்கு புதியதாய் வேலை. நாங்கள் இருக்கும் பெங்களூரு சவுத் ஏரியா கொஞ்சம் சத்தமில்லாமல் உள்ளது.

இங்கு கிட்டத்தட்ட எல்லோரும் கன்னடம் பேசுகிறார்கள். நானும் பழகிவிட்டேன். வீட்டில் எல்லோரும் தமிழ் தான். என்னவர் கன்னடம் நன்றாக பேசுகிறார். குழந்தைகள் ஒரு மாதிரி பிக்கப் செய்துவிட்டார்கள். குழந்தைகள் அனைவரும், நன்றாக மற்றவர்களிடம் ஆங்கிலத்தில் பேசி பழகுகிறார்கள்.

இன்று காலை மீனாக்ஷி கோவிலுக்கு சென்றேன். குழந்தைகள் காலையில் சென்றால் மாலை தான் திரும்புகிறார்கள். ஸ்கூல் தூரம் தான்.... டொனேசன் மட்டும் இருவருக்கும் சேர்த்து ஐம்பதாயிரம். சென்னையில் அந்த கோபாலபுரத்து ஸ்கூலில் இந்த தொல்லை இல்லை. நான்கு மாத டேர்முக்கு ஆறாயிரம் பீஸ்.

இங்கு வோல்வோ பஸ் இருப்பதால், ஐந்து ரூபாய்க்கு ஏசி பஸ் பிரயாணம். நன்றாக உள்ளது. வீட்டின் முன் ஏறி, இறங்கலாம்.

கோவிலில் ஒருவரோடு பேசிக்கொண்டு இருந்தேன். அவரும் கஷ்டப்பட்டு கன்னடம் பேசியது மாதிரி இருந்து. கடைசியில், அவர் சென்னைக்காரர். தெலுகர் என தெரிந்தது.

இருந்தாலும் கன்னடம் பேசினால் பழக்கம் வரும் என்று இருந்தார். என்ன செய்வது.

சில கேரக்டர்ஸ் மொழியால் பிரிக்கிறார்கள். பயம் வருகிறது!