Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts

Saturday, October 31, 2009

டிஸ்லெக்சியா

கதிரவனுக்கு அன்று பெரிய தலைகளோடு மீட்டிங்.

சில கல்லூரிகள் முதல்வர்கள், சில வருமான வரி துறை அதிகாரிகள் எனக்கூட்டம்.

ஸ்டேட் செக்ரடரி என்றால் சும்மாவா?

மாநில அரசாங்கம் ஒரு ஆர்டர் போட்டிருந்தார்கள். அதாவது பள்ளிகளில் ( தனியார் ) படிக்க வரும் குழந்தைகள் சிலருக்கு தனி கவனம் தேவைப்படுவதால், அதற்கு சிறப்பு பயிற்சி கட்டணம் முழுவதும், வருமானவரி கழிவிர்க்கு மத்திய அராசாங்கத்தின் ஒப்புதல் பெற்று தந்திருந்தார்கள்...

கல்லூரிகளுக்கும் அதை பெற்று தர வேண்டும் என்று கேட்க தான் கல்லூரி முதல்வர்கள் வந்திருந்தனர். அதற்கு என்ன செய்யலாம் என்று யோசனை சொல்ல வருமான வரி அதிகாரிகள்....

"நிச்சயம் பண்ணலாங்க" என்றார்கள் வருமான துறை அதிகாரிகள். அதற்கு சான்று எப்படி வரையறுக்க வேண்டும் என்பதற்கும் வழி கொடுத்தார்கள்.

"நான் சின்ன வயசுலே பட்ட கஷ்டம் யாருக்கும் வரக்கூடாது!", என்றவாறே புன்னகைத்துக்கொண்டார் கதிரவன்.

முப்பது வருடங்களுக்கு முன்...

சிறு வயதில் அவனால் டிஸ்லெக்சியா பாதிப்பால் படிக்கமுடியாமல் ரொம்பவும் திணறி இருந்தான்! வீட்டிலும் மக்கு பண்டாரம் என திட்டு வேறு... எவ்வளவு நாள் தான் அப்பா அம்மா படி என்று அடிப்பார்கள். வாத்தியார்கள் தேறாத கேஸ் என்று சொல்லிவிட்டனர். படிக்கனும்னு ஆர்வம் இருந்தால் தான் படிப்பு வரும் என்று புத்தி சொல்லியும் அவனால் படிக்க முடியவில்லை.

ஆறாவது பெயில் ஆனவுடன் கோவை செல்வபுரம் மாமாவின் சாயப்பட்டறையில் சேர்ந்தவன், நிறங்களோடு நீர்த்துப்போனான்! அவனோடு வேலை செய்த ஒருவர், தனியாக பள்ளியில் படிக்காமல் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத முயன்ற போது, அதை பார்த்து அறிந்து அவனும், முயன்று படித்து, ப்ளஸ் 2 முடித்து, கல்லூரி படிப்பு நேரடியாக முடித்து, சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதி... ஐ.ஏ.எஸ் பாஸ் செய்து, இன்று அவர் ஸ்டேட் செக்ரடரி!

***

இது சர்வேசனின் நச் கதைபோட்டிக்கு சமர்பிக்கிறேன்!

Friday, June 26, 2009

மீண்டும் மீண்டும்

கந்தசாமி சாஸ்த்ரிகளின் ஒரே மகன் கார்த்திக் என்றழைக்கப்பட்ட கார்த்திகேயன்.

அப்பா பெயரை மகனுக்கு வைத்தார் கந்தசாமி சாஸ்த்ரிகள்!

பிறந்து மூன்றாவது வருடம் சங்கீதத்தில் திளைக்க ஆரம்பித்தான்!

அவன் பிறந்த போது, கந்தசாமி தம்பதியினருக்கு கல்யாணம் ஆகி இருபது வருடம் ஆகியிருந்தது. சங்கீத குடும்பம். ஆசையாய் பெற்ற ஒரே மகனை வளர்த்தார்கள்.

பத்தாவது வயதில் பாட்டு போட்டிகள், கச்சேரிகள் என திளைத்தான்.

காம்போதி, தோடி என்று சங்கீதத்தில் விற்பன்னன் ஆனான்.

பள்ளியிலும், கல்லூரியிலும் படித்த போது, அவன் தான் ஆஸ்தான பாடகர். ரேடியோ, டிவி என்று எல்லா போட்டிகளிலும், தனியாக சில போட்டிகளிலும் வெற்றி பெற்று எல்லோரையும் சந்தோசமடைய செய்தான்!

பத்திரிக்கையில் இருந்து நிருபர்கள் துரத்தி துரத்தி பேட்டி கண்டார்கள்!

பெரும் தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள் என்று நட்பு வளர்ந்தது!

சங்கீதத்தில் ஊறி திளைத்து ஒரு குடுமபத்தில் இருந்து பெண் பார்த்தார்கள். சங்கீதா என்ற பெயர். பெயருக்கேற்ற சங்கீத ஞானம். அழகு மற்றும் குணம் அற்புதம். அருமையான ஜோடி...

திருமணம். ஸந்தோஸம். ஆனால் சங்கீதமே எல்லை ஆனது. குழந்தை இல்லை.

பெயரும், பொருளும், பெருமை சேர்ந்து வளர்ந்தது.... உலகம் எல்லாம் சுற்றினான்.அன்பு மனைவியாக, கூடவே இருந்து வாழ்க்கை நடத்தினாள் சங்கீதா!

காலம் ஒடியாது, குழந்தை மட்டும் ஹு..ஹும்...

இருபது வருடமாக குழந்தைக்கு முயற்சி செய்தார்கள். கடைசியாக சங்கீதா கர்பமானாள். தெய்வத்தின் கிருபை! மருந்து மகிமை!

கார்த்திக், அவர் மனைவியை மிகவும், பத்திரமாக பார்த்துக்கொண்டார்.

கச்சேரிகள் குறைந்தன, பொறுமையாக காத்திருந்தார்கள்... ஒன்பது மாதங்கள் கழிந்து ஒரு நாள் அவளுக்கு பிரசவ வலி...

"உங்களுக்கு ஒரு ஆண் பிள்ளை பிறந்திருக்கு!" என்றார் நர்ஸ்.

"அப்பா பேரை குழந்தைக்கு வச்சுடுங்க" என்கிறார் சங்கீதா. சந்தோசமாக தலையாட்டுகிறார் கார்த்திகேயன்!

"என் செல்லம், கந்தசாமி!"...

கந்தசாமி பிறந்து மூன்றாவது வருடம் சங்கீதத்தில் திளைக்க ஆரம்பித்தான்!

...

காலம் சுழல்கிறது!


http://img.visualizeus.com/thumbs/09/06/04/animal,cub,cute-bd465973ad79e643017dafca4ddcf5bb_h.jpg

Thursday, June 11, 2009

வானவில் வீதி - தனிமையின் விலை

கார்த்திக் எழுதும் வானவில் வீதி ப்ளாகில் - தனிமையின் விலை, கதை படித்தேன். சுஜாதாவின் நடை.... நன்றாக எழுதும் நபர்... இவரை பற்றி சில முறை குறிப்பிட்டுள்ளேன்.

என் கமன்ட்...
//
என்னமோ கொஞ்சம் குறையிற மாதிரி இருக்கு!

மத்தபடி, சுஜாதாவின் நடையை பின்பற்றி ( பிரிவோம், சிந்திப்போம்.... ) எழுதியிருக்கிறீர்கள்!

வெளிநாட்டு மோகம் உங்களுக்கு? நல்லா படிங்க, ஆடோமேடிக்காக வாய்ப்பு வரும்.

அப்புறம் நம்ம இந்தியாவில் இல்லாததா? ( ஆஸ்த்ரேலியா, கேனடா... X )
//

********

சரி சரி கதை எங்கே? ( அவர் மொத்தமா, ஒரே ப்ளாக் போஸ்டில் போட்டால், நன்றாக இருக்கும்..... என் பதிவில் நான் தொகுக்கவா? )

தனிமையின் விலை - 1
தனிமையின் விலை -2
தனிமையின் விலை -3
தனிமையின் விலை - 4

************

அப்புறம் ஜெயா டிவியில் ஒருவர் பெண்கள் என்றால், ப்ளாகில் சமையல் குறிப்பு, அழகு குறிப்புகள் மட்டும் எழுதாமல் கதை, கவிதை, மற்றும் சமூக, அரசியல் பிரச்சனைகள் பற்றி நன்றாக எழுதுறாங்கன்னு சொன்னதற்கு வாழ்த்துக்கள்! ;-)

( நான் அந்த நிகழ்ச்சி பார்க்கவில்லை, நண்பர் ஒருவர் இமெயில் பண்ணியிருந்தார்... )