சென்ற வாரம் இறுதியில், நான் கோவை மற்றும் திருப்பூர் சென்று வந்தேன். நண்பர்கள், வலையுலகில் எழுதுபவர்களை அலைபேசியில் கூப்பிட டைம் இல்லை.
ஒரு கல்யாணம்.
காட்சிகளாய் நடந்தவை இவை. காலையில் நீலகிரி எக்ஸ்ப்ரெஸ்ஸில் கோவை சென்று மதியம் வரை, பெற்றோருடன் கழிந்தது. பிறகு, மதியம் இரண்டு மணி இருக்கும், திருப்பூருக்கு கிளம்பினோம்.
எங்கள் சொந்தம் ஒருவர் வீடு, கருவம்பாளையம் என்ற இடத்தில் உள்ளது, அங்கு சென்று அவர்களை பார்த்துவிட்டு, பட்டு சேலை சகிதம், திருமணம் நடக்கும் இடத்திற்கு சென்றோம். டூ வீலர்கள் அதிகம்
... ட்ராபிக் ஜேம். தென்னம்பாளையம் என்ற இடத்தில் ஒரு பெரிய மண்டபம்.
திருப்பூரில் புக் எக்சிபிசன் டவுன் ஹால் மைதானத்தில் நடந்துக்கொண்டு இருந்தது. செல்ல முடியவில்லை. டைம், வாகன வசதி போன்றவை பயன் பெறவில்லை.
என் கசினுக்கு யு.
கே.
மாப்பிள்ளை.
மூன்று வாரம் லீவில் வந்துள்ளார்.
போட்டோ பார்த்து அரேஞ் செய்தது.
வீடியோ சேட் மூலம் பேசினார்கள்? வரும் புதன்கிழமை விசா வாங்குகிறார்கள்.
அடுத்த சனிக்கிழமை இரவு லண்டனுக்கு பயணம்.
மாப்பிள்ளை இடத்தில் வசதி குறைவு என்று பேசிக்கொண்டார்கள். அதனால் என்ன, பெண்ணை நன்றாக வைத்து காப்பாற்றினால் போதும் அல்லவா?
சரி, கல்யாணத்தில் என்ன விசேஷம்? எல்லாம் காண்ட்ராக்டில் கொடுத்து விட்டார்கள். இரவு பப்பே, மற்றும் சர்வீஸ். தோசை வகைகள், சுட சுட பரிமாறினார்கள். சர்வீஸ் செக்சனில் உணவு நிறைய வீண் ஆனது... வேலை ஆட்கள், இஷ்டத்திற்கு பரிமாறினார்கள். குழந்தைகள் எல்லாம் வேஸ்ட் செய்தார்கள். இரண்டு வேலை சாப்பாடு உட்பட, டெகரேசன் எல்லாம் சேர்த்து நான்கு லட்சம் என்றார் அத்தை! மூலைக்கு மூலை டிவி வைத்து எடுக்கும் விடியோவை காண்பித்துக்கொண்டு இருந்தார்கள்.
நிறைய சொந்தங்கள், தங்கள் நகைகளை போட்டு அழகு காண்பித்துக்கொண்டு இருந்தார்கள். நகைகளும் கல்யாணங்களும் ஒன்றுவிட்ட காலம் இது.
ஒரு கல்யாணம் நடக்கும் இடத்தில் தான், இன்னொரு கல்யாணம் நிச்சயம் ஆகும் என்பார்கள். அது தான் எல்லா கல்யாண வயது பெண்களும், அழகு நிலையங்களாக வந்து அமர்க்களம் செய்தார்கள்! (உன்ன வீட்டுலே பெண் இருக்கா?)
கசினின் அப்பா கம்பனியில் வேலை பார்த்தவர்கள், நூற்றி சொச்சம் குடும்பத்தினரும் வந்திருந்தது சிறப்பு. நெகிழ்ச்சியான விசயம்.... அவர்களும், தங்களது சார்பில் ஒரு கோல்ட் ப்ளேட் வாட்ச் செட் பரிசு கொடுத்தார்கள்....
அடுத்த நாள், ஞாயிறு ஒன்பது மணி தைப்பூச முகூர்த்தம். டிபன் முதலில் கொடுத்துவிட்டார்கள். பிறகு, கோவைக்கு சென்று பீளமேடு அருகே ஒரு மண்டபத்தில் மாப்பிள்ளை வீட்டார் விருந்து. ஒரே இடத்தில் இருந்திருந்தால், உறவினர்கள் வந்து செல்ல கஷ்டம் போல?
நிறைவாய், நிறைய பழைய சொந்தங்களை பார்த்து விட்டு... சென்னையில் இருக்கும், மூன்று சொந்தங்கள், பக்கத்து தெருக்களில் இருக்கிறார்கள், இன்னும் சந்தித்ததில்லை.... சென்னை வாழ்க்கை பிசி.
இந்த வார இறுதியில், ஒருவர் வீட்டில் ஒரு சிறு விசேஷம், சந்திப்போம்.
இரவு எட்டரை மணிக்கு ரயில் பிடித்து, நேற்று அதிகாலை சென்னை வந்து சேர்ந்தோம். இப்போது தான், சென்று வந்த அசதி தீர்ந்தது!