நாட்டுக்கு நல்லது செய்வோம்
இது எனது இருநூறாவது பதிவு! ஒன்றரை வருடங்களுக்கு மேலாக ஆதரவு அளித்து வரும் வாசகர்க்கு என் நன்றிகள். இதுவரை இருபதாயிரம் பார்வைகள்.
இன்று டைம்ஸ் ஆப் இந்தியாவில் படித்தது - தொடர் டிகிரி மேல்நிலை கல்விக்கு அரசாங்கம் உதவி செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். இப்போது தான் தெரிந்தது, அரசாங்கம் ஒரு மண்ணும் செய்யவில்லை, இதுவரை மிகவும் குறைந்த அளவே பணம் செலவழிக்கிறது என்று.
கர்நாடக அரசாங்கம், ஒரு படி மேலே போய், மாதம் ரூ. இரண்டாயிரம், மேல்நிலை டிகிரி கல்வி படிதவர்குக்கு கொடுக்க யோசனை செய்கிறது. எப்படி வெள்ளை இல்லாதவர்க்கு இப்படி கொடுக்க முடியும்? அவர்களை, தேர்ந்த தொழில் கல்வி கொடுக்க - ஆசிரியர் ஆக வழி செய்யலாம் அல்லவா?
தமிழ்நாட்டிலும் இப்படி ஒரு முறை எம்.ஜி.ஆர் அரசாங்கம் பத்தாம் வகுப்பு படித்தவர்கள் முதல், ஐந்து வருடங்களுக்கு மாதம் இருபது ரூபாய் கொடுத்தாக நண்பர் ஒருவர் கூறுகின்றார்! ( சினிமா பார்க்க கூட அது உதவியிருக்காது... அது வேறு விஷயம்! )
கட்டாய இராணுவம் - சேவை என்று இருக்க வேண்டும் என்கிறார், என் கணவர். நிச்சயம் அவருக்கு அந்த எண்ணம் வர காரணம், அரசியல்வாதிகள் வேலை இல்லா பட்டதாரிகளுக்கு - வேலை கொடுக்கிறேன் என்ற வழியில் - அவர்களை ரவுடிகள் ஆக்குகிறது!
( நாங்கள் வாங்கிய வீட்டிற்கு அட்வான்ஸ் ருபாய் ஐந்து லட்சம் கொடுத்த பிறகு, இன்னும் சில லட்சங்கள் கொடுக்க அவர்கள் கொடுத்த இரு வாரங்களுக்கு பிறகு மேலும் சமயம் கேட்ட போது, முடியாது என்று, படித்த ரவுடிகள் வந்து மிரட்டுகிறார்கள்... 18% வட்டி வேறு முன் பணத்திற்கு வசூல் செய்கிறார்கள்! நல்ல வேலை கணவர், பெர்சனல் லோன் 15% வட்டியில் வாங்கி, கட்டிவிட்டார்! இன்னும் லோன் டிச்பர்ஸ் ஆகவில்லை - காரணம், புதிதாக இங்கு பெங்களூரில் வேலைக்கு சேர்ந்தபடியால்!)
***
சரி வெளிநாட்டு மோகம் கொண்டு அலைகிறார்களே மக்கள் அதற்க்கு என்ன செய்ய வேண்டும்?
என் சித்தி பையன், சொந்த காசில் பெயருக்கு அமேரிக்காவில் வேலை என்ற பெயரில் - மாஸ்டர் டிகிரி வாங்கிய பிறகு, ப்ராக்டிகல் ட்ரெயினிங் சமயம் ரிலேக்ஸ் செய்கிறான். அவர்கள் குடும்பத்திற்கு அது பெருமை. எப்படியாவது நிஜமாக அங்கு வேலை கிடைத்து, ஒரு வசதியான பெண் பார்த்து செட்டில் ஆகிவிடுவான். எல்லோரும் அப்படி இருக்க முடியுமா?
என்னை பொறுத்த வரை, அவன் இந்தியாவில் வந்து பெட்டிக்கடை வைத்து பிழைத்துக்கொள்ளலாம்! ( அவனுடைய அக்காவும், வசதி பார்த்து கட்டிக்கொடுத்த பின்னும், பி.ஈ., எம்.பி.ஏ படித்த பெண், இப்போது மளிகை கடை - டிபார்ட்மென்ட் ஸ்டோரில் கல்லாவில் உட்கார்ந்து இருக்கிறாள்! )
என்.கல்யாணராமனுக்கு அ.முத்துலிங்கம் விருது
2 hours ago