ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
நான் எழுதிய ஒரு போஸ்டில், இதற்கு முன்னால், ஒருவர் (அனோனி) மேற்கூறிய குறள் எழுதியுள்ளார் - பின்னூடமாக..
புரிகிறது. குடும்ப சூழ்நிலையில் குழந்தைகளை அடித்து வளர்த்தக்கூடாது என்பது.
என் மகள் சொல்கிறாள், நீ அடித்தால் எனக்கு வலிக்கும், ஆனால்அடிபதில்லையே? ஏன்? எதற்காக அடிக்க வேண்டும். மிரட்டினால் போதும்.
என் ஆயுதம், "ஹாஸ்டல்" கொண்டு சேர்ப்பேன்! பயம், மாதிரி ஒரு பயம் வேறு எதிலும் கிடையாது.
குறள் என்ன சொல்கிறது? ஒரு மகனை, மற்றவர்கள் சான்றோன் என புகழும் போது , தாய்க்கு அளவில்லா மகிழ்ச்சி ஏற்படுகிறது. அதை தான் எல்லா தாய்களும் கேட்கிறார்கள்.
பொழுதுபோக்கு நூல்களை ஏன் வாசிக்கவேண்டும்?
6 hours ago