Tuesday, September 1, 2009

மொழியால் பிரிக்காதீர்கள்

பெங்களூர் வந்து ஒரு மாதம் ஆகிறது. என்னவருக்கு இங்கு புதியதாய் வேலை. நாங்கள் இருக்கும் பெங்களூரு சவுத் ஏரியா கொஞ்சம் சத்தமில்லாமல் உள்ளது.

இங்கு கிட்டத்தட்ட எல்லோரும் கன்னடம் பேசுகிறார்கள். நானும் பழகிவிட்டேன். வீட்டில் எல்லோரும் தமிழ் தான். என்னவர் கன்னடம் நன்றாக பேசுகிறார். குழந்தைகள் ஒரு மாதிரி பிக்கப் செய்துவிட்டார்கள். குழந்தைகள் அனைவரும், நன்றாக மற்றவர்களிடம் ஆங்கிலத்தில் பேசி பழகுகிறார்கள்.

இன்று காலை மீனாக்ஷி கோவிலுக்கு சென்றேன். குழந்தைகள் காலையில் சென்றால் மாலை தான் திரும்புகிறார்கள். ஸ்கூல் தூரம் தான்.... டொனேசன் மட்டும் இருவருக்கும் சேர்த்து ஐம்பதாயிரம். சென்னையில் அந்த கோபாலபுரத்து ஸ்கூலில் இந்த தொல்லை இல்லை. நான்கு மாத டேர்முக்கு ஆறாயிரம் பீஸ்.

இங்கு வோல்வோ பஸ் இருப்பதால், ஐந்து ரூபாய்க்கு ஏசி பஸ் பிரயாணம். நன்றாக உள்ளது. வீட்டின் முன் ஏறி, இறங்கலாம்.

கோவிலில் ஒருவரோடு பேசிக்கொண்டு இருந்தேன். அவரும் கஷ்டப்பட்டு கன்னடம் பேசியது மாதிரி இருந்து. கடைசியில், அவர் சென்னைக்காரர். தெலுகர் என தெரிந்தது.

இருந்தாலும் கன்னடம் பேசினால் பழக்கம் வரும் என்று இருந்தார். என்ன செய்வது.

சில கேரக்டர்ஸ் மொழியால் பிரிக்கிறார்கள். பயம் வருகிறது!

6 comments:

கோவி.கண்ணன் said...

கன்னடம் பேசுவதற்கும் கற்றுக் கொள்வதற்கும் எளிமையான மொழி, தமிழைப் போன்றே இலக்கண அமைப்புகள் பெற்றது. தமிழர்களால் எளிதில் கற்றுக் கொள்ளக் கூடிய மொழி.

5 வயதுக்கும் குறைந்த குழந்தைகளின் கன்னடப் பேச்சு கிளிப் பேச்சு போல் கேட்க இனிமையாக இருக்கும்

Ramesh said...

Language issue

Even I wrote a post on similar issue, after reading something.

:-)

வனம் said...

வணக்கம்

பரவாயில்லையே 1 மாததிலேயே பிக்கப் செய்து விட்டீர்களே.

நான் பெங்களூரு வந்து 1 வருடம் ஆகின்றது இன்னும் கன்னடம் வர மாட்டேன் என அடம் பிடிக்கின்றது.

ஆங்கிளம் இருப்பதால் கன்னடம் கற்றுக்கொள்ள இயலவில்லை.

இராஜராஜன்

நட்புடன் ஜமால் said...

மொழி கற்பது ஒரு பலம் தான்.

தப்பில்லை.

வெறி என்பது தான் தவறு (என் பார்வையில்)

Shan Nalliah / GANDHIYIST said...

GREETINGS FROM NORWAY!

Sakthi said...

good