ஆசிரியர் தின வாழ்த்துகள்! என்னை நன்றாக படிக்க வைத்த, உதவிய, திட்டிய, சில சமயம் அடித்த, அனைத்து ஆசிரியர்களுக்கும்வாழ்த்துக்கள். காலேஜ் வாத்தியார்கள், ஒரு தனி ரகம். வருவார்கள் போவார்கள். யன்க்ச்டர்கள் வழிவார்கள்! :-)
கோவையில், களுக்கென்று சிரித்தால், வெயிலில் மண்டி போடும் காலம் இன்னும் இருக்கா தெரியலே. அந்த சிறு வயதில், வாயை பொத்திக்கொண்டு இருப்போம். ( கள்ளம் கபடு இல்லாத வயது அது... கொடுமைங்க! ) வெள்ளிக்கிழமை தலைக்கு குளித்துவிட்டு, பூ வைத்து முடியை கொஞ்சம் விரித்து போட்டு சென்றால், பூ பிரித்து எறிவார் எங்கள் பி.டி. மிஸ். ( ஒரு நாள் காந்திபுரம் பஸ் ஸ்டாண்டை கிராஸ் செய்யும் போது அடிபட்டு இறந்தார் ).
***
என் குழந்தைகள் பள்ளி சுமாரானது தான். பீஸ் மட்டும் அதிகம். ஆனால் ஆசிரியர்கள்... பெண்கள்... மிகவும் அட்டகாசமாக பி.பி.ஒ செல்லும் பெண்கள் போல உடையந்து வருகிறார்கள். பெங்களூரு வந்த பின் என் மகள் லிப்ஸ்டிக் போட்டுக்கொள்ள அதிகம் அடம் பிடிக்கிறாள். :-)
***
ஓய. ராஜசேகர ரெட்டி மரணம், சில தொழில் முறை சம்பந்தங்களால் என் கணவர் குடும்பத்தில் வருத்தம்... கடப்பா ரவுடி என்றெல்லாம் பெயர் இருந்தும், திடீரென வைக்கோ மாதிரி நடை பயணம் செய்து ஆட்சியை பிடித்தவர் ( தன் சக்கரை அளவையும், உடல் எடையும் குறைத்தவர் - அவர் பாடி பில்டர் வேறே - நிமிர்ந்த நடை எப்போதும் ) ... இப்போது மகன் ஆட்சியில் இருக்க விரும்புகிறார்.
கணவர் சொல்லுகிறார், சுவிஸ் வங்கி அக்கவுண்ட் ( கட்சி ) யார் வைத்துள்ளார்களோ, அவர்களுக்கு, ஆட்சி கட்டிலுக்கு சாவி. உண்மையா?
ஆந்திராவிற்கு கேடு காலம் வராமல் இருந்தால் சரி! ( போலி காலேஜ் , வேலை எக்ஸ்பீரியன்ஸ் சர்டிபிகேட், சத்யம், இடம் விற்பனை இப்போ இந்த விபத்து.. )
***
நான் எழுதிய இந்த பதிவை மொழியால் பிரிக்காதீர்கள் நினைக்க வைத்து இந்த பதிவு தமிழன் ஒரு விளக்கம்
எல்லோரும் ஏன் மொழியால் பிரிகிறார்கள்? நாடு முன்னேறுமா?
மெதுவா ஜாதி ஒழிந்துக்கொண்டு இருக்கு, இப்போ இந்த மொழி வித்தியாசமா?
ஹிந்தி படிக்க முடியாமல், கஷ்டப்பட்டு தமிழர்கள், நார்த்தில் வேலை செய்து கஷ்டப்பட்டு உழைத்து... கண்ணீர் கதை.
என்.கல்யாணராமனுக்கு அ.முத்துலிங்கம் விருது
5 hours ago
4 comments:
//கணவர் சொல்லுகிறார், சுவிஸ் வங்கி அக்கவுண்ட் ( கட்சி ) யார் வைத்துள்ளார்களோ, அவர்களுக்கு, ஆட்சி கட்டிலுக்கு சாவி. உண்மையா?
//
உண்மை!உண்மை!உண்மை!.
//ஹிந்தி படிக்க முடியாமல், கஷ்டப்பட்டு தமிழர்கள், நார்த்தில் வேலை செய்து கஷ்டப்பட்டு உழைத்து... கண்ணீர் கதை.
//
சரி எனக்கு ஒரு சந்தேகம்.ஹிந்தி படித்தால் நார்த்தில் வேலை கிடைக்கும் என்றால் அப்புறம் ஏன் மார்வாடிகள் தமிழ்நாடு வந்து பீடா கடை வைக்கிறார்கள். தற்போது சென்னையில் கட்டுமான தொழிலாளர்களாக பீகாரிகள் அதிகம்பேர் வந்து விட்டார்கள். சென்னையில் தற்போது நிறைய அலுவலகங்களில் கடைநிலை ஊழியர்கள் பணிக்கும் வடநாட்டவர் வரத் துவங்கி விட்டனர்.எங்கள் அலுவலகத்தில் பியூன் இருவர் உ.பி. பசங்க. அப்புறம் சென்னையில் நிறைய ஹோட்டல்களில் தற்போது வடகிழக்கு மாநிலத்தவர் பணியில் உள்ளனர்.அவர்கள் அத்தனைபேரும் ஹிந்தி அறிந்தவரே.
வடநாட்டில் வேலைகிடைத்து போனால் 2 மாசத்தில் தன்னால ஹிந்திவரும். இங்க நீங்க பாடதிட்டத்தில் வைத்தால் அதனால் பொதுத்தேர்வில் ஃபெயிலாகி நிறையபேர் வாழ்க்கையைத் தொலைப்பர்...ஆங்கிலத்தில் பெயிலாகி வாழ்க்கையை தொலைப்பதுபோல.
ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்
அண்ணே, ஹிந்தி எல்லாம் ரெண்டு மாசத்திலே சகஜமா பேசி பழக முடியாது. உங்களுக்கு தெரியும்! எதோ சமாளிக்கும் அளவு தெரிந்து, உறவாடலாம்... என் சித்தி பையன், குர்காவ் டெல்லி சென்று, ஒரு வருடம் கழித்து வந்து "அச்சா", நதி மட்டும் பேசிக்கொண்டு இருந்தான் ஆங்கிலத்தோடு. இப்போ அவன் அமெரிக்கா ( டல்லஸ் ) சென்று படித்து, வேலைக்கும் சென்று விட்டான். அவனை பற்றி மூன்று பதிவுகள் தொடர்ச்சியாக போட்டிருந்தேன்.
நினைச்சு பாருங்க, நான் பேசிய இங்கிலீஷ் அமெரிக்காவில் முதல் முறை செல்லவில்லை. செல்லாக்காசு ஆனது. பிற்பாடு, கூல் ட்ரின்க்சுக்கு, "சோடா" என்றும், ஐஸ் வேண்டாம் என்பதற்கு "நோ ஐஸ்" என்றும் சொல்லி பழகியது இரண்டாம் முறை! இப்போது அங்கு சென்றால், நிச்சயம், அவர்கள் அக்சென்ட்டில் பேச முடிகிற நிலைமையில் ஆங்கில சினிமா பார்த்தேதேற்றியுள்ளோம்.
Post a Comment