இந்த பதிவை படித்த போது ஒரு கமன்ட் போட்டேன்.
இரண்டு முட்டையும் ஒரு வெங்காயமும்
//ரொம்ப நல்லா இருக்கு. தக்காளி சேர்த்தால் இன்னும், ஆம்லெட் நல்லா வரும். என் ப்ளோகில் எழுதுறேன்.//
******
அதனாலே, இந்த போஸ்ட்.
நான் முட்டை வெஜிடேரியன் என்று நம்புகிறேன்.
முதல் ஆளுக்கொன்று என முட்டை கணக்கு வைத்து, தேவையான அளவு உப்பு காரம் போட்டு மிக்ஸ் செய்யவும். ( கலக்கவும் - என் மகள் தான் இதில் இப்போ எக்ஸ்பர்ட் )
பிறகு தவாவில், சிறிது எண்ணெய் விட்டு, நறுக்கி வைத்த வெங்காயத்தை, வதக்கவும் (கோவை ஸ்டையில், பொன் வறுவல் ).
நறுக்கி வைத்த தக்காளியை ( ஸ்மால் பீஸ் ) சேர்த்துப்போட்டு வதக்கவும். இந்த சீக்குவன்ஸ் முக்கியம். அதை நன்றாக தவா அளவு பரப்பிவிடவும்!
பிறகு, கலக்கி வைத்து முட்டை கலவையை அதன் மீது ஊற்றவும். ஸ்ப்ரெட் செய்யவும். சிறிது எண்ணெய் மேலே ஊற்றவும். வேக விடவும்.
தோசை திருப்பி போடுவது போல, திருப்பி போடவும். வேக விடவும்.
மூன்று நிமிடத்தில் தக்காளி முட்டை ஆம்லெட் ரெடி. என்ஜாய் பண்ணுங்கள்.
******
குழந்தைகள், ஸ்கூலில் இருந்து வந்துவிட்டார்கள். அரை நாள் தான். புது உனிபார்ம், டை மற்றும் குதுகுலம்., சொல்லி மாளாது!
மதியம் சிம்பிள் தாளித்த சாப்பட்டிற்கு இது தான் தொட்டுக்கொள்ள காய்.
என்னவர் ஆபீஸில் கொட்டிக்கொள்வார். :-(
இன்று விஷ்ணுபுரம் பரிசளிப்பு விழா! வருக!
13 hours ago
4 comments:
very nice ref.
நிஜமாகவே நல்லா இருந்துச்சு!
//சிரித்து எண்ணெய் மேலே ஊற்றவும்//
கண்டிப்பாக சிரிக்க வேண்டுமா?
சிரித்து "சிறிது" சிரித்து ஆகிவிட்டது சரவணகுமரன்!
கரக்ட் பண்ணிட்டேன்.
Post a Comment