Thursday, May 28, 2009

நான் ரசித்த ஜப்பானிய ஹைகூக்கள்

ஆங்கிலத்தில் இருந்து தமிழ் படுத்தியிருக்கிறேன்...

I kill an ant
and realize my three children
have been watching.


ஓர் எரும்பைகொன்றேன்

என் மக்கள் பார்த்ததை

கவனிக்கவில்லை

____________________

A sudden shower falls
and naked I am riding
on a naked horse!

திடீர் மழையில் நனைத்தேன்

நானும் என் குதிரையும்

நிர்வாணம்

___________________

Night, and the moon!
My neighbor, playing on his flute -
out of tune!

இரவும் நிலாவும் கூட

என் பக்கத்துவீட்டுக்காரரின் புல்லாங்குழல்

ஒன்றவில்லை


___________________

A giant firefly:
that way, this way, that way, this -
and it passes by.

ஓர் பெரிய மின்மினிப்பூச்சி

அங்கும் இங்கும் அலைபரித்தது

பறந்தோடிவிட்டது!

___________________

First autumn morning:
the mirror I stare into
shows my father's face.

இலையுதிர்காலத்தின் காலை

கண்ணாடியில் பார்க்கிறேன்

என் அப்பா!

___________________

After killing
a spider, how lonely I feel
in the cold of night!

எட்டுக்கால் பூச்சி ஒன்றை கொன்றேன்

தனிமை வாட்டுகிறது

இரவின் குளிர்

_____________________

The summer river:
although there is a bridge, my horse
goes through the water.

கோடையின் ஆறு

அதில் பாலம் என் குதிரை

சேர்ந்தே போகிறது!

____________________

No blossoms and no moon,
and he is drinking sake
all alone!

பூக்கள் இல்லை, நிலவும் இல்லை

அவன் குடிக்கிறான்

தனியாக!

____________________

Won't you come and see
loneliness? Just one leaf
from the
kiri tree.

வந்து பார்க்கமாட்டாயா என்
தனிமையை, ஓர் இலை தான்
கிரி மரத்திலிரிந்து!


*********

மொழி பெயர்ப்பு ஒ.கே.வா?

ஹைக்கூகள் அறிமுகம் செய்த சுஜாதா ரங்கராஜன் அவர்களுக்கு சமர்ப்பணம்!

19 comments:

கே.ரவிஷங்கர் said...

வனிதா நன்றி.ரசித்து தூண்டப்பட்டு
மொழிப்பெயர்த்துள்ளீர்கள்.
ஆர்வத்திற்கு வாழ்த்துக்கள்.


ஹைகூக்கள் ரொம்ப ஆழமானவை.
கணத்தில் தோன்றியதை (flashஐ) எழுதுவது.

சிலதை ஊன்றி கவனியுங்கள்.

An old pond!
A frog jumps in-
The sound of water

இது என்னவென்று சொல்லுங்கள் அனிதா.Please try.I will come back.

தமிழ்ப்பறவை said...

மொழிபெயர்ப்பு நல்லா இருக்கு...
இருங்க ரவி சார் என்ன சொல்றாருன்னு பார்க்கலாம்...

Raju said...

Congrats on 14000 viewers. keep writing! ;-)

Ramesh said...

Very Nice, very nice. Congrats on 14000 visitors. :-))

Vinitha said...

நான் வினிதா. வனிதா / அனிதா இல்லை. யாரோ?

நன்றி கே.ரவிஷங்கர்!

நன்றி தமிழ்ப்பறவை!

****

சரி இதோ இதன் மொழிப்பெயர்ப்பு...
(கோவை கல்லூரி காலத்தில் எல்லாம் வாங்கிய கதை, கவிதை பரிசுகள், ஞாபகம் வந்து போகின்றன...)

An old pond!
A frog jumps in-
The sound of water

நின்ற பழங்குட்டையில்
குதிக்கின்ற தவளையின்
சத்தம்!

(இப்படி தான் சுஜாதா எழுதியிருந்ததாக ஞாபகம், அவர் கற்றதும் பெற்றதும் பகுதியில் - ஸ்டையில்)

Vinitha said...

கே.ரவிஷங்கர் என் மொழிப்பெயர்ப்பு ஆனந்த விகடனில் வருமா? வர என்ன செய்யவேண்டும்?

Sukumar Swaminathan said...

Very Nice... Keep Posting !!

சூரியன் said...

//The summer river:
although there is a bridge, my horse
goes through the water
கோடையின் ஆறு

அதில் பாலம் என் குதிரை

சேர்ந்தே போகிறது!//

கோடைகால ஆறு ,
பாலம் இருந்தும் தண்ணீரில்
போனது என் குதிரை...

//A sudden shower falls
and naked I am riding
on a naked horse!//
திடீர் மழை நிர்வாணாமாக,
நான் நிர்வாணமான குதிரையில்..

Vijay said...

Liked all. You are the best! ;-)

ஆதவா said...

கே.ரவிஷங்கரின் தளத்திலிருந்து உங்கள் தளத்தை அடைந்தேன்..

மொழிபெயர்ப்பு அருமையாக இருந்தது... நேரடி மொழிபெயர்ப்பைப் போன்று சிலது இருந்தது.. மூன்று வரிகளில் அதன் கருவை அடக்கி நன்கு எழுதியிருக்கிறீர்கள். கே.ரவிஷங்கர் கூறியதைப் போன்று இவை ஆழமானவை..

நீங்க கோவையா?

பிகு:
ஹைக்கூக்களை அறிமுகம் செய்தது சுஜாதா அல்ல.. பாரதியார்.

அன்புடன்
ஆதவா

Vinitha said...

நன்றி Vijay!

நன்றி Sukumar Swaminathan!

நன்றி ஆதவா!

Yes கோவை! Now சென்னை!

எனக்கு ஹைக்கூக்களை அறிமுகம் செய்தது சுஜாதா! ;-)

கே.ரவிஷங்கர் said...

நான் வினிதா
வனிதா அனிதா இல்லை
யாரோ?

மேலிருப்பதே ஒரு ஹைகூ?

நான் கேட்டது “இது என்னவென்று சொல்லுங்கள்”தான்.மொழிபெயர்ப்பு அல்ல.
The summer/No blossoms/An old pond
மொழிபெயர்ப்பில் தவறு உள்ளது.
கவனமாக பாருங்கள்.நான் எதுவும் சொல்லப் போவதில்லை.
சுயமுயற்சிதான்.

வினிதா/தமிழ்பறவை நீங்க சொல்லுங்க மேடம்/சார்! இதன் அர்த்தம்.பிறகு வருகிறேன்.

அடுத்து “சுஜாதவை” ஒரு கைடன்ஸூக்காகத்தான் நான் கொண்டது பல.. பல.. பல.. பல.. வருடங்களுக்கு முன்பு.

புரிதல் என்னுடைய 100%
சொந்த முயற்சி.

சின்ன க்ளூ. An old pond ஜப்பான் ஹைகூ எழுதப்பட்ட வருடம் 1642.

கே.ரவிஷங்கர் said...

என்னுடைய கமெண்ட எங்கே?இன்னும்
(மாட)ரேஷனில்தான் இருக்கிறதா?அல்லது போஸ்ட் ஆகவில்லையா?

//கே.ரவிஷங்கர் என் மொழிப்பெயர்ப்பு ஆனந்த விகடனில் வருமா? வர என்ன செய்யவேண்டும்?//

கவிதைகள்/கதைகள் எழுதலாம்.மொழிப்பெயர்ப்பு ஒத்து வராது.நர்சிம் அல்லது அதிஷாவை தொடர்பு கொள்க.

மயாதி said...

நல்லாருக்கு.....

ஆனால் ஹைக்குக்களை அறிமுகப்படுத்தியது சுஜாதா என்றுதான் எல்லோரும் கொண்டாடுகிறீர்கள் உண்மையில் அப்துல் ரகுமான் எப்பவோ சொன்னதன் மறுபதிப்புத்தான் சுஜாதாவின் ஹைக்கு பற்றிய ஆக்கங்கள்...

மயாதி said...

தவளை பாய்ந்தது
குளம் பழசு-சத்தம்
புதுசுold pond kavithaikku enathu translation eppadi irukku...

$anjaiGandh! said...

//மொழி பெயர்ப்பு ஒ.கே.வா?//

ஹிஹி.. தமிழில் மட்டுமே படித்தேன். நல்லா தான் இருக்கு.. :))

$anjaiGandh! said...

//An old pond!
A frog jumps in-
The sound of water//

கேட்பாரற்ற குட்டை
தவளையின் பாய்ச்சலில்
தண்ணீரில்/ன் இசை..

கிகிகி.. யாரும் அடிக்க வராதிங்கோ.. :)

கே.ரவிஷங்கர் said...

மயாதி,

நான் என் பதிவில் தமிழ்பறவைக்கு
பதில் போட்டிருந்தேன். அது:-

//தமிழ்ப்பறவை said..
//regarding that 'old pond',
நீங்களே விளக்கிடுங்க..//

old pond
a frog jumps
the sound of water

ஹைகூ ஒரு மின்னல் அடிக்கும் நேர
அனுபவம்.யோசித்து எழுதுவது அல்ல.

ஜென் தியான நிலை அனுபவம் என்று சொல்லலாம்.

old pond)பல வருட காலமாக தியானத்தில் உறைந்திருந்த
ஒன்றில் “பச்சக்” என்று தவளை மாதிரி விழுந்து விழிப்புணர்ச்சி வந்து
மீண்டும் அமைதி என்று புரிந்துகொள்ளலாம்.

எழுதிய வருடம் 1642.எழுதியவர் பாஷோ.

தவளை விழுந்த சத்தம் என்று இல்லை ஆனால் the sound of water என்று வருகிறது.//

பிரியமுடன் பிரபு said...

எல்லாமே நல்லாயிருக்கு