ஆமீரகத்தின் பதிவர்கள் நாளை வெள்ளிக்கிழமை, ஜூன் 5, டிபிக்கல் துபாய் மீட்டிங் ஸ்பாட்டான கராமாவில் கூடுகிறார்கள் என்று சில பதிவுகளில் பார்த்தேன்.
என்ஜாய் பண்ணுங்க!
********
துபாய் சில நினைவுகள்....
அப்பா அங்கு ஒரு பதினைந்து வருடங்கள் வேலை செய்தார். சில வருடங்கள் முன் தான் கோவையில் திரும்ப வந்து செட்டில் ஆனார். நல்ல ஏ.சி. மெக்கானிக் கம்பெனி, நல்ல வேலை... ( இப்போ சம்பந்தமில்லா வேலை )
நாங்கள் ( நான், தங்கை மற்றும் அம்மா ) படிப்புக்காக சில வருடம் ( ப்ளஸ் 2, காலேஜ் ) கோவையில் இருந்துவிட்டோம். பிறகு சில வருடம் அங்கு இருந்தோம்.
நான் என் கணவரை சந்தித்ததும் அங்கு தான்! ;-) தங்கையும் அப்படியே! மாடர்ன் பேமிலி...
*******
அப்பாவின் காரை இந்தியன் லைசன்ஸ் ( ஐ.டி.எல் ) வைத்துக்கொண்டு நான் தங்கையுடன் மற்றும் சில நண்பர்களுடன் அபு தாபி, நார்த் ஓமான் எல்லை வரை சென்றது எல்லாம் நினைவில் உள்ளது.
சார்ஜாவின் ஏர்போர்ட், அஜ்மானில் சில கோவைக்காரர்களை (நண்பர்கள்) சந்திக்க சென்றது எல்லாம் .... நினைவில்... நிற்பவை..
லூலுஸ், பர் துபாய் மற்றும் கரமாவை மறக்க முடியுமா. ஷாபிங்... ஷாபிங் தான்.
கராச்சி தர்பாரில் பெரிய பராட்டா மற்றும் கரம் சாய் இன்னும் கிடைக்கிறதா?
சிம்ரன் ஆப்ப கடையின் சிக்கன் பிரியாணியும் , மட்டன் சுக்காவும் மறக்க முடியவில்லை. சரியான சிலோன் டேஸ்ட்!
இப்போ எப்படிங்க வேலை நிலைமை எல்லாம். விலைவாசி ரொம்ப ஜாஸ்தின்னு, கணவர் சொந்தங்கள் எல்லாம் பக்ரைன் மற்றும் கட்டாருக்கு மாறிட்டாங்க. ஐ.டி. ஆளுங்க மட்டும் இருப்பாங்க... ?
விவரம் எல்லாம் கமன்ட்சில் போடுங்க.
( அப்பா கூடிய விரைவில் ரஸ் அல் கைமாவில் ஒரு ஆபிஸ் எடுக்கப்போகிறார்... )
என்.கல்யாணராமனுக்கு அ.முத்துலிங்கம் விருது
5 hours ago
7 comments:
நான் அடிக்கடி போய்க்கிட்டு இருக்க ஊரு :)
//சிம்ரன் ஆப்ப கடையின் சிக்கன் பிரியாணியும் , மட்டன் சுக்காவும் மறக்க முடியவில்லை. சரியான சிலோன் டேஸ்ட்//
ஆமாங்க டேஸ்ட் அருமையா இருக்கும்..
எனக்கு அங்க ரொம்ப புடிச்சது ஆப்பம்தாங்க......
//அப்பா கூடிய விரைவில் ரஸ் அல் கைமாவில் ஒரு ஆபிஸ் எடுக்கப்போகிறார்...//
welcome back..
//கராச்சி தர்பாரில் பெரிய பராட்டா மற்றும் கரம் சாய் இன்னும் கிடைக்கிறதா?//
அது இல்லாம கராச்சி தர்பாரா.....
இன்னும் கிடைக்கிறது.
விலைவாசி அப்பிடியேதான் இருக்கு..ஆனா இப்ப கொஞ்சம் கொஞ்சமா ரிஸஸன் மாறி projects வேலையெல்லாம் ஆரம்பிக்குறாங்க...
நாளை சந்திப்பு முடிந்த வுடன் அது குறித்தும் பதிவிடுறோம்..பார்த்து கமெண்ட் பண்ணுங்க...
வாழ்த்துகள் நானும் அவர்களை வாழ்த்துகிறேன்..
உங்க நிணைவுகள் நல்லா இருக்கு..
//நான் என் கணவரை சந்தித்ததும் அங்கு தான்! ;-) தங்கையும் அப்படியே! மாடர்ன் பேமிலி...//
:-)
//சார்ஜாவின் ஏர்போர்ட், அஜ்மானில் சில கோவைக்காரர்களை (நண்பர்கள்) சந்திக்க சென்றது எல்லாம் .... நினைவில்... நிற்பவை..//
சுகமான நிணைவுகள்
//( அப்பா கூடிய விரைவில் ரஸ் அல் கைமாவில் ஒரு ஆபிஸ் எடுக்கப்போகிறார்... )//
வாழ்த்துகள்
You Are Posting Really Great Articles... Keep It Up...
We recently have launched a Tamil Bookmarking site called "Tamilers"...
www.Tamilers.com
தமிழர்ஸ் டாட் காமில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.
அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்
//சிம்ரன் ஆப்ப கடையின் சிக்கன் பிரியாணியும் , மட்டன் சுக்காவும் மறக்க முடியவில்லை. சரியான சிலோன் டேஸ்ட்!//
மிகவும் நன்றாக இருக்கும், அங்கு மட்டும்தான் ஆப்பத்துக்கு தேங்காய் பால் கிடைக்கும் வேறு எங்கும் கிடைக்காது.
மற்றபடி விலை எல்லாம் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று பறக்குது.
Add your Blog to Top Tamil Blogs - Powered by Tamilers.
It has enhanced ranking system. It displays all stas like Hits Today, Rank, Average hits, Daily status, Weekly status & more.
This Ranking starts from Today.So everyone has the same start line. Join Today.
Top Tamil Blogs
"சிறந்த தமிழ் வலைப்பூக்கள்" தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.
இன்று தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்
சிறந்த வலைப்பூக்கள்
நன்றி.
தமிழர்ஸ் டாட் காம்.
ரொம்ப நல்லா இருக்குங்க. :-)
நானும் டிசம்பர் 1998 முதல் சுமார் இரண்டரை வருடங்கள், குப்பை கொட்டின ஊருங்க!
Post a Comment