இந்தியாவில் தேர்தல் என்றால், அடிமட்ட கட்சி தொண்டர்களுக்கு கொண்டாட்டம் தான். இன்று தேர்தல் அட்டவணை மதியம் மூன்று மணிக்கு மேல் (ராகு காலம் இல்லாமல் பார்த்து) அறிவிக்கப்போகிறார்கள்.
ரிடிப் தளத்தில் சொல்கிறார்கள், அமெரிக்க அதிபர் தேர்தலை விட, இந்தியாவில் அதிக அளவு பணம் செலவழிக்கப்படும் என்று. இது எல்லாம் கருப்பு பணம், தண்ணீராய்... இறைத்து....வோட்டுக்கள் வேண்டும் என்பதற்காக, வளைஞ்சு நெளிஞ்சு தெரிந்த வழிகளில் எல்லாம் கொடுப்பாங்க (டிவி கேமரா இல்லாமல் பார்த்து). Bribe in all different forms.
சரி இதில் வாழ்க்கை அடைபவர்கள் - பிரிண்டிங் பிரஸ், ஆய்வாளர்கள், லாரி, ட்ரக் ஓனர்கள், போன் கம்பெனிகள், எஸ்.எம்.எஸ். சர்வீஸ்கள், ஹோட்டல்கள், தெரு தளிகைகள், மற்றும் கதர் விற்பன்னர்கள் எல்லோரும் (டிவி சேனல்களும், அடங்கும், அவர்களுக்கு இருப்பது 24 மணி நேரம் தான்... ப்ரைம் டைம்... ஐ.பி.எல் சாப்பிட்டுவிடும்.)
நல்ல முறையில் தேர்தல் நடந்து, கூட்டணிகள் பங்கு பிரித்து போக, மிச்சம் (ஊழியர்கள் சம்பளம் போக) மக்களுக்கு வந்து சேர்ந்தால் நலம்.
வேட்பாளர்கள், தங்கள் ஜாதி, மத சொந்தங்களை நாடும் காலம் இது.
வாழ்க இந்தியா. வாழ்க வளமுடன்.
என்.கல்யாணராமனுக்கு அ.முத்துலிங்கம் விருது
5 hours ago
3 comments:
True. I am not sure which party is right, but wish the best!
முக்கியமான ஒண்ணு மறந்துவிட்டீர்கள்.
டாஸ்மாக் கடைகளில் இனி வியாபாரம் அமோகம்தான்.
வாழ்க ஜனநாயகம்..
தேர்தலைப் பற்றிய இந்த பதிவையும் கொஞ்சம் பாருங்க..
http://tamizhodu.blogspot.com/2009/03/blog-post_03.html
//சரி இதில் வாழ்க்கை அடைபவர்கள் - பிரிண்டிங் பிரஸ், ஆய்வாளர்கள், லாரி, ட்ரக் ஓனர்கள், போன் கம்பெனிகள், எஸ்.எம்.எஸ். சர்வீஸ்கள், ஹோட்டல்கள், தெரு தளிகைகள், மற்றும் கதர் விற்பன்னர்கள் எல்லோரும்//
ஆமாங்க.. ஏதோ கொஞ்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
Post a Comment