நண்பர் கே.ரவிசங்கர் அவர்கள், கொடுத்த குறிப்பு படி, இது ஒரு ஹைகூ. - சில விளக்கங்கள் பதிவு.
படித்துவிட்டு, அவரை பாராட்டுங்கள். எனக்கும் புரிகிற மாதிரி இருக்குது.
ஹைகூ....? மூணு வரில முடிச்சுடனும் ....
நடைமுறையில் உள்ள விதிகள்:
உவமை/உருவகம் இருக்க கூடாது. மூன்று வரிகள்தான் இருக்கவேண்டும்.
சுஜாதா ஹைக்கூ பற்றி சொன்னது :-
லாங் சாட், மிட் சாட், க்ளோஸ் அப் என்று மூன்று வரிகள்தான்.க்ளோஸ் அப் அல்லது zoom ஒருகாட்சி உரைத்தல் /திகில்/ஆச்சிரியப்படுத்தல்/திருப்பம் வேண்டும்.
சில ஹைகூ. எங்கோ படித்தது! எழுதியவர்களுக்கு வாழ்த்துக்கள்.
விழுந்த மலர்
திரும்ப கிளைக்கு செல்கிறது
வண்ணத்து பூச்சி!
மாதத்தில் ஒருநாள்
சலூன்காரன் பொன்னாடை
போர்த்துகிறான் .
அழகான வீடு
வாசல் கேட்டில்
அழுக்கான பால் பை
………………………………
மூன்று நிமிட
மௌன அஞ்சலியில்
யாருக்கோ வாயு தொல்லை
……………………………..
ஆண் பிணத்தின் இடுப்பு
துணியை ப்ரோகிதர் உருவ
கண் மூடி அழும் பெண்கள்
………………………………..
குடைக்குள் மனைவி
பேசிக்கொண்டு நடக்கிறேன்
பழைய காதலியுடன்
…………………………………..
போலி இளமை
14 hours ago
3 comments:
நன்றி வினிதா,
முதல் இரண்டுதான் "யாரோ" எழுதியது. மூன்று முதல் ஆறு வரை என்னுடையது. Permochan.blogspot.com இதை கவனிக்கவில்லை போலும்.
என்னுடைய ம்ற்ற ஹைகூக்கள்
எக்ஸாம் பார்த்து எழுதுங்க
வாழ்த்தும்
வேன் சிறுவன்
................
பாலியில் தொழிலாளி வீட்டில்
காத்திருக்கும் கஸ்டமர்கள்
ஆயுத பூஜை
................
காய்கறி வாங்கவில்லை
கனக்ட்டிவிட்டி டெளன்
அணணாச்சி கடையில்
................
காண்டம் பாக்கெட் பில் போட
Bar Code தேடும் சேல்ஸ் கேர்ள்
பர்தா முஸ்லீம்
................
மொட்டை மாடி புறாக்கள்
தாஜ் ஹோட்டலுக்கு
மெளன அனுஷ்டிக்கும்
புறாக்கள்
மீண்டும் நன்றி
நல்லாருக்கு..
//மாதத்தில் ஒருநாள்
சலூன்காரன் பொன்னாடை
போர்த்துகிறான் .//
மாதத்தில் ஒருநாள்
பொன்னாடை போர்த்துகிறான் சலூன்காரன்.
அப்பிடினு இருந்திருக்கணுமோ? கடைசி வரியில சும்மா அதிரணுமாமே?
பின்னூட்டம் பெரியசாமி,
நீங்கள் சொன்னதுதான் சரி.அவசரத்தில் வரிகள் மாறிவிட்டன.
மாதத்தில் ஒருநாள்
பொன்னாடை போர்த்துகிறான்
சலூன்காரன்
அடுத்து “மொட்டை மாடி புறாக்கள்” இந்த வரிகள் கிடையாது.
ஹைகூவை பற்றி விட்டு போந்து:-
ஜப்பானிய ஹைகூ என்பது ஒரு சின்ன மலர் மொட்டு போன்ற குட்டி கவிதை வடிவம்.
சிறிய வரிகளில் "சடக்" என்று ஒரு கற்பனையைப் பிடித்து நிறுத்தி, படித்ததும் "அட" என்று சொல்ல வைக்கும்
நன்றி
Post a Comment