முதலில் ஒரு வாசகனாய் இருந்து பிறகு மன அதிர்வுகளை படம் பிடித்து காட்டும் ஆத்மாவே எழுத்தாளர் எனலாம்.
இப்போ எனக்கு பிடித்த எழுத்தாளர் அமிதாப் பச்சன். தன் தினசரி நிகழ்வுகளை, ஒரு எக்ச்ட்டேன்டட் குடும்பமாக நினைத்து தன் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுகிறார்....
இதை போலவே சில தமிழ் சிறு பத்திரிகை எழுத்தாளர்களும் செய்கிறார்கள்.
அங்கிகாரம் பெற்றவர்களே பெரியவர்கள் என நினைக்கும் பொருள் வேண்டாம். தன் கடமையை சரி வர செய்தாலே அந்தஸ்து கிடைக்கும். தேடி வரும்.
இதற்கு மொழி அவசியமில்லை!
எல்லோருக்கும் பொதுவான ஆங்கிலம் போதும்!
தாய்மொழி கைகொடுக்கும்.
நான் முதன் முதலில் என் ஆங்கில ப்ளாக் எழுத ஆரம்பித்தேன் (மார்ச் 2007). அதன் பிறகு சமையல் குறிப்புகள். அதன் பிற்பாடு தமிழ் பதிவர்களை பார்த்து எழுத ஆரம்பித்தேன்.
ஒரு வருடம் மேல் ஓடிவிட்டது. நன்றாக தான் இருக்கு.
ஜனரஞ்சக பத்திரிக்கையிலும் ஒரு ப்ளாக் வந்தது...
தொடர்ந்து எழுத வேண்டும்!
என்.கல்யாணராமனுக்கு அ.முத்துலிங்கம் விருது
5 hours ago
7 comments:
உங்கள் ப்ரொபைலில் நானும் ரசிக்கிற விஷயங்கள் நிறைய இருக்கின்றன.
நானும் எனக்குப் பிடித்த எல்லாவற்றையும் என் வாசகர்களிடம் பகிர்ந்து கொள்கிறவன்தான். இதில் ஹைக்கூ, சினிமா பாட்டு, அரசியல், கரண்ட் அப்பைர்ஸ், கதை, கட்டுரை எல்லாம் அடக்கம்.
என் ப்ளாக்கை நிச்சயம் ரசிப்பீர்கள். படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.
http://kgjawarlal.wordpress.com
புனைவுகள், கவிதைகள், கட்டுரைகள், எழுத்துக்கள், அனைத்தும் யார் வேண்டுமானாலும் எழுதலாம்.
பகிர்தல் அவசியம்.
உள்நோக்கம் இருந்தால் கஷ்டம்.
நீங்க ரொம்ப நல்லா எழுதுறீங்க!
நீங்க யாரை இங்கு தாக்கறீங்க? தானே பெரியவன் எனச்சொல்லும் சிறு பத்தி எழுத்தாளர்கலையா?
எழுதுபவர்கள் எல்லாம் எழுத்தாளாராக முடியாது! எழுதிக்கொண்டே இருப்பவர்களே எழுத்தாளர்கள். ஏனெனில் எழுத்து ஒரு தொழிலைப் போலத்தான்! எழுத்தாளன் எனும் அங்கீகாரம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. வாசகர்களைப் பொருத்தே ஒரு எழுத்தாளன் தனது எழுத்துப் பயணத்தின் வெற்றியைப் பெறுகிறான்.
பொறியியல் படித்தாலும் பொறியியல் துறையில் இருந்தால் அவர் பொறியியாளர் என துறை சார்ந்தே ஒருவருக்குப் பட்டம் வழங்கப்படுகிறது. நீங்களும் எழுத்தாளாராகப் பரிணாமிக்க எழுதிக்கொண்டே இருங்கள். :)
//முதலில் ஒரு வாசகனாய் இருந்து பிறகு//
இது ரொம்ப முக்கியமான விஷயம்.
நிறைய வாசித்தல் அவசியம்.
நானும் தான் முதலிலே வாசகராக இருந்து எழுத்தாளர் ஆக ட்ரை பண்ணறேன்.
உங்கள் தமிழை படித்தேன். மிக அருமையாக எழுதுகிறீர்கள். எழுதிக்கொண்டே இருங்கள். நல்ல வளமை வரும்!
Post a Comment