மரத்தில் மாட்டிக்கொண்ட காக்கை
அதை விடுவிக்க போலீஸ படை
சந்தோசமாய் இறக்கை அடித்து பறந்து
அது உதவியவர்கள் மேல் ஆய் போட்டது
மனித மனமும் இப்படித்தானே
உதவியவர்களை மறந்துவிட்டு
தன் வேலையை பார்க்கபோவது?
வள்ளுவரும் மற்றவர்களும்
சொல்வது யார் காதிலும் கேட்காது
ஆனால் காக்கை கரைந்துண்ணும்
நிலையை மட்டும் விடாமல்
பிடித்துக்கொண்டு பாடம் கற்பிக்கிறார்கள்
மனிதம் பெரிதா மானிடம் பெரிதா
இல்லை விலங்கினம் தான் சிறிதா?
அவரவர் இருக்கும் இடத்தில் இருந்தால்
எல்லோரும் சௌக்கியமே!
போலி இளமை
18 hours ago
7 comments:
//அவரவர் இருக்கும் இடத்தில் இருந்தால்
எல்லோரும் சௌக்கியமே!
//
:)
அருமையான கவிதை. நல்ல இருக்குங்க. என்னங்க இது பின்னூட்டம் எல்லாம் கம்மியா வருது?
நன்றிகள்...
ராஜு, தெரியலைங்களே... மார்கெட்டிங் கொஞ்சம் கம்மிய பண்ணறேன் போல இருக்கு! :-)
கவிதை அருமை. நினைவில் நிற்கும்.
கவிதை நல்லா இருக்கு.
//அது உதவியவர்கள் மேல் ஆய் போட்டது//
ஏங்க அது வேணும்னா பண்ணுது? :-)
நன்றி உழவன்.
முதலில் கக்கா என்று தான் எழுதினேன்! தமிழ் மாதிரி இல்லை. யாரோ ஒரு கவியின் கவிதையில் ஆய் என்று இருந்ததால், அப்படி குறித்தேன். எங்கள் வீட்டு குறிப்பு வழக்கம் "இசி" தான்!
Post a Comment