வியர்வையை வாசம் நாத்தம்
என்று ஒதுக்கி விட முடியாது
உடல் நன்றாக வேலை செய்கிறது
என்றே காட்டுகிறது!
குழந்தைகள் பள்ளியிலிருந்து வரும்போது
வாரி அணைக்கும் போது
வரும் கம கம வியர்வை வாசம்
காத்திருந்து அவர்களை காணும் சொர்கம்!
உடலை கண்ணா பின்னாவென்று வளர்த்தி
பின் வருத்தி உடல் குறைக்க
வியர்வை வரவைக்கும் மனிதர்களை
பார்த்தால் வரும் சிரிப்பு!
கஷ்டப்பட்டு சைக்கிள் ரிக்சாவை
மிதிக்கும் மனிதர்களின் வியர்வை
அவர்கள் குடும்பத்திற்கு
கொடுக்கிறது சந்தோசம்!
உடலுக்கு தெரியும்
எப்படி உணர்த்துவது என்று...
பரமானந்தம்!
என்.கல்யாணராமனுக்கு அ.முத்துலிங்கம் விருது
5 hours ago
8 comments:
பரமானந்தம்!
நல்லா இருக்கு ..!
நல்லா இருக்கு ..!
***
நண்பர் அவர்களுக்கு ஒரு இண்டரெஸ்டிங் ப்ளாக் பெண்கள் பதிவுகள் விருது கொடுத்துள்ளேன். பெற்றுக்கொள்ளவும்.
நன்றி
மதிப்பளித்து விருது கொடுத்ததற்கு நன்றி. :-)
வாழ்க்கையைப் புதிய கோணத்தில் அணுகும் எல்லாமும் எனக்குப் பிடிக்கும் ஆதலால் உங்கள் கவிதையும் எனக்குப் பிடித்தது.
வாழ்த்துக்கள் வினிதா.
நன்றி ஷண்முகப்ரியன்!
வியர்வையை வாசம் நாத்தம்
என்று ஒதுக்கி விட முடியாது
உடல் நன்றாக வேலை செய்கிறது
என்றே காட்டுகிறது!
////
நல்லாயிருக்கு
//உடலுக்கு தெரியும் எப்படி உணர்த்துவது என்று//இங்கு கவிதை இருக்கு,வினித்தா!
Thanks! :-)
Post a Comment