பிறந்த குழந்தையின் புன்னகை
எதற்கும் ஈடில்லை
வாழ்வதற்கும் ஒரு அர்த்தம்
கற்பிக்கும் மலர்ந்த முகம்
அப்பா அம்மவின் கவலை
தீர்க்கும் மருந்து
வளரும் பருவத்திலும் அதே
புன்னகை தீயாய் பரவும்
ரயில் பயணங்களில்
நல்ல மார்க் எடுக்கையில்
கடி ஜோக் கேட்கையில்
நண்பர்களோடு அரட்டையில்
அழகான அம்சமான
ஆணோ பெண்ணோ கடக்கையில்!
ஆனால் எதற்கும் ஈடில்லை
தாயின் மலர்ந்த சிரிப்பு
குழந்தை வெற்றியின் புன்னைகைக்கு
சிறு விளையாட்டாகட்டும்
அது மதிபெண்ணாகட்டும்
இல்லை தான் விரும்பும்
மன வாழ்க்கை கிடைத்த சந்தோசமாகட்டும்
பேரக்குழந்தை கையில் கொடுக்கும்போதும்
ஆனந்தம் அற்புதம்!
:-)
Subscribe to:
Post Comments (Atom)



3 comments:
ரொம்ப அருமையா இருக்குங்க கவிதை!
ஊருக்கு போய் வரும்போது, வலியனுப்புற எங்கம்மா புன்னகை இது வரை சூப்பருங்க!
கல்யாணம் ஆனப்புறம் என்னவோ...
அட்டகாசமான கவிதை!
நல்ல கவிதை
Post a Comment