கே.ரவிசங்கர் எழுதிய குழந்தைகள்..பெற்றோர்கள்.. மக்குகள்...
பதிவு படித்தேன்... நான் இட்ட கருத்து...
//
என்ன சொல்ல வரீங்க ? புரிஞ்ச மாறி இருக்கு... புரியலே!
ஆனா ஒன்னு Survival of fittest அப்படின்னு சொல்லி, ஒருவரை ஒரு கூட்டுக்குள் அடைக்காமல், அதிகம் முயற்சி எடுக்க வைக்க வேண்டுமென்பது என் தாழ்மையான கருத்து. Never give up!
பரிணாம வளர்ச்சியால், குழந்தைகள் தாமாக வளர்கின்றன. பெற்றோர் எல்லாம், ஒரு படிதாங்கி தான்.
எங்கள் அப்பார்ட்மென்ட் அருகில் இரு கவன்மெண்ட் பள்ளிகள் உள்ளன ( ஆண், பெண் ). இரண்டு குரங்குகள் ஜோடியாக சில வருடம் முன், பெரிய அரச மரத்தில் வாழ்க்கை ஆரம்பித்தது. இப்போ அதற்க்கு மூன்று குட்டிகள்... எப்படியோ நகர சந்தடியில் வாழ்கின்றன. தினம் ஒரு முறையாவது பார்த்துவிடுவேன்... நகர வாழ்க்கையில் அவை ஒன்றி, குப்பை மேட்டில் உணவு எடுத்து, பெட்டிக்க்கடைக்காரர் போடும் அழுகியபழம் தின்று... என்ன ஒரு பயம் என்றால், அவை யாரவது குரங்காட்டி இழுத்து சென்று விட்டால்? நாம் தான் அவைகளுக்கு இடம் கொடுக்காமல், இருக்கும் இடம் எல்லாம் எடுத்துக்கொள்கிறோம். ( கொல்லுகிறோம் - ஒபாமா உட்பட - கரக்ட் தான் - தொந்தரவு செய்தால்)
குழந்தைகள் குழந்தைகளாக இருக்க விடுங்கள்!
//
************
அப்புறம் பரிசல்காரனின் "ஆஸ்பத்திரி நாட்கள்"
இந்த மாதிரி விஷயம், எங்கள் குடும்பத்திலும் ... என் மகனுக்கும் நடந்தது. நான் அவரைக்குழ்ம்பு செய்ய அவரை ( ராஜ்மா ) ஊற வைத்திருந்தேன். அப்போது அவனுக்கு மூன்று வயது. பள்ளிக்கு காலை ஒன்பது முதல் பன்னிரண்டு வரை - பேபி க்ளாஸ் - சென்று வருவான். மகள் பள்ளியில் இருந்து மூன்று மணிக்கு தான் திரும்புவாள்....அன்று, அவனை அழைத்து வந்துவிட்டு, குக்கரில் அவரை வேக வைத்து சமைக்க ஆரம்பித்தேன். அவர் டிவி முன் இருந்தான். கொஞ்சம் நேரம் கழித்து அவனை பார்க்கும் போது, மூக்கை நோண்டிக்கொண்டு இருந்தான். என்னடா என்று கேட்டதற்கு, ஒண்ணுமில்லே சும்மா என்று சொல்லிவிட்டான். நானும் கவனிக்கவில்லை. ஒரு மணிக்கு என்னவர் வீட்டிற்க்கு சாப்பிட வந்தார். அப்போது அவன் மூக்கின் இடது புறம் வீங்கியிருந்தது. டார்ச் அடித்து பார்த்ததில், மூக்கில் ஒரு அவரை இருந்தது. ஏன்டா பண்ணினே என்ற கேட்டதில், அழுக்கு என்றான்! ( எனக்கு திட்டு பலம்... ). டாக்டரிடம் சென்றோம். ஏ.வி.எம். ஈ.என்.டி. மைலாபூர். குறடு மாதிரி ஆயுதம் வைத்து எடுத்தார்கள். அப்பப்பா என்ன பயம்...
ஆறு மாதத்தில்...மீண்டும் ஒரு முறை, ஸ்கூலில் காதில் நோடேபூக் அட்டை பேப்பர் போட்டு விட்டான். திரும்பவும் அதே டாக்டர் .... என்னடா என்று கேட்டால், க்ளாசில் ஒரே சத்தம். பஞ்சு இல்லே, அதனாலே பேப்பரில் அடைத்தேன் என்றான்!
பெண் குழந்தைகள் இந்த விசயத்தில் கொஞ்சம் பொறுப்பு என்று தோனுது...
பெற்றோர்கள் தான் கவனமாக இருக்கணும். ஆபத்து என்று ஒன்று வரும் போது ( எப்படி வரும் என்று தெரியாது, எந்த ரூபத்தில் இருக்கும் என்று தெரியாது ) டாக்டர்களோ, நண்பர்களோ காப்பாற்றுவார்கள்.
குழந்தைகளை கண் முன்னாள் வைத்திருங்கள்!
என்.கல்யாணராமனுக்கு அ.முத்துலிங்கம் விருது
5 hours ago
2 comments:
தொடுப்புக்கு நன்றி.உங்கள் பின்னூட்டத்திற்க்கும் பதில் போட்டுவிட்டேன்.
உங்கள் வீட்டு நிகழ்ச்சிக்கு காரணம் யார் என்று drill down செய்துக்கொண்டேப் போனால் கடைசியில் உங்களைத்தான் (பெற்றோர்)கை காட்டும்.
சிறு குழந்தைகள் இருக்கும் வீட்டில் பெற்றோர் உஷாராக இருக்க வேண்டும்.365 டிகிரி மேற்பார்வை இருக்க வேண்டும்.
idhe pondru (rajmaa) kalaatta என் veettilum nadandhadhu..
PLAY SCHOOL vilaiyaattu mummuraththil, என் மகன் ஒரு verkkadalaiyai எடுத்து mookkinul pottu, appuram என்ன, 4-5 naal avasthai...... appuram daatkaridam போய், எடுத்து, ஒரே kalaatta.....
siru kuzhandhaikalin mel, நம் kan eppodhum இருக்க வேண்டும்.........
நேரம் கிடைக்கும் போது, ingeyum வந்து பாருங்கள்........
www.jokkiri.blogspot.com
www.edakumadaku.blogspot.com
Post a Comment