வாழ்த்துக்கள் ஏ.ஆர்.ரகுமான். இரண்டு ஆஸ்கார்கள். அருமை.
நிச்சயம் கிடைக்கும் என்று நம்பியவர்கள் தமிழர்கள்.
நிஜமாக உங்கள் பக்கம் அம்மா (க்கள்) உள்ளனர். நீங்கள் சொன்ன ஹிந்தி பட வசனம்... மேரி பாஸ் மா ஹே.
ஒரு இந்தியன் ஆஸ்கர் வாங்குவதை காண வேண்டும் என்ற என் கனவும் நிறைவேறியது. கமலை நான் ஒரு பேச்சுக்கும் நம்பவில்லை. அது வேறு விஷயம்! ;-)
ஈழம் குறித்து நீங்கள் பேசியிருக்கலாம்... ஏ.ஆர்.ரகுமான்... உலகத்தின் எம்மூலையிலும் கருத்து எதிரொலித்திருக்கும். அமைதி அன்பு வழியில் தான் உலக அமைதி வரும் என்பதை எவ்வளவு அழகாக ஆங்கிலத்தில் சொன்னீர்கள்!
ரஹ்மானும் ஸ்லம் வாழ்க்கை மாதிரி தான் இந்துவாக திலீப் என்ற பெயரில் பிறந்து பிறகு முஸ்லீமாக வளர்ந்து... வாழ்ந்து பிறகு சினிமாவில் வளர்ந்து, இந்த இடத்தை பிடித்துள்ளார். வெறும் பத்தாம் வகுப்பு தான். அவர் பலரை இப்போது படிக்க வைக்கிறார். சில இன்ஜினியர்கள் மற்றும் டாக்டர்கள் உருவாக காரணம் அவர். என் கணவர் மூலம் விவரம் தெரிந்தது. மதம் சார்பு இருந்தாலும், அவர் நல்லவர்.
என்ன ஓர் மனக்குறை, ஏழை வீட்டில் பெண் எடுக்காமல், ஒரு பணக்காரியை கட்டினார். ஒரு சராசரி ஆள் என்பதை காட்டினார்.
இன்னொரு விஷயம், ஏ.ஆர்.ரகுமான்னோடு இருக்கும் (பாட்டு வரிகள் மாற்றப்பட்ட விசயத்தில்) கருத்து வேறுபாடு காரணமாக, குல்சார் அமெரிக்கா செல்ல விரும்பவில்லையாம். என்ன ஒரு வித்தியாசம்!
இளையராஜா மனமுவந்து பாராட்டினால் தகும்!
*********
தமாஸ் பதிவு.... ஆஸ்கார் நாயகன் கமலுக்கு விருது இல்லையா?
பேருந்தில் இருவர்…
1 hour ago
11 comments:
எல்லா புகழும் இறைவனுக்கே! nice.
விருது கிடைத்த சில மணி நேரத்துக்குள் ஆனந்த விகடனில் 14 பக்கத்திற்கு வழ்த்துக்கள் ந்றைந்துவிட்டன அவருக்கு.... மகிழ்ச்சியான செய்தி... வாழ்த்துக்கள் ரஹ்மான் அவர்களே
விருது கிடைத்த சில மணி நேரத்துக்குள் ஆனந்த விகடனில் 14 பக்கத்திற்கு வழ்த்துக்கள் ந்றைந்துவிட்டன அவருக்கு.... மகிழ்ச்சியான செய்தி... வாழ்த்துக்கள் ரஹ்மான் அவர்களே
. ஆஸ்கார் நாயகன் கமலுக்கு விருது இல்லையா?//
-;))
ஏ ஆர் ரஹ்மானைப் பற்றிய பின்னணித் தகவல்கள் பலவும் தந்திருப்பது இந்தப் பதிவின் சிறப்பு.
proud to be an indian. Its a big achievement. Wonderful Rahman.
Thanks all for the comments! ;-)
//மதம் சார்பு இருந்தாலும், அவர் நல்லவர்.
//
வினிதா யாருக்கு மதச் சார்பு இல்லை??? நீங்கள் கோவிலுக்கு செல்கின்றீர்கள் என்றால் நீங்கள் மதச் சார்பு உடையவர். நான் பள்ளிவாசல் செல்கிறேன் என்றால் நான் மதச் சார்புடையவன்.
மதவெறிதான் மிகவும் கொடியது, மிகவும் தவறு.
மதச்சார்புடையவர்கள் தங்கள் மதம் போலத்தான் பிறருக்கு அவர்கள் மதம் என்ற எண்ணம் உடையவர்கள்.
தங்கள் மதம் மட்டுமே உண்மை என்றும்,பிற மதங்களையும் அது சார்ந்த மனிதர்களையும் எதிராக விமர்சிப்பவர்கள் மத வெறியர்கள்.
மதச்சார்பு இருந்தாலும்,அவர் நல்லவர் என்பது சற்றே இடிக்கிறது.காரணம் மதச்சார்புடையவர்கள் நல்லவர்கள் அல்ல ஆனால் இவர் விதி விலக்கு என்பதைபோல உள்ளது உங்கள் கருத்து. நான் சொல்வதில் எதுவும் தவறு இருப்பின் மன்னிக்கவும்.
//மதம் சார்பு இருந்தாலும், அவர் நல்லவர்.//
எம்.எம்.அப்துல்லா அண்ணே, அவர் கொஞ்சம் ஓவராக சொல்கிறார் (அதுவும் அவார்ட் பங்க்சனில் இதை கடைசியில் சொல்வேன் என்று வேறு கூறி...அல்ஹம்துலில்லாஹ் என்பதன் பொருளான ‘எல்லாப் புகழும் இறைவனுக்கே‘ என்று அவர் தமிழில் சொன்னது) ஒருவர் மதம், அவரோடு மட்டும் வைத்துக்கொண்டால் நலம் என்பது கருத்து. என் குடும்பத்தில் இது தான் நடக்கிறது. ஊருக்கு திணிக்கக்கூடாது என்பது என் தாழ்மையான கருத்து...
ஜெயமோகனும் இதை தான் 'நான் கடவுள்' படத்தில் இடித்து காட்டுகிறார்.
அதற்காக ஜெயமோகனும் நானும் ஒன்று கிடையாது.
என் கணவர் எனக்கு முஸ்லீம் மதத்தை பற்றி நிறைய சொல்லிக்கொடுத்தார். அவர் இஸ்லாமிய நம்பிக்கை வைத்திருப்பவர்.
தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
very good post. thanks.
எல்லா புகழும் இறைவனுக்கே! Detailed post on Rahman. ;-)
Post a Comment