Saturday, January 3, 2009

நான் கடவுள் பாடல்கள் சொதப்பல்

இளையராஜா ஏன் இப்படி செய்தார்?

மாதாவின் கோவிலின் மணியோசை கேட்டேன் என்ற பாடலின் காபி தானா அம்மா உன் பிள்ளை? உண்மையை சொல்லுங்கள். ராகம் ஒன்று என்று டப்பாங்குத்து ஆடுவார்கள் இல்லையா?

ஓம் என்ற பாடல் தான் கொஞ்சம் வித்தியாசமாக உள்ளது. யாரோ உதவி செய்துள்ளார்கள் என்று இளையராஜா கூறியுள்ளார். படத்தில் நன்றாக இருக்கும்.

மற்றபடி, படத்தில் எப்படி பாலா ஷூட்டிங் செய்திருப்பார் என தெரியவில்லை.

மொத்தத்தில் நான் கடவுள் - பாடல்கள் - சொதப்பல்.

படம் எப்படியோ? ஆஸ்கார் வாங்குமா?

9 comments:

Anonymous said...

aiyo enna eppadi oru goundai pottuteenga?

சின்னா said...

பாடல்களை உணர்வுப்பூர்வமாக கேட்க வேண்டும் நண்பரே!

கிரி said...

நீங்கள் கமர்சியலாக பாடலை எதிர்பார்த்தால் சொதப்பல் தான்.

இந்த படத்தின் கதைக்கு ஏற்ப உள்ள பாடலாகவே இதை கருதுகிறேன். ஒரு சில பாடல்கள் கேட்கும் போது சுமாராக இருக்கும், படம் வெளிவந்த பிறகு காட்சியமைப்பின் மூலம் சிறப்பாக தெரியும். பாலா இது வரை தன் படத்தில் அப்படி ஒரு குறை வைத்ததில்லை. பிதாமகனில் கூட அவசியமில்லாத பாடலாக எதையும் கூற முடியாது. கதையோடு ஒட்டியே இருக்கும்.

நான் கடவுள் இசையை குறை கூற முடியாது ,ஒவ்வொருவரின் ரசனை வேறு.

குத்துபாட்டாக, விறுவிறுப்பு பாடலாக எதிர்பார்த்து கேட்டால் சொதப்பல், கதைக்கு தகுந்த பாடல்கள் என்று கேட்டால் இசை ஞானியின் திறமை புரியும்.

கோபிநாத் said...

என்னாங்க இப்படி சொல்லிட்டிங்க...எனக்கு என்னவோ சொதப்பல் போல தெரியல...அந்த படத்துக்கு ஏற்றால் போல தான் இருக்கு பாடல்கள் அனைத்தும்.மீண்டும் மீண்டும் கேட்டு பாருங்கள் ;))

முத்துகுமரன் said...

உங்கள் கருத்துகள் வித்தியாசமாக இருக்கிறது. எந்த அளவிடுகளின் படி என்பதுதான் புரியவில்லை

ராகங்களை பற்றி அதிகம் அறியாத என்னையும் அந்த இசை உருக்கி இருக்கிறது. எனக்கு மிக தெரிந்த இசை ஆசிரியர் ஒருவரிடம் பாடல்கள் பற்றி கேட்ட போதும் அற்புதம் என்று சொன்னார்.

இசை பிடிக்கவில்லை! இசை உருவாக்கிய அழுத்தம் பிடிக்கவில்லையா??

SUREஷ்(பழனியிலிருந்து) said...

சேது படம், பாடல்கள் எல்லாவற்றையும் இப்படித்தான் சொன்னார்கள்.

ஆ.சுதா said...

ஏன் இத்தனை அவசரம் 'படையப்பா படம் திரைக்கு வந்ததும் ஏ.ஆர் ரகுமான் சார் வீட்டில் கல் எறிந்தார்கள் அதன் பின் வருத்தப் பட்டிருப்பார்கள்.'

இசையும் பாடலும் ரசிக்க ரசிக்கத்தான் தெறியும்.

DIVYA said...

I listened to those songs from techsatish.net, mostly old tunes. Nice.

Unknown said...

வினிதா,

அட...நம்ம ராஜாவ இப்பிடி சொல்லிட்டீங்க.அவர drilled down பண்ணிரசிக்கனும்.

பாதசாரி அணுகுமுறை
pedestrianapproach)தவறு
(சொதப்பல்?)மேடம்.மூணுபாட்டு ஏற்கனவே போட்டதுதான்.அதையே பாலிஷ் பண்ணிவித்தியாசமா போட்டிருக்கிறார்.

”பிச்சைப் பாத்திரம் ஏந்தி” மாயா மாளவ கெளள ராகத்தில் போடப்பட்ட
பாடல்.இசை பின்னி எடுத்து விட்டார்.
பாடல் வரிகள் நல்லா இருக்கு.