Sunday, December 14, 2008

ஆந்திராவில் மக்கள் தீர்ப்பு

ஆந்திராவில் மக்கள் தீர்ப்பு கொடுத்துள்ளார்கள் நக்சல்களை வளர்க்கும் பகுதியான வாரங்கல் அருகில்.

சரி என்ன விஷயம்?

பெண் கொடுமை, ஈவ் டீசிங்...

இங்கே படியுங்கள்...




போலிஸ் செய்தது நல்ல விசயமா?

நாம் தான் பெண் விடுதலை என்று பேசுகிறோம். அந்த பெண்கள் பாவம்... லவ் செய்யவில்லை என்றால், அந்த ஆண் (பையன்) அப்பா அம்மா சொல்லும் பெண்ணை கட்டிக்கொண்டு, அல்லது, இன்னொரு பெண்ணை ட்ரை பண்ணலாம் அல்லவா? ( நக்கலாக தான் சொல்லுகிறேன் )... ஆசிட் வீச்சு தேவையா?

கேடு கெட்ட மிருகங்களுக்கு கொடுத்தார்கள் ஆந்திராவில் மக்கள் தீர்ப்பு. வாங்கிய சம்பளத்திற்கு போலிஸ் செய்த நல்ல காரியம்! ஹுமன் ரைட்ஸ் கமிசன் எல்லாம் இன்று ஒன்றும் செய்ய முடியாது...

மீண்டும் மீண்டும் தொல்லை என்பதால்... என்கவுண்டர். அட்டகாசம்...

பெற்ற மனது பாடுபடும் தான்... நன்றாக வளர்த்திருக்க வேண்டும்? ஆந்திரா பற்றி தெரிந்த வரை, இப்போது அந்த ஆண்களின் பெற்றோர் காசு கொடுத்து பெண்கள் குடும்பத்திற்கு தொல்லை கொடுப்பார்கள்.

இரண்டு உயிர் ஊசலாடுது... அதற்கு என்ன பிரதிபலன்?

இதற்கும் தனி மாநிலம் கேட்கிறார்கள்... கொடுமைங்க.

கொடுத்தால்....

சவுதி அரேபியாவில் நடப்பது போல மக்கள் தீர்ப்புகள் அங்கு சொல்லப்படும்!

***

என் கணவர் படித்ததும் வாரங்கல் தான். ஆர்..சி. தினம் தினம்... பயத்தோடு படித்தேன் என்கிறார்.

நான் கராத்தே படித்துள்ளேன், ஹேன்ட் பேகில் சிறு கத்தி ஒன்று எப்போதும் இருக்கும், கையில் நகம் சார்பாக இருக்கும், அப்புறம் மிளகாய் பொடி ஒரு பாக்கட். சென்னையில் தெரியும்.... நிச்சயம் தேவை...

3 comments:

Unknown said...

வினிதா,

சமூகம், சினிமா, அரசியல், டிவி மீடியா,பத்தரிக்கைகள் எல்லோரும் காரணகர்த்தாக்கள் .
படித்தவர்கள் என்று இருக்கும் நம் வலை தளங்களில்யே ஆபாச பின்னோட்டம் /பதிவு (பெண்களுக்கு) வருகிறது.

Shakthiprabha (Prabha Sridhar) said...

மறுபடியும் ஏதோ ஒரு 'கடா' சட்டம் கொண்டுவந்தால் கூட இதுவெல்லாம் அதிகாரிகள் கையில் சிக்கி படாதபாடு படாமல் சரியாக நிர்வகிக்கப்படும் என்பது என்ன நிச்சயம்?

ஜனநாயகமா vs சர்வாதிகாரம் என்ற ரீதியில் வர வர எண்ணங்கள் தோன்ற ஆரம்பித்துவிடுகிறது.

இது சிறிய வன்முறை சம்பவம், நம் இந்திய போலிசால், மக்களால், தீர்ப்பு வழங்க முடிந்த விஷயம். ஆனால்
மும்பை குண்டுவெடிப்பைக் போன்ற சம்பவங்களைக் கண்டு பதறாதவர்கள் சொற்பம். ஆட்களே சிக்கினாலும் பெரிய அளவில் இதற்கு தண்டனைகள் வழங்கும் முன், நாம் குடுகுடு கிழவிகள் ஆகி காலமே முடிந்து விடும்.

யாரும் ஒன்றும் செய்ய முற்படுவதில்லை. இதில் மனிதநேய விரும்பிகள் வேறு. என்னத்த சொல்லி...

அப்புறம் ஒன்று சொன்னீர்களே "மிளகாய்ப்பொடி", கராத்தே படிக்காத என் போன்றவர்கள் கூட ஒரு காலத்தில் நம்பிய ஒன்று. அன்றையிலிருந்து இன்று வரை மாறாத நிலை.

Vetirmagal said...

இதில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் பங்கு அதிகம். தவறு செய்யும் குழந்கைகளைக் கண்டிக்காமல், கொஞ்சிக் கெடுக்கும் பெற்றோர்கள் , கண்டுக்காமல் விட்டு விடும் ஆசிரியர்கள் ...
பெண்களை மனிதராகப் பார்காமல், உடமையாக , அடைய வேண்டிய பொருளாக கருதுவது , இப்போது தலை விரித்தாடுகிறது.

மிகவும் கவலைப் பட வேண்டிய மனப்போக்கு.