இன்று காலை இருந்த அமெரிக்காவில் இருந்து வந்துள்ளான். பாவம் அறுபது மணி நேரம் தொடர்ந்து பிரயாணம்...ப்ருசல்ஸ் விமானம் இறங்கிய போது பனிரெண்டரை மணி. பிக்கப் செய்து வீடு வரும் போது இரண்டு மணி. நினைத்து பாருங்கள். சென்னை குளிர் எப்படி இருந்திருக்கும் என்று? நல்ல அனுபவம்.
அவன் படிக்கும் ஊர் நார்த் டகோடாவில் உள்ள பார்கோ. கடும் குளிர் ஊர். ஆகஸ்டில் சில சமயம் ஸ்னோ வரும் என்று கிண்டல் செய்கிறான்... வெள்ளி இரவு கிளம்ப வேண்டியவன், கடும் பனியால், டிக்கட் மாற்றி, சிகாகோ சென்று, நியூ யார்க் அனுப்பி, ஒரு நாள் வெயிட் செய்ய வைத்து - ஹோட்டல் கொடுத்து... லண்டன் , ப்ருசல்ஸ் வழியாக, எப்படியோ, அறுபது மணி நேரம் தொடர்ந்து, நிறுத்தி நிதானமாக பிரயாணம் செய்துள்ளான்... வாழ்த்துக்கள்!
மதியம் ட்ரெயினில் கோவைக்கு பயணம். பாவம், மரக்கட்டை மாதிரி தூங்கி பன்னிரண்டு மணிக்கு எழுந்து, குளித்து அவசரமாக ட்ரயின் பிடித்தான். நல்ல வேலை எப்படியோ டிக்கட் கிடைத்தது. திங்கள் காலை வர வேண்டியவன் என்பதால், மதியத்திற்கு டிக்கட் எடுத்திருந்தார்கள், லேட் ஆகும் என்று பொன் செய்ததால், கேன்சல் செய்துவிட்டு இன்றைக்கு மாற்றினார்கள்.
டிசம்பர் முதல் வாரத்தில் செமஸ்டர் எக்ஸாம் முடித்து விட்டு, ஒன்றரை வருடம் கழித்து வருகிறான்.... ஆகஸ்ட் 4, 2007 சென்றவன், 16 மாதங்கள் பிரிவு ... இன்னும் இரண்டு கோர்ஸ் தான் பாக்கியாம். இதுவரை ஆறு லட்சம் செலவு ஆகியுள்ளது என்றான். அவனே 12% வட்டிக்கு பாங்க் கடன் வாங்கி செலவு செய்கிறான்... எப்படியும் தானே திருப்பி கட்டுவேன் என்கிறான். எப்படியும் அடுத்த அக்டோபரில் சம்பளம் வரும் என்கிறான், எச். 1 விசா வந்த பிறகு....
ஏதோ அவன் காலேஜ் (ஸ்கூல் ஸ்கூல் என்றான், அமெரிக்கன் ஆக்சன்டில்) டிபார்ட்மன்ட் வேலை செய்து சிறிது காசு மிச்சம் செய்துள்ளான். இரண்டு மாதம் லீவு சமயம் வேலை செய்து சம்பாரிக்கிறார்கள், எதாவது வேலை கிடைத்தவர்கள்.
இப்போதே பெண் பார்கிறார்கள், அங்கு படிக்கும் அல்லது வேலை செய்யும் பெண்ணை, எப்படியோ சம்பாரிக்க ஆரம்பித்த பிறகு கல்யாணம் செய் என்கிறோம். இருபத்தைந்து வயது ஆகிறது...
எம்.பி.ஏ வேறு செய்வேன் என்கிறான். வேலை செய்துக்கொண்டு செய்தால் நலம். அந்த மாதிரி ஊரில், சன் பிரான்சிஸ்கோ, சிகாகோ, டல்லஸ் அல்லது நியூ யார்க் தான் வேண்டும் என்கிறான்.
எப்படியோ கார் ஒட்டுகிறானாம்... பனியில் வாழ்வது கடினம் போல. பெண்கள் கூட கல்யாணம் செய்து அமெரிக்கா சென்றவுடன், கார் டிரைவிங் லைசன்ஸ் வாங்கிவிடுகிறார்கள்.
எதற்கு அங்கு போய் படிக்கிறான்.... மாஸ்டர் ஆப் கம்ப்யுட்டர் சயன்ஸ்? அமேரிக்கா ஆர்வம் எல்லோருக்கும்... என்ன செய்ய... இங்கே சென்னையில் கிரேசன்ட்டில் படித்தவன். 2004 படிப்பு முடித்துவிட்டு, பெங்களூரில் மூன்று வருடத்திற்கு மேல் இன்போசிஸில் வேலை. இப்போது லீவு தான் எடுத்துள்ளான்! (போல?) அமெரிக்காவில் வேலை கொடுப்பார்கள என்று தெரியவில்லை என்கிறான். வேறு கம்பனியில் சம்பளம் அதிகம் கிடைக்கும், கிரீன் கார்ட் போன்றவை ஈசி என்றான்......
வரும் ஏப்ரலில் படிப்பு முடித்து, எஸ்.ஏ.பி. தொழில் கம்பெனியில் அங்கேயே ஜாயின் செய்கிறேன் என்கிறான். இன்னும் வேலை கிடைக்கவில்லை ... இன்டர்ன்ஷிப் ட்ரை செய்கிறானாம். மார்ச்சில் எஸ்.ஏ.பி. எக்ஸாம் செர்டிபிகேசன் எழுதுகிறானாம்.
வேலை இன்டர்ன்ஷிப் கிடைத்தால் நல்லது... உதவி தேவை... விவரம் தெரிந்தவர்கள் கமண்ட்ஸ் போடவும்.
ஒரே மகன் - சித்தி அழுகிறார்கள் மகனை விட்டு விட்டு இருக்க, இருவரும் இப்போது தனி, சித்தப்பா கோவை அருகில் மளிகை கடை வைத்திருக்கிறார்.... இதற்கும் முதல் மகளை அமெரிக்காவில் தான் கட்டி கொடுத்துள்ளார்கள் படிப்பு முடித்தவுடனேயே... பெண் கோவையில் ஜி.சி.டியில் கம்ப்யுட்டர் சயன்ஸ் படித்தவள், இப்போது நன்றாக சமைத்துக்கொண்டு ரிலேக்ஸ் ஆக இருக்கிறாள்.
யாரோ நண்பர் ஒருவருக்கு லேப்டாப் வாங்கி வந்துள்ளான், இவனுக்கு கொண்டு வந்ததற்கு இருநூறு டாலர்கள் லாபம் பங்கு. இந்தியாவால் மேக்பூக் விலை அதிகமாம்... எப்படியெல்லாம் செய்கிறார்கள் அமெரிக்கன் ஸ்டுடண்ட்ஸ்!
ஆனந்த சைதன்யா தியானமையம் திறப்புவிழா
4 hours ago
1 comment:
நல்ல புத்திசாலி பய்யன் போல, அவனை இந்திய மென்பொருள் நிறுவனகளைல் சேர்த்து பாழ் பண்ணி விடாதீர்கள்.
இந்திய நிறுவனங்களில் அவருக்கு சுதந்திரம், உரிமைகள் இருக்காது, அடிமை வாழ்க்கைதான் இருக்கும்.
சித்தி பையனின் குறிகோள்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
குப்பன்_யாஹூ
Post a Comment