Sunday, November 16, 2008

காதலும் பாடலும்

கைதட்டி பாடிய
பாடலின் கரங்களோ
ஒட்டிய மணற் துகள்களை
தட்டி வழியனுப்பிகொண்டிருந்தன

வீட்டிற்கு செல்ல வேண்டும்
நேரமாகிக்கொண்டு இருக்குது
கணவரின் கடைக்கண் பார்வை
சிறு அசைவில் காதல் சொல்கிறது

உப்புமா பொங்கலானது
தொட்டுக்கொள்ள ஊறுகாய்
பேச்சு மூச்சு இல்லை
காதல் ரொம்ப இனிக்கிறது!

(நேற்று இரவு எழுதிப்பார்த்தேன், நன்றாக உள்ளதா?)

5 comments:

Unknown said...

வனிதா,

நல்ல வந்திருக்கு.Hats off!
A small step is a big leap for womankind.


சற்றே fine tune செய்யப்பட்ட வெர்ஷனை கிழே காணலாம்.You have to give a poetic finishing touch .In gymnastics young girls will do poetic somersaults and the landing .................!that too in slow motion.............

கைதட்டி பாடிய
பாடலின் கரங்களோ
ஒட்டிய மணற் துகள்களை
தட்டி வழியனுப்பிகொண்டிருந்தன

வீட்டிற்கு செல்ல வேண்டும்
நேரமாகிக்கொண்டு இருக்குது
கணவரின் கடைக்கண் பார்வையில்
கனிவான காதல் தொடங்கி

உப்புமா பொங்கலாகிப்போய்
தொட்டுக்கொள்ள ஊறுகாய்
போட்டாலும் மணல் தட்டும்போது
தொடங்கிய காதல் உதிராமல்
தொடர்ந்தது

Unknown said...

வினிதா,

Gymnastics பற்றி எதோ சொல்லவந்து ஏதோ சொல்லிட்டேன்

நான் சொல்ல வந்தது:

புதுக் கவிதையும் Gymnastics ஒன்னு என் பார்வையில்.என் சொந்த கருத்து.

வளைந்தும் நெளிந்தும் வித விதமாக பல்டி அடித்துவிட்டு தரையில் லாண்ட் ஆகும் போது "பொத்" அல்லது " சொத்" என்று விழாமல் ஒரு (பினிஷிங் டச் poeticகாக )
நளினமாக கால்களை ஊன்றி பாலன்ஸ் செய்த்து நிற்க வேண்டும்.

DIVYA said...

அருமை வினிதா!

Vinitha said...

Thanks K.Ravishankar and Divya.

anujanya said...

நல்லா இருக்கு வினிதா. ரவியின் கமெண்டும் சரிதான்.