கந்தசாமி சாஸ்த்ரிகளின் ஒரே மகன் கார்த்திக் என்றழைக்கப்பட்ட கார்த்திகேயன்.
அப்பா பெயரை மகனுக்கு வைத்தார் கந்தசாமி சாஸ்த்ரிகள்!
பிறந்து மூன்றாவது வருடம் சங்கீதத்தில் திளைக்க ஆரம்பித்தான்!
அவன் பிறந்த போது, கந்தசாமி தம்பதியினருக்கு கல்யாணம் ஆகி இருபது வருடம் ஆகியிருந்தது. சங்கீத குடும்பம். ஆசையாய் பெற்ற ஒரே மகனை வளர்த்தார்கள்.
பத்தாவது வயதில் பாட்டு போட்டிகள், கச்சேரிகள் என திளைத்தான்.
காம்போதி, தோடி என்று சங்கீதத்தில் விற்பன்னன் ஆனான்.
பள்ளியிலும், கல்லூரியிலும் படித்த போது, அவன் தான் ஆஸ்தான பாடகர். ரேடியோ, டிவி என்று எல்லா போட்டிகளிலும், தனியாக சில போட்டிகளிலும் வெற்றி பெற்று எல்லோரையும் சந்தோசமடைய செய்தான்!
பத்திரிக்கையில் இருந்து நிருபர்கள் துரத்தி துரத்தி பேட்டி கண்டார்கள்!
பெரும் தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள் என்று நட்பு வளர்ந்தது!
சங்கீதத்தில் ஊறி திளைத்து ஒரு குடுமபத்தில் இருந்து பெண் பார்த்தார்கள். சங்கீதா என்ற பெயர். பெயருக்கேற்ற சங்கீத ஞானம். அழகு மற்றும் குணம் அற்புதம். அருமையான ஜோடி...
திருமணம். ஸந்தோஸம். ஆனால் சங்கீதமே எல்லை ஆனது. குழந்தை இல்லை.
பெயரும், பொருளும், பெருமை சேர்ந்து வளர்ந்தது.... உலகம் எல்லாம் சுற்றினான்.அன்பு மனைவியாக, கூடவே இருந்து வாழ்க்கை நடத்தினாள் சங்கீதா!
காலம் ஒடியாது, குழந்தை மட்டும் ஹு..ஹும்...
இருபது வருடமாக குழந்தைக்கு முயற்சி செய்தார்கள். கடைசியாக சங்கீதா கர்பமானாள். தெய்வத்தின் கிருபை! மருந்து மகிமை!
கார்த்திக், அவர் மனைவியை மிகவும், பத்திரமாக பார்த்துக்கொண்டார்.
கச்சேரிகள் குறைந்தன, பொறுமையாக காத்திருந்தார்கள்... ஒன்பது மாதங்கள் கழிந்து ஒரு நாள் அவளுக்கு பிரசவ வலி...
"உங்களுக்கு ஒரு ஆண் பிள்ளை பிறந்திருக்கு!" என்றார் நர்ஸ்.
"அப்பா பேரை குழந்தைக்கு வச்சுடுங்க" என்கிறார் சங்கீதா. சந்தோசமாக தலையாட்டுகிறார் கார்த்திகேயன்!
"என் செல்லம், கந்தசாமி!"...
கந்தசாமி பிறந்து மூன்றாவது வருடம் சங்கீதத்தில் திளைக்க ஆரம்பித்தான்!
...
காலம் சுழல்கிறது!
இன்று விஷ்ணுபுரம் பரிசளிப்பு விழா! வருக!
7 hours ago
10 comments:
//தெய்வத்தின் கிருபை! மருந்து மகிமை!
//
:))
//இந்த கதையை போட்டிக்கு அனுப்பலாம் என்று உள்ளேன். தேறுமா சொல்லுங்கள்!
//
தேறுமா தேறாதாவெல்லாம் அடுத்த விஷயம்.முதலில் அனுப்புங்கள்.
நல்லாதாங்க இருக்கு.....போட்டி என வந்துவிட்டால்...தேறுமா தேறாதா என கவலைப்பட கூடாது....அனுப்பி வையுங்க.....
நன்றி! நன்றி!
டைட்டில் இமேஜ் கொடுத்த சுகுமாருக்கு ரொம்ப தேங்க்ஸ்!
நல்லா இருக்கு!
நல்ல இருக்குங்க கதை. ஷார்ட் அண்ட் ஸ்வீட்.
பார்டிசிபேசன் முக்கியம். வெற்றி பெற வாழ்த்துக்கள்!
ungal peyar unga pattyin peyara??
வெற்றி பெற வாழ்த்துகள் ;வாழ்க்கை ஒரு வட்டமுனு சொல்லி இருக்கிங்க ;)
நம்ம கதைய படிச்சிட்டு சொல்லுங்க
காதலுக்கு கண்ணில்லை ? - உரையாடல் சிறுகதைப்போட்டிக்கான சிறுகதை.
கமன்ட்சுக்கு நன்றி.... நன்றிகலந்த வணக்கம்!
என் பெயர், சுப்ரபாதத்தில் இருந்து எடுத்தாக அப்பா சொல்லுவார்!
Nice vinitha. My best wishes for your win.
Post a Comment