பந்த் என்று சொல்லிவிட்டு, சினிமா போட்டு (இரட்டை அர்த்த வசனங்கள் படம் வேறு) கேபிள் டிவி கேவலப்படுத்துகிறது தமிழ்நாட்டு அரசு.....
தமிழ்நாட்டில் இருந்து அனைவரும் ஓடி விட வேண்டும் பக்கத்து மாநிலங்களுக்கு.
பந்த் என்ற பெயரில் நடக்கும் கூத்து. அதனால் எங்கள் அபார்ட்மென்டில், கேபிள் டிவி புறக்கணிப்பு செய்துள்ளோம். லோகல் கேபிள் ஆபரேட்டரை அழைத்து கேபிளை எடுத்து போக சொன்னோம்.
நீங்கள் அனைவரும் தமிழ்நாட்டில் இதை செய்ய வேண்டும். அப்போது தான் மாறன் ப்றேதர்ஸ் மற்றும் கலைஞர் டிவி ஆட்கள் ஆட்சி மட்டும் செய்வார்கள்.
வருமானத்தை கட் செய்தால் அடங்கிவிடுவார்கள்.
விஜயகாந்த் கட்சி தான் இந்த முறை அதிக இடங்களை அள்ளப்போகிறது... இந்த தி,மு.க, அ.தி.மு.க அவ்வளவு தான். வாழ்க வளமுடன்.
**********
நாளை வேண்டுமென்றால் இருக்குது டிஷ் டிவி. (தமிழ்நாட்டுக்காரன் சொந்தமான ஐட்டம் வேண்டாம்).
இலங்கையில் நடக்கும் போர், என்ன ஆகும் எனத் தெரியவில்லை.
இங்கே இலங்கைக்கு பிழைப்புக்காக நாடு விட்டு நாடு சென்றவர்கள் ( மொரிசியஸ், வெஸ்ட் இண்டீஸ் உதாரணம் எடுத்துக்கொள்ளுங்கள் ) அங்கு மக்களோடு ஒற்றுமையாக இணைந்து வாழ வேண்டும். அங்கும் ஜாதி, மதம் , மொழி என்று பாகு பாடு தான் இத்தனை அழிவிற்கும், முக்கியமாக, மக்கள் பணம் கொடுத்து டேரரிசம் வளர்த்து இப்போது கஷ்டப்படுகிறார்கள்... ( ஒரே சர்வதிகார தலைவன் முப்பது ஆண்டுகளாக)... அங்கிருக்கும் தமிழர் அனைவருக்கும் அது ஒரு இழுக்கு. மாபியாத்தனம்.
தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்து, வாழ்வது, லோகல் மக்களுக்கு கொடுமையாகும்.
என் அப்பா அங்கிருந்து வந்து, கொண்டு வந்த சொத்தில் தான் வியாபாரம் செய்து வாழ்க்கை அமைத்தார். எவ்வளவு நாட்கள் தான் தண்டல் கட்ட வேண்டும், தமிழ் என்ற பெயரால்.
சிங்கப்பூர், மலேசியாவில் தமிழ் மூலம் என்ன நடக்கிறது? தமிழர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.
இன்று விஷ்ணுபுரம் பரிசளிப்பு விழா! வருக!
13 hours ago
5 comments:
//என் அப்பா அங்கிருந்து வந்து, கொண்டு வந்த சொத்தில் தான் வியாபாரம் செய்து வாழ்க்கை அமைத்தார் //
கண்டி,நுவரேலியா போன்ற மலையகத்தில் உள்ள தமிழர்களும், கொழும்பில் உள்ள தமிழர்களுமே இங்கிருந்து 1800 களின் இறுதியில் அங்கு சென்றனர். ஆனால் யாழ்குடா,திரிகோணமலை,வன்னிப் பகுதியைச் சேர்ந்த தமிழ் மக்களின் பூர்வீகமே அதுதான். அவர்கள் இங்கிருந்து சென்றவர்கள் அல்ல. உங்கள் தந்தையார் இங்கிருந்து சென்றவர்,இங்கேயே வந்துவிட்டார். ஆனால் அதையே பூர்வீகமாகக் கொண்ட அம்மக்களின் மனநிலையை உணர்ந்து பாருங்கள்.
இன்றைக்கும் உலக அளவில் அவர்களை தமிழகத்தில் இருந்து சென்றவர்கள் என்று நினைப்பதுதான் வருத்தமாக உள்ளது.
http://www.hindu.com/2009/04/24/stories/2009042457550100.htm
மேலே உள்ள விஷயம், எதை காட்டுகிறது?
மக்கள் கூட்டத்தை பினயமாக வைத்து உயிர் தப்புகிரவன் எவனாக இருந்தாலும் வாழ தகுதியில்லாதவன்.
அந்த தமிழருக்கு நான் தலை வணங்குகிறேன், அவர்கள் வாழ்வில் விடிவெள்ளி மலரட்டும்!
அப்புறம முக்கா வாசி நாட்டில் ( அரேபிய தவிர) மூணு நாலு வருஷம் இருந்த போதும், சிடிசன் ஆகிவிடலாம். அப்புறம் அந்த நாடு நம் நாடு.
புலம் பெயர்ந்த தமிழர்கள், கனடா மற்றும் மேலை நாடுகளில் அட்டகாசமாக வாழ்கிறார்களாம். எனக்கு ஒரு வாய்ப்பு கிட்டவில்லை.
//நாளை வேண்டுமென்றால் இருக்குது டிஷ் டிவி. (தமிழ்நாட்டுக்காரன் சொந்தமான ஐட்டம் வேண்டாம்).
//
உங்களுக்கு யார் மீது கோபம்.. கேபிள்டிவிகாரரிடமா.. அல்லது மாறன் ப்ரதர்ஸ்மீதா.. டி.டி.எச் வாங்கினாலும் அதே டபுள் மீனீங் வசனம் தான் வரப்போகிறது.. எதையாவது எழுதணும்னு ஏன் தல எழுதறீங்க..
அன்பு சகோதரி,
நீங்கள் சொல்வது போல் கிடையாது. சிங்கப்பூர் மலசிய, ஸ்ரீலங்கா நாடுகளில் இருக்கும் சாலை முதல் சோலை வரை தமிழ்ந்னின் ரத்தமும் வியர்வையும் .
அடிப்படயில் நாம் மிக கடுமையான உழைப்பாளிகள் . செஅமிபது அதிகம். இது தன ஸ்ரீலங்கா சிங்களன் அவனை விட நாம் பொருளாதார ரீதியில் மேம்பட கரணம். அவன் பொறாமையில் அடிகிரன். என்னுடைய எட்டு அல்லது ஒன்பது வயதில் எங்க ஊரில் தமிழ் ப்போரளிகள் நிதி திரட்டும் பொது வாய்த்த படங்கள் இன்னும் மறக்க முடியல?
எந்த தேசத்தில் பெண்கள் மீது பாலியல் வல்லுரு நடந்தாலும் அது கண்டிக்கப்பட வேந்தியது.
அப்பா அண்ணன் முன்னால் ஒரு பெண்ண பாலியல் வல்லுரு செய்வதை நினைத்து பாருங்கள்.
முப்பது வருடமாக ஒரே தலைவர். காரணம் அவர்தான் நம்பகத்தன்மை முகுந்த ஒருவர்க புலம் பெயர்த தமிழர்களால் ஏற்று கொள்ளபட்டவர்.
இல்லைஎன்றால் எம்ஜீயார் அவருக்கு கோடிகணக்கில் பணம் கொடுப்பாரா?
சிங்கப்பூர்ல சிங்கப்பூர் தமிழன மலாய் & சீன மக்கள் மதிப்பது கிடையாது.
சிங்கப்பூர் தமிழன் இந்தியாவில் இருண்டு வேலைக்கு போன எங்கள மதிக்க மாட்டங்க? உண்மை.
அனால் ஈழ தமிழன் எங்கு இருந்தாலும் தமிழுக்காக வுஇரை கூட கொடுப்பன்.
ஈழத்தில் நடுக்கும் கொடுமை ஒரு மின் அஞ்சல் எனக்கு வந்தது. அதை பார்த்தல் ரெண்டு நாளைக்கு சாப்பிட முடியாது.
தல இல்லாத குழந்தை, வயிறு கிழித்து குழந்தை எடுத்து கொலை செய்து,தாய் நிற்வன்மாக?
என்ன நடத்தலும் சரி. சிங்களன் செய்வது இன படுகொலை. புலிகள் செய்வது இன விடுதலை போராட்டம்
அருண், உங்கள் கருத்துக்கு நன்றி.
முதலில் நம் வீட்டை பார்ப்போம் ( உணவு, உடை, உறைவிடம்...)
அப்புறம் நாட்டை பார்க்கலாம்.
ஒருவனின் ரத்தத்தில், சர்வாதிகாரி போல நீச்சல் குளம் எல்லாம் கட்டி வாழ்ந்த (இப்போது மடியும் தறுவாயில் இருக்கும் ஒருவனுக்கு) சப்போர்ட் செய்வது நியாயம் இல்லை.
எமக்கு இன்னும் எப்படி அடுத்த வேலை சோறு சம்பாரிக்க வழி என்ன என்று தெரியாது!
என் குடும்பம் மதத்தால் தவிக்கும் தவிப்பு, யாரிடம் சொல்ல?
Post a Comment