நேற்று எங்கள் குடும்ப நண்பர் ஒருவர், அவரது கல்யாண விருந்து கொடுத்தார்.(சிங்கப்பூரில் கல்யாணம் செய்துள்ளார் அதனால் இங்கு எங்களுக்கு ஒரு பார்டி வைத்தார் ;-) )
மதியம் வெய்யில் கொடுமை. எங்கள் பழைய ஏழு வருட ஏசி மக்கர் செய்ததால், புது ஏசி (கொரியன் கம்பெனி) ஒன்று காலையில் ஆர்டர் செய்தோம். மாலை ஐந்து மணிக்கு வந்து பிட் செய்தார்கள். பழையதுக்கு ஒரு விலை கூட கொடுத்தார்கள்.... குழந்தைகள் தூக்கம் கோவை போல இருக்கும். கரண்ட் தான் கேடு.
இரவு பூந்தமல்லி வெஸ்லி ஸ்கூல் முன்னால் நம்பர் 91, இருக்கும் ஒரு ஸ்பா மற்றும் ரெஸ்டரன்டில் ஏற்பாடு. அந்த நண்பரின் நண்பர்கள் முதலீட்டாளர்களாம். பெயர் வாயில் நுழையாது ஒன்றல்ல. எதற்கு வீண் விளம்பரம்?
உணவும் நல்ல விலை தான். பொன்னுசாமியை விட இரு மடங்கா இருக்கும்! இருந்தாலும், அதிகம் சாப்பிடும் (குழந்தைகள், கேட்கும் போன்லஸ் சிக்கேன்) போன்றவை, குறைவாகவே செலவானது. காரணம், விலையா, அங்கு புது இடம் என்பதால, அல்லது ருசியா?
நண்பருக்கு புது மண வாழ்வுக்கு வாழ்த்து சொல்லி, நன்றி கூறினோம். ( அருமையான இடம் கூட, மூன்று மணி நேரம் மொத்தம் செலவானது)
எப்படி முதலில் நன்றாக இருந்து பின்னால், பல ஹோட்டல்கள் சுமார் ஆகி, பெயர் கெட்டுப்போனால் மீண்டும் நல்ல உணவு கொடுப்பார்கள், அது மாதிரி ஆகாமல் இருந்தால் சரி. வாழ்த்துக்கள்.
சிறு வயதில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு எதிரில் இருக்கும் புஹாரியில் தான் பிரியாணி வாங்கும் வழக்கம். ஊருக்கு போகும் போது, கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ஏறும் முன், அங்கு லன்ச் வாங்கும் பழங்கால பழக்கம்...
சரி சரி, எலெக்சன் சமயத்தில் எங்கள் பக்கத்து வீட்டுக்காரர் வீட்டில் தினமும் பிரியாணி தான்.
கலாமின் கனவு
7 hours ago
3 comments:
chumma perai sollunga :)
ஓசில பிரியாணியா ?? :) பாத்துங்க காக்கா பிரியாணியா இருக்க போகுது :)
Influence.
காக்கா பிரியாணியா?
அஞ்சு கோடி ரூபா முதலீடு போட்டிருக்காங்க. காக்கா பாவம்!
You can read about the place where we went to....
Influence
Post a Comment