Monday, August 9, 2010

மீண்டும் எழுதுகிறேன்

நீண்ட நாட்கள்... எழுதவில்லை. என் ஆங்கில பதிவில் மூன்று பதிவுகள் போட்டேன்... அதுவும் இமெயிலில் இருந்து கட் & பேஸ்ட் ... மேலும் அங்கு நேரம் கிடைக்கவில்லை.

கணவர் வேலை காரணமாக யுரோப் சென்றதால்... சம்மர் வெகேசன் ( மார்ச் இறுதி முதல் ஜூன் முதல் வாரம் வரை ) நாங்களும் டூசல்டார்ப் சென்றோம். அவர் அங்கு தான் இருக்கிறார். பெங்களூரு வந்த ஒன்பது மாதங்களில், நல்ல வேலை என்று நம்பி வந்த கம்பெனி செயலற்று போனதால்... பெப்ரவரி நடுவில் அவர் இந்த புது கம்பெனியில் சேர்ந்தார். உடனே ஆறு மாதத்திற்கு அவருக்கு புது ப்ரொடக்ட் வேலை. அதற்கு ஆறு மாதம் ஆன்சைட். கம்பெனி மூலம் (விமானத்திற்கு ஐ.டி.) இப்போது ஜெர்மனியில். இந்த மாதம் கடைசியில் திரும்புகிறார்.

நிறைய இடங்கள் பார்த்தோம். அதை பற்றி மெதுவாக எழுதுறேன். இத்தாலியில் சியன்னா என்ற இடம் சென்றது மிக அருமை. ஜூஸ் படுகொலைகள் நடந்த இடமான சென் சப்பாவிற்கும் சென்றோம். நிறைய இடங்களுக்கு ட்ரெயினில் தான் சென்றோம். யுரோ ரெயில் பாஸ் கட்டணம் குறைவு.

எங்கு சென்றாலும் நிறவெறி ஆதிக்கம் இருக்கின்றது. Are you SriLankan என்று சில இடங்களில் கேட்டார்கள். ஏன் என்று தெரியவில்லை.

ஜெர்மனியில் படிப்பு செலவு ஒரு குழந்தைக்கு மாதம் முன்னூறு யுரோ ஆகுமாம். நமக்கு கட்டுபடி ஆகாது. மேலும் சில பள்ளிகளில் வருமானம் பொறுத்து இலவசமாம்.


***

சரி அப்துல்லா அண்ணன் குறிப்பிட்டிருக்கும்

பிரபல பெண் பதிவருக்குப் பகிரங்கக் கடிதம் பதிவில் உள்ள பெண் யார்?


மீண்டும் கலகமா?

2 comments:

எம்.எம்.அப்துல்லா said...

நீங்கள் அண்ணன் என்று அழைக்கும் அளவிற்கு இன்னும் என்மேல் மரியாதை வைத்து இருக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. எவரும் எதுவும் சொல்லிவிட்டுப் போகட்டும்.

எம்.ஞானசேகரன் said...

சுவாரஸ்யமான வலைப்பதிவு. இன்றுதான் பார்க்க நேர்ந்தது. உங்களுக்கு ஓய்வி கிடைக்கும் போது என்னனுடைய இந்த http://kavipriyanletters.blogspot.com/ வலைத்தளத்திற்கும் வருகை தாருங்கள்.