
எப்படி மடையர்களும் ப்ரில்லியன்ட் கோச்சிங் மூலம் ஐ.ஐ.டி க்கு சென்று வாழ்க்கையில் முன்னேறுகிறார்கள் ( ? ) என அப்பட்டமாக சொல்கிறார்கள். சேடன் பகத்தின் சொந்த அனுபவம் போல? எல்லோரும் என்ன ஐ.ஐ.டி படித்தவுடன் அமெரிக்காவா செல்கிறார்கள்?
இந்தியர்களின் மக்கடிக்கும் கலாசாரம், வாத்தியார்களை சோப்படித்து மார்க் பெறுவது... (!) பணத்தால் எல்லாம் சாதிப்பது ( டூஷன், காலேஜ் சீட், எக்செட்ரா ... உண்மையோ உண்மை ) என்று காட்டுகிறார்கள்...
இந்த படத்தை பார்த்து நம் கல்வி தொழில் துறை மந்திரிகள் மாறி, வீட்டில் குழந்தைகளுக்கு ஹோம் வரக் கொடுப்பதை நிறுத்தி முன்னேற அசைன்மண்ட்ஸ் கொடுக்க வழி செய்ய வேண்டும். ( இப்போது என் மகன் டிஸ்கவரியில் க்ரோகொடாயில் வெர்சஸ் லயன் பார்கிறான்... )
வாழ்க்கையில் நாம் அடிக்கடி சந்திக்கும் மடையர்களை வெகுவாக கவரும் வண்ணம் இருக்கு இந்த படம். அதுவும் அந்த கல்யாணத்தில் சென்று நல்லா சாப்பாடு சாப்பிடும் திட்டம்... அஹா...
மூன்று நண்பர்கள் முற்றிலும் மடையர்கள்... ஒரு ஹிந்து, ஒரு முஸ்லிம் ஒரு கிறிஸ்துவர் என்று தேசிய மத ஒருமைப்பாடு மாதிரி காட்ட நினைத்து, கடைசியில் டப்பிங்கில் சொதப்பி இருக்கிறார்கள்... போஸ்டர் கலரில் ரெட் ( ஹிந்து ), ப்ளூ ( கிறிஸ்டியன் ) மற்றும் க்ரீன் ( முஸ்லிம் ) என காட்டுகிறார்கள்.
வினோத் சோப்ராவின் மகன், சேடன் பகதிர்க்கு எதற்கு அவ்வளவு பெரிய தொகை கொடுத்தார் என தெரியவில்லை! மட்டமான கதை. தமிழில் ப்ரெண்ட்ஸ் என வந்த கதை போல கொஞ்சம் இருக்கு. கொஞ்சம் ஷாஜகான் மாதிரியும் இருக்கு. ( சில காட்சிகள்! ).
சில டையலாக்ஸ் எரிக் சீகலின் The Class நாவல் வசனம் போல இருக்கு....
சரி சரி ராஜ்குமார் இராணியின் டைரக்சனில் இதுவும் ஒரு முன்னாபாய் லெவல் வெற்றி பெரும்.... கஜினி விட இது வசூலில் சூப்பராம்!
இந்த வருடம் விடுமுறைக்கு பணம் கஷ்டமாக இருப்பதால், சிம்லா மற்றும் மணலி ட்ரிப் கேன்சல். படத்தில் கொஞ்சம் பார்த்தோம்... சரி சரி..
6 comments:
//போஸ்டர் கலரில் ரெட் ( ஹிந்து ), ப்ளூ ( கிறிஸ்டியன் ) மற்றும் க்ரீன் ( முஸ்லிம் ) என காட்டுகிறார்கள்.////
இது ஓவரு :)
////வினோத் சோப்ராவின் மகன், சேடன் பகதிர்க்கு எதற்கு அவ்வளவு பெரிய தொகை கொடுத்தார் என தெரியவில்லை! மட்டமான கதை////
அடக் கொடுமையே. நான் படத்தை பாத்து புளகாங்கிதம் அடஞ்சிருக்கேன். நீங்க என்னடான்னா மட்டமான கதைன்னு சொல்லி, நோகடிச்சிட்டீங்களே. :(
மெய்யாலுமே பிடிக்கலையா? ஹ்ம்.
”வல்ல்கையில்” இது ரொம்ப புதுசா ஒருக்கு...!!??
SurveySan, it is a dud story, with obvious story line, with super marketing.... :-)
அண்ணாமலையான், வாழ்க்கையில் ஒருக்கு! :-)
vinitha, check this out
http://www.indianauteur.com/?p=893
SarveySan, tough lingua to understand.
ஸேம் ப்ளட்!
Post a Comment