Wednesday, November 25, 2009

பெங்களூரும் சென்னையும்

நாங்கள் சென்னையிலிருந்து பெங்களூரு வந்து கொஞ்சம் காலம் ஆனாலும், இன்னும் சென்னை மழையை மறக்கவில்லை. ரோடெல்லாம் கந்தலாகி...

இங்கு மழை எப்போது வேண்டுமானாலும் வருகிறது. பெங்களூரில் குடை எடுத்துக்கொண்டு தான் வெளியில் இந்த மழை காலத்தில் செல்ல வேண்டும்!

***

காய்கறி விலை, மற்றும் வீட்டு வாடகை குறைவு. மாதம் எங்கள் குடும்பத்திற்கு ஐந்தாயிரம் குறைவான செலவு எனலாம். ஆனால் சினிமா டிக்கட் விலை, ஹோட்டல் சாப்பாடு விலை அதிகம் தான். வெஜ் கூடத்தான். தேவை இல்லாமல் வெளியில் செல்ல வேண்டியது இல்லை. :-)

கரண்ட் பில் மாத்திரம் அதிகம் செய்துள்ளார்கள். அதில் சென்னை கொஞ்சம் குறைவு!

***

அவர், மைசூர் கம்பெனி ஆபிசுக்கு அடிக்கடி சென்று வரும் வேலை. காலையில் ஆறு மணிக்கு கிளம்பினால் ஐராவட் பஸ்ஸில் சென்று சாயந்திரம் ஒன்பது மணிக்கு வீடு திரும்பிவிடுகிறார்! இரண்டரை மணி நேரம் தான் - சூப்பர் பஸ் சர்வீஸ். இனி ரோடு சரி செய்தால், புது ரோடு வேறு வருதாம் , நூற்றி முப்பது கிலோமீட்டர்கள் ஒன்றரை மணி நேரத்தில் கடக்கலாம்! ஆனால் இந்த சிட்டிக்குள் பத்து கிலோமீட்டர் போக வர இரண்டு மணி நேரம் வேண்டும்!

***

இந்த பேன்க் வட்டி விஷயம் கொஞ்சம் புரியவே இல்லை. ஐந்து லட்சத்திற்கு, பெர்சனல் லோன் பதினைந்து பர்சன்ட் வட்டி என்றால், மாதம் கொஞ்சம் கொஞ்சம் கட்டினால் - இரண்டு வருடத்தில் எப்படிங்க மொத்தம் கட்டுறது எழு லட்சம் வரும்? புரிந்தவர்கள் சொல்லுங்க!

இன்னொரு கொடுமை, கடன் வாங்கிய இரண்டாவது மாதம் மொத்தமாக திருப்பி கட்டினால் ( பணம் கிடைத்து சென்றோம் ) ஆறு மாதம் வரை ஈ.எம்.ஐ தான் கட்டணுமாம். பிறகு அவுட்ச்ட்டேன்டிங் அமவுண்டில் நான்கு பர்சன்ட் அதிகம் சேர்த்து கட்டலாம் என்றார்கள். தலை சுற்றுது.

நல்ல வேலை, அபார்ட்மென்ட் லோனில் அந்த அமவுண்ட் குறைத்து கடன் பெறுவோம்!

கடன் சுமை தான் வாழ்கையில். சொந்த வீடு வேண்டும் என்றால், கையில் மொத்த காசோடு தேடுங்கள்.

***

நிறைய விசேஷங்கள் இங்கு. அவருக்கு சொந்தம் இங்கு அதிகம். பட்டு சேலைகள் அதிகம் கட்ட வேண்டி உள்ளது.

இந்த Silk பட்டு ஜாக்கெட் ( லைட் கலர் ) மாத்திரம் அக்குள் வியர்வை கறை ட்ரை க்ளீனிங் செய்தாலும் போகவில்லை. எப்படி அதை சரி செய்வது? விஷயம் தெரிந்த தோழியர் உதவுங்கள்!

4 comments:

ராமலக்ஷ்மி said...

//ஆனால் இந்த சிட்டிக்குள் பத்து கிலோமீட்டர் போக வர இரண்டு மணி நேரம் வேண்டும்!//

உண்மைதான். ஆனாலும் பெங்களூர் பிடித்துப் போகும் சீக்கிரமே:)!

DIVYA said...

Nice post! நிச்சயமா எனக்கு பட்டு ஜாக்கெட் சலவை பற்றி தெரியாது!

Vetirmagal said...

Hi,
I chanced upon your blog, and was attrctd to your question on washing silk blouses to remove sweat smell.

I try with little baking soda( cooking soda) and wash . It does make a difference.

:-)

Vinitha said...

Hi Vetrimagal,

It is not sweat smell. It is the sweat stain, that stays in in Silk Jackets.

There is no solution, that I have heard from my mom and grandma.