Saturday, October 31, 2009

டிஸ்லெக்சியா

கதிரவனுக்கு அன்று பெரிய தலைகளோடு மீட்டிங்.

சில கல்லூரிகள் முதல்வர்கள், சில வருமான வரி துறை அதிகாரிகள் எனக்கூட்டம்.

ஸ்டேட் செக்ரடரி என்றால் சும்மாவா?

மாநில அரசாங்கம் ஒரு ஆர்டர் போட்டிருந்தார்கள். அதாவது பள்ளிகளில் ( தனியார் ) படிக்க வரும் குழந்தைகள் சிலருக்கு தனி கவனம் தேவைப்படுவதால், அதற்கு சிறப்பு பயிற்சி கட்டணம் முழுவதும், வருமானவரி கழிவிர்க்கு மத்திய அராசாங்கத்தின் ஒப்புதல் பெற்று தந்திருந்தார்கள்...

கல்லூரிகளுக்கும் அதை பெற்று தர வேண்டும் என்று கேட்க தான் கல்லூரி முதல்வர்கள் வந்திருந்தனர். அதற்கு என்ன செய்யலாம் என்று யோசனை சொல்ல வருமான வரி அதிகாரிகள்....

"நிச்சயம் பண்ணலாங்க" என்றார்கள் வருமான துறை அதிகாரிகள். அதற்கு சான்று எப்படி வரையறுக்க வேண்டும் என்பதற்கும் வழி கொடுத்தார்கள்.

"நான் சின்ன வயசுலே பட்ட கஷ்டம் யாருக்கும் வரக்கூடாது!", என்றவாறே புன்னகைத்துக்கொண்டார் கதிரவன்.

முப்பது வருடங்களுக்கு முன்...

சிறு வயதில் அவனால் டிஸ்லெக்சியா பாதிப்பால் படிக்கமுடியாமல் ரொம்பவும் திணறி இருந்தான்! வீட்டிலும் மக்கு பண்டாரம் என திட்டு வேறு... எவ்வளவு நாள் தான் அப்பா அம்மா படி என்று அடிப்பார்கள். வாத்தியார்கள் தேறாத கேஸ் என்று சொல்லிவிட்டனர். படிக்கனும்னு ஆர்வம் இருந்தால் தான் படிப்பு வரும் என்று புத்தி சொல்லியும் அவனால் படிக்க முடியவில்லை.

ஆறாவது பெயில் ஆனவுடன் கோவை செல்வபுரம் மாமாவின் சாயப்பட்டறையில் சேர்ந்தவன், நிறங்களோடு நீர்த்துப்போனான்! அவனோடு வேலை செய்த ஒருவர், தனியாக பள்ளியில் படிக்காமல் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத முயன்ற போது, அதை பார்த்து அறிந்து அவனும், முயன்று படித்து, ப்ளஸ் 2 முடித்து, கல்லூரி படிப்பு நேரடியாக முடித்து, சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதி... ஐ.ஏ.எஸ் பாஸ் செய்து, இன்று அவர் ஸ்டேட் செக்ரடரி!

***

இது சர்வேசனின் நச் கதைபோட்டிக்கு சமர்பிக்கிறேன்!

7 comments:

ஷங்கரலிங்கம் said...

நச்! :-)

விஜய் said...

யாருமே தொடாத ஒரு சப்ஜெக்ட்.

dyslexia, dysgrapia ஆகிய குறைபாடுகளுக்கு சிகிச்சை எங்கு பெறுவதென்று தெரியாத நிலை உள்ளது.

உங்களுடைய முயற்சிக்கு வாழ்த்துக்கள்

விஜய்

☀நான் ஆதவன்☀ said...

உண்மை சம்பவத்தை அடிப்படையா கொண்டு எழுதின மாதிரி இருக்கு? இந்த வாரம் புதிய தலைமுறை இதழில் லக்கி இதே போல ஒருத்தரைப் பற்றி எழுதியிருந்தார்.

நல்ல கதை கரு. இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணி கொஞ்சம் பெரிசா கொண்டுவாங்க. கண்டிப்பா இன்னும் அருமையா இருக்கும்.

வெற்றி பெற வாழ்த்துகள்

moe said...

Seems similar to the article from puthiya thalai murai.

"http://www.luckylookonline.com/2009/10/blog-post_31.html"

But you had added a twist. Though it has the needed substance, "Nadai" especially for the "flash back" would have been little engaging.

good luck

வேதாளன் said...

வெற்றி பெற வாழ்த்துக்கள்!! :D

பாலாஜி சங்கர் said...

யாருமே தொடாத ஒரு கதைகளம்
சிறியதாக இருந்தாலும் நன்றாக உள்ளது .

Thamira said...

செய்தி போல இருக்கிறது தோழி. கதைக்கான சுவாரசியம் இல்லை.!