பெட்ரோல் கிடைக்காததால் வண்டி எடுக்க முடியவில்லை, அதனால் சென்னை புத்தக கண்காட்சிக்கு செல்ல முடியவில்லை.
மேலும், இரண்டு பதிவர்கள் (பதிப்பாளர்கள்) எழுதிய விஷயம் பார்த்து, அங்கு போய் வர யோசனை....
அப்புறம்... சில புத்தகங்கள் விற்க தடை? வாய்மொழி உத்தரவு? எமர்ஜென்சி மாதிரி இது. வன்மையாக கண்டிக்கிறேன். பேச்சு எழுத்து சுதந்திரம் இல்லாத நாடு சுடுகாடு என்று யாரோ சொல்லியிருக்கிறார்.
புத்தகங்கள் விற்பனை செய்யக்கூடாது…
குழந்தைகள் ரொம்ப குடைச்சல்... விழா நடத்துபவர்கள், குழந்தைகளை மனதில் வைத்தால், விற்பனையும் கூடும்.
என் கணவர், டிஸ்கவுண்ட் கிடைக்குது என்பதற்காக சில வேண்டாத புத்தகங்கள் அள்ளுவார். சினிமா செலவிற்கு இது பரவாயில்லை....
********
பெட்ரோல் கிடைக்காததால்... ஒரு நல்ல விஷயம்... நல்ல காற்று. வாகனங்கள் குறைவு. தேவையில்ல்லாமல், வண்டிகள் ஓடுவதில்லை. நன்மை.
இது தான் வாகன ஓட்டிகள், தினமும் செய்தால் நன்றாக இருக்கும்.
சரி வெங்காயம் கிலோ முப்பது ருபாய் ஆகிவிட்டது. என்ன செய்ய?
ஒ ... அது ட்ரக்/லாரி ஸ்ட்ரைக். என்ன விசயம்? டேக்ஸ் குறைக்க வேண்டுமாம். எதற்கு? தெரியவில்லை...
புத்தாண்டு
21 minutes ago
2 comments:
அழகான நடை உங்களுக்கு, நிறையத்தான் எழுதுங்களேன்.!
ஸாரி வினிதா, நீங்கள் எழுதிக்கொண்டுதான் இருக்கிறீர்கள், நாந்தான் தெரிந்துகொள்ளவில்லை என்பதை இப்போதுதான் கவனிக்கிறேன், நன்றி வாழ்த்துகள்.!
Post a Comment