பிடிகொழுக்கட்டை வெப் துனியாவில் கண்டது :
தேவையான பொருட்கள்
அரிசி - 1/2 கிலோ
வெல்லம் - 1/2 கிலோ
ஏலக்காய் - 5
தேங்காய் - அரை முடி
செய்முறை
அரிசி மாவு :
பச்சரிசியை நன்கு சுத்தம் செய்து தண்ணீர் விட்டு அலசி நிழலில் உலர்த்தவும்.
அரிசி நன்கு காய்ந்ததும் மாவாக அரைத்துக் கொள்ளவும். வெளியில் கடையில் கொடுத்தும் அரைத்துக் கொள்ளலாம்.
மாவை சுத்தமான கடாயில் கொட்டி நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும். மாவில் இருக்கும் ஈரப்பதம் போகும் வரை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
வறுப்பதற்கு பதிலாக பலரும் ஆவி கட்டுவது உண்டு. அதாவது இட்லி குண்டானில் வெள்ளைத் துணியைப் போட்டு அதில் மாவைக் கொட்டி மூடி விட வேண்டும்.
5 நிமிடங்கள் அடுப்பில் வைத்து இறக்கினால் மாவு நன்கு வெந்து இருக்கும். ஆனால் மாவு உதிரியாகத்தான் இருக்க வேண்டும்.
தற்போது வெல்லத்தை பொடியாக இடித்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பொடித்த வெல்லத்தைப் போட்டு அரை டம்ளர் தண்ணீர் விட்டு பாகு போல காய்ச்சவும்.
அதற்குள் தேங்காயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஏலக்காயை சர்க்கரை வைத்து பொடித்துக் கொள்ளவும். இரண்டையும் மாவில் கொட்டிக் கிளறிவிடவும்.
வெல்லம் நன்கு கொதித்ததும் அதனை சிறிது சிறிதாக மாவில் ஊற்றிக் கிளறவும். மாவைக் கிளறுவதற்கு மத்தின் காம்பு அல்லது கரண்டியின் கைப்பிடிப் பாகத்தைப் பயன்படுத்தலாம்.
மாவு எந்த இடத்திலும் கட்டிப்போய் விடக் கூடாது. தண்ணீரும் அதிகமாகிவிடக் கூடாது. சப்பாத்திக்கு பிசைவது போல் வெல்லம் தண்ணீரை ஊற்றி பிசைந்து அதனை கொழுக்கட்டைக்கு பிடித்து வைத்துக் கொள்ளவும்.
தற்போது இட்லி குண்டாவை தண்ணீர் ஊற்றி ஒரு தட்டு மட்டும் வைத்து அடுப்பில் மூடி வைக்கவும்.
5 நிமிடங்கள் கழித்து 10 கொழுக்கட்டைகளை அடுக்கி மூடி விடவும். சிறிது நேரம் கழித்து 15 கொழுக்கட்டைகளை அடுக்கவும். இப்படியே சிறிது சிறிதாக அடுக்கி 15 நிமிடம் வேக விடவும்.
இட்லி குண்டானை இறக்கி கொழுக்கட்டைகள் உடையாமல் எடுத்துப் பரிமாறவும்.
ஆனந்த சைதன்யா தியானமையம் திறப்புவிழா
9 hours ago
No comments:
Post a Comment