Thursday, December 31, 2009
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
எல்லாம் வல்ல இறைவன் ( இயற்கை ) எல்லோருக்கும் சந்தோசம் கிடைக்க வழி செய்யட்டும்.
Monday, December 28, 2009
மூன்று மடையர்கள் ( 3 Idiots )
சேடன் பகத்தின் Five point someone நாவல் மாதிரி இல்லாமல் பொம்மன் இராணியின் நடிப்பால் படம் அருமையாக நகர்கிறது. கரீனா கபூர் (? ) ஒரு நல்ல நடிகர் என்றும் தெரிகிறது.
எப்படி மடையர்களும் ப்ரில்லியன்ட் கோச்சிங் மூலம் ஐ.ஐ.டி க்கு சென்று வாழ்க்கையில் முன்னேறுகிறார்கள் ( ? ) என அப்பட்டமாக சொல்கிறார்கள். சேடன் பகத்தின் சொந்த அனுபவம் போல? எல்லோரும் என்ன ஐ.ஐ.டி படித்தவுடன் அமெரிக்காவா செல்கிறார்கள்?
இந்தியர்களின் மக்கடிக்கும் கலாசாரம், வாத்தியார்களை சோப்படித்து மார்க் பெறுவது... (!) பணத்தால் எல்லாம் சாதிப்பது ( டூஷன், காலேஜ் சீட், எக்செட்ரா ... உண்மையோ உண்மை ) என்று காட்டுகிறார்கள்...
இந்த படத்தை பார்த்து நம் கல்வி தொழில் துறை மந்திரிகள் மாறி, வீட்டில் குழந்தைகளுக்கு ஹோம் வரக் கொடுப்பதை நிறுத்தி முன்னேற அசைன்மண்ட்ஸ் கொடுக்க வழி செய்ய வேண்டும். ( இப்போது என் மகன் டிஸ்கவரியில் க்ரோகொடாயில் வெர்சஸ் லயன் பார்கிறான்... )
வாழ்க்கையில் நாம் அடிக்கடி சந்திக்கும் மடையர்களை வெகுவாக கவரும் வண்ணம் இருக்கு இந்த படம். அதுவும் அந்த கல்யாணத்தில் சென்று நல்லா சாப்பாடு சாப்பிடும் திட்டம்... அஹா...
மூன்று நண்பர்கள் முற்றிலும் மடையர்கள்... ஒரு ஹிந்து, ஒரு முஸ்லிம் ஒரு கிறிஸ்துவர் என்று தேசிய மத ஒருமைப்பாடு மாதிரி காட்ட நினைத்து, கடைசியில் டப்பிங்கில் சொதப்பி இருக்கிறார்கள்... போஸ்டர் கலரில் ரெட் ( ஹிந்து ), ப்ளூ ( கிறிஸ்டியன் ) மற்றும் க்ரீன் ( முஸ்லிம் ) என காட்டுகிறார்கள்.
வினோத் சோப்ராவின் மகன், சேடன் பகதிர்க்கு எதற்கு அவ்வளவு பெரிய தொகை கொடுத்தார் என தெரியவில்லை! மட்டமான கதை. தமிழில் ப்ரெண்ட்ஸ் என வந்த கதை போல கொஞ்சம் இருக்கு. கொஞ்சம் ஷாஜகான் மாதிரியும் இருக்கு. ( சில காட்சிகள்! ).
சில டையலாக்ஸ் எரிக் சீகலின் The Class நாவல் வசனம் போல இருக்கு....
சரி சரி ராஜ்குமார் இராணியின் டைரக்சனில் இதுவும் ஒரு முன்னாபாய் லெவல் வெற்றி பெரும்.... கஜினி விட இது வசூலில் சூப்பராம்!
இந்த வருடம் விடுமுறைக்கு பணம் கஷ்டமாக இருப்பதால், சிம்லா மற்றும் மணலி ட்ரிப் கேன்சல். படத்தில் கொஞ்சம் பார்த்தோம்... சரி சரி..
Saturday, December 26, 2009
ஒரு வழியாக அவதார்
ஒரு நவீன விட்டலாச்சார்யா படம் மாதிரி இருந்தது!
இந்த உயிர் ட்ரான்ஸ்பர் விஷயம், ரொம்ப ஓவர். கூடு விட்டு கூடு டைப். பாவம் யாரோ ஒரு இந்தியரின் கதையை சுட்ட மாமேதை, ஜேம்ஸ் கேமரூன்!
கடைசி பிரேமில் கண்ணை திறக்கும் நவி ஹீரோ, அடுத்த பாரட்டுக்கு ஆயுதம் ஆகிறாரா... பத்து வருட உழைப்பு. மூணு பார்ட் வந்தால் தான் ஹாலிவுடுக்கு நிம்மதி.
அப்புறம் வருடம் ஒரு ஸ்பெஷல் எப்பக்ட்ஸ் ஆஸ்கர்.
காசு, அவார்ட்ஸ் எல்லாம் அள்ளும்.
இப்போவே பெங்களூரு வீதிகளில் 2D திருட்டு டிவிடிக்கள் விற்பனையில்.
Tuesday, December 1, 2009
உடல் எடை
இந்த பதிவு அருமை. எழுதியவர் லதானந்த்.
போசி
செய்யும் வேலை பொறுத்து கேலரிஸ் தேவையை உடல் சொல்லாது. நாம் தான் அனுபவபட்டு சாப்பிட வேண்டும்.
நிறைய நீர் பதார்த்தங்கள் குடித்தால் / சாப்பிட்டால் - வயிறு பெரிதாகும் என்று தாத்தா பாட்டி காலத்தில் சொல்வது உண்மை தான் போல.
அது போக என்டிடிவி குட் டைம்ஸ் போன்ற சேனல்கள் சமையல் கலை பற்றி அதுவும் இதுவும் செய்து காட்டி அட்டகாசம் செய்கிறார்கள். சாப்பிட்டு வெயிட் போட வேண்டியது தான். ( வெயிட் குறைக்க வழி என்ற போர்வையில் )
நம்ம தமிழ் சேனல்கள் பற்றி சொல்ல போவதில்லை. எல்லாமே வெயிட்டான அயிட்டங்கள் தான்! ( சுவை )
*** லதானந்த் அவர்கள் ப்ளாகில் கமன்டாய் ***
1. சாப்பாட்டை குறைத்து உடற்பயிற்சி ஈடுபடுவதுதான் சிறந்தது.
2. சரியான நேரத்தில் சாப்பிடவும்.
3. எண்ணெப் பதார்த்தங்களை தவிர்க்கவும்.
4. மாமிச உணவு வேண்டவே வேண்டாம்.
5. மதிய உணவில் காய்கறிகள் அதிகமாகச் சேர்க்கவும்.
6. இரவில் பாதி சாப்பாடு அல்லது சிற்றுண்டி பாதி வயிற்றுக்கு மட்டும் சாப்பிட்டு மீதிக்கு தண்ணீர் குடிக்கவும்.
7. பால், தயிர், பச்சை வெங்காயம் (50 கிராம்) சாப்பிடவும்.
8. பசிக்கும்போது நொறுக்குத்தீனி தவிர்த்து தண்ணீர், தக்காளிச்சாறு அல்லது முட்டைகோஸ் சாப்பிடலாம்.
9. மாவுச்சத்து குறைப்பதன் மூலம் படுவேகமாக உடல் எடை குறைய வாய்ப்புண்டு.
10. வயதுக்கேற்ப உடற்பயிற்சியை தேர்ந்தெடுத்து செய்யவும். நடத்தல், ஓடுதல் எதுவாக இருந்தாலும் சிறந்தது.
11. மூட்டு வலி இருந்தால் சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் போன்றவை உகந்தவை.
12. சோம்பேறித்தனமாக வீட்டில் ஓயாது ஓய்வெடுக்காமல் ஏதாவது ஒரு வேலையில் நம்மை ஈடுபடுத்திக் கொண்டால் சக்தி தீர்ந்து உடல் பருமனாவதைத் தடுத்துவிடும்
Thanks to : http://www.darulsafa.com
Saturday, November 28, 2009
மாவீரர் தின உரை
பிரபாகரன் இப்போது உயிருடன் இல்லை என்பது நிரூபணம் ஆகிவிட்டது.
வெளிநாடு வாழும் இலங்கை தமிழ் இனத்தவர், சிறிலங்காவில் வாடும் எம் தமிழர்க்கு உதவி புரிந்திட ஓடோடி வரவேண்டும். தேயிலை தொழிலோ, விவசாயமோ, தெரிந்த தொழிலோ கொண்டு உயிர் வாழ்ந்திட வகை செய்ய வேண்டும். வேலை செய்யாமல் கேம்பில் இருந்து வாழ யாருக்கும்பிடிக்காது.
தொடர்புடைய பதிவு
மாவீரர் தினம்
Friday, November 27, 2009
என்ன சொல்வது?
எப்படி அதை சரி செய்வது? என்ன சொல்வது?
விவரம் தெரிந்த தோழியர் சொல்லவும்!
Wednesday, November 25, 2009
பெங்களூரும் சென்னையும்
இங்கு மழை எப்போது வேண்டுமானாலும் வருகிறது. பெங்களூரில் குடை எடுத்துக்கொண்டு தான் வெளியில் இந்த மழை காலத்தில் செல்ல வேண்டும்!
***
காய்கறி விலை, மற்றும் வீட்டு வாடகை குறைவு. மாதம் எங்கள் குடும்பத்திற்கு ஐந்தாயிரம் குறைவான செலவு எனலாம். ஆனால் சினிமா டிக்கட் விலை, ஹோட்டல் சாப்பாடு விலை அதிகம் தான். வெஜ் கூடத்தான். தேவை இல்லாமல் வெளியில் செல்ல வேண்டியது இல்லை. :-)
கரண்ட் பில் மாத்திரம் அதிகம் செய்துள்ளார்கள். அதில் சென்னை கொஞ்சம் குறைவு!
***
அவர், மைசூர் கம்பெனி ஆபிசுக்கு அடிக்கடி சென்று வரும் வேலை. காலையில் ஆறு மணிக்கு கிளம்பினால் ஐராவட் பஸ்ஸில் சென்று சாயந்திரம் ஒன்பது மணிக்கு வீடு திரும்பிவிடுகிறார்! இரண்டரை மணி நேரம் தான் - சூப்பர் பஸ் சர்வீஸ். இனி ரோடு சரி செய்தால், புது ரோடு வேறு வருதாம் , நூற்றி முப்பது கிலோமீட்டர்கள் ஒன்றரை மணி நேரத்தில் கடக்கலாம்! ஆனால் இந்த சிட்டிக்குள் பத்து கிலோமீட்டர் போக வர இரண்டு மணி நேரம் வேண்டும்!
***
இந்த பேன்க் வட்டி விஷயம் கொஞ்சம் புரியவே இல்லை. ஐந்து லட்சத்திற்கு, பெர்சனல் லோன் பதினைந்து பர்சன்ட் வட்டி என்றால், மாதம் கொஞ்சம் கொஞ்சம் கட்டினால் - இரண்டு வருடத்தில் எப்படிங்க மொத்தம் கட்டுறது எழு லட்சம் வரும்? புரிந்தவர்கள் சொல்லுங்க!
இன்னொரு கொடுமை, கடன் வாங்கிய இரண்டாவது மாதம் மொத்தமாக திருப்பி கட்டினால் ( பணம் கிடைத்து சென்றோம் ) ஆறு மாதம் வரை ஈ.எம்.ஐ தான் கட்டணுமாம். பிறகு அவுட்ச்ட்டேன்டிங் அமவுண்டில் நான்கு பர்சன்ட் அதிகம் சேர்த்து கட்டலாம் என்றார்கள். தலை சுற்றுது.
நல்ல வேலை, அபார்ட்மென்ட் லோனில் அந்த அமவுண்ட் குறைத்து கடன் பெறுவோம்!
கடன் சுமை தான் வாழ்கையில். சொந்த வீடு வேண்டும் என்றால், கையில் மொத்த காசோடு தேடுங்கள்.
***
நிறைய விசேஷங்கள் இங்கு. அவருக்கு சொந்தம் இங்கு அதிகம். பட்டு சேலைகள் அதிகம் கட்ட வேண்டி உள்ளது.
இந்த Silk பட்டு ஜாக்கெட் ( லைட் கலர் ) மாத்திரம் அக்குள் வியர்வை கறை ட்ரை க்ளீனிங் செய்தாலும் போகவில்லை. எப்படி அதை சரி செய்வது? விஷயம் தெரிந்த தோழியர் உதவுங்கள்!
Tuesday, November 3, 2009
நாட்டுக்கு நல்லது செய்வோம்: இருநூறாவது பதிவு
இது எனது இருநூறாவது பதிவு! ஒன்றரை வருடங்களுக்கு மேலாக ஆதரவு அளித்து வரும் வாசகர்க்கு என் நன்றிகள். இதுவரை இருபதாயிரம் பார்வைகள்.
இன்று டைம்ஸ் ஆப் இந்தியாவில் படித்தது - தொடர் டிகிரி மேல்நிலை கல்விக்கு அரசாங்கம் உதவி செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். இப்போது தான் தெரிந்தது, அரசாங்கம் ஒரு மண்ணும் செய்யவில்லை, இதுவரை மிகவும் குறைந்த அளவே பணம் செலவழிக்கிறது என்று.
கர்நாடக அரசாங்கம், ஒரு படி மேலே போய், மாதம் ரூ. இரண்டாயிரம், மேல்நிலை டிகிரி கல்வி படிதவர்குக்கு கொடுக்க யோசனை செய்கிறது. எப்படி வெள்ளை இல்லாதவர்க்கு இப்படி கொடுக்க முடியும்? அவர்களை, தேர்ந்த தொழில் கல்வி கொடுக்க - ஆசிரியர் ஆக வழி செய்யலாம் அல்லவா?
தமிழ்நாட்டிலும் இப்படி ஒரு முறை எம்.ஜி.ஆர் அரசாங்கம் பத்தாம் வகுப்பு படித்தவர்கள் முதல், ஐந்து வருடங்களுக்கு மாதம் இருபது ரூபாய் கொடுத்தாக நண்பர் ஒருவர் கூறுகின்றார்! ( சினிமா பார்க்க கூட அது உதவியிருக்காது... அது வேறு விஷயம்! )
கட்டாய இராணுவம் - சேவை என்று இருக்க வேண்டும் என்கிறார், என் கணவர். நிச்சயம் அவருக்கு அந்த எண்ணம் வர காரணம், அரசியல்வாதிகள் வேலை இல்லா பட்டதாரிகளுக்கு - வேலை கொடுக்கிறேன் என்ற வழியில் - அவர்களை ரவுடிகள் ஆக்குகிறது!
( நாங்கள் வாங்கிய வீட்டிற்கு அட்வான்ஸ் ருபாய் ஐந்து லட்சம் கொடுத்த பிறகு, இன்னும் சில லட்சங்கள் கொடுக்க அவர்கள் கொடுத்த இரு வாரங்களுக்கு பிறகு மேலும் சமயம் கேட்ட போது, முடியாது என்று, படித்த ரவுடிகள் வந்து மிரட்டுகிறார்கள்... 18% வட்டி வேறு முன் பணத்திற்கு வசூல் செய்கிறார்கள்! நல்ல வேலை கணவர், பெர்சனல் லோன் 15% வட்டியில் வாங்கி, கட்டிவிட்டார்! இன்னும் லோன் டிச்பர்ஸ் ஆகவில்லை - காரணம், புதிதாக இங்கு பெங்களூரில் வேலைக்கு சேர்ந்தபடியால்!)
***
சரி வெளிநாட்டு மோகம் கொண்டு அலைகிறார்களே மக்கள் அதற்க்கு என்ன செய்ய வேண்டும்?
என் சித்தி பையன், சொந்த காசில் பெயருக்கு அமேரிக்காவில் வேலை என்ற பெயரில் - மாஸ்டர் டிகிரி வாங்கிய பிறகு, ப்ராக்டிகல் ட்ரெயினிங் சமயம் ரிலேக்ஸ் செய்கிறான். அவர்கள் குடும்பத்திற்கு அது பெருமை. எப்படியாவது நிஜமாக அங்கு வேலை கிடைத்து, ஒரு வசதியான பெண் பார்த்து செட்டில் ஆகிவிடுவான். எல்லோரும் அப்படி இருக்க முடியுமா?
என்னை பொறுத்த வரை, அவன் இந்தியாவில் வந்து பெட்டிக்கடை வைத்து பிழைத்துக்கொள்ளலாம்! ( அவனுடைய அக்காவும், வசதி பார்த்து கட்டிக்கொடுத்த பின்னும், பி.ஈ., எம்.பி.ஏ படித்த பெண், இப்போது மளிகை கடை - டிபார்ட்மென்ட் ஸ்டோரில் கல்லாவில் உட்கார்ந்து இருக்கிறாள்! )
Saturday, October 31, 2009
டிஸ்லெக்சியா
சில கல்லூரிகள் முதல்வர்கள், சில வருமான வரி துறை அதிகாரிகள் எனக்கூட்டம்.
ஸ்டேட் செக்ரடரி என்றால் சும்மாவா?
மாநில அரசாங்கம் ஒரு ஆர்டர் போட்டிருந்தார்கள். அதாவது பள்ளிகளில் ( தனியார் ) படிக்க வரும் குழந்தைகள் சிலருக்கு தனி கவனம் தேவைப்படுவதால், அதற்கு சிறப்பு பயிற்சி கட்டணம் முழுவதும், வருமானவரி கழிவிர்க்கு மத்திய அராசாங்கத்தின் ஒப்புதல் பெற்று தந்திருந்தார்கள்...
கல்லூரிகளுக்கும் அதை பெற்று தர வேண்டும் என்று கேட்க தான் கல்லூரி முதல்வர்கள் வந்திருந்தனர். அதற்கு என்ன செய்யலாம் என்று யோசனை சொல்ல வருமான வரி அதிகாரிகள்....
"நிச்சயம் பண்ணலாங்க" என்றார்கள் வருமான துறை அதிகாரிகள். அதற்கு சான்று எப்படி வரையறுக்க வேண்டும் என்பதற்கும் வழி கொடுத்தார்கள்.
"நான் சின்ன வயசுலே பட்ட கஷ்டம் யாருக்கும் வரக்கூடாது!", என்றவாறே புன்னகைத்துக்கொண்டார் கதிரவன்.
முப்பது வருடங்களுக்கு முன்...
சிறு வயதில் அவனால் டிஸ்லெக்சியா பாதிப்பால் படிக்கமுடியாமல் ரொம்பவும் திணறி இருந்தான்! வீட்டிலும் மக்கு பண்டாரம் என திட்டு வேறு... எவ்வளவு நாள் தான் அப்பா அம்மா படி என்று அடிப்பார்கள். வாத்தியார்கள் தேறாத கேஸ் என்று சொல்லிவிட்டனர். படிக்கனும்னு ஆர்வம் இருந்தால் தான் படிப்பு வரும் என்று புத்தி சொல்லியும் அவனால் படிக்க முடியவில்லை.
ஆறாவது பெயில் ஆனவுடன் கோவை செல்வபுரம் மாமாவின் சாயப்பட்டறையில் சேர்ந்தவன், நிறங்களோடு நீர்த்துப்போனான்! அவனோடு வேலை செய்த ஒருவர், தனியாக பள்ளியில் படிக்காமல் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத முயன்ற போது, அதை பார்த்து அறிந்து அவனும், முயன்று படித்து, ப்ளஸ் 2 முடித்து, கல்லூரி படிப்பு நேரடியாக முடித்து, சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதி... ஐ.ஏ.எஸ் பாஸ் செய்து, இன்று அவர் ஸ்டேட் செக்ரடரி!
***
இது சர்வேசனின் நச் கதைபோட்டிக்கு சமர்பிக்கிறேன்!
நச்
கலந்துக்கலாம்னு இருக்கேன்.
பார்ப்போம்!
போட்டி நிறைய இருக்கு!
பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் இப்பவே அட்டெண்டன்ஸ் போட்டு இருக்காங்க!
:-)
Friday, October 23, 2009
தூத்துக்குடியில் தீபாவளி
கோவைக்கு செல்லவில்லை....
அப்பா அங்கு கிரேனைட் தொழில் விசயமாக ஒரு சில வருடங்கள் இருக்க முடிவு செய்துள்ளார். எக்ஸ்போர்ட் பிசினஸ். போர்ட் இருக்கு அல்லவா! ( கோவையே, நன்றாக இருந்திருக்கும்... பிசினஸ் சரியில்லையாம்! வீடு வாடகைக்கு விட்டு விட்டு சென்று விட்டார்கள். பெங்களூர் ரெண்ட். இரு பெட்ரூம் வீட்டுக்கு ஒன்பதாயிரம் வருகிறது!)
பசங்களுக்கு தசரா லீவு சமயம் கோவைக்கு சென்றது. அதன் பிறகு அவர்கள் மூவ் செய்தார்கள்.
முதலில் இருந்த ப்ளாக் எழுதும் இண்டரேச்ட் இப்போது இல்லை! நிறைய பேர் எழுதுகிறார்கள்.
நானும் எதாவது வேலையில் பிசி... ( நிச்சயமா டிவி இல்லைங்க! )
தீபாவளி அன்று சில பட்டாசுகள் வெடித்தோம். ஏனோ முன் மாதிரி மனம் இல்லை.
டிவி நிகழ்ச்சிகள் எப்படி ?
Thursday, October 15, 2009
Tuesday, September 29, 2009
பெண் அடிமை
இந்த புகைப்படம் இணையத்தில் உலா வருகின்றது. என்னால் கருத்து கூற இயலாது!
***
சரி தெரியாமல் கேட்கிறேன், எப்படி ஒவ்வொரும், குடும்பத்தில் இவர் இவர் என்று ஐடண்டிபி செய்து கொள்வார்கள்? போட்டோ எடுப்பது எதற்காக? முகமாவது காட்டியிருக்கலாம்... துபாயில் பெண்கள் முகம் காட்டி, ஹூக்கா புகைப்பதை - க்ரீக் இன் அருகில் - பார்த்துள்ளேன்!
என் கணவர் வகையில், இந்த கால இள வட்டங்கள் பர்கா அணிவதில்லை! சுடிதார் துப்பட்டா தான்! ( தலையில் இட்டுக்கொள்வார்கள், பெரியவர்கள் முன் ) வெயில் காலத்தில் மிகவும் வேகும் என்று கேள்விபட்டுள்ளேன்! இப்போது பொட்டு வைப்பதும் உண்டு - மெட்டி போடுவதும் உண்டு
ஒன்று கவனிக்க வேண்டும், அராபிய ஷேக்குகள் எல்லாம் வெள்ளை நிறம் கலந்த உடை அணிவார்கள். வெய்யில் காலத்தில் உதவும். கருப்பு துணி வகைகள் சூடு தங்க வைக்கும். வெயில்லில் வெளியில் செல்ல முடியாது! பெண்ணை வீட்டுக்குள்ளே வைத்திருக்க இது ஒரு வகையா?
மற்ற ஆண்கள் பார்க்க கூடாது என்பதற்காக - என்ற வாதம் என்னால் ஏற்றுக்கொள்ள இயலாது.
Wednesday, September 9, 2009
பிராப்திரஸ்து
சென்னை விலைக்கு மிகவும் பரவாயில்லை. பெங்களூரு பன்னர்கட்டா ரோடு மேலேயே உள்ளது. இன்னும் ஆறு மாதத்தில் குடி புகலாம்.... வார்டுரோபுகள் ரெடிமேட் கிடைக்கின்றன. பர்னிசர் மற்றவை இருப்பவை மட்டும் தான்.
கொடுக்கும் வாடகையில் இரண்டு மடங்கு ஈ.எம்.ஐ. வருமாம். சொத்தாகும் எண்ணம், விலை உயர்வு, கையிருப்பு, ஒரு ஊரில் நிரந்தரமாகும் எண்ணம் என பல யோசனைகளில் இது உதவும்.
கல்யாணம் பண்ணிப்பார், வீட்டை கட்டிப்பார் என்று சும்மாவா சொன்னார்கள்! ஒரு வித பயம் வீடு புகுந்து, க்ரகாப்ரவேஷித்து, நன்றாக வாழும் வரை இருக்கும்.
எனக்கும் நண்பர்கள் ஆசியினால் ஒரு வேலை பிராப்திரஸ்து ஆகும் என நம்புகிறேன். ( குழந்தைகள் ஸ்கூல் செல்லும் நேரம் காலை எட்டு முதல் அவர்கள் திரும்பும் மாலை மூன்றரை வரை ).
அடுத்த வெள்ளி முதல் தசரா விடுமுறை, குழந்தைகளோடு கோவையில் பத்து நாட்கள் கழிக்க எண்ணம். ஒரு சிறு ட்ரிப் கேரளா சென்று வர வேண்டும்!
Tuesday, September 8, 2009
திசைநாயகம்
வாஸ்துசாஸ்திர பகவானுக்கு இன்னொரு பெயர் திசைநாயகம்.
நீங்கள் வீடு கட்டி வாழும் திசையை பொறுத்து உங்கள் இல்லம் மன அமைதி, மற்றும் வருமானம், செழிப்பு பெற்று இருப்பீர்கள் என்கிறது மரபு.
மேற்குப்புற வாசல், தெற்குப்புற வாசல் எங்குமே யாரும் வைப்பதில்லை. கடைகள் தவிர. அதற்கு விஷயம் உண்டு.
மேலே உள்ள படத்தில் பார்த்தால், உருவத்தை வைத்தி ஒரு வழியாக ஊகிக்கலாம்...
சரி சயன்டிப்பிக்காக என்ன நடக்கும்? வெய்யில் வீட்டில் மேலே மதியம் விழாது. இரவு வீடு திரும்புவோர்க்கு, சுகமாக இருக்கும், வீட்டில் உள்ள மனைவி , குழந்தைகளுக்கு ஒரு கம்பர்ட் லெவல் அருமை...
***
சரி எதற்கு திடீரென்று திசைநாயகம்? அப்பாவோடு பேசிக்கொண்டு இருந்தேன், நாங்கள் வாங்கப்போகும் வீடு பற்றி... அதில் அடிக்கனக்கு, திசை போன்றவற்றை விவரம் சொல்லி விளக்கினார்!
Saturday, September 5, 2009
நான் வினிதா
நான் தான் உலகில் பெரியவள்
என்று நினைக்க தோன்றுது...
சிறியவர்கள் பெரியவர்கள்
நிறைந்த பேரன்டமடா இது
என்ன சொல்லி யாருக்கு
புரிய வைப்பது...
ஒன்று சொன்னால்
மற்றொன்று என நினைக்கும்
டூப்புவாசிகள் நிறைந்த உலகமடா
நான் ஒன்று நினைத்து எழுத
நீங்கள் ஒன்று நினைத்துக்கொள்ள
காமடி ஆனது வாழ்விலே
கமன்ட்டுக்கள் ரூபத்திலே!
ஆசிரியர் தின வாழ்த்துகள்
கோவையில், களுக்கென்று சிரித்தால், வெயிலில் மண்டி போடும் காலம் இன்னும் இருக்கா தெரியலே. அந்த சிறு வயதில், வாயை பொத்திக்கொண்டு இருப்போம். ( கள்ளம் கபடு இல்லாத வயது அது... கொடுமைங்க! ) வெள்ளிக்கிழமை தலைக்கு குளித்துவிட்டு, பூ வைத்து முடியை கொஞ்சம் விரித்து போட்டு சென்றால், பூ பிரித்து எறிவார் எங்கள் பி.டி. மிஸ். ( ஒரு நாள் காந்திபுரம் பஸ் ஸ்டாண்டை கிராஸ் செய்யும் போது அடிபட்டு இறந்தார் ).
***
என் குழந்தைகள் பள்ளி சுமாரானது தான். பீஸ் மட்டும் அதிகம். ஆனால் ஆசிரியர்கள்... பெண்கள்... மிகவும் அட்டகாசமாக பி.பி.ஒ செல்லும் பெண்கள் போல உடையந்து வருகிறார்கள். பெங்களூரு வந்த பின் என் மகள் லிப்ஸ்டிக் போட்டுக்கொள்ள அதிகம் அடம் பிடிக்கிறாள். :-)
***
ஓய. ராஜசேகர ரெட்டி மரணம், சில தொழில் முறை சம்பந்தங்களால் என் கணவர் குடும்பத்தில் வருத்தம்... கடப்பா ரவுடி என்றெல்லாம் பெயர் இருந்தும், திடீரென வைக்கோ மாதிரி நடை பயணம் செய்து ஆட்சியை பிடித்தவர் ( தன் சக்கரை அளவையும், உடல் எடையும் குறைத்தவர் - அவர் பாடி பில்டர் வேறே - நிமிர்ந்த நடை எப்போதும் ) ... இப்போது மகன் ஆட்சியில் இருக்க விரும்புகிறார்.
கணவர் சொல்லுகிறார், சுவிஸ் வங்கி அக்கவுண்ட் ( கட்சி ) யார் வைத்துள்ளார்களோ, அவர்களுக்கு, ஆட்சி கட்டிலுக்கு சாவி. உண்மையா?
ஆந்திராவிற்கு கேடு காலம் வராமல் இருந்தால் சரி! ( போலி காலேஜ் , வேலை எக்ஸ்பீரியன்ஸ் சர்டிபிகேட், சத்யம், இடம் விற்பனை இப்போ இந்த விபத்து.. )
***
நான் எழுதிய இந்த பதிவை மொழியால் பிரிக்காதீர்கள் நினைக்க வைத்து இந்த பதிவு தமிழன் ஒரு விளக்கம்
எல்லோரும் ஏன் மொழியால் பிரிகிறார்கள்? நாடு முன்னேறுமா?
மெதுவா ஜாதி ஒழிந்துக்கொண்டு இருக்கு, இப்போ இந்த மொழி வித்தியாசமா?
ஹிந்தி படிக்க முடியாமல், கஷ்டப்பட்டு தமிழர்கள், நார்த்தில் வேலை செய்து கஷ்டப்பட்டு உழைத்து... கண்ணீர் கதை.
Tuesday, September 1, 2009
மொழியால் பிரிக்காதீர்கள்
இங்கு கிட்டத்தட்ட எல்லோரும் கன்னடம் பேசுகிறார்கள். நானும் பழகிவிட்டேன். வீட்டில் எல்லோரும் தமிழ் தான். என்னவர் கன்னடம் நன்றாக பேசுகிறார். குழந்தைகள் ஒரு மாதிரி பிக்கப் செய்துவிட்டார்கள். குழந்தைகள் அனைவரும், நன்றாக மற்றவர்களிடம் ஆங்கிலத்தில் பேசி பழகுகிறார்கள்.
இன்று காலை மீனாக்ஷி கோவிலுக்கு சென்றேன். குழந்தைகள் காலையில் சென்றால் மாலை தான் திரும்புகிறார்கள். ஸ்கூல் தூரம் தான்.... டொனேசன் மட்டும் இருவருக்கும் சேர்த்து ஐம்பதாயிரம். சென்னையில் அந்த கோபாலபுரத்து ஸ்கூலில் இந்த தொல்லை இல்லை. நான்கு மாத டேர்முக்கு ஆறாயிரம் பீஸ்.
இங்கு வோல்வோ பஸ் இருப்பதால், ஐந்து ரூபாய்க்கு ஏசி பஸ் பிரயாணம். நன்றாக உள்ளது. வீட்டின் முன் ஏறி, இறங்கலாம்.
கோவிலில் ஒருவரோடு பேசிக்கொண்டு இருந்தேன். அவரும் கஷ்டப்பட்டு கன்னடம் பேசியது மாதிரி இருந்து. கடைசியில், அவர் சென்னைக்காரர். தெலுகர் என தெரிந்தது.
இருந்தாலும் கன்னடம் பேசினால் பழக்கம் வரும் என்று இருந்தார். என்ன செய்வது.
சில கேரக்டர்ஸ் மொழியால் பிரிக்கிறார்கள். பயம் வருகிறது!
Wednesday, August 26, 2009
காசே தான் கடவுளடா
ஒருவர் கமண்டிர்ற்கு நான் இட்ட பதில் இதோ..... ( சில ஸ்பெல்லிங், மிச்டேக்சை சரி செய்து பதிவிடுகிறேன் )
//ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு மட்டும் விசா மறுக்கப் படுகிறது என்பதெல்லாம் கப்ஸா.//
முதல் முறையிலேயே அபுதாபியில் பத்தாண்டு பிசினஸ் விசா கொடுத்தார்கள் (எனக்கும் தான் Visitors visa B1/B2, பிற்பாடு சென்னையில் குழந்தைகள் இருவருக்கும் வாங்கினோம்). மேலும் நீங்கள் சவூதி மற்றும் கல்ப் நாடுகளுக்கு ட்ரேவல் செய்திருந்தால் டரியல் தான். அவர்கள் சிஸ்டத்தில் சிவப்பு ப்ளேக் எழுந்து நிற்கும்....
மிகவும் ஈசி வழி, இரண்டரை கோடி ரூபாய்களை சில USA கவர்ன்மென்ட் திட்டத்தில் முதலீடு ( வருமானம் வரும் ) செய்தால், EB 5 விசா கிடைக்கும். எப்போது வேண்டுமானாலும் சென்று வரலாம்... கிரீன் கார்ட் கூட வந்துவிடும். See here
காசே தான் கடவுளடா!
+++++++
இங்கேயும் ஒரு ஆங்கில பதில்...
All about USA visa
சிங்கைநாதனுக்கு ஒரு பிரார்த்தனை
Saturday, August 15, 2009
சுதந்திர தின வாழ்த்துக்கள்
Monday, August 3, 2009
ஸ்டாக் மார்கெட்
ரிஸ்க் எடுக்க நான் தயார்!
இப்போ ஐந்து எஸ்.பி.ஐ. பேங்க் ஸ்டாக் வாங்கியுள்ளேன். பார்ப்போம்.
நாளை கொஞ்சம் பணம் கிடைத்தால், டாடா மோட்டார்ஸ் வாங்கும் எண்ணம்.
அப்புறம் ஐ.சி.ஐ.சி.ஐ பேங்கில் மாதம் இரண்டாயிரம் ரேக்காரிங் டெபாசிட் கட்டினால், பெண்களுக்கு ப்ரீடம் ( மினிமம் தொகை இலலாமல் ஜீரோ பேலன்ஸ் ) அக்கவுண்ட் கொடுக்கிறார்கள். என்ன முதலில் பத்தாயிரம் டெபாசிட் கட்டிவிட்டு, அக்கவுண்ட் ஏழு நாட்களுக்குள் ஏக்டிவெட் ஆனவுடன், அந்த பத்தாயிரம் எடுத்துவிடலாம் (ஆர்.டி. ஏக்டிவ் ஆக இருக்க வேண்டும்). தவறாமல் மாதம் இரண்டாயிரம் ஆர்.டி.க்கு பணம் போய்விடும். நல்ல முறையில் சேமியுங்கள்.
அப்புறம், டிமேட் அக்கவுண்ட், முதல் வருடம் இலவசமாக தருகிறார்கள். அதற்கு பேன் கார்ட் வேண்டும்.
Sunday, August 2, 2009
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!
தொடர்ந்து என் எழுத்துக்களை படிக்கும் அனைவருக்கும் நன்றி.
நண்பர் ரமேஷ் எனக்கு பெண்கள் பதிவுகள் ப்லாகிர்க்காக இண்டரெஸ்டிங் ப்ளாக் அவார்ட் கொடுத்துள்ளார். நன்றி!
Wednesday, July 29, 2009
வியர்வை
என்று ஒதுக்கி விட முடியாது
உடல் நன்றாக வேலை செய்கிறது
என்றே காட்டுகிறது!
குழந்தைகள் பள்ளியிலிருந்து வரும்போது
வாரி அணைக்கும் போது
வரும் கம கம வியர்வை வாசம்
காத்திருந்து அவர்களை காணும் சொர்கம்!
உடலை கண்ணா பின்னாவென்று வளர்த்தி
பின் வருத்தி உடல் குறைக்க
வியர்வை வரவைக்கும் மனிதர்களை
பார்த்தால் வரும் சிரிப்பு!
கஷ்டப்பட்டு சைக்கிள் ரிக்சாவை
மிதிக்கும் மனிதர்களின் வியர்வை
அவர்கள் குடும்பத்திற்கு
கொடுக்கிறது சந்தோசம்!
உடலுக்கு தெரியும்
எப்படி உணர்த்துவது என்று...
பரமானந்தம்!
Tuesday, July 28, 2009
நுண்ணிய உண்மைகள்
செய்ய துடிக்கும் நண்பர்கள்
பொறி வைத்து பிடிக்கவில்லை
வேண்டுமென்ற கேட்கவில்லை
தானாக வந்தது அது
மகிழ்வோடு
படித்து செய்தார்கள்
எல்லோருக்கும் ஒரு உதவி
எண்ணத்திலும் செய்தார்க்கு
நெஞ்சத்தில் இடமுண்டு
எப்படியாகினும்
தன் கையே தனக்குதவி
என்ற தத்துவம்
எக்காலமும் நிற்கும்
என்றும் நிலைத்து!
காக்கை
அதை விடுவிக்க போலீஸ படை
சந்தோசமாய் இறக்கை அடித்து பறந்து
அது உதவியவர்கள் மேல் ஆய் போட்டது
மனித மனமும் இப்படித்தானே
உதவியவர்களை மறந்துவிட்டு
தன் வேலையை பார்க்கபோவது?
வள்ளுவரும் மற்றவர்களும்
சொல்வது யார் காதிலும் கேட்காது
ஆனால் காக்கை கரைந்துண்ணும்
நிலையை மட்டும் விடாமல்
பிடித்துக்கொண்டு பாடம் கற்பிக்கிறார்கள்
மனிதம் பெரிதா மானிடம் பெரிதா
இல்லை விலங்கினம் தான் சிறிதா?
அவரவர் இருக்கும் இடத்தில் இருந்தால்
எல்லோரும் சௌக்கியமே!
யார் எழுத்தாளர்
இப்போ எனக்கு பிடித்த எழுத்தாளர் அமிதாப் பச்சன். தன் தினசரி நிகழ்வுகளை, ஒரு எக்ச்ட்டேன்டட் குடும்பமாக நினைத்து தன் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுகிறார்....
இதை போலவே சில தமிழ் சிறு பத்திரிகை எழுத்தாளர்களும் செய்கிறார்கள்.
அங்கிகாரம் பெற்றவர்களே பெரியவர்கள் என நினைக்கும் பொருள் வேண்டாம். தன் கடமையை சரி வர செய்தாலே அந்தஸ்து கிடைக்கும். தேடி வரும்.
இதற்கு மொழி அவசியமில்லை!
எல்லோருக்கும் பொதுவான ஆங்கிலம் போதும்!
தாய்மொழி கைகொடுக்கும்.
நான் முதன் முதலில் என் ஆங்கில ப்ளாக் எழுத ஆரம்பித்தேன் (மார்ச் 2007). அதன் பிறகு சமையல் குறிப்புகள். அதன் பிற்பாடு தமிழ் பதிவர்களை பார்த்து எழுத ஆரம்பித்தேன்.
ஒரு வருடம் மேல் ஓடிவிட்டது. நன்றாக தான் இருக்கு.
ஜனரஞ்சக பத்திரிக்கையிலும் ஒரு ப்ளாக் வந்தது...
தொடர்ந்து எழுத வேண்டும்!
Saturday, July 25, 2009
விகடனும் ஜனரஞ்சகமும்
ஜூ.வி ஆசிரியர் அனுப்பிய நிருபர்
அதில் நான் போட்ட கமன்ட்...
நான் விகடன் , குமுதம் வாங்குவதில்லை.
நான் நடத்தும் பெண்கள் பதிவுகள் என்ற ப்லாகினை ஜூலை 29 , 2009 இதழில், பக்கம் 43 இல் அவர்கள் வரவேற்பறையில் அறிமுகம் செய்ததால் வாங்கினேன்!
நிறைய விஷயங்கள் மிகவும் குப்பை. சினிமா ஒன்றியே உள்ளது.
ஜனரஞ்சகம் என்பது அது மட்டுமல்ல....
--
வினிதா
புன்னகை
எதற்கும் ஈடில்லை
வாழ்வதற்கும் ஒரு அர்த்தம்
கற்பிக்கும் மலர்ந்த முகம்
அப்பா அம்மவின் கவலை
தீர்க்கும் மருந்து
வளரும் பருவத்திலும் அதே
புன்னகை தீயாய் பரவும்
ரயில் பயணங்களில்
நல்ல மார்க் எடுக்கையில்
கடி ஜோக் கேட்கையில்
நண்பர்களோடு அரட்டையில்
அழகான அம்சமான
ஆணோ பெண்ணோ கடக்கையில்!
ஆனால் எதற்கும் ஈடில்லை
தாயின் மலர்ந்த சிரிப்பு
குழந்தை வெற்றியின் புன்னைகைக்கு
சிறு விளையாட்டாகட்டும்
அது மதிபெண்ணாகட்டும்
இல்லை தான் விரும்பும்
மன வாழ்க்கை கிடைத்த சந்தோசமாகட்டும்
பேரக்குழந்தை கையில் கொடுக்கும்போதும்
ஆனந்தம் அற்புதம்!
:-)
Friday, July 24, 2009
படித்ததில் பிடித்தவை
ஜோதிட கவிதைகள்
ஆதலினால் காதல் மீண்டும் செய்வீர் !
ஆண்கள் ரசிக்கும் பெண்களின் 10
தாய்மை
என் காதலி லதா
என் காதல் டைரி
விகடன் வரவேற்பறை
இந்த வாரம் விகடன் வரவேற்பறையில் வந்துள்ளது பெண்கள் பதிவுகள் தளம்!
நன்றி. (சந்தோஷத்தில், இன்று மெஹந்தி! )
ஸ்கேன் செய்து கொடுத்த எம்.ரிஷான் ஷெரிப் அவர்களுக்கு மிக்க நன்றி.
சுகுமார் மற்றும் சஞ்சய் காந்தி ஆகியோர் ஸ்கேன் செய்து தருவதாக சொன்னதற்கு நன்றிகள்.
Friday, July 10, 2009
பாதி கவிதை
விளைந்தது ஒரு கவிதை
அது பாதி என நான் நினைக்க
வெறும் எதுகை மோனையாகியது
திட்டிக்கொள்கிறார்கள் பதிவுலகில்
அரசியல் நாடகம் ஆடுகிறார்கள்
குறை சொல்கிறார்கள்
சுய தம்பட்டம் அடிக்கிறார்கள்
க்ரூப்போன்று சேர்த்து கும்மி அடிக்கிறார்கள்
ஆனால் நண்பர்களை வைத்து
கோமாளித்தனம் வேண்டாமே!
எங்கு போய் சொல்லிக்கொள்வது
இலக்கியம் இப்போது தன் தொடங்கியது
எப்போது முடியும், அதற்கு விடிவு வரும்
என யாருக்கும் தெரியாது!
அவரவர் வேலை கஷ்டம் அவரவர்க்கு
அருமையான பொழுதுபோக்கு
இந்த இண்டெர்நெட்டு
பதிவுலகம், பயன்பாட்டு தளம்
மக்களை இணைத்து நண்பர்களாக்கும் இடம்
இன்னும் எழுத இருக்கிறது
இந்த பாதி கவிதையில்....
Tuesday, June 30, 2009
படிக்க வேண்டிய பதிவு
... ஹிட்லர் ரிட்டர்ன்ஸ்!
நோட் - யாரையும் சப்போர்ட் பண்ணும் அளவு நான் பெரிய ஆள் இல்லை!
*******
இதையும் படியுங்க! ரமேஷ் எழுதியிருக்கும் அறிவியல் புனைவு!
என் பெயர் மைகேல் ஜேக்சன்
Saturday, June 27, 2009
மீண்டும் மீண்டும், உரையாடல் போட்டிக்கு
என் கதை மீண்டும் மீண்டும் உரையாடல் போட்டிக்கு அனுப்பியுள்ளேன்.
என் சொந்த முயற்சி கதை தான்!
எல்லோரும் பார்த்து வோட்டு போட்டு ஆதரவு கொடுங்க!
நன்றி!
மற்ற கதை விவரம் எல்லாம் இங்கே இருக்குங்க. சங்கமம்
உரையாடல் போட்டி
Friday, June 26, 2009
மீண்டும் மீண்டும்
அப்பா பெயரை மகனுக்கு வைத்தார் கந்தசாமி சாஸ்த்ரிகள்!
பிறந்து மூன்றாவது வருடம் சங்கீதத்தில் திளைக்க ஆரம்பித்தான்!
அவன் பிறந்த போது, கந்தசாமி தம்பதியினருக்கு கல்யாணம் ஆகி இருபது வருடம் ஆகியிருந்தது. சங்கீத குடும்பம். ஆசையாய் பெற்ற ஒரே மகனை வளர்த்தார்கள்.
பத்தாவது வயதில் பாட்டு போட்டிகள், கச்சேரிகள் என திளைத்தான்.
காம்போதி, தோடி என்று சங்கீதத்தில் விற்பன்னன் ஆனான்.
பள்ளியிலும், கல்லூரியிலும் படித்த போது, அவன் தான் ஆஸ்தான பாடகர். ரேடியோ, டிவி என்று எல்லா போட்டிகளிலும், தனியாக சில போட்டிகளிலும் வெற்றி பெற்று எல்லோரையும் சந்தோசமடைய செய்தான்!
பத்திரிக்கையில் இருந்து நிருபர்கள் துரத்தி துரத்தி பேட்டி கண்டார்கள்!
பெரும் தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள் என்று நட்பு வளர்ந்தது!
சங்கீதத்தில் ஊறி திளைத்து ஒரு குடுமபத்தில் இருந்து பெண் பார்த்தார்கள். சங்கீதா என்ற பெயர். பெயருக்கேற்ற சங்கீத ஞானம். அழகு மற்றும் குணம் அற்புதம். அருமையான ஜோடி...
திருமணம். ஸந்தோஸம். ஆனால் சங்கீதமே எல்லை ஆனது. குழந்தை இல்லை.
பெயரும், பொருளும், பெருமை சேர்ந்து வளர்ந்தது.... உலகம் எல்லாம் சுற்றினான்.அன்பு மனைவியாக, கூடவே இருந்து வாழ்க்கை நடத்தினாள் சங்கீதா!
காலம் ஒடியாது, குழந்தை மட்டும் ஹு..ஹும்...
இருபது வருடமாக குழந்தைக்கு முயற்சி செய்தார்கள். கடைசியாக சங்கீதா கர்பமானாள். தெய்வத்தின் கிருபை! மருந்து மகிமை!
கார்த்திக், அவர் மனைவியை மிகவும், பத்திரமாக பார்த்துக்கொண்டார்.
கச்சேரிகள் குறைந்தன, பொறுமையாக காத்திருந்தார்கள்... ஒன்பது மாதங்கள் கழிந்து ஒரு நாள் அவளுக்கு பிரசவ வலி...
"உங்களுக்கு ஒரு ஆண் பிள்ளை பிறந்திருக்கு!" என்றார் நர்ஸ்.
"அப்பா பேரை குழந்தைக்கு வச்சுடுங்க" என்கிறார் சங்கீதா. சந்தோசமாக தலையாட்டுகிறார் கார்த்திகேயன்!
"என் செல்லம், கந்தசாமி!"...
கந்தசாமி பிறந்து மூன்றாவது வருடம் சங்கீதத்தில் திளைக்க ஆரம்பித்தான்!
...
காலம் சுழல்கிறது!
மைகேல் ஜாக்சன் மறைவு நிறைய பேருக்கு துயரம்
மைகேல் ஜேக்சன் மரணம்
மைகேல் ஜேக்சனும் மன அமைதியும்
ஒரு நடனப்புயல், த்ரில்லர் ஆல்பம் மூலம் பிரபலம் அடைந்தவர்! கோடிக்கணக்கில் கடன் வைத்து ஐ.பி. கொடுத்தவர்! என்ன ஒரு பெண் மாதிரி தன்னை உருமாற்றிக்கொண்டார், முக அமைப்பில்! பெண் மாதிரியே பேச எவ்வளவு முயற்சி செய்கிறார்!
இப்போது கொஞ்சம் நேரம் முன், ஹெட்லைன்ஸ் டுடே டிவி சேனலில் ஒரு பழைய program - இந்தியர் இன்டர்வியு செய்ததை பார்த்தேன். குழந்தை மாதிரி, தனக்கு ஒரு அமியுஷ்மன்ட் பூங்கா கட்டிக்கொண்டார் ஜாக்சன். நெவெர்லென்ட்!
அவர் பாடல் என்றும் நிலைக்கும்...
ஏ.ஆர.ரஹ்மான் எழுதிய இரங்கல் செய்தி இங்கே...
Friday, June 19, 2009
இரண்டு பதிவுகள், குழந்தைகள்
பதிவு படித்தேன்... நான் இட்ட கருத்து...
//
என்ன சொல்ல வரீங்க ? புரிஞ்ச மாறி இருக்கு... புரியலே!
ஆனா ஒன்னு Survival of fittest அப்படின்னு சொல்லி, ஒருவரை ஒரு கூட்டுக்குள் அடைக்காமல், அதிகம் முயற்சி எடுக்க வைக்க வேண்டுமென்பது என் தாழ்மையான கருத்து. Never give up!
பரிணாம வளர்ச்சியால், குழந்தைகள் தாமாக வளர்கின்றன. பெற்றோர் எல்லாம், ஒரு படிதாங்கி தான்.
எங்கள் அப்பார்ட்மென்ட் அருகில் இரு கவன்மெண்ட் பள்ளிகள் உள்ளன ( ஆண், பெண் ). இரண்டு குரங்குகள் ஜோடியாக சில வருடம் முன், பெரிய அரச மரத்தில் வாழ்க்கை ஆரம்பித்தது. இப்போ அதற்க்கு மூன்று குட்டிகள்... எப்படியோ நகர சந்தடியில் வாழ்கின்றன. தினம் ஒரு முறையாவது பார்த்துவிடுவேன்... நகர வாழ்க்கையில் அவை ஒன்றி, குப்பை மேட்டில் உணவு எடுத்து, பெட்டிக்க்கடைக்காரர் போடும் அழுகியபழம் தின்று... என்ன ஒரு பயம் என்றால், அவை யாரவது குரங்காட்டி இழுத்து சென்று விட்டால்? நாம் தான் அவைகளுக்கு இடம் கொடுக்காமல், இருக்கும் இடம் எல்லாம் எடுத்துக்கொள்கிறோம். ( கொல்லுகிறோம் - ஒபாமா உட்பட - கரக்ட் தான் - தொந்தரவு செய்தால்)
குழந்தைகள் குழந்தைகளாக இருக்க விடுங்கள்!
//
************
அப்புறம் பரிசல்காரனின் "ஆஸ்பத்திரி நாட்கள்"
இந்த மாதிரி விஷயம், எங்கள் குடும்பத்திலும் ... என் மகனுக்கும் நடந்தது. நான் அவரைக்குழ்ம்பு செய்ய அவரை ( ராஜ்மா ) ஊற வைத்திருந்தேன். அப்போது அவனுக்கு மூன்று வயது. பள்ளிக்கு காலை ஒன்பது முதல் பன்னிரண்டு வரை - பேபி க்ளாஸ் - சென்று வருவான். மகள் பள்ளியில் இருந்து மூன்று மணிக்கு தான் திரும்புவாள்....அன்று, அவனை அழைத்து வந்துவிட்டு, குக்கரில் அவரை வேக வைத்து சமைக்க ஆரம்பித்தேன். அவர் டிவி முன் இருந்தான். கொஞ்சம் நேரம் கழித்து அவனை பார்க்கும் போது, மூக்கை நோண்டிக்கொண்டு இருந்தான். என்னடா என்று கேட்டதற்கு, ஒண்ணுமில்லே சும்மா என்று சொல்லிவிட்டான். நானும் கவனிக்கவில்லை. ஒரு மணிக்கு என்னவர் வீட்டிற்க்கு சாப்பிட வந்தார். அப்போது அவன் மூக்கின் இடது புறம் வீங்கியிருந்தது. டார்ச் அடித்து பார்த்ததில், மூக்கில் ஒரு அவரை இருந்தது. ஏன்டா பண்ணினே என்ற கேட்டதில், அழுக்கு என்றான்! ( எனக்கு திட்டு பலம்... ). டாக்டரிடம் சென்றோம். ஏ.வி.எம். ஈ.என்.டி. மைலாபூர். குறடு மாதிரி ஆயுதம் வைத்து எடுத்தார்கள். அப்பப்பா என்ன பயம்...
ஆறு மாதத்தில்...மீண்டும் ஒரு முறை, ஸ்கூலில் காதில் நோடேபூக் அட்டை பேப்பர் போட்டு விட்டான். திரும்பவும் அதே டாக்டர் .... என்னடா என்று கேட்டால், க்ளாசில் ஒரே சத்தம். பஞ்சு இல்லே, அதனாலே பேப்பரில் அடைத்தேன் என்றான்!
பெண் குழந்தைகள் இந்த விசயத்தில் கொஞ்சம் பொறுப்பு என்று தோனுது...
பெற்றோர்கள் தான் கவனமாக இருக்கணும். ஆபத்து என்று ஒன்று வரும் போது ( எப்படி வரும் என்று தெரியாது, எந்த ரூபத்தில் இருக்கும் என்று தெரியாது ) டாக்டர்களோ, நண்பர்களோ காப்பாற்றுவார்கள்.
குழந்தைகளை கண் முன்னாள் வைத்திருங்கள்!
Thursday, June 11, 2009
சாமி பாடல்கள்
bhaktipaadal என்ற தளம் பற்றி சஞ்சயின் இந்த பதிவில் பார்த்தேன்... "சாமி பாட்டுக் கேட்கலாம் வாங்க" நன்றி!
என்ன பாடல்கள், தரம் வரிசை, தமிழ் பெயரில் இல்லை. தேடுவது கஷ்டம்!
நானும் "பள்ளிக்கட்டு", "விநாயகனே" , "குன்றத்திலே", "புல்லாங்குழல்", "மருதமலை", போன்ற பாடல்களை நிறைய தடவை தேடினேன். கேசட் தான் இப்போ இருக்கு.... யாரவது ப்ளீஸ் லிங்க்ஸ் கொடுங்க...
வேறு மதத்தவர் என்றாலும் என்னவருக்கு இந்த பாடல்கள் பிடிக்கும். சுப்ரபாதம் இல்லாமல் அவர் எழுவதில்லை. ( அவருக்கு தமிழ் எழுத படிக்க தெரியாது! )
வானவில் வீதி - தனிமையின் விலை
என் கமன்ட்...
//
என்னமோ கொஞ்சம் குறையிற மாதிரி இருக்கு!
மத்தபடி, சுஜாதாவின் நடையை பின்பற்றி ( பிரிவோம், சிந்திப்போம்.... ) எழுதியிருக்கிறீர்கள்!
வெளிநாட்டு மோகம் உங்களுக்கு? நல்லா படிங்க, ஆடோமேடிக்காக வாய்ப்பு வரும்.
அப்புறம் நம்ம இந்தியாவில் இல்லாததா? ( ஆஸ்த்ரேலியா, கேனடா... X )
//
********
சரி சரி கதை எங்கே? ( அவர் மொத்தமா, ஒரே ப்ளாக் போஸ்டில் போட்டால், நன்றாக இருக்கும்..... என் பதிவில் நான் தொகுக்கவா? )
தனிமையின் விலை - 1
தனிமையின் விலை -2
தனிமையின் விலை -3
தனிமையின் விலை - 4
************
அப்புறம் ஜெயா டிவியில் ஒருவர் பெண்கள் என்றால், ப்ளாகில் சமையல் குறிப்பு, அழகு குறிப்புகள் மட்டும் எழுதாமல் கதை, கவிதை, மற்றும் சமூக, அரசியல் பிரச்சனைகள் பற்றி நன்றாக எழுதுறாங்கன்னு சொன்னதற்கு வாழ்த்துக்கள்! ;-)
( நான் அந்த நிகழ்ச்சி பார்க்கவில்லை, நண்பர் ஒருவர் இமெயில் பண்ணியிருந்தார்... )
புளியோதரை
உங்களோடு பகிர்ந்துக்கொள்ள ஆசை. ரொம்ப நாள் தேடியது!
புளியோதரை (திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்)
நன்றி ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் மற்றும் விவரமா தந்த திரு. சம்பத!
------------------------------------------
தேவையான பொருள்கள்:
பச்சரிசி – 5 கப்
நல்லெண்ணை – 50 கிராம்
மிளகு – 200 கிராம்
புளிக்காய்ச்சல் தயாரிக்க
புளி – 100 கிராம்
நல்லெண்ணை – 100 கிராம்
கடலைப் பருப்பு – 100 கிராம்
உளுத்தம் பருப்பு – 100 கிராம்
வெந்தயம் – 10 கிராம்
சீரகம் – 5 கிராம்
கடுகு – 10 கிராம்
பெருங்காயம் – சிறிது
முந்திரிப்பருப்பு – 50 கிராம்
உப்பு- தேவையான அளவு
மஞ்சள் தூள் – 10 கிராம்
செய்முறை:
- புளிக்காய்ச்சலை முதல்நாளே செய்துவைக்க வேண்டும்.
- புளியை கெட்டியாகக் கரைத்துவைத்துக் கொள்ளவும்.
- நல்லெண்ணைய வாணலியில் வைத்து, அடுப்பை மெதுவாக எரிய விடவேண்டும்.
- எண்ணை காய்ந்ததும், அதில் கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், சீரகம், பெருங்காயம் என்ற வரிசையில் போட்டு நன்றாகச் சிவக்க வறுக்கவும்.
- பின்னர் அதில் முந்திரிப் பருப்பையும் வறுத்துக் கொண்டு, கெட்டியாக கரைத்துவைத்துள்ள புளியைச் சேர்க்கவும்.
- 2 நிமிடம் கொதித்தவுடன், உப்பு, மஞ்சள்பொடியைச் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
- புளிநீர் பாதியாக வற்றும்வரைக் கொதிக்கவிட்டு, இறக்கி எடுத்துவைக்கவும். [மறுநாள் புளிக்காய்ச்சலைத் திறந்ததுமே கும்'மென்று மணமாக இருக்கவேண்டும். சரியாகக் காய்ச்சவில்லை என்றால் புளியின் பச்சை வாசனை வரும்.]
- மறுநாள் பச்சரிசியை உதிர் உதிராகச் சமைத்து, ஒரு அகலமான தட்டில் அல்லது பாத்திரத்தில் பரத்தி இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணை சேர்த்து ஆறவிட வேண்டும்.
- சாதம் ஆறியதும், கொஞ்சம் கொஞ்சமாக புளிக்காய்ச்சலைக் கலக்க வேண்டும்.
- பின்னர் தேவையான அளவு பொடி செய்யப்பட்ட மிளகை, 50 கிராம் நல்லெண்ணையோடு கலந்து, அதையும் சாதக் கலவையில் சேர்த்துக் கலக்க வேண்டும்.
ஆமாம், நாங்கள் நல்லெண்ணெய் ஊற்றுவதில்லை, சன் ப்ளவர் ஆயில் தான். என்ன செய்வது?
Wednesday, June 10, 2009
சில காதல் வார்த்தைகள்
இது எனது பதிவில் காதல் கடிதங்கள் வரிசையில் மூன்றாவது பதிவு...
நிலவில் ஆரம்பிக்கும்...
நிலா,
உயிரே,
மானே,
தேனே,
கண்ணே,
கண்மணி,
நெஞ்சே,
மனசு,
இதயம்,
மூச்சு,
வார்த்தை,
நோகுது,
தெரியாதா,
போகாதே,
நில்,
முத்தம்,
தாலி,
பாடல்,
இதழ்,
அப்பா,
அம்மா,
அம்மம்மா,
ஐயோ!
*******
கவிஜர்கள் நா.முத்துக்குமார், பா.விஜய் மற்றும் வைரமுத்து ஒரு பஸ்ஸி லாஜிக் பாடல் ஜெனரேடர் எழுதி ரெடியாக வைத்து, கேட்கும் இடத்திர்க்கேர்ப்ப ( சீன ) பாடல் வந்து விழுகும்.
மூசிக்? கீபோர்டை யாராவது குழந்தை கையில் கொடுத்துவிட்டால், போதும்... வருவதெல்லாம் சுக ராகம் தான்!
டண்டனக்கா...
என்ன எழுதுவது காதல் கடிதம் பற்றி
பொறுத்திருந்து பாருங்கள். கற்பனை தான் நிற்கும்!
என்ன எழுதுவது காதல் கடிதம் பற்றி?
ஆண்கள் தான் அதில் விற்பன்னர்கள் ஆயிற்றே?
Tuesday, June 9, 2009
வித்தியாச காதல் மடல்
வித்யாசப் பெண்ணம்மா.. என் உயிர் கண்ணம்மா,
*******
அருமை!
*******
பெண்ணாக இருந்தால் காதல் கடிதம் எதாவது வகையில் ( கடிதம் தான் வருமென்று எதிர் பார்க்க வேண்டாம்...) வந்திருக்கும்.
காதல் பார்வை - மாமன் மகன்கள், உறவின் தையிரியம்!
காதல் பேச்சு - கல்லூரி ஆண்கள் , பள்ளி - பையன்கள்
மற்றும் பல வாராக, கல்யாணம் செல்லும் போது, ஒரு விழாவிற்கு செல்லும் போது, எதோ பேச வேண்டும் எனதுடிக்கும் கண் - பார்வைகள்...
***********
வெளிநாட்டில் - சினிமா, நண்பர்கள் கோட்டம், டேட்டிங் (?) போல உதாரணங்கள். அப்புறம் பர்சில் எவ்வளவு காசு இருக்கு என்பதை பொறுத்து, யார் செலவு செய்கிறார்கள் என்பதை பொறுத்து இருக்கும்?
வித்தியாசம்!
கடைசியில் கல்யாணம் என்று வரும் போது, காதல் ஒப்புதல் பெற ஆண் தான் கதறவேண்டும்... பெண்ணுக்கு, கொஞ்சம் ஈசி. பெண்ணின் பெற்றோருக்கு பையன் நல்லவன், வைத்து காப்பாற்றுவான் என்று நம்பிக்கை வந்தால் போதும்!
சரி...
காதல் கல்யாணத்திற்கு பிறகு எப்படி இருக்கும்?
இருவரின் குடும்பத்தாரும் இணங்கி போனால், நன்று. அமிர்தம் தான்!
இல்லாவிட்டால், முள் மீது விழுந்த சேலை மாதிரி, ஒவ்வொரு முள்ளாக, பார்த்து பார்த்து எடுக்க வேண்டும். அன்பு தழைத்தோங்கும்!
*******
எனக்கு காதல் இமெயில் மட்டும் தாங்க வந்தது... என்னவரிடம் இருந்து, கல்யாணம் நிச்சயம் ஆன பிறகு!
Thursday, June 4, 2009
ஆமீரகத்தின் பதிவர்கள்
என்ஜாய் பண்ணுங்க!
********
துபாய் சில நினைவுகள்....
அப்பா அங்கு ஒரு பதினைந்து வருடங்கள் வேலை செய்தார். சில வருடங்கள் முன் தான் கோவையில் திரும்ப வந்து செட்டில் ஆனார். நல்ல ஏ.சி. மெக்கானிக் கம்பெனி, நல்ல வேலை... ( இப்போ சம்பந்தமில்லா வேலை )
நாங்கள் ( நான், தங்கை மற்றும் அம்மா ) படிப்புக்காக சில வருடம் ( ப்ளஸ் 2, காலேஜ் ) கோவையில் இருந்துவிட்டோம். பிறகு சில வருடம் அங்கு இருந்தோம்.
நான் என் கணவரை சந்தித்ததும் அங்கு தான்! ;-) தங்கையும் அப்படியே! மாடர்ன் பேமிலி...
*******
அப்பாவின் காரை இந்தியன் லைசன்ஸ் ( ஐ.டி.எல் ) வைத்துக்கொண்டு நான் தங்கையுடன் மற்றும் சில நண்பர்களுடன் அபு தாபி, நார்த் ஓமான் எல்லை வரை சென்றது எல்லாம் நினைவில் உள்ளது.
சார்ஜாவின் ஏர்போர்ட், அஜ்மானில் சில கோவைக்காரர்களை (நண்பர்கள்) சந்திக்க சென்றது எல்லாம் .... நினைவில்... நிற்பவை..
லூலுஸ், பர் துபாய் மற்றும் கரமாவை மறக்க முடியுமா. ஷாபிங்... ஷாபிங் தான்.
கராச்சி தர்பாரில் பெரிய பராட்டா மற்றும் கரம் சாய் இன்னும் கிடைக்கிறதா?
சிம்ரன் ஆப்ப கடையின் சிக்கன் பிரியாணியும் , மட்டன் சுக்காவும் மறக்க முடியவில்லை. சரியான சிலோன் டேஸ்ட்!
இப்போ எப்படிங்க வேலை நிலைமை எல்லாம். விலைவாசி ரொம்ப ஜாஸ்தின்னு, கணவர் சொந்தங்கள் எல்லாம் பக்ரைன் மற்றும் கட்டாருக்கு மாறிட்டாங்க. ஐ.டி. ஆளுங்க மட்டும் இருப்பாங்க... ?
விவரம் எல்லாம் கமன்ட்சில் போடுங்க.
( அப்பா கூடிய விரைவில் ரஸ் அல் கைமாவில் ஒரு ஆபிஸ் எடுக்கப்போகிறார்... )
Wednesday, June 3, 2009
அனானிமஸ் கொடுமைகள்
அதையே ரமேஷ் அவர்களும் எழுதியிருக்கிறார்...
அனானிமஸ் கமன்ட்டர்கள்
இங்கே படியுங்க, இன்று அடிபட்டது என் நண்பி திவ்யா.
பெங்களூரில் நான்
என்ன கொடுமை இது?
சம்மந்தப்பட்ட ஆள் பிடிக்கப்படும் வரை, யாருக்கும் நிம்மதி இல்லை.
அந்த ஆள் நான் தான் கமன்ட் போட்டேன், "சாரி" என்று சொல்ல வேண்டும்.
இன்டர்நெட் கொடுக்கும் சுதந்திரம், தவறாக உபயோகித்தால், களி தின்ன நேரிடும்!
:-(
குழந்தை எனும் மேஜிக் வார்த்தை
இந்த கதை (லக்கிலூக் யுவக்ரிஷ்னா எழுதியது) படித்தேன்...
குழந்தை எனும் மேஜிக் வார்த்தை!
கதை அருமை. நிகழ்வை அருமையாக படம் பிடித்துள்ளீர்கள்! நன்றி!
********
எனக்கு தெரிந்த நெருங்கிய சொந்தம் ஒருவருக்கு ஒன்பது வருடமாக குழந்தைகள் இல்லை, கமலா செல்வராஜ், ஜமுனா, ஆஷா ராவ் எல்லரையும் பார்த்தாகிவிட்டது. சிங்கபூரில் சில லட்சங்கள் செலவு செய்தாகிவிட்டது. கொடுமை என்னவென்றால், இருவருக்கும் நார்மல் தான்!
பாம்பிற்கு அறியும் பாம்பறியும் பாம்பின் கால்!
Monday, June 1, 2009
தக்காளி முட்டை ஆம்லெட்
இரண்டு முட்டையும் ஒரு வெங்காயமும்
//ரொம்ப நல்லா இருக்கு. தக்காளி சேர்த்தால் இன்னும், ஆம்லெட் நல்லா வரும். என் ப்ளோகில் எழுதுறேன்.//
******
அதனாலே, இந்த போஸ்ட்.
நான் முட்டை வெஜிடேரியன் என்று நம்புகிறேன்.
முதல் ஆளுக்கொன்று என முட்டை கணக்கு வைத்து, தேவையான அளவு உப்பு காரம் போட்டு மிக்ஸ் செய்யவும். ( கலக்கவும் - என் மகள் தான் இதில் இப்போ எக்ஸ்பர்ட் )
பிறகு தவாவில், சிறிது எண்ணெய் விட்டு, நறுக்கி வைத்த வெங்காயத்தை, வதக்கவும் (கோவை ஸ்டையில், பொன் வறுவல் ).
நறுக்கி வைத்த தக்காளியை ( ஸ்மால் பீஸ் ) சேர்த்துப்போட்டு வதக்கவும். இந்த சீக்குவன்ஸ் முக்கியம். அதை நன்றாக தவா அளவு பரப்பிவிடவும்!
பிறகு, கலக்கி வைத்து முட்டை கலவையை அதன் மீது ஊற்றவும். ஸ்ப்ரெட் செய்யவும். சிறிது எண்ணெய் மேலே ஊற்றவும். வேக விடவும்.
தோசை திருப்பி போடுவது போல, திருப்பி போடவும். வேக விடவும்.
மூன்று நிமிடத்தில் தக்காளி முட்டை ஆம்லெட் ரெடி. என்ஜாய் பண்ணுங்கள்.
******
குழந்தைகள், ஸ்கூலில் இருந்து வந்துவிட்டார்கள். அரை நாள் தான். புது உனிபார்ம், டை மற்றும் குதுகுலம்., சொல்லி மாளாது!
மதியம் சிம்பிள் தாளித்த சாப்பட்டிற்கு இது தான் தொட்டுக்கொள்ள காய்.
என்னவர் ஆபீஸில் கொட்டிக்கொள்வார். :-(
Thursday, May 28, 2009
நான் ரசித்த ஜப்பானிய ஹைகூக்கள்
ஆங்கிலத்தில் இருந்து தமிழ் படுத்தியிருக்கிறேன்...
I kill an ant
and realize my three children
have been watching.
ஓர் எரும்பைகொன்றேன்
என் மக்கள் பார்த்ததை
கவனிக்கவில்லை
A sudden shower falls
and naked I am riding
on a naked horse!
திடீர் மழையில் நனைத்தேன்
நானும் என் குதிரையும்
நிர்வாணம்
___________________
Night, and the moon!
My neighbor, playing on his flute -
out of tune!
இரவும் நிலாவும் கூட
என் பக்கத்துவீட்டுக்காரரின் புல்லாங்குழல்
ஒன்றவில்லை
___________________
A giant firefly:
that way, this way, that way, this -
and it passes by.
ஓர் பெரிய மின்மினிப்பூச்சி
அங்கும் இங்கும் அலைபரித்தது
பறந்தோடிவிட்டது!
___________________
First autumn morning:
the mirror I stare into
shows my father's face.
இலையுதிர்காலத்தின் காலை
கண்ணாடியில் பார்க்கிறேன்
என் அப்பா!
___________________
After killing
a spider, how lonely I feel
in the cold of night!
எட்டுக்கால் பூச்சி ஒன்றை கொன்றேன்
தனிமை வாட்டுகிறது
இரவின் குளிர்
_____________________
The summer river:
although there is a bridge, my horse
goes through the water.
கோடையின் ஆறு
அதில் பாலம் என் குதிரை
சேர்ந்தே போகிறது!
____________________
No blossoms and no moon,
and he is drinking sake
all alone!
பூக்கள் இல்லை, நிலவும் இல்லை
அவன் குடிக்கிறான்
தனியாக!
____________________
Won't you come and seeloneliness? Just one leaf
from the kiri tree.
வந்து பார்க்கமாட்டாயா என்
தனிமையை, ஓர் இலை தான்
கிரி மரத்திலிரிந்து!
*********
மொழி பெயர்ப்பு ஒ.கே.வா?
ஹைக்கூகள் அறிமுகம் செய்த சுஜாதா ரங்கராஜன் அவர்களுக்கு சமர்ப்பணம்!
ஆயுதமும் அமைதி வழியும்
நானும் நெடு நாட்களாக அமைதி வழி தான் நன்று என்று எழுதி வருகிறேன் - ஸ்ரீலங்கா - ஈழம் குறித்து.
துப்பாக்கி எடுத்தவன் துப்பாக்கியால் தான் சாவான்.
காந்தி சொல்கிறார், ஒரு உயிர் கூட இந்தியாவின் சுதந்திரத்திற்காக ஆயுத போராட்டம் வழியில் போகக்கூடாது. அதன் பிறகு தான் சுபாஷ் சந்திரா போஸ் ஜப்பான் சென்று இந்திய அமைதி படையில் சேர்ந்தார். ஆரம்பித்தவர், வேறு ஒருவர் ( பெங்காலி - ஜப்பான் பெண்ணை திருமணம் செய்தவர் ).
"சுய ஆட்சி" தன் குறிக்கோள் என்று இன்றும் என் அப்பா சொல்கிறார், அங்கு பிறந்தவர். சிங்களதவரிடம் எந்த வகையிலும் எங்கள் குடும்பம் அல்லல் பட்டதில்லை. ஜாப்ன காடுகளில் இருந்து தீவிரவாதம், தான் ஒருவனே தான் தலைவன் என்று ஒருவர் புறப்பட்ட போது, வெடித்த வெடிகள், எங்கள் அப்பாவின் குடும்பம் புலம் பெயர வைத்து. இந்திய வந்த பிறகும், சம்பாரித்த பாதி பணம் கட்டப்பட்டது, சில நாட்கள் முன் வரை. அங்கு வேறு ஒரு தமிழ் தலைவர், தமிழர்கள் (இரண்டாம் டேக்ஸ்) கட்டாமல் இருந்தால், தீர்க்கப்பட்டார்கள். இது குறித்து எம்.ஜி.ஆரும் நன்றாக யோசித்து தான், அந்த தலைவருக்கு தமிழ்நாட்டில் அடைகலம் வழங்கினார். ஆனால் நடந்தது என்ன? பத்மநாபா கொலை.
யுரோப் நாடுகள், ஆயுதம் விற்க ஒரு தீவிரவாத க்ரூப் கிடைத்த சந்தோசம் ( இஸ்ரேல் என்று ஒரு நாடு மட்டும் அல்ல ) சண்டை நிற்க, வழி செய்யவில்லை. குண்டு கண்டுபிடித்த நாடு (நார்வே) தான் அமைதிக்கு வழி காட்டியது.
இன்று அப்பாவிற்கு சிங்கள நண்பர்கள் உண்டு. ராஜபக்சே குடும்பம் உட்பட.
தனி சுயாட்சி என்பது தான் நிஜ ஸ்ரீலங்கா தமிழர்களின் கனவு!
**********
தொடாபுடைய அனுஜன்யாவின் பதிவு...
என்னுடைய கமன்ட்...
//
Nice article, even though I don't believe in idolizing. I have written many articles about non violent method in my blog. At least leaders would have been alive.
Now UN says 50,000 families have been displaced since 1983. That is huge for an ethnic conflict.
But don't compare Prabhakaran with the Indian Mafiaso, might hurt "Eelam" Tamils.
A person who takes sword, dies with it!
//
***********
நானும் உங்களைப்போல ஒரு வருடமாக தமிழ் ப்ளாக் எழுதுகிறேன். ( அப்துல்லா அண்ணன், பரிசல் அண்ணன் செட் ) ;-)
Monday, May 25, 2009
அசைலம் கேட்கிறார்கள்
இங்கே கிளிக் செய்து ஆங்கிலத்தில் படிக்கவும்!
Pearl Action
Click here to send the appeal directly!
மூன்று டாக்டர்கள் மாட்டிக்கொண்டு முழிக்கிறார்கள்.
உங்கள் கடிதம்... அவர்களுக்கு உதவும். மனிதாபிமானம் நிச்சயம்!
நன்றிகள்...
லீவு முடிகின்றது
இப்போதெல்லாம் நன்றாக தூங்கி எழுகிறார்கள்... எப்படி டைம் மாற்ற முடியும் என்ற பார்க்க வேண்டும்.
பள்ளிக்கல்வி எப்படி மாறிவிட்டது பாருங்கள். அந்த காலத்தில் லீவு ஹோம் வர்க் இருக்கும்... இன்னும் பல... பெரிய க்ளாசில் க்வேச்டியன் பேப்பர் ஆன்சர் எழுதி செல்ல வேண்டும்.
இந்த முறை, கோவையில் குழந்தைகள் ஒரு இடத்தில் ( சாய்பாபா காலனி - அப்துல் கலாம் அவர்களின் நண்பர் வீடு அருகில் ) ஸ்லோகா படித்தார்கள். என் கணவர் இதை பற்றி ஒன்றும் சொல்லவில்லை! அன்னபூர்னாவில் நோட்டிஸ் பார்த்து இடம் பிடித்தேன்.
***********
அப்பா அம்மாவுடன், சர்வம் படம் பார்த்தோம். குழந்தைகள் ஒரு மாதிரி ஆகிவிட்டார்கள். எதோ ஒரு இங்கிலிஸ் படம் தழுவி எடுக்கப்பட்டது போல? ஒரு குழந்தை ஆக்சிடன்ட்டில் இறக்கும் வலி ஒருவனை மன நோயாளி ஆக்குகிறது. அதை சுற்றி ஒரு படம். மாஞ்சா கயிற்றில் பட்டம் விடாதீர்கள் ப்ளீஸ்.
முன்னார் மிக அழகாக தெரியுது...
**********
குழந்தைகளோடு வாரம் சில முறை நான் வெஜ், ஸ்வீட் காரம் ஸ்நேக்ஸ் என்று வெயிட் ஏறி விட்டது. டையட் மற்றும் எக்செர்சைஸ் செய்ய வேண்டும். கோவையில் காலையில் நடப்பதற்கு நன்றாக இருக்கும்... ஆனால் குழந்தைகள் பேட்டை விட்டு சீக்கிரம் எழ மாட்டார்கள்...
*********
கோவையில் சில ஏரியாக்கள் பார்த்தோம். ஜி.வி.ரெசிடென்சியல் லேயவுட் - பெர்க்ஸ் ஸ்கூல் அருகில் நன்றாக இருக்கும் போல உள்ளது. இடம் விலை சென்ட்டுக்கு ஐந்து லட்சம் என்கிறார்கள். பார்க்க வேண்டும். ஒரு வீடு கட்டிக்கொண்டால், கோவைக்கு குடி புகுந்து விடலாம்!
எனக்கும் ஒரு வேலை கோவையில் கிடைத்து விட்டால் நல்லது!
ஆனால் இங்கு ரியல் எஸ்டேட் ஆட்கள், பணம் இருக்குது இன்வச்ட் செய்ய என்றால், தொந்தரவு தொல்லைகள் தாங்க முடியவில்லை! விளையும் குறைக்க மாட்டேன்கிறார்கள். சரி ஐ.டி. பார்க் வருவதால், எப்படி இடம் விலை ( ரெசிடென்சியல் ஏரியாவில் ) ஏறும்? லாஜிக்கே இல்லை! அப்பா சொன்னார் கே.ஜி. க்ரூப், சில நூறு கொடிகள் போட்டு இடம் வாங்கி, நஷ்டப்பட்டு உள்ளார்கள் என்று. எஸ்.ஈ.ஜெட்... ஏற்றுமதி ஏரியா... (மம்தா பானர்ஜிக்கு பிடிக்காது வார்த்தை ) இருகூர் வரை ஏக்கர் ஒரு கோடி என்று செய்துள்ளது. அப்பாவின் பத்து ஏக்கர் தெண்ணந்தோப்பு நல்ல விலை வரும். ஆனால், ரவுடிகள், கட்டாயமா விற்க வைப்பார்கள் என்ற பயம் வேறு.
***********
அமெரிக்க வரை ஐ.பி.எல் பாய்ந்துள்ளது. திவ்யாவும் எழுதியிருக்கிறார்...
"வாழ்க்கையும் கிரிக்கேட் மேட்சும்"
நேற்று இரவு, சென்னை மாகளுக்கு சோகம் தான். பைனல்ஸில் இல்லையே!************
அப்புறம் ஸ்ரீலங்கா போராளிகள் குழி தலைவர் இறப்பு பற்றி பல செய்திகள்.
ராஜு என்பவர், இப்படி ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.
படிக்க சுவாரசியம் - End of an era, Brand Name
அவர் எழுதியதைப்போல, தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் அந்த பிராண்ட் நேமை மறைய விடாமால் அதை வைத்து பிசினஸ் செய்வார்கள். திருந்தமாட்டார்களா. இப்போது வாடி வதங்கி இருக்கும் ஸ்ரீலங்கா தமிழர்களின் நலன், சுய ஆட்சி, முக்கியம்மாக பணம் கொடுத்து உதவனும்.
என்னிடம் கொடுத்தால், நான் நல்லது செய்ய எண்ணம்.
Thursday, May 21, 2009
பிடித்த பாடல்கள் , கவிதை
தாலாட்டும் காற்றே வா தலை கோதும் விரலே வா
முதல் முறை உன்னைப் பார்த்த...
அப்புறம் ராஜு எழுதின இந்த கவிதை, ஒரு போட்டி போல?
காதல் சண்டே - படம் பார்த்து கவிதை சொல்லுங்க - 3
*************************
ப்ளாக் எழுதி நாள் ஆச்சு. எலெக்சன் ரிசல்ட் வந்தப்புறம், கோவையில் தான் இருக்கோம். இரண்டு மூன்று இடம், விலைக்கு வாங்க பார்த்தோம். என்னவர், சென்னை சென்று விட்டார். சனி காலை அவர் வந்துவிட்டு, இரவே கிளம்புகிறோம்.
தேர்தல் முடிவுகள் 2009
நான் சொன்ன மாதிரி தானா இருந்துச்சு?
எப்படியோ, சம்மர் ஹீட் குறைந்து விட்டது.ஜூன் ஒன்று முதல் பள்ளி. ஞாயிறு காலை சென்னையில் இருப்போம்.
கோவை வெதர் நல்லா தான் போகுது.
Friday, May 15, 2009
தேர்தல் முடிவுகள் 2009
ஸ்ரீ லங்கா பிரச்சனை வைத்து வோட்டு போட்டுளார்கள் என்கிறார்கள். தெரியவில்லை.
கடைசி ஒரு மணி நேரத்தில் பத்து சதவிகிதம் வாக்கு பதிவு. எங்கேயோ ஒரு ப்ராப்ளம்... தமிழ்நாட்டில் 90% ஐந்து சதவிகிதம் தான் எப்பவும் வெற்றி மார்ஜின். சரி சரி நாளை காலை பதினோரு மணிக்கு தெரிந்து விடும், எல்லோர் ஆட்டமும்.
35-5, 25-15, 20-20 என்னவோ நடக்குது! சரி விஜயகாந்த் கட்சி என்ன ஆகும்?
சென்ற முறை மாதிரி இல்லாமல் 72% வோட்டு. 10% அதிகம். அப்போ ஆளும் கூட்டணிக்கே லாபம் எனலாம்.
*************
தேர்தல் முடிவுகள் மாதிரி இந்த ப்ளஸ் 2 முடிவுகள் இருக்கு. எங்க வீட்டு பக்கத்தில் தேறாதே கேஸ் என்பவர்கள் எல்லாம், நல்ல மார்க் வாங்கியிருக்காங்க. அதுக்காக, நல்ல படிச்சவங்களை குறை சொல்லலே. எதோ எங்கேயோ இஷ்டத்துக்கு மார்க் போடறாங்க! கணக்கில் எனக்கு ஒரு மார்க்கில் சென்டம் போச்சு அந்த காலத்தில்.... டிகேட். (இதுக்கும் இரு முறை செக் செய்து பார்த்தேன்.... என்னை பார்த்து காப்பி அடிச்சு அன்பு கூட சென்டம் எடுத்திருந்தாள்... அது தாங்க தமிழ்நாட்டு போர்ட் சிஸ்டம்... ;-))
குறைவான மார்க் வாங்குனவுங்க கவலை படாதீங்க. அதை வச்சு, கிடைக்கும் கோர்ஸ் படிச்சு, பெரிய ஆள் ஆகலாம் நீங்க. இந்த காலத்தில், சீட்டு கிடைகிறதே பெரிய விஷயம்.
ஏதாவது டிகிரீ முடிச்சாலும்... ஐ.ஐ.எம் கோர்ஸ் படிச்சு பெரிய ஆள் ( அண்ணன் நரசிம் அவர்கள் மாதிரி...).. இல்லே பரிசல் அண்ணன் கிட்டே சொல்லி திருப்பூரில் வேலை வாங்கலாம்.
என்.ஐ.ஐ.டி கோர்ஸ் இருக்கு கம்ப்யுட்டர் தொழில் குறையாது, திறமை வளர்திடுங்க. பேங்க் வேலை... அப்புறம் இருக்கவே இருக்கு கவர்ன்மென்ட் ஜாப். நானும் ரெஜிஸ்டர் செஞ்சு ஆறு எழு வருஷம் ஆச்சு. ஒரு வேலையும் வரலே.
இப்போ டைம் லிமிட் ( வயசு வச்சு ) ஆகிடுமோன்னு பயம் தான்.
சொந்த தொழில் இருக்கு... கவலை இல்லே.
******************
அப்புறம் நெஞ்சை உறைய வைக்கும் விளம்பரம்...
பெண் சிசு கொலை பற்றி ஒரு விளம்பரம்
Sunday, May 10, 2009
சில பதிவுகள்...
முதலில் .... யாரோ ஒருவன் ஒன் சக பெண் பதிவரை துன்புருத்துகிறானாம்... என்ன கொடுமை இது. எனது நண்பி திவ்யாவின் ப்ளாகில் தான் அப்படி ஒரு தொல்லை இருந்தது...
மேலும் படிக்க...
பாலபாரதியின் ப்ளாக் ...பெண் பதிவர்களுக்கு ஓர் எச்சரிக்கையும், மே-10க்கான அழைப்பும்..
*****
சில நேரங்களில் என்ன எழுதுகிறோம் என்று தெரியாமல் எழுதறாங்க...
இது மாதிரி...
MOTHER'S DAY Vs மாட்டுப் பொங்கல்
//என்ன சொல்ல வரீங்கன்னு புரியலே. மாட்டையும், அம்மாவையும் எதுக்கு வீனா கலக்கி ஒரு பதிவு?//
***********
தன் மகனை நனைய விடாமல் தடுத்து தான் நனையும் தாய்!
அன்னையர் தின வாழ்த்துகள் - மே 10, 2009
**********
சங்கமத்தில் பேருந்து பற்றி ஒரு போட்டி. அதில் சில படித்தவை...
பேருந்துப்பயணத்தில் முடிவான வாழ்க்கை : கதிரவன் (கொஞ்சம் பெரிய பதிவு)
பாலம் - சங்கமம் போட்டிக்கு : வெட்டிப்பயல் (பரவாயில்லை)
பிரிவில் புரியும் உறவின் அருமை
பிரிந்து பார்த்தேன்
என்னில் நீ
உன்னில் நான்
புரிந்தது உனதருமை மட்டும் அல்ல
உன் அருகாமையும் தான் !
யாதுமாகி நின்றாய் : புன்னகை (மேலே உள்ள கவிதை நன்று தவிர, வீண் சண்டைக்கு ஒரு மேலோட்ட முடிவு)
பேருந்து பயணம் : விஜயஷங்கர் (எதார்த்தமாக, எளிய நடையில் அனுபவம் உள்ளது)
*************
அப்புறம்
அப்துல்லா அண்ணன் அவர்கள் சினிமா பாடகராகியிருகிறாராம். வாழ்த்துக்கள்.
தம்பியின் டைரிக் குறிப்புகள் (07/05/09)
Thursday, April 30, 2009
உருப்படியாக லீவில் என்ன செய்வது?
குழந்தைகள் கைக்குள் அடங்காமல் போகிறார்கள்...
இரண்டு வாரம் கோவை சென்று வந்தாகிவிட்டது...
வோட்டு போட்டுவிட்டு (இல்லாவிட்டால் வேறு யாரோ போட்டு விடுவார்கள்)... இன்னும் இரண்டு வாரம் மே 16 முதல் என்று டிக்கட் முடிவு... பார்க்கலாம்... ( பாலக்காடு ட்ரிப் ஒன்றும் இடையில் உள்ளது..)
வெய்யில் கொடுமை தாள முடியலே.
எவ்வளவு நாள் தான் சென்னை பீச் சென்று வருவது?
நாளை உழைப்பாளர் திருநாள் (அட்வான்ஸ் வாழ்த்துக்கள்) மகாபலிபுரமும், அப்படியே ஒரு நாள் பாண்டிச்சேரி நங்கை வீட்டில் தங்கல்.... (பெட்ரோல் என்ன கிணற்றிலா வருது, என்று பேக்க்ரவுண்டில் சவுண்டு கேட்குது..) என்ன அவர்கள் சனிக்கிழமை நான் வெஜ் (மீன்) செய்யமாட்டார்கள் என்கிறாள் மகள்.
சென்னையில் குறைவான செலவில், மகிழ்வான இடங்கள் காட்ட குழந்தைகளை கூட்டி சென்று வர வேண்டும். நீங்கள் தெரிந்தால் சொல்லுங்களேன்!
சம்மர் கேம்ப் என்று வீட்டு அருகில் ஆயிரம் செலவானது தான் மிச்சம். அதே பெயிண்டிங், அதே டூடில்ஸ். அடுத்த இரண்டு வாரம், சவேராவில் தினமும் நீச்சல் போக குழந்தைகள் முடிவு. காலையா, மாலையா, காசு பொறுத்து...
அப்புறம், ஸ்கூல் பீஸ் மாதம் இந்த வருடம்.ஒரு குழந்தைக்கு இரண்டாயிரம் போல வரும் .... என்ன விலைவாசி...
Wednesday, April 29, 2009
வீடு வாங்குவது
என்ன பட்ஜெட்? என்ன வசதிகள்...
இப்போது எல்லாம் விலை வீழ்ச்சி ( டி.எல்.எப் ) என்று சொல்லுகிறார்கள்.
கோவையில் தான் பெட்டர் போல.
சென்ற முறை வீடு வாங்குவது பற்றி ஒரு பதிவு போட்டேன், ஒரு சிலர் கோவையில் எந்த இடம் வாங்கலாம் என்றார்கள்.
இன்று கேள்விப்பட்டது, வடவள்ளியில் சென்ற வருடம் விற்ற விலையில் அவினாஷி ரோட்டில் ( கோவை) வாங்கலாம் என்கிறார்கள்.
உண்ணாவிரதம் உச்சக்கட்டம்
என்னவர் சொல்கிறார், இப்போ மீண்டும் ஆட்சி யு.பி.ஏ கையில் தான்.
படங்களோட பேசுவோமா?
ஆமாம், உலக கோர்ட் என்று ஒன்று உள்ளது. ஜெயலலிதா மீது 'தி ஹேக்'இல் நார்வே மாதிரி ஆட்களின் உதவியோடு, நாட்டை பிரிக்க தூண்டும் செயலுக்கு ஸ்ரீலங்கா கேஸ் போடுமா?
********
அப்புறம் பெங்களூர் கனகபுரா ரோட்டில் இருக்கும் காஸ்ட்லி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் (கப்சா பிரணயாமம் புகழ் - சோ ஹம்) ஸ்ரீலங்கா சென்று அங்கு இருக்கும் தமிழ் நிலைமை பற்றி சொல்லியுள்ளார். தமிழகத்தில் இருக்கும் அகதி முகாம்களை விட அருமையாக இருக்கிறார்களாம், கவர்ன்மென்ட் முகாம்களில்.... என்ன அவர்களுக்கு பாரின் வாழ்க்கை (இந்தியா) கிடையாது!
அப்புறம், பாரிஸ், டொரோண்டோ மற்றும் லண்டனில் அகதி உரிமை கோரும் ஸ்ரீலங்கன் தமிழர் அதிமாகும் என்கிறது ஊடகம்.
பெங்களூர் வழியாக (தொந்தரவு இல்லாத ஏர்போர்ட்), எஜன்ட்டுக்கள் மூலம், தமிழ்நாட்டுக்காரர்களே, போலி ஸ்ரீலங்கா பாஸ்போர்டில், ஆள் மாறாட்டம் செய்து, வெளிநாட்டில் அகதிகள் ஆகிறார்களாம். எல்லாம் எதற்கு?
Tuesday, April 28, 2009
யு.கே. கம்பெனியில் நூறு இலவச ஷேர்கள்
இங்கே கிளிக்குங்கள்
நன்றி நண்பர் ரமேஷ் அவர்கள்.
இலவசம் பிரிடன் கம்பெனியில் 100 ஷேர்கள்
ஒரு பைசா செலவு இல்லே, ட்ரை பண்ணி தான் பாருங்க. ;-)
அர்த்தம் தெரியாத எழுத்துக்கள்
சிலர் மற்றவர் எதாவது எழுதுகிறார்கள் என்பதற்காக எழுதுகிறார்கள். கமல் சொல்வது போல எழுதி பழகுகிறார்கள் இல்லையா?
நான் ஒன்றும் பெரிய இவள் இல்லை. எழுதுகிறேன்... எதோ ஒன்று எனக்கு பிடித்த, கருத்து சொல்லும் விசயத்தை...
சிலர் நல்ல தமிழ் பெயரை வைக்க கூட நாதி இல்லாமல், உணவு பொருட்களின் பெயர் வைத்து ப்லோக் போஸ்ட் போடுகிறார்கள். எங்கிருந்து வரும் அர்த்தம். உச்சகட்டம், ஆபாசமான ஜோக்குகளை, தமிழ்படுத்தி எழுதுவது...
இது வரை பரிசல்காரன் , நரசிம் போன்றவர்களின் எழுத்து தான் என்னை பொறுத்த வரை, தினமும், ஒரு வித மெருகேற்றி ஆண் பெண் இரு பாலாருக்கும் பொதுவானதை ( இலங்கை பிரச்சனை விடுங்கள், கலைஞர் விஷயம் மறந்துவிடுங்கள்) நன்றாக எழுதுறாங்க. வேறு சிலர் விடுபட்டுள்ளனர்.
மற்றவர்கள், இவர்களின் எழுத்தை தரம் பார்த்து அதை போல எழுதுவது நன்று. இது என் சொந்த கருத்து மற்றும் விருப்பம்.
அப்புறம், கோவை சித்தர் என்றழைக்கப்படும், லதானந்த் அவர்களின் எழுத்து, எனக்கு பிடித்த கோவை பேச்சு நயத்துடன் இருக்கிறது...
கமண்ட்ஸ் போடுபவர்கள், அந்த நேரத்தின் (மீ த பர்ஸ்டு தவிர) தன்மை பொறுத்து கருத்து போடுகிறார்கள். அப்துல்லா அண்ணேவின் ப்ளாகில் தமிழ் கெட்ட வார்த்தைகள் போட்டு திட்டுகிறார்கள், என்ன நியாயம்?
நிறைய எழுத வேண்டும், டைம் தான் இல்லை.
Thursday, April 23, 2009
கேபிள் டிவி புறக்கணிப்பு
தமிழ்நாட்டில் இருந்து அனைவரும் ஓடி விட வேண்டும் பக்கத்து மாநிலங்களுக்கு.
பந்த் என்ற பெயரில் நடக்கும் கூத்து. அதனால் எங்கள் அபார்ட்மென்டில், கேபிள் டிவி புறக்கணிப்பு செய்துள்ளோம். லோகல் கேபிள் ஆபரேட்டரை அழைத்து கேபிளை எடுத்து போக சொன்னோம்.
நீங்கள் அனைவரும் தமிழ்நாட்டில் இதை செய்ய வேண்டும். அப்போது தான் மாறன் ப்றேதர்ஸ் மற்றும் கலைஞர் டிவி ஆட்கள் ஆட்சி மட்டும் செய்வார்கள்.
வருமானத்தை கட் செய்தால் அடங்கிவிடுவார்கள்.
விஜயகாந்த் கட்சி தான் இந்த முறை அதிக இடங்களை அள்ளப்போகிறது... இந்த தி,மு.க, அ.தி.மு.க அவ்வளவு தான். வாழ்க வளமுடன்.
**********
நாளை வேண்டுமென்றால் இருக்குது டிஷ் டிவி. (தமிழ்நாட்டுக்காரன் சொந்தமான ஐட்டம் வேண்டாம்).
இலங்கையில் நடக்கும் போர், என்ன ஆகும் எனத் தெரியவில்லை.
இங்கே இலங்கைக்கு பிழைப்புக்காக நாடு விட்டு நாடு சென்றவர்கள் ( மொரிசியஸ், வெஸ்ட் இண்டீஸ் உதாரணம் எடுத்துக்கொள்ளுங்கள் ) அங்கு மக்களோடு ஒற்றுமையாக இணைந்து வாழ வேண்டும். அங்கும் ஜாதி, மதம் , மொழி என்று பாகு பாடு தான் இத்தனை அழிவிற்கும், முக்கியமாக, மக்கள் பணம் கொடுத்து டேரரிசம் வளர்த்து இப்போது கஷ்டப்படுகிறார்கள்... ( ஒரே சர்வதிகார தலைவன் முப்பது ஆண்டுகளாக)... அங்கிருக்கும் தமிழர் அனைவருக்கும் அது ஒரு இழுக்கு. மாபியாத்தனம்.
தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்து, வாழ்வது, லோகல் மக்களுக்கு கொடுமையாகும்.
என் அப்பா அங்கிருந்து வந்து, கொண்டு வந்த சொத்தில் தான் வியாபாரம் செய்து வாழ்க்கை அமைத்தார். எவ்வளவு நாட்கள் தான் தண்டல் கட்ட வேண்டும், தமிழ் என்ற பெயரால்.
சிங்கப்பூர், மலேசியாவில் தமிழ் மூலம் என்ன நடக்கிறது? தமிழர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.
Monday, April 20, 2009
வெளியில் உணவும், மண்டை காயும் வெய்யிலும்
மதியம் வெய்யில் கொடுமை. எங்கள் பழைய ஏழு வருட ஏசி மக்கர் செய்ததால், புது ஏசி (கொரியன் கம்பெனி) ஒன்று காலையில் ஆர்டர் செய்தோம். மாலை ஐந்து மணிக்கு வந்து பிட் செய்தார்கள். பழையதுக்கு ஒரு விலை கூட கொடுத்தார்கள்.... குழந்தைகள் தூக்கம் கோவை போல இருக்கும். கரண்ட் தான் கேடு.
இரவு பூந்தமல்லி வெஸ்லி ஸ்கூல் முன்னால் நம்பர் 91, இருக்கும் ஒரு ஸ்பா மற்றும் ரெஸ்டரன்டில் ஏற்பாடு. அந்த நண்பரின் நண்பர்கள் முதலீட்டாளர்களாம். பெயர் வாயில் நுழையாது ஒன்றல்ல. எதற்கு வீண் விளம்பரம்?
உணவும் நல்ல விலை தான். பொன்னுசாமியை விட இரு மடங்கா இருக்கும்! இருந்தாலும், அதிகம் சாப்பிடும் (குழந்தைகள், கேட்கும் போன்லஸ் சிக்கேன்) போன்றவை, குறைவாகவே செலவானது. காரணம், விலையா, அங்கு புது இடம் என்பதால, அல்லது ருசியா?
நண்பருக்கு புது மண வாழ்வுக்கு வாழ்த்து சொல்லி, நன்றி கூறினோம். ( அருமையான இடம் கூட, மூன்று மணி நேரம் மொத்தம் செலவானது)
எப்படி முதலில் நன்றாக இருந்து பின்னால், பல ஹோட்டல்கள் சுமார் ஆகி, பெயர் கெட்டுப்போனால் மீண்டும் நல்ல உணவு கொடுப்பார்கள், அது மாதிரி ஆகாமல் இருந்தால் சரி. வாழ்த்துக்கள்.
சிறு வயதில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு எதிரில் இருக்கும் புஹாரியில் தான் பிரியாணி வாங்கும் வழக்கம். ஊருக்கு போகும் போது, கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ஏறும் முன், அங்கு லன்ச் வாங்கும் பழங்கால பழக்கம்...
சரி சரி, எலெக்சன் சமயத்தில் எங்கள் பக்கத்து வீட்டுக்காரர் வீட்டில் தினமும் பிரியாணி தான்.
Sunday, April 19, 2009
படித்ததில் பிடித்தவை
இரண்டு வாரம் வெளியூர் பயணம். இப்போது தான் சில மணி நேரம் முன் வீடு திரும்பினோம்.
கணவர் மட்டும், வீட்டை பார்த்துக்கொள்ள, நான் மற்றும் குழந்தைகள் கோவையில்... அதை பற்றி ஒரு பதிவு நாளை.
கோவையில் ஆர்.பிரபு நிச்சயம் வெற்றி பெறுவார்! காங்கிரஸ். கிளீன் கய்...
அப்புறம், சென்னை விட கோவை வெதருக்கு மேல்!
*************
சில பதிவுகள், சில மணி நேரம் முன் படித்தேன். நன்று.
ரமா : காஃபி சாப்பிடப்போலாமா?
நடிகர் விவேக் சொற்பொழிவு
சோகம்
குடும்பமும் கோலாகலமும்
DAY 358 (அமிதாப் பச்சன் ஒரு வருடம் ப்ளாக் உலகில்... வாழ்த்துக்கள்!)
Friday, April 3, 2009
ஜாதிக்கு இடம் வேண்டாம்
ஏழ்மைக்கு இடம் கொடுங்கள்....
மக்களை முன்னேற்றுங்கள்...
இந்த பதிவு படித்தேன்...
என் அறிவுக்கண் திறந்த டி.வி.எஸ் நிறுவனம்
என்னுடைய கமன்ட் இங்கே...
அண்ணே ஜாதி என்கிற களம் பள்ளிகளில் இருந்து நீக்கப்பட வேண்டும். தன் திறமையால் தான் ஒருவர் இடம் பிடிக்க வேண்டும்! ஏழ்மை நிலைக்கு படிக்க இடமோ பொருளோ அரசாங்கம் கொடுக்கலாம்.
Tuesday, March 31, 2009
தமிழர்கள் சுட்டுக் கொலை
குடும்பச் சண்டை-அமெரிக்காவில் 6 தமிழர்கள் சுட்டுக் கொலை
//
சான்டா கிளாரா (கலிபோர்னியா): நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இரு குடும்பங்களைச் சேர்ந்த 6 பேர் அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்டனர். குடும்பச் சண்டை காரணமாக இந்த பயங்கரம் நிகழ்ந்துள்ளது. துப்பாக்கியால் சுட்டவரும் தற்கொலை செய்து கொண்டு விட்டார்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள அய்யன்கொள்ளி என்ற பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜன் (42). யாஹூ நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜீனியராக பணியாற்றி வந்தார். முன்பு மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இவர் பணியாற்றியுள்ளார்.
மனைவி ஆபா (34) மற்றும் அகில் என்ற 11 வயது மகன், நேஹா என்ற 4 வயது மகளுடன் கலிபோர்னியாவின் சான்டா கிளாரா நகரில் வசித்து வந்தார் தேவராஜன்.
ஆபாவின் சகோதரர் அசோகன் (35). இவரது மனைவி சுசித்ரா (25). இவர்களுக்கு 11 மாத கைக்குழந்தை உள்ளது.
அசோகனும் என்ஜீனியர். அசோகன் குடும்பத்தினர் இந்தியாவில் வசித்து வந்துள்ளனர்.
குடும்பத் தகராறு காரணமாக அசோகனுக்கும், தேவராஜனுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக தெரிகிறது.
இந் நிலையில், புதிய பிளாட் வாங்கினார் தேவராஜன். இதற்கு அண்ணன் குடும்பத்தை அழைத்திருந்தார் ஆபா. இதற்காக அசோகன் தனது மனைவி, மகளுடன் சான்டா கிளாரா வந்திருந்தார்.
நேற்று இரவு நடந்த விருந்தின்போது திடீரென தேவராஜனுக்கும், அசோகனுக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது.
அப்போது யாரும் எதிர்பாராத வகையில் கைத் துப்பாக்கியை எடுத்து அசோகன் குடும்பத்தினரை சரமாரியாக சுட்டுத் தள்ளினார் தேவராஜன்.
இதில் அசோகன், அவரது மனைவி சுசித்ரா மற்றும் மகள் ஆகியோர் படுகாயமடைந்து விழுந்தனர். இதைப் பார்த்து ஆபா ஓடி வந்து தடுக்க முயன்றார்.
அப்போது ஆபா, தனது இரு மகள்கள் ஆகியோரையும் சுட்டார் தேவராஜன். இதில் அவர்களும் படுகாயமடைந்தனர்.
பின்னர் தேவராஜன் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
ரத்தம் கொட்டிய நிலையி்ல் ஆபா வீட்டுக்கு வெளியே வந்து உதவி கோர முயன்றார். ஆனால் முடியாமல் அப்படியே விழுந்து விட்டார்.
படுகாயத்துடன் கீழே விழுந்து கிடந்த அவரைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த போலீஸார் தேவராஜன், சுசித்ரா, அசோகன், நேஹா, அகில் ஆகியோர் உயிரிழந்து கிடந்ததைப் பார்த்தனர். கைக்குழந்தை உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. அக்குழந்தைக்கு டாக்டர்கள் சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளித்தனர். ஆனால் அது சிறிது நேரத்திலேயே இறந்து விட்டது.
படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தி்ல் மிதந்த ஆபா உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவராஜன் குடும்பத்தினர் வசித்து வந்த இடம் சிலிக்கான் வேலி பகுதியில் உள்ள ரிவர்மார்க் எனப்படும் குடியிருப்புப் பகுதியாகும். இங்கு 1,100 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு வசிப்போரில் பெரும்பாலானவர்கள் சாப்ட்வேர் நிறுவனங்களில் பணியாற்றும் வெளிநாட்டினர்தான். இதில் இந்தியர்களே அதிகம்.
இந்த குடியிருப்புக்கு அருகில்தான் சன் மைக்ரோசிஸ்டம்ஸ் நிறுவனம் உள்ளது.
//
நன்றி: தட்ஸ்தமிழ்.காம்
இறந்தவர்கள் ஆத்மா சாந்தி அடையட்டும். அடிபட்ட ஆபாவிர்க்கு, உடல் நிலை தேற வேண்டும் என பிரார்த்திக்கிறேன். மன தையிரியமும் கிடைக்கட்டும். பெண் பிழைத்துவிடுவாள், என மனசு சொல்கிறது!
என்ன இருந்தாலும், குடும்பம் என்று இருந்தால் சண்டை (இதில் சொத்து விஷயம் அதிகம்) இருக்கும். அதற்கு இந்த இந்திய அமெரிக்கர்கள், துப்பாக்கி எடுத்து காட்டி விளையாடுவது, தேவையற்ற ஒன்று. அதுவும், அமெரிக்காவிற்கு அழைத்து ஒரு குடும்பத்தை கொல்வது வேதனையான ஒன்று. பணம் செய்யும் மாயம்....
அமெரிக்காவில் இருப்பவர்கள் எல்லாம், சொத்துக்கு அதிபதியாம், இந்தியாவில் இருக்கும் குடும்ப சொத்தை நிறைய பேர் (கூட பிறந்தவர்கள், பெற்றோர்) தர மாட்டார்கள். கேள்விப்பட்டுள்ளேன்...
சாண்டா க்ளாராவில், எனக்கு தெரிந்த சில குடும்பத்தினர் இருக்கிறார்கள். வேறு கம்பெனியில் வேலை செய்கிறார்கள்.
என்ன விந்தை இந்த உலகத்தில்.