Wednesday, February 17, 2010

இதுவரை

பிசி என்று சொல்லாமல், வீட்டில் கம்ப்யுடர் டைம் கிடைப்பதில்லை, அதனால் பதிவுலகம் பக்கம் வரவில்லை.

நோட்டில் தான் சில கவிதைகள் எழுதினேன். அப்புறம் ப்ளாகில்.

பரிசல்காரன் புத்தகம் வந்திருக்கு. கேபிள் சங்கர் புத்தகம் வந்திருக்கு. வாழ்த்துக்கள்.

நாங்கள் பெங்களூரு வந்து சில காலம் ஆகியும் இன்னும் செட்டில் ஆகவில்லை.

அபார்ட்மெண்டில் இரவு தினமும் கையால் துவைக்கும் ஒரு பெண், விடாமல் சோக பாட்டு பாடுகிறார். கணவனை சென்னையில் விட்டுவிட்டு இங்கு தனியாக வேலை... ரூம் மேட்ஸ் உண்டு.

தமிழ் படம் மற்றும் அசல் பார்த்தோம். பிடித்திருந்தது.

ரேணிகுண்டா, போர்க்களம் படம் சிடியில் பார்த்தோம்.

புதிய ஹைவே பளை ஓவர் சில்க் போர்டு முதல் எலெக்ட்ரானிக் சிடி வரை சென்று வந்தோம்.

இப்போதெல்லாம் கம்பளி தேவையில்லை இரவில். குளிர் விட்டாச்சு.

குழந்தைகள் கடைசி டெர்ம் பரீட்சை இன்னும் ஒரு மாதத்தில். ஒரு வருட பாடம் ரிவைஸ் பண்ணனும்.

கணவர் வேலை தேடுகிறார்.