Monday, August 9, 2010

மீண்டும் எழுதுகிறேன்

நீண்ட நாட்கள்... எழுதவில்லை. என் ஆங்கில பதிவில் மூன்று பதிவுகள் போட்டேன்... அதுவும் இமெயிலில் இருந்து கட் & பேஸ்ட் ... மேலும் அங்கு நேரம் கிடைக்கவில்லை.

கணவர் வேலை காரணமாக யுரோப் சென்றதால்... சம்மர் வெகேசன் ( மார்ச் இறுதி முதல் ஜூன் முதல் வாரம் வரை ) நாங்களும் டூசல்டார்ப் சென்றோம். அவர் அங்கு தான் இருக்கிறார். பெங்களூரு வந்த ஒன்பது மாதங்களில், நல்ல வேலை என்று நம்பி வந்த கம்பெனி செயலற்று போனதால்... பெப்ரவரி நடுவில் அவர் இந்த புது கம்பெனியில் சேர்ந்தார். உடனே ஆறு மாதத்திற்கு அவருக்கு புது ப்ரொடக்ட் வேலை. அதற்கு ஆறு மாதம் ஆன்சைட். கம்பெனி மூலம் (விமானத்திற்கு ஐ.டி.) இப்போது ஜெர்மனியில். இந்த மாதம் கடைசியில் திரும்புகிறார்.

நிறைய இடங்கள் பார்த்தோம். அதை பற்றி மெதுவாக எழுதுறேன். இத்தாலியில் சியன்னா என்ற இடம் சென்றது மிக அருமை. ஜூஸ் படுகொலைகள் நடந்த இடமான சென் சப்பாவிற்கும் சென்றோம். நிறைய இடங்களுக்கு ட்ரெயினில் தான் சென்றோம். யுரோ ரெயில் பாஸ் கட்டணம் குறைவு.

எங்கு சென்றாலும் நிறவெறி ஆதிக்கம் இருக்கின்றது. Are you SriLankan என்று சில இடங்களில் கேட்டார்கள். ஏன் என்று தெரியவில்லை.

ஜெர்மனியில் படிப்பு செலவு ஒரு குழந்தைக்கு மாதம் முன்னூறு யுரோ ஆகுமாம். நமக்கு கட்டுபடி ஆகாது. மேலும் சில பள்ளிகளில் வருமானம் பொறுத்து இலவசமாம்.


***

சரி அப்துல்லா அண்ணன் குறிப்பிட்டிருக்கும்

பிரபல பெண் பதிவருக்குப் பகிரங்கக் கடிதம் பதிவில் உள்ள பெண் யார்?


மீண்டும் கலகமா?

Monday, February 22, 2010

பழைய நினைவுகள்

என் குழந்தைகள் வரைந்த ( கம்ப்யுட்டரில் செய்த பெயின்ட் கிறுக்கல்கள் உட்பட ) இன்று எடுத்து வைத்து பார்த்தோம்.

அவர்களே ஆச்சிரியபட்டார்கள். "நானா இதை செய்தது?" என்று...

சரியான ஆசிரியர் இருந்தால் வாழ்க்கை நலம் தான்.

காலம் எப்படி வேகமாக போகிறது பார்த்தீர்களா?

அவர்கள் பெரியவர்கள் ஆகும் போது பரிசளிக்க வேண்டும்.

***

முகம் தெரியாத ப்ளாகர்கள் எல்லாம்.... சரி விடுங்கள்....

கிரிக்கெட்டுக்கும் எனக்கும் தூரம் அதிகம். தொடர் பதிவு வேண்டாமே?

Wednesday, February 17, 2010

இதுவரை

பிசி என்று சொல்லாமல், வீட்டில் கம்ப்யுடர் டைம் கிடைப்பதில்லை, அதனால் பதிவுலகம் பக்கம் வரவில்லை.

நோட்டில் தான் சில கவிதைகள் எழுதினேன். அப்புறம் ப்ளாகில்.

பரிசல்காரன் புத்தகம் வந்திருக்கு. கேபிள் சங்கர் புத்தகம் வந்திருக்கு. வாழ்த்துக்கள்.

நாங்கள் பெங்களூரு வந்து சில காலம் ஆகியும் இன்னும் செட்டில் ஆகவில்லை.

அபார்ட்மெண்டில் இரவு தினமும் கையால் துவைக்கும் ஒரு பெண், விடாமல் சோக பாட்டு பாடுகிறார். கணவனை சென்னையில் விட்டுவிட்டு இங்கு தனியாக வேலை... ரூம் மேட்ஸ் உண்டு.

தமிழ் படம் மற்றும் அசல் பார்த்தோம். பிடித்திருந்தது.

ரேணிகுண்டா, போர்க்களம் படம் சிடியில் பார்த்தோம்.

புதிய ஹைவே பளை ஓவர் சில்க் போர்டு முதல் எலெக்ட்ரானிக் சிடி வரை சென்று வந்தோம்.

இப்போதெல்லாம் கம்பளி தேவையில்லை இரவில். குளிர் விட்டாச்சு.

குழந்தைகள் கடைசி டெர்ம் பரீட்சை இன்னும் ஒரு மாதத்தில். ஒரு வருட பாடம் ரிவைஸ் பண்ணனும்.

கணவர் வேலை தேடுகிறார்.

Wednesday, January 13, 2010

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்



எல்லோருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் !

பெங்களூரில் சங்கராந்தியும் இன்றிரவு கொண்டாடுகிறார்கள்!