Wednesday, January 21, 2009

வில்லு

வில்லு பத்தி நிறைய, காரசாரமான விமர்சனங்கள் வந்துள்ளன.

'வில்லு ‍- பார்ப்பவனையெல்லாம் கொல்லு'

வில்லு - விவ'கார'மான விமர்சனம்

ஒரு நாளில் இரண்டு படங்கள்

பார்க்கலாம் என்ற எண்ணமே, போய் விடும் போல உள்ளது...

இது வகை ரிவர்ஸ் சைகாலேஜியா? படம் ஓடும் எனத்தான் தோனுது... அது தான் டிவி'லே அடிக்கடி பாட்டு வருதே...

Friday, January 16, 2009

டிவியும் பொங்கல் திருவிழாவும்

டிவியும் பொங்கல் திருவிழாவும் ... வந்து போய்க்கொண்டு இருக்கின்றது...

டிவி மூலம் தான் நாம் எந்த விழாவும் தமிழ்நாட்டில் கொண்டாடுகிறோம்.

நான் கல்யாணம் செய்து பத்து வருடங்கள் ஆகிறது. எதையும், எதிர்பார்த்து விழா என்று செய்வதில்லை. சில சமயம் அப்பா அம்மா வருவார்கள்.

சொந்தங்கள் வாரம் ஒருவராவது காலையில் குளித்து ரெடி ஆகி செல்ல வருவார்கள். ஒரு பிட் ஸ்டாப் என்பார், கணவர். இருந்தாலும், ஊரிலிருந்து ஏதாவது எடுத்து வருவார்கள், மகிழ்ச்சியின் பகிர்தல்கள்....

********************

அமிதாப் பச்சனின் ப்லோக் படித்தேன். எப்படி மீடியா அட்டகாசம் செய்கிறது பாருங்கள்.

இது கொஞ்ச நாள் முன் என் நண்பர்கள் பற்றி சிலர் அடித்த கூத்து (அனைத்து வயதினரும்) ஞாபகம் வருது...

அவர் ப்ளோகில் நான் கமன்ட் போட்டிருந்தும், எதோ காரணம் எனக்கு தெரியவில்லை. இந்த ப்லோக் விலாசம் (உரல்) கொடுத்தால் இருக்குமோ?

ஸ்லம்டாக் மில்லியனேர் என்ற சேரிவாழ் கோடீஸ்வரன் படம் குறித்து, அவருக்கு வந்த கமண்ட்ஸ் எழுதியிருந்தார். பிற்பாடு, நேயர்களின் கருத்து கேட்டிருந்தார். அதை அவர் கருத்தாக பத்திரிக்கைகள் அளித்து விட்டன.

அமிதாபும் ஜோக்காக மன்னிப்பு கேட்கிறார்... (நண்பர் எழுதிய மன்னிப்பு கோருகிறேன் பதிவு தான் ஞாபகம் வருது)

அதை போலவே இன்னொரு விஷயம். அக்சய் குமார் என்ற நடிகர், பாலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்குபவர்... வருடம் 70 கோடிகள் என்கிறார்கள்... அமிதாபை மூன்று மணி நேரம் காக்க வைத்து விட்டு, அமிதாப் தான் தவறு செய்தார் என்ற ரீதியில்... ஒரு போஸ்ட். இங்கே படியுங்கள்.

http://www.uaedailynews.com/entertainment/1592.html

என்ன கொடுமை இது? பாவம் வயதானவர், குளிரால் பாத்ரூம் போக எப்படி சிரமம் பட்டிருப்பார்? கொஞ்சம் யோசிக்க வேண்டாமா?

சிலர் அப்படி தான் திருந்தமாட்டார்கள்... பெயர், வாசகர் பார்வை, என்று எதை வேண்டுமானாலும் சொல்லலாம்.

ஒரு கிக் இல்லையா?

Tuesday, January 13, 2009

கோபங்களும் தீர்வுகளும்

நேற்று அந்த சோதா அக்பர் பெண் பற்றி விஜய் டிவியில் பார்த்தேன். எதோ டுபாகூர் போல இருக்கு கோபிநாத். இதை வைத்து, நீங்கள் கப்சா நடந்தது என்ன என்று ஒரு தனி ப்ரொக்ரேம் போடலாம்.

உரைநடைகளில் தங்கள் நண்பர்கள் விலாவரியாக விவரித்த கூற்றுகளை, கோடிட்டுக்காட்டுவது தமிழர் மரபு. சாலமன் பாப்பையா, அவ்வை ஷண்முகம் போன்றவர்கள் இதில் கை தேர்ந்தவர்கள்.

நானும் கல்கி, குமுதம், ஆனந்த விகடன் போன்ற பிரபல இதழ்களில் நிறைய வருடங்களாக எழுதுகிறேன் வேறு புனைப்பெயரில். ஆசிரியர் குழுக்கள் எனக்கு மிகவும் பரிச்சியம். கதைகள் கட்டுரைகள் எழுதுவது யார், என்று தெரியும். ஆண் வடிவில் பெண்ணா, அல்லது பெண் வடிவில் ஆணா என்பதும் கூட.

ஒரு பெண் எழுதுறாங்க, அவர் இவரை பற்றி குறிப்பிட்டு எழுதும் முன், பதிவு போடும் முன் இவரிடம் கேட்டிருக்கவேண்டுமாம்.... சரி அவர் தான் இவரிடம் அது பற்றி முதல் ஆளாக கேட்டுவிட்டார் அல்லவா? அதன் பிறகு ஏன் மூன்று மாதங்கள் கழித்து எழுதவேண்டும்? அது அது இல்லை , அது மாதிரி என்று சொல்லிவிட்டார் அல்லவா? பின்னும் ஏன் நக்கல்? இன்னும் ஏன் அந்த பதிவு வாழ்ந்துக்கொண்டு இருக்கு?

தவறு இருப்பின் சம்பந்தப்பட்டவர் மறக்க வேண்டும், அந்த பதிவு போட்டதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். அந்த இடத்தில் நான் இருந்திருந்தால், இவ்வளவு வளர விட்டிருக்க மாட்டேன்.

ஒன்றை கவனிக்கவும், நான் யாருக்கும் சப்போர்ட் செய்யவில்லை. நியாயம் உள்ள பக்கம் தான் ஜெயிக்கும்.

அது இல்லாததுனால் தானே இவ்வளவு பதிவுகளும் தூற்றுகளும், குழாயடி சண்டை போல?

இதற்கெல்லாம் காரணம் வலையுலக மார்கெட்டிங் என்ற பதிவாக இருக்கலாம்.

இந்த பதிவை பாருங்கள், எவ்வளவு மனம் நொந்து எழுதுகிறார் திவ்யா.

பதிவுபோதை அய்யா நீங்க நலமா

ஆமாம், வேலை நேரத்தில் ப்லோக் பக்கம் வந்து டைம் வேஸ்ட் செய்பவர்களை, வேலையில் இருந்து தூக்கிவிடமாட்டார்களா? எச்.ஆர். பாலிசி என்ன சொல்லுது? எல்லாம் காலேஜ் முதல் இந்த ப்ராக்சி செய்யும் வேலை.

எப்படியோ, பார்த்து நடந்து கொள்ளவும்.

************

தமிழ்மணத்தில் போட்ட ஓட்டுக்களும் செல்லாமல் போய் விட்டன. மீண்டும் டைம் வேஸ்ட் பண்ணனுமா? என்ன கண்றாவியோ!

Monday, January 12, 2009

பதிவுகளின் நோக்கங்கள்

எதற்காக பதிவுகள் எழுதுகிறோம்? ஒரு நோக்கம் வைத்து தானே?

சரி, அந்த நோக்கம் தவறாக இருந்தால், ஆணாக இருந்தாலோ, பெண்ணாக இருந்தாலோ, அந்த பதிவை எடுத்து விட வேண்டியது தானே?

ஒரு பெண் எழுத்தாளர், சொல்லுகிறார், என்னிடம் கேட்காமல், ஒருவர், தன் நண்பியிடம் நக்கல் செய்துவிட்டார் என்று. அதற்காக ஒரு பதிவு போடுகிறார், தவறு என்றும் தெரிந்தும். மன்னிப்பு ஏற்கப்பட்டு வேறு அர்த்தங்கள் கற்பிக்கப்பட்டு மற்றும் அதன் தொடர்புடைய பதிவுகள் எடுக்கப்பட்டுவிட்டன. இப்போது இன்னும் அந்த கேனத்தனமான பதிவு உள்ளது. நக்கலா?

இடையில் சில நாட்டாமைக்காரர்கள், விசயத்தை திசை திருப்புகிறார்கள். தனி மனித தாக்குதல் மற்றும் ஆங்கில புலமை குறித்து பேசுகிறார்கள்.

ஆழம் தெரியாமல் காலை விடுகிறார்கள். சுண்ணாம்பு கேட்ட இசக்கி ஒரு பொருத்தமான கதை...

வம்பில் மாட்டிக்கொண்டு களி தின்ன போகாமல் இருந்தால் நலம்.

என் கணவரின் நண்பர் ஒரு பிரபலமான வார இதழில் எடிடோரியலில் வேலை செய்கிறார். நிறைய ஆட்கள் எழுதுவதில் கிசு கிசு என்று உண்மைக்கு புறம்பான சில தகவல்கள் சொல்லப்பட்டு உள்ளன. நான் வெளியிடப்போவதில்லை. சிலருக்கு மட்டும் இது புரிந்திருக்கும்.

Sunday, January 11, 2009

அர்த்தங்கள் வாதங்கள் பதிவுகள்

நான் இந்த பதிவை படித்தேன். மன்னிப்பு கோருகிறேன்!

மன்னிப்பு கோருகிற மாதிரி சாட்டை அடி கொடுக்கிறார் ரமேஷ்! கமன்டுகளை படிப்பது சுவாரசியமாக உள்ளது.

திவ்யாவும் பதிலுக்கு பதில் கொடுக்கிறார் இங்கே...

இண்டேர்ணலைஸ் மன்னிப்பு

திவ்யாவின் பதிலடிகள் அருமை. அவரின் பதிவில் உள்ள திடம், காரம் அமெரிக்காவின் கொள்கை வெறி போல உள்ளது.

ரமேஷ், நீங்கள் எதற்கு தலை தாழ்த்த வேண்டும்? உங்கள் முதல் கமன்டை அவர் (உஷா ராமசந்திரன்) ஏற்றுக்கொண்டு பின் மறந்தால், நியாயம் உங்கள் பக்கம் தான். அது தானே, இந்த பதிவுகளுக்கு காரணம்?

அவர் தன் பதிவில் உள்ள தமாஸ் கமன்ட்களை நீக்குவாரா? உங்களை திட்டி எழுதிய பதிவை எடுத்துவிடுவாரா?

Friday, January 9, 2009

சென்னை புத்தக கண்காட்சியும் பெட்ரோலும்

பெட்ரோல் கிடைக்காததால் வண்டி எடுக்க முடியவில்லை, அதனால் சென்னை புத்தக கண்காட்சிக்கு செல்ல முடியவில்லை.

மேலும், இரண்டு பதிவர்கள் (பதிப்பாளர்கள்) எழுதிய விஷயம் பார்த்து, அங்கு போய் வர யோசனை....

ChennaiBookFair2009_invitation_01

அப்புறம்... சில புத்தகங்கள் விற்க தடை? வாய்மொழி உத்தரவு? எமர்ஜென்சி மாதிரி இது. வன்மையாக கண்டிக்கிறேன். பேச்சு எழுத்து சுதந்திரம் இல்லாத நாடு சுடுகாடு என்று யாரோ சொல்லியிருக்கிறார்.

புத்தகங்கள் விற்பனை செய்யக்கூடாது…

குழந்தைகள் ரொம்ப குடைச்சல்... விழா நடத்துபவர்கள், குழந்தைகளை மனதில் வைத்தால், விற்பனையும் கூடும்.

என் கணவர், டிஸ்கவுண்ட் கிடைக்குது என்பதற்காக சில வேண்டாத புத்தகங்கள் அள்ளுவார். சினிமா செலவிற்கு இது பரவாயில்லை....

********

பெட்ரோல் கிடைக்காததால்... ஒரு நல்ல விஷயம்... நல்ல காற்று. வாகனங்கள் குறைவு. தேவையில்ல்லாமல், வண்டிகள் ஓடுவதில்லை. நன்மை.

இது தான் வாகன ஓட்டிகள், தினமும் செய்தால் நன்றாக இருக்கும்.

சரி வெங்காயம் கிலோ முப்பது ருபாய் ஆகிவிட்டது. என்ன செய்ய?

ஒ ... அது ட்ரக்/லாரி ஸ்ட்ரைக். என்ன விசயம்? டேக்ஸ் குறைக்க வேண்டுமாம். எதற்கு? தெரியவில்லை...

Wednesday, January 7, 2009

சத்யம் ஒரு என்ரான், ராமலிங்க ராஜு ஒரு க்ரூக்

நம் நாடு சுதந்திரமடைந்த காலத்தில் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைவதே நமது ஒரே லட்சியமாக இருந்தது. இந்த நோக்கத்தை மனதில் வைத்தே விவசாயத் துறையில் பல புதிய திட்டங்களைத் தீட்டினோம். அணைகள் கட்டுவதில் ஆரம்பித்து, உணவுக் கிடங்குகளை அமைப்பதுவரை அப்போது நமக்கிருந்த ஒரே நோக்கம் ஒவ்வொரு இந்தியனும் பசித்த வயிறோடு தூங்கச் செல்லக்கூடாது என்பதுதான்.

ஆனால், இன்றைய நிலை என்ன? இந்தியா முழுக்க உள்ள கிராமங்களையும் ஏழை விவசாயிகளையும் பலி கொடுத்துதான் நம்நாடு வேகமாக வளர்ந்து வருகிறது! இந்தியா முழுக்க உள்ள 105 கோடி மக்களில் 83 கோடி பேர் வறுமையின் கொடுமைக்கு எப்போது வேண்டுமானாலும் ஆளாகலாம் என்கிற நிலையில் இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. இந்தியாவில் ஒருங்கிணைக்கப்படாத தொழிலாளர்கள் மட்டும் 93%. இதில் 80% தொழிலாளர் விவசாயம் மற்றும் விவசாயத் தொழில்களைச் சார்ந்து இருப்பதாக ஒருங்கிணைப்படாத தொழிலாளர்களுக்கான தேசிய கமிஷன் சொல்கிறது.

தமிழகத்தை எடுத்துக்கொண்டால், 48% நகர்மயமாகிவிட்டது என்கிறார்கள். 2020-க்குள் கிட்டத்தட்ட 70% நகர்மயமாகிவிடுமாம். இப்படி அசுர வேகத்தில் விளைநிலங்களை பிளாட் போட்டு விற்றுக்கொண்டிருந்தால், நமக்குத் தேவையான உணவு எங்கிருந்து கிடைக்கும்? கிராமங்களிலிருந்து சாரைசாரையாகக் கிளம்பி நகர்ப்புறத்தை நோக்கி வருகிறார்கள் மக்கள். ஏன்? கிராமத்தில் வேலை இல்லை. விவசாயம் கட்டுப்படியாகக்கூடியதாக இல்லை. சிறிய அளவில் நிலத்தை வைத்திருக்கும் விவசாயிகள் கழுத்தை நெரிக்கும் கடன் காரணமாக தற்கொலை செய்துகொள்கிறார்கள். இந்த ஆண்டு மட்டுமே 16,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதிலிருந்தே விவசாயத் துறையை நாம் எந்த அளவில் அக்கறையோடு கவனிக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.


கடந்த சில பத்தாண்டுகளாக விவசாயம் பற்றி நம் அரசாங்கத்தின் அணுகுமுறை முற்றிலும் மாறியிருக்கிறது. முன்பு உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வதில் மிகுந்த அக்கறை காட்டினோம். இன்று நமக்குப் பணம்தான் முக்கியம். பணம் கிடைக்க வேண்டுமென்றால் எதை வேண்டுமானாலும் வளர்க்கலாம் என்கிற அளவுக்குப் போய்விட்டோம். இப்போது தமிழகத்தில் சாப்பிடுவதற்குத் தேவையான உணவுப் பொருட்களின் உற்பத்தி குறைந்துவிட்டது. தானியங்களின் உற்பத்தி 40% குறைந்துவிட்டது. ராகி, கம்பு போன்ற சத்து தானியங்கள் ஏறக்குறைய அழிந்துவிடும் நிலைக்கு வந்துவிட்டது.

உணவு உற்பத்திக்குப் பதிலாக நாம் என்ன செய்கிறோம்? பெட்ரோல் தயாரிக்கத் தேவையான 'ஜெட்ரோபா' என்னும் தாவரத்தை ஹெக்டேர் கணக்கில் வளர்க்கிறோம். அரசாங்கமும் அதைத்தான் வளர்க்கச் சொல்கிறது. அல்லது தேக்கு மரம் வளர்க்கிறோம்; பூக்களை வளர்க்கிறோம்; மலைப்பகுதிகளில் தேயிலை, காபி போன்ற பணப் பயிர்களை வளர்க்கிறோம். இப்படியே போனால் நம்மிடம் நிறைய பணம் இருக்கலாம். ஆனால், சாப்பிடுவதற்கு நிச்சயம் உணவு இருக்காது!

உணவு தானியத்தில் தன்னிறைவு என்ற நிலையை அடைவதற்குப் பதிலாக இரண்டு மிகப்பெரிய தவறுகளை நாம் இப்போது செய்து கொண்டிருக்கிறோம். அதில் ஒன்று ஏற்றுமதி, இன்னொன்று, இறக்குமதி. நம் விவசாயிகள் கஷ்டப்பட்டு உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு குறைந்தபட்ச விலையைக் கொடுக்க நாம் தயாராக இல்லை. ஆனால், இப்போது நமக்கு ரேஷனில் கிடைக்கும் பொருளின் விலையைவிடக் குறைவான விலைக்கு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம். அந்த விலையை நம் விவசாயிகளுக்குக் கொடுத்தாலாவது அவர்கள் தொடர்ந்து விவசாயம் செய்வார்கள். தவிர, அத்தியாவசியப் பொருட்களை எந்த அளவுக்குக் கையிருப்பு வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற கணக்குவழக்கும் நமக்கு இல்லாமல் போய்விட்டது. அத்தியாவசியமான உணவுப் பொருட்களை நாம் நிறைய ஏற்றுமதி செய்கிறோம். எதிர்காலத்தில் திடீரென ஏதாவது ஒரு விபரீதமான விளைவு ஏற்படுமெனில் அதைச் சமாளிக்க முடியாமல் திண்டாடிப் போவோம்.



இதேபோல, நம் விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களை வாங்காமல், அதிக விலை கொடுத்து வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறோம். தாய்லாந்து, இந்தோனேஷியா, பர்மா போன்ற நாடுகளிலிருந்து அதிகமான விலைக்கு அரிசி வாங்குகிறோம். பிலிப்பைன்ஸிலிருந்து தேங்காய் வாங்குகிறோம். தெற்காசிய நாடுகளிலிருந்து பருப்புகளை வாங்குகிறோம். ஆஸ்திரேலியாவிலிருந்து கோதுமை வாங்குகிறோம். வெளிநாடுகளிலிருந்து அத்தியாவசியமான பொருட்களை இறக்குமதி செய்தால், உள்ளூரில் உற்பத்தியானதை கடலில் சென்று கொட்டவா முடியும்?

ஆக இந்த நிலைமை மாற நாம் என்ன செய்ய வேண்டும்? விவசாயிகளுக்கு வெறும் கடன் தள்ளுபடி மட்டும் போதாது. நீண்டகால நோக்கில் சில அடிப்படையான விஷயங்களை நாம் செய்தாக வேண்டும்.

விவசாயத்துக்குத் தேவையான தண்ணீரைக் கொடுப்பதில் அரசாங்கம் முதலில் கவனம் செலுத்த வேண்டும். புதிய அணைகளைக் கட்டி நீரைத் தேக்கி வைப்பதில் ஆரம்பித்து, ஒவ்வொரு தோட்டத்திலும் சொட்டுப் பாசனம் அமைப்பது வரை பல வேலைகளை அரசாங்கம் உடனடியாகச் செய்தாகவேண்டும்.

நீடித்த வேளாண்மைக்குத் தேவையான விதைகளை உற்பத்தி செய்யவேண்டும். பி.டி.விதை உற்பத்திக்கு அரசாங்கம் எந்த வகையிலும் உதவி செய்யக்கூடாது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் எல்லா பொருட்களுக்கும் குறைந்தபட்ச விலை நிச்சயம் கிடைக்கவேண்டும். உரத்துக்கு அளிக்கப்படும் மானியம் ஆண்டுக்கு ஆண்டு குறைந்துகொண்டே வருகிறது. இந்த மானியத்தையும் அதிகமாக்கவேண்டும்.

இந்த மாதிரியான அடிப்படையான விஷயங்களைச் செய்தாலே போதும், இந்தியா முழுக்க விவசாயம் செழிப்பாக இருக்கும். அந்த நேரத்தில் இந்தியா நிச்சயம் 9 சதவிகித வளர்ச்சியைக் கடந்திருக்கும்!

*********

மேலே உள்ள விஷயம் அனந்த விகடனில் வந்ததா?

It's Different is commenting all around with above!

Tuesday, January 6, 2009

ஏகன் பட விமர்சனம்

ஏகன் பட விமர்சனம் தாமிரா அவர்கள் பதிவில் (Click here) படித்தேன்.

ரொம்ப நாள் ஆயிற்று இப்படி வாய் விட்டு சிரித்து... சூப்பர் ஏகன் விமர்சனம்!

அனுமதியோடு இங்கு மீண்டும் பதிப்பிக்கிறேன்!

அஜித்தை எழவிடாமல் பண்ணுவது ஒன்றையே குறிக்கோளாக திட்டமிட்டு இயக்குனர்கள் செயல்படுகிறார்கள் என்பதற்கு அடுத்த உதாரணம். எதிர்கட்சிகளின் சதி ஏதும் உள்ளதா என அஜித் தெளிவு பண்ணிக்கொள்வது நல்லது. இந்தப்படத்தில் ஒரு ஹீரோயின் (நயன்தாரா). அவர் ஒரு புரொபசர், ஆனால் கொஞ்சம் லூசு. அவரது கல்லூரியில் ஒரு முதல்வர் (ஜெயராம்), அவரும் லூசு. அவருக்கு ஒரு பியூன் (சத்யன்), அவரும் லூசு. ஹீரோவின் அப்பா ஒரு கமிஷனர் (நாசர்), அவரும் ஒரு லூசு. அவருக்கு ஒரு அசிஸ்டெண்ட் (ஹனீபா), அவரும் ஒரு மகா லூசு. வெள்ளை டோப்பாவும், பளிச்சென்ற ஒட்டுத்தாடியும் வைத்த ஒரு வில்லன் (சுமன்), அவரும் லூசு. அவருக்கு ஒரு வலதுகை (ஸ்ரீமன்), அவரும் ஒரு மகா லூசு. படம் பார்த்து முடிக்கும் போது நாம் என்னவாகிறோம் என்பது இந்நேரம் உங்களுக்கே விளங்கியிருக்கும். இந்த லட்சணத்தில் ‘மாற்றாந்தாய்’ மனோபாவ வில்லி கேரக்டரில் நாம் மதிக்கும் சுஹாசினி வேறு. அவரை எப்படி அப்படியொரு கேரக்டரில் பொருத்திப்பார்க்க இயலும்.. சுத்தம்.

ஹா ஹா ஹா !

Saturday, January 3, 2009

நான் கடவுள் பாடல்கள் சொதப்பல்

இளையராஜா ஏன் இப்படி செய்தார்?

மாதாவின் கோவிலின் மணியோசை கேட்டேன் என்ற பாடலின் காபி தானா அம்மா உன் பிள்ளை? உண்மையை சொல்லுங்கள். ராகம் ஒன்று என்று டப்பாங்குத்து ஆடுவார்கள் இல்லையா?

ஓம் என்ற பாடல் தான் கொஞ்சம் வித்தியாசமாக உள்ளது. யாரோ உதவி செய்துள்ளார்கள் என்று இளையராஜா கூறியுள்ளார். படத்தில் நன்றாக இருக்கும்.

மற்றபடி, படத்தில் எப்படி பாலா ஷூட்டிங் செய்திருப்பார் என தெரியவில்லை.

மொத்தத்தில் நான் கடவுள் - பாடல்கள் - சொதப்பல்.

படம் எப்படியோ? ஆஸ்கார் வாங்குமா?

Friday, January 2, 2009

புது வருடம் முதல்

புது வருடம் முதல் என்ன எழுதுவது என்று தெரியவில்லை.

2008 என்பது இப்போது முடிந்து போன ஒரு கனவு.

நேரம் கிடைக்கும் போது எழுதுவது ஒரு கலை.

அதுவும் ப்லோக் படிப்பது, மிகவும் தெரிந்த ஆட்கள் எழுதுவது தான் முதலில் படிக்க தோன்றுது.

அப்புறம் ஆங்கிலத்தில் இரண்டு மில்லியன் ப்லோக் இருக்கு. அதில் இந்தியா டாபிக்ஸ் படிக்க வேணும்.

எப்படியும், வாரம் ஒரு முறை அல்லது பல முறை ப்லோக் எழுத வேண்டும்.

**************

2008 டப் டென் சினிமா (தமிழ் ... எம்மொழியும்...)

10. ஜெயம் கொண்டான்
9. பொய் சொல்ல போறோம்
8. வாரணம் ஆயிரம்
7. சாது மிரண்டால்
6. வெள்ளி திரை
5. தசாவதாரம் (முக கவசதிற்க்காக)
4. அஞ்சாதே
3. குசேலன் (பசுபதி நடிப்புக்காக)
2. சுப்ரமணியபுரம்
1. பூ


என் வாசகர்களை ஒரு தொடர் பதிவாக எழுத வேண்டுகிறேன்.

இந்த வரிசையை பயன் படுத்தி உங்கள் ரேடிங்கும் கொடுக்கலாம்.

பின் குறிப்பு...

நீங்கள் பார்த்த படத்திற்கு ஒரு அளவுகோல். மற்றவை, பார்க்காத ஒவ்வொரு படத்திற்கும் சில விமர்சனம் படித்து ரேங்கிங் இடலாம்.

*****************************
நான் அழைக்கும் மூவர்

கே.ரவிசங்கர்
பரிசல்காரன்
ரமேஷ்

(மற்ற எல்லோரும் எழுதுங்க!)

Wednesday, December 31, 2008

நட்சத்திர பதிவரும் கதையும்

என்னுடைய ப்ளோகில் பல முறை சுட்டி காட்டிய லதானந்த் அங்கிள் அவர்கள் நட்சத்திர பதிவர் தமிழ்மணத்தில் ஆகியுள்ளார். வாழ்த்துக்கள்... இப்போது அந்த தளத்தில் அவர் பதிவுகள், முதன்மையாக காண்பிக்கப்படுகிறது.

நான் சுட்டி காட்டிய அவர் பதிவுகள்....

தலித் பின்னூட்டம்

பரிசல்காரன் - வலைப்பதிவு

வெண்பா

அவர் எழுதிய ஒரு கதை பத்திரிக்கைகள் பிரசுரிக்க மறுத்த கதை – ரசனை, ஏனோ பிரசுரம் ஆகவில்லை...

கதை நன்றாக தான் அவர் டச்சில் உள்ளது. ஆனால் எதோ மிஸ்ஸிங். அடல்ட் விஷயம் மற்றும் இந்த சினிமா பைத்தியங்கள் (மதிப்பிற்குரிய ரசிகர்கள்!) சொந்தங்கள் விசயத்தில் இப்படி நடக்குமா என்ற எதார்த்தமான கேள்வி ... அதுவும் இந்த மே பி அஜீத் படம் நேசம் என்பதால்? தெரியவில்லை! வேற டைட்டில் கொடுத்து எழுதினால்... பிரசுரம் செய்வார்களா? "சினிமாக் காதல்?"

******

எனக்கு நட்சத்திர பதிவர் ஆக ஆசை இல்லை. ;-)

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

எல்லோருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

வாழ்க வளமுடன்.

My Photo

Tuesday, December 30, 2008

அமெரிக்காவில் கசின்

என் சித்தி மகள் (கசின்) அமெரிக்காவில் ஹூஸ்டனில் இருக்கிறாள்...

பி.ஈ. படித்தவள்... இப்போது வீட்டில், முதல் குழந்தை கவனித்துக்கொண்டு, இரண்டாம் குழந்தை எதிர்பார்த்து... அப்புறம் கணவனையும் கவனித்து கொள்கிறாள்.

கல்யாணம் செய்த பிறகு ... சிகாகோவில் ஒரு வருடமும், பிறகு மூன்று வருடங்களாக இருப்பது ஹூஸ்டன். சென்னை மாதிரி இருக்கிறது என்கிறாள்.

சித்தி பையன்
ஜனவரி இறுதியில் அவர்களை அழைத்துக்கொண்டு அமெரிக்கா செல்கிறான்... இரண்டாவது குழந்தை பெப்ருவரியில்... உதவிக்கு ஆள். ஆறு மாதம் இருந்துவிட்டு வருவார்கள், விசா எக்ஸ்டன்சன் கிடைத்தால் ஒரு வருடம். மூன்று வருடத்திற்கு முன் ஒரு வருடம் இருந்துவிட்டு வந்தார்கள் கசினின் முதல் குழந்தை பிறந்த போது.

அவள் கல்யாணம், ஒரு ஸ்பீட் படம் மாதிரி. 2004 இல் மே மாதம் போட்டோ பார்த்து ஒக்கே செய்து, வெப்கேமில் பார்த்து சேட் செய்து... பாஸ்போர்ட் ரெடி செய்து, இந்தியன் டிரைவிங் லைசன்ஸ் எடுத்து காத்திருந்தாள்... மாப்பிள்ளை இந்திய மூன்று வார லீவில் வந்தார்... யு. எஸ். விசா அப்பாயின்ட்மன்ட் புக் செய்திருந்தார்கள்... கூடவே அழைத்து சென்றார்.

நல்ல வேலை இரண்டு வாரம் முன் தான் சித்தி பையன் விசா எடுத்திருந்தான். கண்மூடித்தனமாக ரிஜக்ட் செய்வார்களாம். கணவருக்கு வாய்ப்பு வருகிறது. அவரின் கம்பனியே இன்னும் ஆறு மாதத்தில் அனுப்புகிறேன் என்றிருக்கிறார்கள். எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.

கசின் மாப்பிள்ளை சைடில் இரண்டு முறை அமெரிக்கா சென்று வந்துள்ளார்கள்.... ஒரே மகன். செல்லம்.

இந்தியாவில் தான மாமியார்களை மருமகள்களுக்கு பிடிப்பதில்லை. அமெரிக்காவில் மாமியார்கள் அடங்கி ஒடுங்கி இருக்கிறார்களாம். ஒரே ப்ரெண்ட்ஷிப் என்றாள்.

ஆனால்
பெண் கேட்பது அம்மாவை தான் பிரசவ காலத்தில். ;-)

******************

ஒரு பதிவு எழுத ஆரம்பித்து மூன்று பதிவு ஆகிவிட்டது....

ப்லோக் முறைப்படி சிறிதாக இருந்தால் படிப்பதற்கு நன்றாக இருக்கும்.

சித்தி பையன்

இன்று காலை இருந்த அமெரிக்காவில் இருந்து வந்துள்ளான். பாவம் அறுபது மணி நேரம் தொடர்ந்து பிரயாணம்...ப்ருசல்ஸ் விமானம் இறங்கிய போது பனிரெண்டரை மணி. பிக்கப் செய்து வீடு வரும் போது இரண்டு மணி. நினைத்து பாருங்கள். சென்னை குளிர் எப்படி இருந்திருக்கும் என்று? நல்ல அனுபவம்.

அவன்
படிக்கும் ஊர் நார்த் டகோடாவில் உள்ள பார்கோ. கடும் குளிர் ஊர். ஆகஸ்டில் சில சமயம் ஸ்னோ வரும் என்று கிண்டல் செய்கிறான்... வெள்ளி இரவு கிளம்ப வேண்டியவன், கடும் பனியால், டிக்கட் மாற்றி, சிகாகோ சென்று, நியூ யார்க் அனுப்பி, ஒரு நாள் வெயிட் செய்ய வைத்து - ஹோட்டல் கொடுத்து... லண்டன் , ப்ருசல்ஸ் வழியாக, எப்படியோ, அறுபது மணி நேரம் தொடர்ந்து, நிறுத்தி நிதானமாக பிரயாணம் செய்துள்ளான்... வாழ்த்துக்கள்!

மதியம் ட்ரெயினில் கோவைக்கு பயணம். பாவம், மரக்கட்டை மாதிரி தூங்கி பன்னிரண்டு மணிக்கு எழுந்து, குளித்து அவசரமாக ட்ரயின் பிடித்தான். நல்ல வேலை எப்படியோ டிக்கட் கிடைத்தது. திங்கள் காலை வர வேண்டியவன் என்பதால், மதியத்திற்கு டிக்கட் எடுத்திருந்தார்கள், லேட் ஆகும் என்று பொன் செய்ததால், கேன்சல் செய்துவிட்டு இன்றைக்கு மாற்றினார்கள்.

டிசம்பர் முதல் வாரத்தில் செமஸ்டர் எக்ஸாம் முடித்து விட்டு, ஒன்றரை வருடம் கழித்து வருகிறான்.... ஆகஸ்ட் 4, 2007 சென்றவன், 16 மாதங்கள் பிரிவு ... இன்னும் இரண்டு கோர்ஸ் தான் பாக்கியாம். இதுவரை ஆறு லட்சம் செலவு ஆகியுள்ளது என்றான். அவனே 12% வட்டிக்கு பாங்க் கடன் வாங்கி செலவு செய்கிறான்... எப்படியும் தானே திருப்பி கட்டுவேன் என்கிறான். எப்படியும் அடுத்த அக்டோபரில் சம்பளம் வரும் என்கிறான், எச். 1 விசா வந்த பிறகு....

ஏதோ அவன் காலேஜ் (ஸ்கூல் ஸ்கூல் என்றான், அமெரிக்கன் ஆக்சன்டில்) டிபார்ட்மன்ட் வேலை செய்து சிறிது காசு மிச்சம் செய்துள்ளான். இரண்டு மாதம் லீவு சமயம் வேலை செய்து சம்பாரிக்கிறார்கள், எதாவது வேலை கிடைத்தவர்கள்.

இப்போதே பெண் பார்கிறார்கள், அங்கு படிக்கும் அல்லது வேலை செய்யும் பெண்ணை, எப்படியோ சம்பாரிக்க ஆரம்பித்த பிறகு கல்யாணம் செய் என்கிறோம். இருபத்தைந்து வயது ஆகிறது...

எம்.பி. வேறு செய்வேன் என்கிறான். வேலை செய்துக்கொண்டு செய்தால் நலம். அந்த மாதிரி ஊரில், சன் பிரான்சிஸ்கோ, சிகாகோ, டல்லஸ் அல்லது நியூ யார்க் தான் வேண்டும் என்கிறான்.

எப்படியோ கார் ஒட்டுகிறானாம்... பனியில் வாழ்வது கடினம் போல. பெண்கள் கூட கல்யாணம் செய்து அமெரிக்கா சென்றவுடன், கார் டிரைவிங் லைசன்ஸ் வாங்கிவிடுகிறார்கள்.

எதற்கு அங்கு போய் படிக்கிறான்.... மாஸ்டர் ஆப் கம்ப்யுட்டர் சயன்ஸ்? அமேரிக்கா ஆர்வம் எல்லோருக்கும்... என்ன செய்ய... இங்கே சென்னையில் கிரேசன்ட்டில் படித்தவன். 2004 படிப்பு முடித்துவிட்டு, பெங்களூரில் மூன்று வருடத்திற்கு மேல் இன்போசிஸில் வேலை. இப்போது லீவு தான் எடுத்துள்ளான்! (போல?) அமெரிக்காவில் வேலை கொடுப்பார்கள என்று தெரியவில்லை என்கிறான். வேறு கம்பனியில் சம்பளம் அதிகம் கிடைக்கும், கிரீன் கார்ட் போன்றவை ஈசி என்றான்......

வரும் ஏப்ரலில் படிப்பு முடித்து, எஸ்..பி. தொழில் கம்பெனியில் அங்கேயே ஜாயின் செய்கிறேன் என்கிறான். இன்னும் வேலை கிடைக்கவில்லை ... இன்டர்ன்ஷிப் ட்ரை செய்கிறானாம். மார்ச்சில் எஸ்..பி. எக்ஸாம் செர்டிபிகேசன் எழுதுகிறானாம்.

வேலை இன்டர்ன்ஷிப் கிடைத்தால் நல்லது... உதவி தேவை... விவரம் தெரிந்தவர்கள் கமண்ட்ஸ் போடவும்.

ஒரே மகன் - சித்தி அழுகிறார்கள் மகனை விட்டு விட்டு இருக்க, இருவரும் இப்போது தனி, சித்தப்பா கோவை அருகில் மளிகை கடை வைத்திருக்கிறார்.... இதற்கும் முதல் மகளை அமெரிக்காவில் தான் கட்டி கொடுத்துள்ளார்கள் படிப்பு முடித்தவுடனேயே... பெண் கோவையில் ஜி.சி.டியில் கம்ப்யுட்டர் சயன்ஸ் படித்தவள், இப்போது நன்றாக சமைத்துக்கொண்டு ரிலேக்ஸ் ஆக இருக்கிறாள்.

யாரோ நண்பர் ஒருவருக்கு லேப்டாப் வாங்கி வந்துள்ளான், இவனுக்கு கொண்டு வந்ததற்கு இருநூறு டாலர்கள் லாபம் பங்கு. இந்தியாவால் மேக்பூக் விலை அதிகமாம்... எப்படியெல்லாம் செய்கிறார்கள் அமெரிக்கன் ஸ்டுடண்ட்ஸ்!

சென்னையில் குளிர்

இந்த மாதிரி குளிர் சென்னையில் ஒரு இருபது வருடம் முன் பார்த்துள்ளேன்.

இன்று காலை 16 டிகிரீ செல்சியஸ். என்ன பெங்களூரில் இருக்கிறோமா என்று தோன்றும் அளவு.... அதுவும் மிட் நைட் சென்று ஏர்போர்ட்டில் பிக்கப் எப்படி இருந்திருக்கும் நினைத்து பாருங்கள்.... கிளம்பும் போதே ஸ்வெட்டர்!

சரி நாங்கள் தான் மைசூர் சென்று வந்தோமே, அதன் பலன் உடல் இப்படி என்று நினைத்தோம்.

பே ஆப் பெங்கால் டிப்ரெசன் என்கிறார்கள். என்னவோ நடக்குது. மரத்தை கண்டபடி வெட்டுகிறார்கள். மீண்டும் உலகில் ஐஸ் ஏஜ்?

*********************

அப்புறம் இந்த பதிவு படித்தேன்... ஒரு சுட்டி காட்டல்... சில ஸ்மைலிகள் கமன்ட்சில் விழும்...

Slumdog Millionaire

மீண்டும் சத்யமில் பார்க்க வேண்டும்!

கணவர் சொல்கிறார், வருடத்திற்கு எங்கள் சினிமா பார்க்கும் செலவு மட்டும் ஒரு மாதத்தின் சேமிப்பு.