ஒரு ப்ளோகில் எழுதும் போது சூழ்நிலைக்கு ஏற்ப எழுதுகிறார்.
சிலர் மற்றவர் எதாவது எழுதுகிறார்கள் என்பதற்காக எழுதுகிறார்கள். கமல் சொல்வது போல எழுதி பழகுகிறார்கள் இல்லையா?
நான் ஒன்றும் பெரிய இவள் இல்லை. எழுதுகிறேன்... எதோ ஒன்று எனக்கு பிடித்த, கருத்து சொல்லும் விசயத்தை...
சிலர் நல்ல தமிழ் பெயரை வைக்க கூட நாதி இல்லாமல், உணவு பொருட்களின் பெயர் வைத்து ப்லோக் போஸ்ட் போடுகிறார்கள். எங்கிருந்து வரும் அர்த்தம். உச்சகட்டம், ஆபாசமான ஜோக்குகளை, தமிழ்படுத்தி எழுதுவது...
இது வரை பரிசல்காரன் , நரசிம் போன்றவர்களின் எழுத்து தான் என்னை பொறுத்த வரை, தினமும், ஒரு வித மெருகேற்றி ஆண் பெண் இரு பாலாருக்கும் பொதுவானதை ( இலங்கை பிரச்சனை விடுங்கள், கலைஞர் விஷயம் மறந்துவிடுங்கள்) நன்றாக எழுதுறாங்க. வேறு சிலர் விடுபட்டுள்ளனர்.
மற்றவர்கள், இவர்களின் எழுத்தை தரம் பார்த்து அதை போல எழுதுவது நன்று. இது என் சொந்த கருத்து மற்றும் விருப்பம்.
அப்புறம், கோவை சித்தர் என்றழைக்கப்படும், லதானந்த் அவர்களின் எழுத்து, எனக்கு பிடித்த கோவை பேச்சு நயத்துடன் இருக்கிறது...
கமண்ட்ஸ் போடுபவர்கள், அந்த நேரத்தின் (மீ த பர்ஸ்டு தவிர) தன்மை பொறுத்து கருத்து போடுகிறார்கள். அப்துல்லா அண்ணேவின் ப்ளாகில் தமிழ் கெட்ட வார்த்தைகள் போட்டு திட்டுகிறார்கள், என்ன நியாயம்?
நிறைய எழுத வேண்டும், டைம் தான் இல்லை.
‘உங்க கருத்தோட முரண்படுறேன், ஆனா…”
13 hours ago
6 comments:
:-))
கரெக்ட்ங்க.. அதே மாதிரி சில பேர் மத்தவங்களுக்கு அட்வைஸ் பண்றா மாதிரியே எழுதுறாங்க. அதைக்கூட நீங்க பதிவுல சேர்த்துருக்கலாம்..
அப்புறம் நான் மீ த கித்னா??
நல்ல பதிவு. உங்கள் ஆதங்கம் புரிகிறது!
நன்றி. அட்வைஸ் சொல்ற வயசு யாருக்கும் இல்லே.. தானாக புரிஞ்சிக்கணும்.
Very nice post. At times we have to write what we feel like.
//அப்துல்லா அண்ணேவின் ப்ளாகில் தமிழ் கெட்ட வார்த்தைகள் போட்டு திட்டுகிறார்கள், என்ன நியாயம்?
//
என்ன செய்வது சகோதரி. கருத்தைக் கருத்தால் எதிர் கொள்ள முடியாத போது அவர்களின் கோபம் ஆபாசமாக வெளிப்படுகின்றது. இத்தனைக்கும் நான் எங்கும் எப்போதும் கடினமான வார்த்தைகளை உபயோகிப்பதில்லை.
வேறு யரையாவது திட்ட வேண்டும் என்று நினைத்து என் வலைப் பூவில் வந்து திட்டி விட்டுப் போயிருக்கிறீர்களா....
Post a Comment