சிறு வயதில் இருந்து விலை குறைவு கார்கள் என்று சொன்னால், நான் பார்த்து வளர்ந்தது மாருதி 800 தான். சூசூகி கம்பெனி இந்தியாவின் தன்மையை உணர்ந்து குறைவான விலையில் செய்து விற்றார்கள் .. (நாற்பதாயிரம்? 1988 என நினைக்கிறேன்...) அதற்கு வெயிடிங்.
இப்போதும், டாடா நானோவும் இந்தியாவில் ஒரு லட்சம் ரூபாய்... இன்று வெளியிடு... ஷோ ரூம்களில் .... சென்னை விலையில் சுமார் ஒரு லட்சத்தி இருபதாயிரம், மற்றும் சில்லறை இருக்கலாம்..
புக்கிங் ஆரம்பம், இரண்டு வாரத்தில். கான்கார்ட் டீலரை கூப்பிட்டால், நம்பர் வாங்கிக்கொண்டு, பிறகு யாரோ ஒருவர் கால் வருது...ஏ.சி மாடல், ஏப்ரல் பதினைந்து அன்று கிடைக்கும் என்கிறார்கள், முப்பதாயிரம் கேஷ் அதிகம் ஆகுமாம். மொத்தம் இரண்டு லட்சம் கேஷ் கட்டினால், கார். அல்லது ஒரு வருடம் காத்திருப்பு... முப்பது முதல் ஐம்பதாயிரம் விலை குறைவு?
இப்போது டீலர்கள் நல்ல கமிசன் பார்ப்பார்கள். என்ன லாட்டரி இருப்பதால், ஒருவருக்கு கார் விழுந்தால், அதை கை மாற்றி விட்டு, பணம் பண்ணுவார்கள்.
இருந்தாலும் பேங்க் லோன் மூலம் விலை குறைவு தான்... மாதம் 3990 கட்டினால் போதும், மூன்று வருடங்களுக்கு, லாட்டரி விழுந்தால், கார் ஒரு வருடத்தில் (அல்லது சில மாதங்கள் முன்பாக) வரும். நல்லது தானே. என்ன, கார் வரும் சமயம், முப்பதாயிரம் கட்ட வேண்டும்.
சரி மாருதி 800 இன்றும் இரண்டு லட்சம் அளவில், ஏ.சி முப்பதாயிரம் அதிகம். (வீட்டில் ஏ.சி. போட்டால் பத்தாயிரம் தான், கேள்வி கேட்க வேண்டாம்!)
என்ன செய்வது சொல்லுங்கள்!
‘உங்க கருத்தோட முரண்படுறேன், ஆனா…”
18 hours ago
4 comments:
Go for maruti 800. pay 50000 and put loan for remaining amount.
tere may be reliablity issue in nano also two cylinder 800 CC is too low wont suitable for 50 kilometer or more travels.
Yes, wait till the car is on road and results come out.
I understand Maruti is going to price Alto Mini (with 624 cc engine) at the same price in 3 months.
Thanks for the comments Dhans and Ramesh.
U read this?
Least expensive cars
//நான் பார்த்து வளர்ந்தது மாருதி 800 தான் //
அய்யய்யோ....உங்க வயசு தெரிஞ்சு போச்சே
:)))))
Post a Comment