Tuesday, November 3, 2009

நாட்டுக்கு நல்லது செய்வோம்: இருநூறாவது பதிவு

நாட்டுக்கு நல்லது செய்வோம்

இது எனது இருநூறாவது பதிவு! ஒன்றரை வருடங்களுக்கு மேலாக ஆதரவு அளித்து வரும் வாசகர்க்கு என் நன்றிகள். இதுவரை இருபதாயிரம் பார்வைகள்.

இன்று டைம்ஸ் ஆப் இந்தியாவில் படித்தது - தொடர் டிகிரி மேல்நிலை கல்விக்கு அரசாங்கம் உதவி செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். இப்போது தான் தெரிந்தது, அரசாங்கம் ஒரு மண்ணும் செய்யவில்லை, இதுவரை மிகவும் குறைந்த அளவே பணம் செலவழிக்கிறது என்று.

கர்நாடக அரசாங்கம், ஒரு படி மேலே போய், மாதம் ரூ. இரண்டாயிரம், மேல்நிலை டிகிரி கல்வி படிதவர்குக்கு கொடுக்க யோசனை செய்கிறது. எப்படி வெள்ளை இல்லாதவர்க்கு இப்படி கொடுக்க முடியும்? அவர்களை, தேர்ந்த தொழில் கல்வி கொடுக்க - ஆசிரியர் ஆக வழி செய்யலாம் அல்லவா?

தமிழ்நாட்டிலும் இப்படி ஒரு முறை எம்.ஜி.ஆர் அரசாங்கம் பத்தாம் வகுப்பு படித்தவர்கள் முதல், ஐந்து வருடங்களுக்கு மாதம் இருபது ரூபாய் கொடுத்தாக நண்பர் ஒருவர் கூறுகின்றார்! ( சினிமா பார்க்க கூட அது உதவியிருக்காது... அது வேறு விஷயம்! )

கட்டாய இராணுவம் - சேவை என்று இருக்க வேண்டும் என்கிறார், என் கணவர். நிச்சயம் அவருக்கு அந்த எண்ணம் வர காரணம், அரசியல்வாதிகள் வேலை இல்லா பட்டதாரிகளுக்கு - வேலை கொடுக்கிறேன் என்ற வழியில் - அவர்களை ரவுடிகள் ஆக்குகிறது!

( நாங்கள் வாங்கிய வீட்டிற்கு அட்வான்ஸ் ருபாய் ஐந்து லட்சம் கொடுத்த பிறகு, இன்னும் சில லட்சங்கள் கொடுக்க அவர்கள் கொடுத்த இரு வாரங்களுக்கு பிறகு மேலும் சமயம் கேட்ட போது, முடியாது என்று, படித்த ரவுடிகள் வந்து மிரட்டுகிறார்கள்... 18% வட்டி வேறு முன் பணத்திற்கு வசூல் செய்கிறார்கள்! நல்ல வேலை கணவர், பெர்சனல் லோன் 15% வட்டியில் வாங்கி, கட்டிவிட்டார்! இன்னும் லோன் டிச்பர்ஸ் ஆகவில்லை - காரணம், புதிதாக இங்கு பெங்களூரில் வேலைக்கு சேர்ந்தபடியால்!)

***

சரி வெளிநாட்டு மோகம் கொண்டு அலைகிறார்களே மக்கள் அதற்க்கு என்ன செய்ய வேண்டும்?

என் சித்தி பையன், சொந்த காசில் பெயருக்கு அமேரிக்காவில் வேலை என்ற பெயரில் - மாஸ்டர் டிகிரி வாங்கிய பிறகு, ப்ராக்டிகல் ட்ரெயினிங் சமயம் ரிலேக்ஸ் செய்கிறான். அவர்கள் குடும்பத்திற்கு அது பெருமை. எப்படியாவது நிஜமாக அங்கு வேலை கிடைத்து, ஒரு வசதியான பெண் பார்த்து செட்டில் ஆகிவிடுவான். எல்லோரும் அப்படி இருக்க முடியுமா?

என்னை பொறுத்த வரை, அவன் இந்தியாவில் வந்து பெட்டிக்கடை வைத்து பிழைத்துக்கொள்ளலாம்! ( அவனுடைய அக்காவும், வசதி பார்த்து கட்டிக்கொடுத்த பின்னும், பி.ஈ., எம்.பி.ஏ படித்த பெண், இப்போது மளிகை கடை - டிபார்ட்மென்ட் ஸ்டோரில் கல்லாவில் உட்கார்ந்து இருக்கிறாள்! )

Saturday, October 31, 2009

டிஸ்லெக்சியா

கதிரவனுக்கு அன்று பெரிய தலைகளோடு மீட்டிங்.

சில கல்லூரிகள் முதல்வர்கள், சில வருமான வரி துறை அதிகாரிகள் எனக்கூட்டம்.

ஸ்டேட் செக்ரடரி என்றால் சும்மாவா?

மாநில அரசாங்கம் ஒரு ஆர்டர் போட்டிருந்தார்கள். அதாவது பள்ளிகளில் ( தனியார் ) படிக்க வரும் குழந்தைகள் சிலருக்கு தனி கவனம் தேவைப்படுவதால், அதற்கு சிறப்பு பயிற்சி கட்டணம் முழுவதும், வருமானவரி கழிவிர்க்கு மத்திய அராசாங்கத்தின் ஒப்புதல் பெற்று தந்திருந்தார்கள்...

கல்லூரிகளுக்கும் அதை பெற்று தர வேண்டும் என்று கேட்க தான் கல்லூரி முதல்வர்கள் வந்திருந்தனர். அதற்கு என்ன செய்யலாம் என்று யோசனை சொல்ல வருமான வரி அதிகாரிகள்....

"நிச்சயம் பண்ணலாங்க" என்றார்கள் வருமான துறை அதிகாரிகள். அதற்கு சான்று எப்படி வரையறுக்க வேண்டும் என்பதற்கும் வழி கொடுத்தார்கள்.

"நான் சின்ன வயசுலே பட்ட கஷ்டம் யாருக்கும் வரக்கூடாது!", என்றவாறே புன்னகைத்துக்கொண்டார் கதிரவன்.

முப்பது வருடங்களுக்கு முன்...

சிறு வயதில் அவனால் டிஸ்லெக்சியா பாதிப்பால் படிக்கமுடியாமல் ரொம்பவும் திணறி இருந்தான்! வீட்டிலும் மக்கு பண்டாரம் என திட்டு வேறு... எவ்வளவு நாள் தான் அப்பா அம்மா படி என்று அடிப்பார்கள். வாத்தியார்கள் தேறாத கேஸ் என்று சொல்லிவிட்டனர். படிக்கனும்னு ஆர்வம் இருந்தால் தான் படிப்பு வரும் என்று புத்தி சொல்லியும் அவனால் படிக்க முடியவில்லை.

ஆறாவது பெயில் ஆனவுடன் கோவை செல்வபுரம் மாமாவின் சாயப்பட்டறையில் சேர்ந்தவன், நிறங்களோடு நீர்த்துப்போனான்! அவனோடு வேலை செய்த ஒருவர், தனியாக பள்ளியில் படிக்காமல் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத முயன்ற போது, அதை பார்த்து அறிந்து அவனும், முயன்று படித்து, ப்ளஸ் 2 முடித்து, கல்லூரி படிப்பு நேரடியாக முடித்து, சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதி... ஐ.ஏ.எஸ் பாஸ் செய்து, இன்று அவர் ஸ்டேட் செக்ரடரி!

***

இது சர்வேசனின் நச் கதைபோட்டிக்கு சமர்பிக்கிறேன்!

நச்

சர்வேசன்500 - நச்னு ஒரு கதை 2009 - போட்டி

கலந்துக்கலாம்னு இருக்கேன்.

பார்ப்போம்!

போட்டி நிறைய இருக்கு!

பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் இப்பவே அட்டெண்டன்ஸ் போட்டு இருக்காங்க!

:-)

Friday, October 23, 2009

தூத்துக்குடியில் தீபாவளி

இந்த வருடம் எங்களுக்கு தூத்துக்குடியில் தீபாவளி !

கோவைக்கு செல்லவில்லை....

அப்பா அங்கு கிரேனைட் தொழில் விசயமாக ஒரு சில வருடங்கள் இருக்க முடிவு செய்துள்ளார். எக்ஸ்போர்ட் பிசினஸ். போர்ட் இருக்கு அல்லவா! ( கோவையே, நன்றாக இருந்திருக்கும்... பிசினஸ் சரியில்லையாம்! வீடு வாடகைக்கு விட்டு விட்டு சென்று விட்டார்கள். பெங்களூர் ரெண்ட். இரு பெட்ரூம் வீட்டுக்கு ஒன்பதாயிரம் வருகிறது!)

பசங்களுக்கு தசரா லீவு சமயம் கோவைக்கு சென்றது. அதன் பிறகு அவர்கள் மூவ் செய்தார்கள்.

முதலில் இருந்த ப்ளாக் எழுதும் இண்டரேச்ட் இப்போது இல்லை! நிறைய பேர் எழுதுகிறார்கள்.

நானும் எதாவது வேலையில் பிசி... ( நிச்சயமா டிவி இல்லைங்க! )

தீபாவளி அன்று சில பட்டாசுகள் வெடித்தோம். ஏனோ முன் மாதிரி மனம் இல்லை.

டிவி நிகழ்ச்சிகள் எப்படி ?

Thursday, October 15, 2009

தீபாவளி நல்வாழ்த்துக்கள்


எல்லோருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

Tuesday, September 29, 2009

பெண் அடிமை



இந்த புகைப்படம் இணையத்தில் உலா வருகின்றது. என்னால் கருத்து கூற இயலாது!

***

சரி தெரியாமல் கேட்கிறேன், எப்படி ஒவ்வொரும், குடும்பத்தில் இவர் இவர் என்று ஐடண்டிபி செய்து கொள்வார்கள்? போட்டோ எடுப்பது எதற்காக? முகமாவது காட்டியிருக்கலாம்... துபாயில் பெண்கள் முகம் காட்டி, ஹூக்கா புகைப்பதை - க்ரீக் இன் அருகில் - பார்த்துள்ளேன்!

என் கணவர் வகையில், இந்த கால இள வட்டங்கள் பர்கா அணிவதில்லை! சுடிதார் துப்பட்டா தான்! ( தலையில் இட்டுக்கொள்வார்கள், பெரியவர்கள் முன் ) வெயில் காலத்தில் மிகவும் வேகும் என்று கேள்விபட்டுள்ளேன்! இப்போது பொட்டு வைப்பதும் உண்டு - மெட்டி போடுவதும் உண்டு

ஒன்று கவனிக்க வேண்டும், அராபிய ஷேக்குகள் எல்லாம் வெள்ளை நிறம் கலந்த உடை அணிவார்கள். வெய்யில் காலத்தில் உதவும். கருப்பு துணி வகைகள் சூடு தங்க வைக்கும். வெயில்லில் வெளியில் செல்ல முடியாது! பெண்ணை வீட்டுக்குள்ளே வைத்திருக்க இது ஒரு வகையா?

மற்ற ஆண்கள் பார்க்க கூடாது என்பதற்காக - என்ற வாதம் என்னால் ஏற்றுக்கொள்ள இயலாது.

Wednesday, September 9, 2009

பிராப்திரஸ்து

நெடு நாட்களாக வீடு தேடி, இன்று ஒரு வீடு முடிவாகும் நிலைமை. அட்வான்ஸ் கொடுத்தாகிவிட்டது. இனி என்னவர் பேங்க் டாகுமன்ட்ஸ், போன்றவற்றிக்கு அலைய வேண்டும்.

சென்னை விலைக்கு மிகவும் பரவாயில்லை. பெங்களூரு பன்னர்கட்டா ரோடு மேலேயே உள்ளது. இன்னும் ஆறு மாதத்தில் குடி புகலாம்.... வார்டுரோபுகள் ரெடிமேட் கிடைக்கின்றன. பர்னிசர் மற்றவை இருப்பவை மட்டும் தான்.

கொடுக்கும் வாடகையில் இரண்டு மடங்கு ஈ.எம்.ஐ. வருமாம். சொத்தாகும் எண்ணம், விலை உயர்வு, கையிருப்பு, ஒரு ஊரில் நிரந்தரமாகும் எண்ணம் என பல யோசனைகளில் இது உதவும்.

கல்யாணம் பண்ணிப்பார், வீட்டை கட்டிப்பார் என்று சும்மாவா சொன்னார்கள்! ஒரு வித பயம் வீடு புகுந்து, க்ரகாப்ரவேஷித்து, நன்றாக வாழும் வரை இருக்கும்.

எனக்கும் நண்பர்கள் ஆசியினால் ஒரு வேலை பிராப்திரஸ்து ஆகும் என நம்புகிறேன். ( குழந்தைகள் ஸ்கூல் செல்லும் நேரம் காலை எட்டு முதல் அவர்கள் திரும்பும் மாலை மூன்றரை வரை ).

அடுத்த வெள்ளி முதல் தசரா விடுமுறை, குழந்தைகளோடு கோவையில் பத்து நாட்கள் கழிக்க எண்ணம். ஒரு சிறு ட்ரிப் கேரளா சென்று வர வேண்டும்!

Tuesday, September 8, 2009

திசைநாயகம்


வாஸ்துசாஸ்திர பகவானுக்கு இன்னொரு பெயர் திசைநாயகம்.


நீங்கள் வீடு கட்டி வாழும் திசையை பொறுத்து உங்கள் இல்லம் மன அமைதி, மற்றும் வருமானம், செழிப்பு பெற்று இருப்பீர்கள் என்கிறது மரபு.

மேற்குப்புற வாசல், தெற்குப்புற வாசல் எங்குமே யாரும் வைப்பதில்லை. கடைகள் தவிர. அதற்கு விஷயம் உண்டு.

மேலே உள்ள படத்தில் பார்த்தால், உருவத்தை வைத்தி ஒரு வழியாக ஊகிக்கலாம்...

சரி சயன்டிப்பிக்காக என்ன நடக்கும்? வெய்யில் வீட்டில் மேலே மதியம் விழாது. இரவு வீடு திரும்புவோர்க்கு, சுகமாக இருக்கும், வீட்டில் உள்ள மனைவி , குழந்தைகளுக்கு ஒரு கம்பர்ட் லெவல் அருமை...

***

சரி எதற்கு திடீரென்று திசைநாயகம்? அப்பாவோடு பேசிக்கொண்டு இருந்தேன், நாங்கள் வாங்கப்போகும் வீடு பற்றி... அதில் அடிக்கனக்கு, திசை போன்றவற்றை விவரம் சொல்லி விளக்கினார்!

Saturday, September 5, 2009

நான் வினிதா

என் பெயர் வினிதா
நான் தான் உலகில் பெரியவள்
என்று நினைக்க தோன்றுது...
சிறியவர்கள் பெரியவர்கள்
நிறைந்த பேரன்டமடா இது
என்ன சொல்லி யாருக்கு
புரிய வைப்பது...
ஒன்று சொன்னால்
மற்றொன்று என நினைக்கும்
டூப்புவாசிகள் நிறைந்த உலகமடா
நான் ஒன்று நினைத்து எழுத
நீங்கள் ஒன்று நினைத்துக்கொள்ள
காமடி ஆனது வாழ்விலே
கமன்ட்டுக்கள் ரூபத்திலே!

ஆசிரியர் தின வாழ்த்துகள்

ஆசிரியர் தின வாழ்த்துகள்! என்னை நன்றாக படிக்க வைத்த, உதவிய, திட்டிய, சில சமயம் அடித்த, அனைத்து ஆசிரியர்களுக்கும்வாழ்த்துக்கள். காலேஜ் வாத்தியார்கள், ஒரு தனி ரகம். வருவார்கள் போவார்கள். யன்க்ச்டர்கள் வழிவார்கள்! :-)

கோவையில், களுக்கென்று சிரித்தால், வெயிலில் மண்டி போடும் காலம் இன்னும் இருக்கா தெரியலே. அந்த சிறு வயதில், வாயை பொத்திக்கொண்டு இருப்போம். ( கள்ளம் கபடு இல்லாத வயது அது... கொடுமைங்க! ) வெள்ளிக்கிழமை தலைக்கு குளித்துவிட்டு, பூ வைத்து முடியை கொஞ்சம் விரித்து போட்டு சென்றால், பூ பிரித்து எறிவார் எங்கள் பி.டி. மிஸ். ( ஒரு நாள் காந்திபுரம் பஸ் ஸ்டாண்டை கிராஸ் செய்யும் போது அடிபட்டு இறந்தார் ).

***

என் குழந்தைகள் பள்ளி சுமாரானது தான். பீஸ் மட்டும் அதிகம். ஆனால் ஆசிரியர்கள்... பெண்கள்... மிகவும் அட்டகாசமாக பி.பி.ஒ செல்லும் பெண்கள் போல உடையந்து வருகிறார்கள். பெங்களூரு வந்த பின் என் மகள் லிப்ஸ்டிக் போட்டுக்கொள்ள அதிகம் அடம் பிடிக்கிறாள். :-)

***

ஓய. ராஜசேகர ரெட்டி மரணம், சில தொழில் முறை சம்பந்தங்களால் என் கணவர் குடும்பத்தில் வருத்தம்... கடப்பா ரவுடி என்றெல்லாம் பெயர் இருந்தும், திடீரென வைக்கோ மாதிரி நடை பயணம் செய்து ஆட்சியை பிடித்தவர் ( தன் சக்கரை அளவையும், உடல் எடையும் குறைத்தவர் - அவர் பாடி பில்டர் வேறே - நிமிர்ந்த நடை எப்போதும் ) ... இப்போது மகன் ஆட்சியில் இருக்க விரும்புகிறார்.

கணவர் சொல்லுகிறார், சுவிஸ் வங்கி அக்கவுண்ட் ( கட்சி ) யார் வைத்துள்ளார்களோ, அவர்களுக்கு, ஆட்சி கட்டிலுக்கு சாவி. உண்மையா?

ஆந்திராவிற்கு கேடு காலம் வராமல் இருந்தால் சரி! ( போலி காலேஜ் , வேலை எக்ஸ்பீரியன்ஸ் சர்டிபிகேட், சத்யம், இடம் விற்பனை இப்போ இந்த விபத்து.. )

***

நான் எழுதிய இந்த பதிவை மொழியால் பிரிக்காதீர்கள் நினைக்க வைத்து இந்த பதிவு தமிழன் ஒரு விளக்கம்

எல்லோரும் ஏன் மொழியால் பிரிகிறார்கள்? நாடு முன்னேறுமா?

மெதுவா ஜாதி ஒழிந்துக்கொண்டு இருக்கு, இப்போ இந்த மொழி வித்தியாசமா?

ஹிந்தி படிக்க முடியாமல், கஷ்டப்பட்டு தமிழர்கள், நார்த்தில் வேலை செய்து கஷ்டப்பட்டு உழைத்து... கண்ணீர் கதை.

Tuesday, September 1, 2009

மொழியால் பிரிக்காதீர்கள்

பெங்களூர் வந்து ஒரு மாதம் ஆகிறது. என்னவருக்கு இங்கு புதியதாய் வேலை. நாங்கள் இருக்கும் பெங்களூரு சவுத் ஏரியா கொஞ்சம் சத்தமில்லாமல் உள்ளது.

இங்கு கிட்டத்தட்ட எல்லோரும் கன்னடம் பேசுகிறார்கள். நானும் பழகிவிட்டேன். வீட்டில் எல்லோரும் தமிழ் தான். என்னவர் கன்னடம் நன்றாக பேசுகிறார். குழந்தைகள் ஒரு மாதிரி பிக்கப் செய்துவிட்டார்கள். குழந்தைகள் அனைவரும், நன்றாக மற்றவர்களிடம் ஆங்கிலத்தில் பேசி பழகுகிறார்கள்.

இன்று காலை மீனாக்ஷி கோவிலுக்கு சென்றேன். குழந்தைகள் காலையில் சென்றால் மாலை தான் திரும்புகிறார்கள். ஸ்கூல் தூரம் தான்.... டொனேசன் மட்டும் இருவருக்கும் சேர்த்து ஐம்பதாயிரம். சென்னையில் அந்த கோபாலபுரத்து ஸ்கூலில் இந்த தொல்லை இல்லை. நான்கு மாத டேர்முக்கு ஆறாயிரம் பீஸ்.

இங்கு வோல்வோ பஸ் இருப்பதால், ஐந்து ரூபாய்க்கு ஏசி பஸ் பிரயாணம். நன்றாக உள்ளது. வீட்டின் முன் ஏறி, இறங்கலாம்.

கோவிலில் ஒருவரோடு பேசிக்கொண்டு இருந்தேன். அவரும் கஷ்டப்பட்டு கன்னடம் பேசியது மாதிரி இருந்து. கடைசியில், அவர் சென்னைக்காரர். தெலுகர் என தெரிந்தது.

இருந்தாலும் கன்னடம் பேசினால் பழக்கம் வரும் என்று இருந்தார். என்ன செய்வது.

சில கேரக்டர்ஸ் மொழியால் பிரிக்கிறார்கள். பயம் வருகிறது!

Wednesday, August 26, 2009

காசே தான் கடவுளடா

அப்துல்லா அண்ணன் பதிவில் "அமெரிக்க விசா – அவசர ஆலோசனை தேவை" ( நிஜம் தானே இது அண்ணா? அப்பளை பண்ணும் முன் ஒரு போஸ்ட் போட்டிருக்கலாமே? ஸ்டேப் பை ஸ்டேப் விவரம் - இன்டர்வியு விடியோ உட்பட கிடைத்திருக்குமே!)

ஒருவர் கமண்டிர்ற்கு நான் இட்ட பதில் இதோ..... ( சில ஸ்பெல்லிங், மிச்டேக்சை சரி செய்து பதிவிடுகிறேன் )

//ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு மட்டும் விசா மறுக்கப் படுகிறது என்பதெல்லாம் கப்ஸா.//

முதல் முறையிலேயே அபுதாபியில் பத்தாண்டு பிசினஸ் விசா கொடுத்தார்கள் (எனக்கும் தான் Visitors visa B1/B2, பிற்பாடு சென்னையில் குழந்தைகள் இருவருக்கும் வாங்கினோம்). மேலும் நீங்கள் சவூதி மற்றும் கல்ப் நாடுகளுக்கு ட்ரேவல் செய்திருந்தால் டரியல் தான். அவர்கள் சிஸ்டத்தில் சிவப்பு ப்ளேக் எழுந்து நிற்கும்....

மிகவும் ஈசி வழி, இரண்டரை கோடி ரூபாய்களை சில USA கவர்ன்மென்ட் திட்டத்தில் முதலீடு ( வருமானம் வரும் ) செய்தால், EB 5 விசா கிடைக்கும். எப்போது வேண்டுமானாலும் சென்று வரலாம்... கிரீன் கார்ட் கூட வந்துவிடும். See here

காசே தான் கடவுளடா!

+++++++

இங்கேயும் ஒரு ஆங்கில பதில்...

All about USA visa

சிங்கைநாதனுக்கு ஒரு பிரார்த்தனை

நாளை ( ஆகஸ்ட் 27, 2009 )அதிகாலை ஐந்தரைக்கு இதய அறுவை செய்யும் திரு சிங்கைநாதனுக்கு எல்லோரும் பிரார்த்தனை செய்வோம். மேலும் விவரங்கள் இங்கே.


Saturday, August 15, 2009

சுதந்திர தின வாழ்த்துக்கள்



சுதந்திர தின வாழ்த்துக்கள் இந்தியர்களே.

எல்லோரும் சந்தோசமாக கொண்டாடுவோம்.

இந்தியர்களை மதிப்போம்.

இந்தியர்களாய் இருப்போம்.

இந்தியா பொருட்களை வாங்குவோம்.

இந்தியாவில் டாக்டர்களை நம்புவோம்.

வெளி நாட்டு மோகத்தை அறவே கைவிடுவோம்!

பாரத மாதாவை வணங்குவோம்!

Monday, August 3, 2009

ஸ்டாக் மார்கெட்

எப்படி எனக்கு சத்யம் ஸ்டாக்கில் கொஞ்சம் என்ன (டபுள் ) பணம் கிடைத்ததோ, அந்த மாதிரி இன்வேச்ட்மேன்ட் ஆப்சன்ஸ் யாராவது கொடுங்களேன்?

ரிஸ்க் எடுக்க நான் தயார்!

இப்போ ஐந்து எஸ்.பி.ஐ. பேங்க் ஸ்டாக் வாங்கியுள்ளேன். பார்ப்போம்.

நாளை கொஞ்சம் பணம் கிடைத்தால், டாடா மோட்டார்ஸ் வாங்கும் எண்ணம்.

அப்புறம் ஐ.சி.ஐ.சி.ஐ பேங்கில் மாதம் இரண்டாயிரம் ரேக்காரிங் டெபாசிட் கட்டினால், பெண்களுக்கு ப்ரீடம் ( மினிமம் தொகை இலலாமல் ஜீரோ பேலன்ஸ் ) அக்கவுண்ட் கொடுக்கிறார்கள். என்ன முதலில் பத்தாயிரம் டெபாசிட் கட்டிவிட்டு, அக்கவுண்ட் ஏழு நாட்களுக்குள் ஏக்டிவெட் ஆனவுடன், அந்த பத்தாயிரம் எடுத்துவிடலாம் (ஆர்.டி. ஏக்டிவ் ஆக இருக்க வேண்டும்). தவறாமல் மாதம் இரண்டாயிரம் ஆர்.டி.க்கு பணம் போய்விடும். நல்ல முறையில் சேமியுங்கள்.

அப்புறம், டிமேட் அக்கவுண்ட், முதல் வருடம் இலவசமாக தருகிறார்கள். அதற்கு பேன் கார்ட் வேண்டும்.