Friday, March 6, 2009

தமிழில் எழுதினால் நன்று

எனக்கு ஒருவர் பின்னூட்டம் போட்டார். நானும் தமிழில் எழுதினால் நல்லது என்று சொன்னேன். ஆங்கிலத்தில் எழுதினால் பிரச்சனையே இல்லை, முடிந்தவரை தமிழ் எழுதலாம் அல்லவா? தனி நபர் விருப்பம் தான் அது. (தமிழ் ப்ளோகில் ஆங்கில பின்னூட்டம், கொஞ்சம் மொழிக்கு இடைஞ்சல்)

அவர் புனைப்பெயர் ப்லாகர். நிஜம் தெரியவில்லை.

அது தான், இந்த பதிவு..

குறிப்பு - இந்த கூகிள் தளத்தில் சென்று, ஆங்கிலத்தில் தமிழ் பேச்சை டைப் செய்தால், தமிழ் உருவம் கிடைக்கும்.

ப்ளோகில், தமிழ் மற்றும் மாற்று மொழிகளில் எழுத வழி உண்டு. (க்ரேயட் போஸ்ட்)

*************

இதை படித்தவுடன்.... நெஞ்செமெல்லாம் நடுங்குது. வயதானவர்கள், மக்கள் இப்போது திரும்புகிறார்கள் (இந்தியாவிற்கு) வெளிநாட்டிலிருந்து..

அவர்களின் சாபம் தான் இந்தியர்களை திரும்ப வர வைக்கிறது.

உலகின் மிகப்பெரிய மீட்புப்பணி

உலகின் மிகப்பெரிய மீட்புப்பணி... இரண்டாம் உலகப் போரில் டன்கர்க்
சம்பவம்தான். ஜூன் 1940-ல் பிரெஞ்சு தேசத்து கடற்கரையில்
மாட்டிக்கொண்டு பின்வாங்கிய மூன்று லட்சம் பிரிட்டிஷ், அமெரிக்க, பெல்ஜிய
துருப்புக்களைப் பத்திரமாக கொண்டு சேர்த்தது இங்கிலாந்து டீம். உயிர்ச்சேதம்
இல்லை என்று உத்தரவாதமாகச் சொல்ல முடியாது. அத்தனை பிரமாண்டமான
மீட்புக்கு மிகக் குறைவான உயிர்ச்சேதம்தான்.

இது எங்கோ படித்தது...

இங்கே தான்....

Such interesting facts are the need of the hour!

Thursday, March 5, 2009

குஷ்பு இட்லி

குஷ்பு இட்லி செய்வது பற்றி விளக்கவுரை எங்காவது கிடைக்குமா என்று தேடினேன். ஹுஹும்ம்... ஒரு பெரிய சீக்ரட் அசைன்மெண்ட் போல இருக்கு.

வெந்தயம் அதிகம் போட்டு (ஊற வைத்து ஆட்டினால்) எப்போதும் போல உளுந்து போட்டு, இட்லி (குண்டா) தட்டில், துணி போட்டு ஊற்றி ஆவி வர வைத்தால் போதும்... (குக்கரில் செய்தால் தட்டையாக தான் வரும்).

எனக்கு தெரிந்த வரை, மதுரை பஸ் ஸ்டாண்டில் தான், முதன் முதலில் இப்படி கூவி விற்றார்கள், ஒரு எட்டு வருடம் முன்பு இருக்கும்... (இல்லே சின்ன தம்பி வந்த டைம் ஆ?)

இன்றும் அங்கு விற்கும் சந்தகம் / சந்தவை அருமை என்கிறார்கள் நண்பர்கள். தேங்காய்ப்பால் அதன் மேல் போட்டு சாப்பிட்டால் தான் அதன் தனி டெஸ்ட். வீட்டிற்கு வாங்கி சென்று (பத்து ரூபாய்க்கு போதும்!) வெங்காயம் போட்டு தாளித்து விட்டால், குடும்பத்திற்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

********************

நரசிம் அவர்களின் பதிவில் படித்தேன்...

பெண்.. பிரிவுத்துயர்.. பார்வை..

எளிதில் விளங்க இந்த வரிகளைப் படித்து விட்டு...

நகக் கீற்றென் இருக்கும் நிலவுக் கீறல் வளர்ந்து,வளர்ந்து முழுநிலவாய்,பெளர்ணமிப் பந்தாய் வான்வெளியில் உருள்கிறதே.. அதுபோலத்தான் என்காதலும் காமமும்.. மெல்லிதாய் பூத்து,வல்லியதாய் வளர்ந்து,காமப் பந்தாய்உருண்டு, என்னை உருட்டி,உழுக்கி பின் கை வளையல்கள் கூட நெகிழ்ந்து விழும்அளவு என்னை உருக்கி விட்டது..அவரின் அருகாமைச் சுகம் அற்றுப்போனதால் மரம்தப்பிய கசங்கிய இலைபோல ஆகிவிட்டேன். என் தலைவனின் தீண்டல் இல்லாமல்துவண்டு போன என் நிலை கண்டு வானம் கூட அழுது மழையாய் பொழிகிறதே.. என் காதல் தலைவனின் காதல் விளையாட்டுகள் இல்லாமல் வாடிப்போய் வருந்தும்என்னைவிட என் மேல் இரக்கம் கொண்டு எனக்காக இந்த ஊர் மக்களும்வருந்துகிறார்களே...

எவ்வளவு அழகியல் தெறிக்கும் வார்த்தைகள்..

அந்த பாடல்...

வளர்பிறை போல வழிவழிப் பெருகி
இறை வளை நெகிழ்த்த எவ்வ நோயொடு
குழை பிசைந்தனையேம் ஆகிச் சாஅய்
உழையர் அன்மையின் உழப்பது அன்றியும்
மழையும் தோழி! மான்றுபட்டன்றே;
பட்ட மாரி படாஅக்கண்ணும்
அவர்திறந்து இரங்கும் நம்மினும்
நம் திறந்து இரங்கும்,இவ் அழுங்கல் ஊரே.

புலவர்: பெருங்கண்ணன்.. முல்லைத் திணை பாடல்

//ஒரு பெண் தனியாக, பஸ் ஸ்டாப்பிலோ,தியேட்டரிலோ காத்திருந்தாலே சமூகத்தின் வறண்ட மனநிலை மனிதர்களின் தேவையற்ற பார்வையை தவிர்க்க முடிவதில்லை.//

அவர்கள் குடும்பத்தில் பார்க்கிற மாதிரி பெண்கள் இல்லாவிட்டால் தான் ( இந்த தவறு, சமுகம் சொல்லிகொடுப்பது ) ஏற்படும்.

பஸ் பிடிக்கும் அவசரம், இல்லை, மாதக்கடைசி செலவு என்று இருப்பார்கள்.

பார்வை எங்கோ இருக்கும்.

***********************

ஆமாம் இப்போதெல்லாம், தமிழ் ப்லோகர்கள் எல்லாம், தங்கள் பெயரில் வலைமனை வைத்திருக்கிறார்கள். செலவு குறைவா?

படித்ததில் பிடித்த கவிதைகள் மற்றும் எலெக்சன்

உழவனின்...

http://tamiluzhavan.blogspot.com/2009/01/blog-post_22.html

ஈழதாலாட்டு .... இங்கே...

ரொம்ப நல்லா இருக்கு....

***********

எலெக்சன் பற்றி எழுதியே ஆக வேண்டும்....


தேர்தல் நடக்கும் நாட்கள் பாருங்கள்...

இதில் ஐ.பி.எல் வேறு.

கஷ்டகாலம்.

இப்போதெல்லாம் டிவி பார்ப்பது

இப்போதெல்லாம் டிவி பார்ப்பது பிடிப்பதேயில்லை. கருமமாக உள்ளது. கன்றாவியாக உள்ளது. வேறு தமிழ் வார்த்தை தெரியவில்லை.

சண் டிவி, கலைஞர் டிவி மற்றும் விஜய் டிவி தான் வாழ்க்கை என்று போய், இன்று சோனி மற்றும் கலர்ஸ் என்று உள்ளது.

எந்த ப்ரோக்ராமும் உருப்படியில்லை.

சரி எதையாவது படிக்கலாம் என்றால், தமிழ் புத்தகங்கள் விலை அதிகமாக உள்ளது. ரோட்டில் போட்டு விற்கும் ஆங்கில புத்தகங்கள் இன்னும் (இந்திய பிரிண்ட்) குறைவான விலையில் உள்ளது.

லேண்ட்மார்க்கில் என்ற 3 டிவிடி செட் ஐம்பது ரூபாய்க்கு கிடைத்தது. மோசர் பெயர் கம்பெனி. மூன்று செட் வாங்கினோம். குழந்தைகள் விடாமல் பார்கிறார்கள். வீட்டில் கார்டுன் சேனல் வருவதில்லை. வெறும் பேசிக் மாத்திரம் தான்.

********************

கோவை சென்று வாழலாம் என தோன்றுகிறது.

இந்த மாதம் முதல் 1300 ருபாய் வாடகை ஜாஸ்தி. அது என்ன கணக்கு என்று கேட்க வேண்டாம். ஓனர் சொல்கிறார், நாங்கள் கொடுக்கவேண்டும். அவர் மகன் திருமணம் வேறு ஜூனில் வருகிறது. இப்போதே பயம், என்ன கிப்ட் வாங்கி கொடுக்க வேண்டுமோ....

கோவையில் எந்த ஏரியா நல்ல ஏரியா சொல்லுங்கள். வாழ , குழந்தைகள் படிக்க. குழந்தைகள் வரும் வருடம் நான்கு மற்றும் இரண்டாம் வகுப்பு செல்ல வேண்டும்.

நன்றி.

ரசித்த கவிதை

இந்தி கவிதை, எங்கோ படித்தது, தினமலர் வாரமலர் என்று ஞாபகம்.

கெமிஸ்ட்ரி லேபில்
ஸ்வேதாவை வலுக்கட்டாயமாக
முத்தமிட்டது
இப்போது வலிக்கிறது!
தாவணியில்
பள்ளிக்குச் செல்லும்
மகளை பார்க்கும்போது!


***********

படித்த இடம்... பரிசல்காரனின்....

"எண்ணிப் பார்க்கிறேன்!"


அசத்தல் பதிவு.... கடைசி பத்தி அருமை!

Tuesday, March 3, 2009

பாகிஸ்தானில் ஸ்ரீலங்கன் கிரிக்கெட் டீம் மீது குண்டு வீச்சு

பாகிஸ்தானில் ஸ்ரீலங்கன் கிரிக்கெட் டீம் மீது குண்டு வீச்சு !

என்ன கொடுமைங்க இது?

இந்தியர்களை பார்த்து தான் அடி உதை அப்பிடின்னு இருக்கும்... அது தான் நம்ம டீம் போகலே. நினைச்சு பார்த்தாலே, பயமா இருக்கு, நாம்ம டீம் அங்கே இப்போ இருந்திருந்தா? வார் தான். ஸ்ரீலங்கா கவர்ன்மென்ட், ஒன்னும் செய்யாது. இலங்கை தமிழரை தான் பூச்சாண்டி காட்டும்.

இன்னைக்கு, தான் இங்கிலீஷ் ப்லோக் ஒன்னுலே, காஷ்மீர் பிரச்சனைக்கு (மொத்த தீர்வு) பேச்சு வார்த்தை தான் முடிவு என்று சொல்கிறார்கள். உட்கார்ந்து பேசினால் எல்லாம் சரி ஆகிவிடும்.

அமெரிக்க ஆயுதம் (இஸ்ரேல் கிட்டே டைரக்டா வாங்காம, அமெரிக்க ப்ரோகர்கள் மூலம் ஆயுதம் வாங்குறாங்க!) சப்பளை, கெடுபிடி எல்லாம், இந்த தாலிபான் ஆட்களுக்கு, திருப்பி அடிக்க பயன்படுது.

என்ன கொடுமைங்க இது?

Monday, March 2, 2009

தேர்தலும் இந்தியர்களும்

இந்தியாவில் தேர்தல் என்றால், அடிமட்ட கட்சி தொண்டர்களுக்கு கொண்டாட்டம் தான். இன்று தேர்தல் அட்டவணை மதியம் மூன்று மணிக்கு மேல் (ராகு காலம் இல்லாமல் பார்த்து) அறிவிக்கப்போகிறார்கள்.

ரிடிப் தளத்தில் சொல்கிறார்கள், அமெரிக்க அதிபர் தேர்தலை விட, இந்தியாவில் அதிக அளவு பணம் செலவழிக்கப்படும் என்று. இது எல்லாம் கருப்பு பணம், தண்ணீராய்... இறைத்து....வோட்டுக்கள் வேண்டும் என்பதற்காக, வளைஞ்சு நெளிஞ்சு தெரிந்த வழிகளில் எல்லாம் கொடுப்பாங்க (டிவி கேமரா இல்லாமல் பார்த்து). Bribe in all different forms.

சரி இதில் வாழ்க்கை அடைபவர்கள் - பிரிண்டிங் பிரஸ், ஆய்வாளர்கள், லாரி, ட்ரக் ஓனர்கள், போன் கம்பெனிகள், எஸ்.எம்.எஸ். சர்வீஸ்கள், ஹோட்டல்கள், தெரு தளிகைகள், மற்றும் கதர் விற்பன்னர்கள் எல்லோரும் (டிவி சேனல்களும், அடங்கும், அவர்களுக்கு இருப்பது 24 மணி நேரம் தான்... ப்ரைம் டைம்... ஐ.பி.எல் சாப்பிட்டுவிடும்.)

நல்ல முறையில் தேர்தல் நடந்து, கூட்டணிகள் பங்கு பிரித்து போக, மிச்சம் (ஊழியர்கள் சம்பளம் போக) மக்களுக்கு வந்து சேர்ந்தால் நலம்.

வேட்பாளர்கள், தங்கள் ஜாதி, மத சொந்தங்களை நாடும் காலம் இது.

வாழ்க இந்தியா. வாழ்க வளமுடன்.

Wednesday, February 25, 2009

ஈஷா யோகா மையமும் வியாபாரத்தனமும்

ஈஷா யோகா மையமும் வியாபாரத்தனமும் வாழ்கையில் ஆன்மீக வழி நாடுவோருக்கு ஒரு பாடம்....

இதை படியுங்க... பரிசல்காரன் எழுதுகிறார்....

அவியல் – 25.02.2009

இந்த பதிவில் திரு கிருஷ்ணகுமார் அவர்கள் சொல்கிறார்....

//அங்கே புத்தக ஸ்டால்களில் புத்தகம் வாங்கியபோது ‘640 ரூபாய்’ என்றார்கள். பில் கேட்டேன். பில் கொடுக்க மாட்டோம். அது எங்களுக்கு வேண்டும் என்றார்கள். ‘அப்போ நான் வேற யாருக்காவது வாங்கிட்டு போறேன்னா அவங்களுக்கு விலை எப்படித் தெரியும்?’ என்று கேட்டேன். (பல புத்தகங்களில் என்ன விலை என்பது அச்சடிக்கப்பட்டு இருக்காது!) அப்படி உங்களை நம்பாதவங்களுக்காக நீங்க ஏன் வாங்கீட்டுப் போறீங்க?’ என்று கேட்டார் அந்தப் பெண். கேட்டதோடு மட்டுமில்லாமல் ‘புக்ஸை திருப்பி வாங்கிக்கோங்க’ என்றார் கடையில் விற்பனையில் இருந்தவரிடம். இவர் அங்கே வாலண்டியராம். ‘நீங்க ஈஷா க்ளாஸ் முடிச்சு வாலண்டியரா இருக்கறது வேஸ்ட்டுங்க. இப்படி ஒரு பதிலை உங்ககிட்டேர்ந்து எதிர்பார்க்கல. நீங்க வியாபாரம்னு ஆரம்பிச்சு கடை விரிச்சுட்டீங்க. நான் உங்களுக்கு டிவோட்டீயோ, ஃபாலோயரோ இல்ல. வெறும் கஸ்டமர்தான். என்னைத் திருப்திப் படுத்தறது உங்க கடமை’ என்று திட்டிவிட்டு நகர்ந்தேன். ச்சே!//

என்னே ஒரு பிரச்சனை!

************

என் நண்பி திவ்யாவும், இன்னொரு நண்பி சாந்தி மூலம் ஈஷா யோகா மையம் குறித்து அவ்வளவாக ப்ரிரியப்பட்டு சொல்லவில்லை. திவ்யாவின் கணவர் அமெரிக்கன் என்பதால், அவர்களிடம் சில ஆயிரம் டாலர்கள் கறப்பதில் தான் ஆர்வம் காட்டினார்களாம்.

நானும் இந்த அடோநேசன் (Attenuation - Dwindling - திருட்டு) ஆர்வத்தை ரவிசங்கர் மையத்தில் (பெங்களூரு கனகபுரா ரோடு) பார்த்துள்ளேன். ஆயிரம் ரூபாய் நன்கொடை அளித்தால், உங்களுக்கு, குசன் மண்டியிட்டு அமர்ந்து வாஜ்ராசனம் செய்து பிரணயாமம் செய்ய வைப்பார்கள் (சோ ஹம்), இல்லையென்றால் வெறும் தரை தான், கவனிப்பு இருக்காது!

சில மனிதர்கள் அப்படிதான். கடவுள் பெயரைச்சொல்லி என்ன ஒரு ஏமாற்றுத்தனம்!

Another thing, they accept all religion people to get hold of more in their business.

Monday, February 23, 2009

எல்லா புகழும் இறைவனுக்கே

வாழ்த்துக்கள் ஏ.ஆர்.ரகுமான். இரண்டு ஆஸ்கார்கள். அருமை.

நிச்சயம் கிடைக்கும் என்று நம்பியவர்கள் தமிழர்கள்.

நிஜமாக உங்கள் பக்கம் அம்மா (க்கள்) உள்ளனர். நீங்கள் சொன்ன ஹிந்தி பட வசனம்... மேரி பாஸ் மா ஹே.

ஒரு இந்தியன் ஆஸ்கர் வாங்குவதை காண வேண்டும் என்ற என் கனவும் நிறைவேறியது. கமலை நான் ஒரு பேச்சுக்கும் நம்பவில்லை. அது வேறு விஷயம்! ;-)

ஈழம் குறித்து நீங்கள் பேசியிருக்கலாம்... ஏ.ஆர்.ரகுமான்... உலகத்தின் எம்மூலையிலும் கருத்து எதிரொலித்திருக்கும். அமைதி அன்பு வழியில் தான் உலக அமைதி வரும் என்பதை எவ்வளவு அழகாக ஆங்கிலத்தில் சொன்னீர்கள்!

ரஹ்மானும் ஸ்லம் வாழ்க்கை மாதிரி தான் இந்துவாக திலீப் என்ற பெயரில் பிறந்து பிறகு முஸ்லீமாக வளர்ந்து... வாழ்ந்து பிறகு சினிமாவில் வளர்ந்து, இந்த இடத்தை பிடித்துள்ளார். வெறும் பத்தாம் வகுப்பு தான். அவர் பலரை இப்போது படிக்க வைக்கிறார். சில இன்ஜினியர்கள் மற்றும் டாக்டர்கள் உருவாக காரணம் அவர். என் கணவர் மூலம் விவரம் தெரிந்தது. மதம் சார்பு இருந்தாலும், அவர் நல்லவர்.

என்ன ஓர் மனக்குறை, ஏழை வீட்டில் பெண் எடுக்காமல், ஒரு பணக்காரியை கட்டினார். ஒரு சராசரி ஆள் என்பதை காட்டினார்.

இன்னொரு விஷயம், ஏ.ஆர்.ரகுமான்னோடு இருக்கும் (பாட்டு வரிகள் மாற்றப்பட்ட விசயத்தில்) கருத்து வேறுபாடு காரணமாக, குல்சார் அமெரிக்கா செல்ல விரும்பவில்லையாம். என்ன ஒரு வித்தியாசம்!

இளையராஜா மனமுவந்து பாராட்டினால் தகும்!

*********

தமாஸ் பதிவு.... ஆஸ்கார் நாயகன் கமலுக்கு விருது இல்லையா?

Thursday, February 19, 2009

இரண்டு பதிவுகள், கணவன் மனைவி கேள்விகள்

இன்று காலை முதல் நான் இரண்டு பதிவுகள் படித்தேன்...

பரிசல்காரன் எழுதிய ....

மனைவி கணவனிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்!

தாமிரா எழுதிய....

கணவர்கள் மனைவிகளை கேட்க விரும்பும் கேள்விகள் : டாப் 10

அவை கணவன் மனைவி கேள்விகள் ...

பத்துக்கு பத்து மார்க் வாங்குபவை. அட்டகாசம்!

மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி என்பார்கள், அது இது தான்!

**************

சரி விட்டுக்கொடுத்து போகும் மனபான்மை இருந்தால் தான் வாழ்க்கை சக்கரம் ஓடும்.

அவரவர் வேலையை சரியாக பார்த்தாலே, கணவன் மனைவிக்குள் அன்பு நிறைந்து, குடும்ப மகிழ்ச்சி இருக்கும்.

இந்த ஐ.டி. தொழில் செய்வோர் வீட்டில், நான் கண்கூடாக பார்ப்பது, மனைவி தான் விட்டுக்கொடுக்க வேண்டும். எல்லாம் காசு செய்யும் வேலை.

Saturday, February 14, 2009

கோவையில் ஒரு வீடு வாங்க வேண்டும்

சென்னையில் இருப்பதை விட, விலை மலிவாக கிடைக்கும் என்கிறார்கள் கோவையில்.

கோவையில் ஒரு வீடு வாங்க வேண்டும், தனி இடத்தில்.

இல்லை இடம் மட்டும் வாங்கி, ஒரு வீடு கட்ட வேண்டும்.

தேடும் இடங்கள், கணபதி, வடவள்ளி, கவுண்டம்பாளையம் மற்றும் கோவைபுதூர்....

இண்டர்நெட்டில் விலை அதிகமாக போட்டுள்ளார்கள்.

விவரம் தெரிந்தவர்கள், விலை விவரத்தை பின்னூட்டம் இடவும்.

ப்லாகர் சமுதாயம், நல்ல விவரம் தெரிந்தவர்கள்...

வால்மீகியும் காதலர் தினமும்

வால்மீகியும் காதலர் தினமும் தொடர்புடைய ஒன்று என நினைக்கிறேன். ராமயாணம் மூலம். இன்று பிப்ரவரி பதினான்கு. காதலுக்காக ராமன் காட்டில் இருந்தது பதினான்கு வருடங்கள். எதோ ஒரு பதினான்கு தொடர்பு.

கம்பரை நான் இங்கு அழைக்கவில்லை.

சரி இந்த முதலிக்கை ஜெயிலில் போட்டுவிட்டால், தொந்தரவு குறையுமா?

ஹிந்துத்வா அமைப்புகள், பழங்காலத்தில் இருப்பதை போல பெண்கள் வீட்டில் கல்யாணத்திற்கு பிறகு, கொண்டு வந்த நல்ல டவ்ரியோடு) உட்கார்ந்துக்கொண்டு வாழ்க்கை ஓட்ட வேண்டும் என்று சொல்கிறார்களா?

சரி அவர்களுக்கு தெரியுமா மனித இனம் எங்கிருந்து வருகிறது என்று?

ஹேப்பி வேலண்டைன்ஸ் டே. ( அதன் இந்திய மதிப்பாக, அன்பை வெளிப்படுத்தும் தினமாக எடுத்துக்கொள்ளுங்கள் )

**************

மாலா 9ஆம் வகுப்பு 'பி' பிரிவு

நல்ல பதிவு, ரசித்துப்படித்தேன்.

நன்றி!

Tuesday, February 10, 2009

கல்யாணம் காட்சி

சென்ற வாரம் இறுதியில், நான் கோவை மற்றும் திருப்பூர் சென்று வந்தேன். நண்பர்கள், வலையுலகில் எழுதுபவர்களை அலைபேசியில் கூப்பிட டைம் இல்லை.

ஒரு கல்யாணம்.

காட்சிகளாய் நடந்தவை இவை. காலையில் நீலகிரி எக்ஸ்ப்ரெஸ்ஸில் கோவை சென்று மதியம் வரை, பெற்றோருடன் கழிந்தது. பிறகு, மதியம் இரண்டு மணி இருக்கும், திருப்பூருக்கு கிளம்பினோம்.

எங்கள் சொந்தம் ஒருவர் வீடு, கருவம்பாளையம் என்ற இடத்தில் உள்ளது, அங்கு சென்று அவர்களை பார்த்துவிட்டு, பட்டு சேலை சகிதம், திருமணம் நடக்கும் இடத்திற்கு சென்றோம். டூ வீலர்கள் அதிகம் ... ட்ராபிக் ஜேம். தென்னம்பாளையம் என்ற இடத்தில் ஒரு பெரிய மண்டபம்.

திருப்பூரில் புக் எக்சிபிசன் டவுன் ஹால் மைதானத்தில் நடந்துக்கொண்டு இருந்தது. செல்ல முடியவில்லை. டைம், வாகன வசதி போன்றவை பயன் பெறவில்லை.

என் கசினுக்கு யு.கே. மாப்பிள்ளை. மூன்று வாரம் லீவில் வந்துள்ளார். போட்டோ பார்த்து அரேஞ் செய்தது. வீடியோ சேட் மூலம் பேசினார்கள்? வரும் புதன்கிழமை விசா வாங்குகிறார்கள். அடுத்த சனிக்கிழமை இரவு லண்டனுக்கு பயணம்.

மாப்பிள்ளை இடத்தில் வசதி குறைவு என்று பேசிக்கொண்டார்கள். அதனால் என்ன, பெண்ணை நன்றாக வைத்து காப்பாற்றினால் போதும் அல்லவா?

சரி, கல்யாணத்தில் என்ன விசேஷம்? எல்லாம் காண்ட்ராக்டில் கொடுத்து விட்டார்கள். இரவு பப்பே, மற்றும் சர்வீஸ். தோசை வகைகள், சுட சுட பரிமாறினார்கள். சர்வீஸ் செக்சனில் உணவு நிறைய வீண் ஆனது... வேலை ஆட்கள், இஷ்டத்திற்கு பரிமாறினார்கள். குழந்தைகள் எல்லாம் வேஸ்ட் செய்தார்கள். இரண்டு வேலை சாப்பாடு உட்பட, டெகரேசன் எல்லாம் சேர்த்து நான்கு லட்சம் என்றார் அத்தை! மூலைக்கு மூலை டிவி வைத்து எடுக்கும் விடியோவை காண்பித்துக்கொண்டு இருந்தார்கள்.

நிறைய சொந்தங்கள், தங்கள் நகைகளை போட்டு அழகு காண்பித்துக்கொண்டு இருந்தார்கள். நகைகளும் கல்யாணங்களும் ஒன்றுவிட்ட காலம் இது.

ஒரு கல்யாணம் நடக்கும் இடத்தில் தான், இன்னொரு கல்யாணம் நிச்சயம் ஆகும் என்பார்கள். அது தான் எல்லா கல்யாண வயது பெண்களும், அழகு நிலையங்களாக வந்து அமர்க்களம் செய்தார்கள்! (உன்ன வீட்டுலே பெண் இருக்கா?)

கசினின் அப்பா கம்பனியில் வேலை பார்த்தவர்கள், நூற்றி சொச்சம் குடும்பத்தினரும் வந்திருந்தது சிறப்பு. நெகிழ்ச்சியான விசயம்.... அவர்களும், தங்களது சார்பில் ஒரு கோல்ட் ப்ளேட் வாட்ச் செட் பரிசு கொடுத்தார்கள்....

அடுத்த நாள், ஞாயிறு ஒன்பது மணி தைப்பூச முகூர்த்தம். டிபன் முதலில் கொடுத்துவிட்டார்கள். பிறகு, கோவைக்கு சென்று பீளமேடு அருகே ஒரு மண்டபத்தில் மாப்பிள்ளை வீட்டார் விருந்து. ஒரே இடத்தில் இருந்திருந்தால், உறவினர்கள் வந்து செல்ல கஷ்டம் போல?

நிறைவாய், நிறைய பழைய சொந்தங்களை பார்த்து விட்டு... சென்னையில் இருக்கும், மூன்று சொந்தங்கள், பக்கத்து தெருக்களில் இருக்கிறார்கள், இன்னும் சந்தித்ததில்லை.... சென்னை வாழ்க்கை பிசி.

இந்த வார இறுதியில், ஒருவர் வீட்டில் ஒரு சிறு விசேஷம், சந்திப்போம்.

இரவு எட்டரை மணிக்கு ரயில் பிடித்து, நேற்று அதிகாலை சென்னை வந்து சேர்ந்தோம். இப்போது தான், சென்று வந்த அசதி தீர்ந்தது!

Thursday, February 5, 2009

ஏ.டி.எம் தானியங்கி வங்கி டப்பா

ஏ.டி.எம் என்றால் தானியங்கி வங்கி டப்பா என்று சொல்லெலாம் அல்லவா?

சரி இது என் அனுபவம்.

நான் செய்த வேலைக்கு, ஒரு கம்பெனியில் இருந்து, சில நூறு டாலர்கள் வந்தது. அதை சிடிபாங்கில் அக்டோபர் சமயத்தில் டெபாசிட் செய்தேன். (அண்ணா சாலை ஏ.டி.எம்). இன்னும் அந்த பணம் கிடைத்த பாடு இல்லை. ஒரு செக் ஆறு மாத வேலிடிட்டி இருக்கும்.

என்ன ஆயிற்று என்று கேட்க, பல நூறு கால்கள். பணம் கொடுத்த கம்பெனி திவால் ஆகவில்லை. என்ன ஆயிற்று?

அதை கேன்சல் செய்துவிட்டு, டைரக்ட் டெபாசிட் செய்ய சொல்லியுள்ளேன்.

என் கணவரின் சம்பளம் கொடுக்கும் ஏ.டி.எம்மும் இது தான், அதனால், பணம் காய்ச்சிக்கொண்டு தான் இருக்கு! (மாதம் தவறாமல்)...

கதவு ஓபன் செய்யும் விதம், கேவலம். செக்கூரிட்டி இருந்தாலும், நம் கார்டை உள்ளே சொருகி எடுக்க வேண்டும். நம்பமாட்டார்களா?

அப்புறம், பாதி நேரம், காசு கொடுக்காது. மீண்டும் மீண்டும் கார்டை, உள்ளே சொருகி எடுக்க வேண்டும். திடீரென்று பின் நம்பர் தவறு என்று சொல்லும். அது வரை, பேங்க் பேலன்ஸ் காட்டும்... வேறு எல்லாம் எல்லாம் செய்யும்...

சமீபத்தில் ஒரு நாள் இரவு சுமார், பத்து மணி இருக்கும், அடுத்த நாள் காலை கோவை செல்ல இருப்பதால், அப்போதே பணம் எடுக்க நின்றோம், ஒருவர் குடித்து இருப்பார் போல... ஏ.டி.எம்மை திட்டிக்கொண்டு உதைத்துக்கொண்டு இருந்தார்!

*******

நான் ரசித்த பதிவு...

ஏடிஎம்மிற்குள் லட்சுமி பூஜை.!