Sunday, August 31, 2008

சான்றோன்

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.

நான் எழுதிய ஒரு போஸ்டில், இதற்கு முன்னால், ஒருவர் (அனோனி) மேற்கூறிய குறள் எழுதியுள்ளார் - பின்னூடமாக..

புரிகிறது. குடும்ப சூழ்நிலையில் குழந்தைகளை அடித்து வளர்த்தக்கூடாது என்பது.

என் மகள் சொல்கிறாள், நீ அடித்தால் எனக்கு வலிக்கும், ஆனால்அடிபதில்லையே? ஏன்? எதற்காக அடிக்க வேண்டும். மிரட்டினால் போதும்.

என் ஆயுதம், "ஹாஸ்டல்" கொண்டு சேர்ப்பேன்! பயம், மாதிரி ஒரு பயம் வேறு எதிலும் கிடையாது.

குறள் என்ன சொல்கிறது? ஒரு மகனை, மற்றவர்கள் சான்றோன் என புகழும் போது , தாய்க்கு அளவில்லா மகிழ்ச்சி ஏற்படுகிறது.
அதை தான் எல்லா தாய்களும் கேட்கிறார்கள்.

Thursday, August 28, 2008

குழந்தைகள் குறும்புகள்

என் குழந்தைகள் செய்யும் குறும்புகள் கொடுமை.

ஏட்டிக்கு போட்டி செய்வதில் என் மகள் சூப்பர்.

ஊருக்கு சென்றால் மட்டும், அழகாக அமைதியாக இருப்பாள்.

மகனோ அமைதி, ஆனால், வேண்டியதை மட்டும் கொடுகவிட்டால், அவ்வள்வு தான். அழுது புலம்பி விடுவான்.

சாம்பார் கம்மியாக கொடுத்தால், ஜாஸ்தி வேண்டும். அடுத்த நாள், ஜாஸ்தியாக அனுப்பினாள், அழுகை தான்.

'மானாட மயிலாட' கலைஞர் டிவி நிகழ்ச்சி மட்டும் அமைதியாக பார்பார்கள்.

Thursday, August 14, 2008

மென் தமிழ் இணைய இதழ்

மென் தமிழ் இணைய இதழ் இங்கே படியுங்கள்.

மென் தமிழ் இணைய இதழ் - ஆவணி 2008

நன்றாக உள்ளது. மிக அருமை. என் படைப்புகளை வெளியிட ஒரு முயற்சி கிட்டும்.

சுதந்திர தின வாழ்த்துக்கள்.

சுதந்திர தின வாழ்த்துக்கள்.

என் இனிய வாசகர்களுக்கு!

Wednesday, August 13, 2008

அட கருமமே!

அட கருமமே! நையாண்டிக்கு ஒரு அளவு இல்லையா?

இங்கே படித்து பாருங்கள்...

வால்பையனுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்

( பெண்களும் படிக்றாங்க என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்!)

வால்பையன் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது!

தலித் பின்னூட்டம்

என் நண்பர் ஒருவர் வலை பதிவில் ஒரு பின்னூட்டம் இட்டுள்ளார் தலித் என்ற அவர் ஜாதி வார்த்தையோடு, ஒரு உண்மை சொல்வதற்காக. அதையும் மொடறேட்டு செய்கிறார்கள், பயம் காரணமாக. வருத்தபடுகிறார். ஒருவர் தன் ஜாதியை மறப்பது நன்று.

என்ன உலகமடா இது? புதுமை பித்தன் பாடல்கள் தான் நினைவிற்கு வருது.

எல்லோரும் சமம் இந்த உலகில், பட் நான் மட்டும் கொஞ்சம் உசத்தி என்கிறார் கடவுள்.

லதானந்த் அவர்களுக்கு அவர் பெயரில் ஒருவர் பின்னூட்டம் இட்டு இம்சை செய்கிறார்.

பின்னூட்டங்கள் பற்றி

டோண்டு ராகவன்

எழுத்தாளர் ஜெயமோகன் வலை மூலம் டோண்டு ராகவன் பற்றி தெரிந்துகொண்டேன். இங்கே ...

வலை பதிவாளர்கள் மத்தியில் நல்ல அறிமுகம் உண்டு அவர்க்கு, அதனால் ஒரு மெசேஜ் சொல்ல வேண்டும் என்றால் அவரிடும் சொன்னால் போதும் போல.

கிருஸ்துவ மதம் பற்றி தாமஸ் என்ன பண்ணினார் தமிழ்நாட்டில் என்பது ரஜினி நடிக்கும் படம் மூலம் தீர்வு கிடைக்கும். என்ன கொடுமை சரவணன் இது?

வருவாரா மாட்டாரா? (அது தாங்க அரசியல்!)

இந்து மக்கள் முன்னணி ராம கோபாலன் ஜி இனி தினமும் அறிக்கை போர் தான் விளாசி தள்ளுவார் . பயமாக இருக்குது.

நாடு சுபிக்ஷமாக இருந்தால் சரி.

Tuesday, August 12, 2008

பரிசல்காரன் - வலைப்பதிவு

திருப்பூர்காரர் பரிசல்காரன் என்கிற கிருஷ்ணகுமார்.

அவருடைய வலைப்பக்கம் இங்கே. பரிசல்காரன்

தினம் ஒரு போஸ்ட் கட்டாயம் படுறார் போலே. இதை தான் 'அடிக்சன்' என்று லதானந்த் சொல்கிறார். அதை, நம்பலாம். இங்கே.

தினமும் படிப்பவர்க்கு என்ன சொல்வார்?

எனக்கு தெரிந்து தொழிலாக ப்லோக் எழுதறவங்க நிறைய பேர். அது அவர்கள் உணவிற்கு.

வெண்பா

வெண்பா - லதானந்த்

கூட்ட நெரிசலில் குழைவாய் நெருங்கிப்

பாட்டம் தேய்த்திடும் பாவியே - நாட்டமுடன்

அஞ்சாமல் உரசும் அசுரா உன்னுடைய

சுஞ்சாவை நறுக்க ஆவல்.

- இதை எழுதியவர், திரு லதானந்த், வலை தளத்தில் பிரபலம் அடைபவர். கதை எழுதியுள்ளார். அவருடைய வலைப்பதிவுகள் இங்கே லதானந்த் பக்கம்

மேலும் இவர் எழுதிய பதிவு இன்று பரிசல்காரனுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்
, என்னை மாதிரி எப்போதாவது எழுதுபவர்க்கு, பொருந்துமா?

வாழ்த்துக்கள்!

Wednesday, July 9, 2008

Tamlish

Nice site!

http://www.tamlish.com

Monday, July 7, 2008

சப்பைக் கட்டுத்தமிழ்

சப்பைக் கட்டுத்தமிழ்

விரும்பினால்
நாவல்கள் பிடிக்கும்
காதல் போரடித்த காரணமா தெரியவில்லை!
மற்றவர்கள்
வரலாறு என்றது சோகமானது
பலர் மூர்க்கம், பலர் நாற்றம்
நடித்தது?
எப்படி
இவ்வளவு சப்பைக் கட்டுகள்?
என் சப்பைக் கட்டுத்தமிழ்!

எனக்குப் பிடித்த 15 தமிழ் நாவல்களின் பட்டியல்

எனக்குப் பிடித்த 15 தமிழ் நாவல்களின் பட்டியல்


1. நகுலனின் வாக்குமூலம்
2. சுந்தர ராமசாமியின் ஜே ஜே சில குறிப்புகள்
3. வண்ணநிலவனின் ரெய்னீஸ் அய்யர் தெரு
4. தோப்பில் முகம்மது மீரானின் சாய்வு நாற்காலி
5. சிவகாமியின் ஆனந்தாயி
6. ஆ மாதவனின் கிருஷ்ணப் பருந்து
7. நாஞ்சில் நாடனின் என்பிலதனை வெயில் காயும்
8. கி ராஜநாராயணனின் கோபல்ல கிராமம்
9. கநாசுவின் பொய்த்தேவு
10. ஜி நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே
11. ஆதவனின் என் பெயர் ராமசேஷன்
12. தி ஜானகிராமனின் அம்மா வந்தாள்
13. ஷோபா சக்தியின் ம்
14. எஸ்.ராமகிரிஷ்னன் யாமம்
15. ஜெயமோகனின் ஏழாம் உலகம்

Astrology & Ayurveda

Found an interesting blog on Astrology & Ayurveda

http://astrologyayurveda.blogspot.com

Sunday, July 6, 2008

Do you use GMAIL, read this

http://www.frenchvanillaicedcoffee.com/2007/12/25/do-you-use-gmail-if-so-you-must-read-this/

Scary!